Tamil short message
129 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
T.me/androidgameapps

If You think an app is great (or not so great), then you should tell your friends, you should tell everyone.✨
முதன் முதலில்..!! 🌷 இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அண்ணா ராஜம் மல்ஹோத்ரா ஆவார். 🌷 அண்ணா சாந்திரி உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆன முதல் இந்தியப் பெண். 🌷 DSP ஆன முதல் இந்திய பெண்மணி காஞ்சன் சௌத்தரி பட்டாச்சார்யா ஆவார். 🌷 சாகித்ய அகாடமி விருதை வென்ற முதல் பெண்மணி அம்ரிதா ப்ரீதம் ஆவார். 🌷 கார்னெலியா சொரப்ஜி இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். 🌷 உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் ஆசிய பெண் - பத்மஸ்ரீ உஜ்வாலா பாட்டீல் ஆவார். 🌷 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் சுஷ்மிதா சென் ஆவார். 🌷 ஆங்கில கால்வாயில் நீந்திய முதல் இந்திய பெண் ஆரத்தி சாஹா ஆவார். 🌷 ராஜ்ய சபாவின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் வயலட் ஐவா ஆவார். 🌷 இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் அஞ்சலி ராஜகோபால் ஆவார்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
உலர் திராட்சையின் பயன்கள் !! 🍒 திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை தான் உலர் திராட்சை. இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது. 🍒 வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. 🍒 மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் முதியோர்களுக்கு சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 🍒 தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உலர் திராட்சையைப் போட்டுப் பருகலாம். உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையையும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும். 🍒 பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்கள் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். இந்தப்பழத்தை பாலில் போட்டும் அல்லது வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும். 🍒 இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். ஓட்டப்பந்தையம் போன்ற தடகளப்போட்டியில் பங்கேற்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டுவிட்டு ஓடினால் அவர்களால் விரைவில் இலக்கினை எட்டமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 🍒 மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !! நாம் என்ன தான் நலமாக இருப்பது போல் தோற்றமளித்தாலும் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கு உள்ளாகின்றோம். அந்த நோய்களுக்கு மருந்து எடுத்து குணப்படுத்துவதென்பது தற்போது கொஞ்சம் யோசிக்கத்தக்க விஷயமாக மாறிக்கொண்டு வருகின்றது. மருந்து வாங்கும் போது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம். உரிமம் : மருந்து வாங்க நினைத்தால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடைகளில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற கடை என்று தெரியாமல் இருந்தால் அந்த கடையின் விற்பனை ரசீதுச் சீட்டு அல்லது போர்டில் உரிமையாளரின் விவரங்கள் போட்டிருக்கும். அதைக்கண்டு விவரங்கள் அறிந்து வாங்க வேண்டும். ரசீதுச் சீட்டு : மருந்துகள் மட்டும்மிலாமல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் ரசீதுச் சீட்டு மிகவும் முக்கியமானது. மருந்துகள் வாங்கியதும் அதற்கான விற்பனை ரசீதைக் கேட்டு வாங்குங்கள். அது நீங்கள் வாங்கும் மருந்துக்கு உத்தரவாதமாக இருக்கும். உற்பத்தி தேதி : எந்த ஒரு பொருளை வாங்கினாலும் உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கண்டிப்பாக பார்த்து தான் வாங்க வேண்டும். காலாவதியான பொருட்களை பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்கப்படும். மருந்துகள் வாங்குவதற்கு முன், அதில் அச்சிடப்பட்டுள்ள உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ச் நம்பர் ஆகியவற்றை கவனியுங்கள். இது மிக மிக முக்கியம். விலை : மருந்தின் விலை, ரசீதில் குறிப்பிட்டுள்ள விலை என இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும். எங்கு வைக்க வேண்டும்? மருந்துகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு வைக்க வேண்டும், எந்த தட்பவெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும் மருந்துகளை நீங்கள் மட்டுமே உபயோகியுங்கள். அதே போன்ற பிரச்சனை உள்ளது என்று நீங்களே யாருக்கும் அந்த மருந்துகளை கொடுக்காதீர்கள், அது ஆபத்தில் முடியலாம்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் பிஸ்கெட் !! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பிஸ்கட்டை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பிஸ்கட்டுகள் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதைப் பற்றி இங்கு காண்போம். 👉 காலையில் சாப்பிட நேரம் இல்லாத சிலர் டீ, இரண்டு பிஸ்கெட் சாப்பிட்டாலே போதும் என்று நினைக்கிறார்கள். இதனால், நாளடைவில் வயிற்றுப்புண், செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலும் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதனைச் சாப்பிடுவது தவறான பழக்கமாகும். 👉 குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள். பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். மேலும் காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணமாகும். 👉 பெரும்பாலான குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு வாய் கொப்புளிப்பது இல்லை. இதனால் பல் சொத்தையாகும். முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் எளிதில் மலச்சிக்கல் உண்டாகும். 👉 குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை சாப்பிடக் கொடுப்பார்கள். இது மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது. 👉 புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். 👉 பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் உருவாகின்றன. ஆகவே, இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும். பிஸ்கெட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். 👉 உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பிஸ்கெட் சாப்பிடுவதால் உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். 👉 சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம். அப்படி, தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களை E223 என்பது போல நமக்கு புரியாத மொழியில் குறிப்பிட்டிருப்பதால், அது நமக்கு தெரிவதும் இல்லை. 👉 சிலரது உடலுக்கு, கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் புரதச்சத்து ஒத்துக் கொள்ளாது. மேலும் கோதுமையில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளால் பெரியவர்களுக்கு வாந்தி, பேதி, நெஞ்சு எரிச்சல் உண்டாகும். 👉 பல பிஸ்கெட்டுகள் மைதாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. சிலர் எடை குறைப்புக்காக பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். இதனால் தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்காமல், கூடுதல் தீமைகள்தான் உண்டாகும்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
உங்களுக்கு அதிகமாக பசி எடுக்கிறதா? சீரான இடைவெளியில் பசி எடுத்தால், உடலின் செயல்பாட்டிற்கு உணவு தேவைப்படுகிறது என்று அர்த்தம். எப்போது ஒருவர் ஒருவேளை உணவைத் தவிர்க்கிறாரோ, அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பசி உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் மூன்று வேளையும் சரியாக சாப்பிட்ட பின்பும், ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு எந்நேரமும் பசி எடுப்பது ஒரு நல்ல அறிகுறி அல்ல. பல்வேறு மருத்துவ காரணங்களால், ஒருவருக்கு தேவையில்லாத பசி உணர்வு எழும். அந்த சமயங்களில், உடனே அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் இருந்தாலும், அடிக்கடி பசியுணர்வு எழும். நம் உடலானது உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றும். இதனால் தசைகள் மற்றும் இதர திசுக்கள் அதிக உணவைக் கேட்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக அதிக பசியுடன், தாகம் அதிகம் எடுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், பார்வை மங்கலாகும், காயங்கள் குணமாக தாமதமாகும். ஆகவே டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் இருப்பவர்கள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சர்க்கரை அளவு : இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். உடலில் ஆற்றல் குறைவாக இருந்தால், உடல் அதை நமக்கு பசியுணர்வின் மூலம் உணர்த்தும். ஆகவே உங்களுக்கு அளவுக்கு அதிகமாக பசி உணர்வு எழுந்தால், உடனே உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள். தூக்கம் : ஒருவர் தினமும் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் பசி அதிகம் எடுக்கும். எனவே தினமும் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்ளுங்கள். மன அழுத்தம் : உடலில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அது ஒரு சில ஹார்மோன்கள் பசி உணர்வைத் தூண்டும். அதுவும் சர்க்கரை உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடத் தூண்டிவிடும். உடல் வறட்சி : எப்போது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் உடல் வறட்சியுடன் உள்ளதோ, அப்போது அதிகளவு பசியை உணரக்கூடும். பொதுவாக தாகமானது தண்ணீர் தேவைப்படும் போது எழும். இருப்பினும் சில சமயங்களில் தாகத்துடன் கடுமையான பசி உணர்வும் எழும். இந்நிலையில் வெறும் நீரை மட்டும் குடித்தால் போதாது. அப்போது எதையேனும் சிறிது உட்கொண்டால் தான், பசி அடங்குவது போல் இருக்கும்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !! முதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். எனவே அவர்களுக்கான உணவு முறைகள் பற்றி இங்கு காண்போம். 👉 முதியோர்கள் அன்றாட உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரதச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கப்பெற்று உடல் வலிமையை பெறும். 👉 கால்சியம் அதிகம் நிறைந்துள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றையும் மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கால்சியம் சத்துகளும் வயதானவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். 👉 முதியோர்கள் மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். எனவே அரிசி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். 👉 சிறுதானியங்களை உண்பதன் மூலம் அதிலுள்ள கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் எலும்புகளை உறுதியடையச் செய்யும். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது. 👉 பாகற்காய், புடலங்காய், காலிபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்றவையும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும் உணவுகளாகும். இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 👉 சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கலாம் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். 👉 வயதாகி விட்டாலே தாகம் ஏற்படுவது குறைந்துவிடும். எனவே தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் வரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். 👉 சோயா, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உயர்ரக காளான் போன்றவற்றிலும் புரதம் நிறைந்துள்ளது. எனவே வாரம் இருமுறையாவது இவ்வகை உணவுகளை வயதானவர்கள் சாப்பிட வேண்டும். 👉 சிறுநீரக நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீரை அருந்த வேண்டும். 👉 நமது உடல் ஆரோக்கியத்திற்கு பக்கதுணையாக இருப்பது பழங்கள். எனவே முதியோர்கள் ஆரோக்கியமான வாழ்வினைப் பெறுவதற்கு கண்டிப்பாகப் பழங்களை உட்கொள்ள வேண்டும். 👉 உணவு உண்ட பிறகு பழங்களைச் சாப்பிடுவதால் எந்தவித நன்மைகளும் இல்லை. எனவே காலையிலோ அல்லது மாலையிலோ வெறும் வயிற்றில் பழங்களை உட்கொள்ள வேண்டும். 👉 உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லையெனில் எளிதில் நோய்கள் நம்மைத் தாக்கும். பொதுவாக வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தே காணப்படும். எனவே இவர்கள் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். 👉 வயதானவர்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்சனை மறதி. எனவே உலர் திராட்சை, முட்டையின் மஞ்சள் கரு, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, வாழைப்பழம், பட்டை, வல்லாரைக் கீரை, வெங்காயம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் இதனை எளிதாக சரிசெய்ய முடியும்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம்.....! நிதி சேவைகள் அனைத்தும் இன்று வியாபாரம் ஆகி வருகின்றது. பல நிறுவனங்கள் தங்களது நிதி சேவை திட்டங்கள் குறித்து எதையாவது மறைத்து, ஏதேனும் பொய் சொல்லி விற்க முயன்று வருகின்றன. இது போன்று நிதி மோசடிகளில் இருந்து தப்பிக்க எளிமையான வழிகளை இங்குப் பார்ப்போம். முதலீடுகளிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிதான் எல்லா மோசடிக்கும் அடிப்படையாக இருக்கிறது. ஈ-மெயில் : உங்களுக்கு ஏகப்பட்ட ஸ்பாம், அதாவது வியாபாரம் சம்பந்தப்பட்ட ஈ-மெயில்கள் நீங்கள் கேட்காமலேயே வந்து குவிகின்றன. மிகக் குறைந்த செலவில் விடுமுறையை இன்பமாய் கழிக்கும் வாய்ப்பை நீங்கள் வென்றிருக்கிறீர்கள், நீங்கள் விசேஷித்த விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என குறிப்பிடுகின்றன. இதே நோட்டீஸ் லட்சக்கணக்கானோருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். கடைசி வாய்ப்பு : உங்களை வேகமாக முதலீடு செய்யத் தூண்டும் முகவர்களை நம்ப வேண்டாம். அதிலும் இது தான் முதலீடு செய்யக் கடைசி வாய்ப்பு என்று கூறும்போது நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். நிரந்திர வருவாய் : ஒரு நிதி திட்டத்தின் முகவர் உங்களிடம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு திட்டங்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய் வரும் என்று பொய் கூறும்போது நம்ப வேண்டாம். பத்திர முதலீடுகள், நிரந்தர வைப்பு நிதி மற்றும் குறிப்பிட்ட சில காப்பீடு திட்டங்களில் மட்டும் தான் உறுதிசெய்யப்பட்டுவிட்ட வருவாய் பெற முடியும். சுட்டிக்காட்டும் செயல்திறன் : முகவர்கள் கடந்த காலங்களில் ஏதேனும் பங்குகளில் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்று கூறி அதில் முதலீடு செய்யுங்கள் என்று வற்புறுத்தும் போது உஷாராக இருங்கள். விரைவில் உயரும் : ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் ஒரு இடத்தைப் பரிந்துரைத்து இந்த இடத்தை இப்போது வாங்கினால் பிற்காலத்தில் உங்களுக்கு நல்ல விலை உயரும் என்று கூறும் போதும், இங்கு அனைத்து வசதிகள் கிடைக்கும், பிற காலத்தில் பல திட்டங்கள் இங்கு வர இருக்கின்றது என்று கூறும்போதும் நம்ப வேண்டாம். மார்க்கெட்டிங் : மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பொன்சி திட்டங்களில் எளிமையான வழியில் செயல்படும். அதாவது உங்களுக்குக் கீழ் மேலும் பலரை சேர்த்துவிட்டால் லாபம் அதிகம் கிடைக்கும் என்று கூறுவது. உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கலாம் : சில சர்வே கேள்விகளுக்கு உட்கார்ந்த இடத்தில் பதில் அளித்தால் போது ஆயிரம் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதையும் நம்ப வேண்டாம். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் குறைந்தபட்ச உழைப்பு இல்லாமல் லாபம் ஏதும் அளிக்காது. வங்கி பெயர்களில் மோசடி : சில முகவர்கள் நாங்கள் குறிப்பிட்ட வங்கியில் இருந்து அழைக்கின்றோம், எங்களிடம் உள்ள இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 15 வருடங்களுக்குப் பிறகு நல்ல லாபத்துடன் அதிகத் தொகை கிடக்கும் என்று கூறி, நீங்கள் சரி என்றால் உங்களது கிரெடி கார்டு எண்ணை கூறுங்கள் என்று கூறுவார்கள். இது போன்று முகவர்களிடம் பேசிய பிறகு உங்களுக்குத் தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு ஆராய்ந்து முதலீடு செய்வதினால் இது போன்ற மோசடிகளைத் தவிர்க்கலாம். ஜெயித்துவிட்டீர்கள் : ஒரு போட்டியில் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் அல்லது உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்று சொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள்? இந்த எச்சரிப்புக்கு கவனம் செலுத்துங்கள். ஃபோனில் மோசடி! ஃபோனில் தொடர்பு கொள்ளும் முன்பின் தெரியாத ஒருவரிடம் உங்களுடைய க்ரெடிட் கார்ட் எண்ணையோ மற்ற தனிப்பட்ட தகவல்களையோ கொடுக்காமலிருப்பதே சிறந்தது.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !! 👉 ஒருவரின் மொத்த உடல் எடையையும் தாங்கி நிற்பது கால்கள் தான். நமது கால்களுக்கு ஓய்வு என்பது நாம் உட்காரும் போதும், தூங்கும் போதும் தான் கிடைக்கிறது. மேலும் அவரவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் நின்று கொண்டிருந்தால், கால் வலி ஏற்படும். கால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் : 👉 இரத்த உறைவு 👉 எலும்பு தேய்மானம் 👉 தசை அல்லது தசைநார்களில் உண்டாகும் கிழிசல் 👉 எலும்பு மூட்டு இணைப்புக்களில் ஏற்படும் காயங்கள் கால் வலியை போக்குவதற்கான இயற்கை வைத்தியங்கள் : 👉 சர்வங்காசனத்தை தினமும் செய்துவந்தால் கால் வலி குணமடையும். மேலும் சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றையும் சேர்த்து செய்து வருவது கால் வலிக்கு மிகவும் நல்லது. 👉 மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பாலை குளிர வைத்து 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்தால் கால் வலி குணமடையும். 👉 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை கால் வலி உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரினைக் கொண்டு கழுவ வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் கால் வலி குணமடையும். 👉 கால் வலி உள்ளவர்கள் வைட்டமின் டி அடங்கியுள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். மேலும் அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு சிறிது நேரம் நடைபயிற்சியை மேற்கொண்டால், கால் வலி வருவது தடுக்கப்படும்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
பண்டைய கால தமிழர்களின் உணவு முறை..!! ஆதி கால தமிழர்கள் அசைவப் பிரியர்களாகவே இருந்துள்ளனர். பின்னால் வந்த ஆரிய படையெடுப்பினால் தமிழர்களின் கலாச்சாரம் மறையத் தொடங்கி ஆரிய கலாச்சாரம் தமிழகமெங்கும் ஏன் இந்தியா முழுவதுமே பரவத் தொடங்கியது. நமது முன்னோர்கள் எந்த அளவு அசைவப் பிரியர்களாக இருந்துள்ளனர் என்பதனை சங்க கால தமிழர்களின் வரலாற்று நூல்களிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அந்த தமிழர்கள் உண்ட உணவைப் பார்ப்போம். குறிஞ்சி நிலத்தவர் உணவு : சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும், கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தாருக்கும் மீன்களை விற்று, நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள். திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர். குறிஞ்சி நிலத்தார் உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும் உண்டனர். மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். கூத்தர் காட்டுப்பன்றியினை மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர். பாலை நிலத்தார் உணவு : ஓய்மானாட்டுப் பாலை நில மக்கள், இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் சூற்றிறைச்சியையும் உண்டனர். தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசி எடுத்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். முல்லை நிலத்தார் உணவு : பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். மருத நிலத்தார் உணவு : மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர். ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர். நெய்தல் நிலத்தார் உணவு : நெய்தல் நிலத்தார் கள்ளையும் உலர்ந்த குழல் மீனையும் உட்கொண்டனர். தொண்டைநாட்டுப் பட்டினத்தில் (மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர். காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இவ்வுணவுகள் நம் பண்டைய தமிழர்கள் உண்ட அசைவ உணவாகும். அன்று அவர்கள் உண்ட உணவு உடலுக்கு வலிமையைக் கொடுத்தது. ஆனால், இன்று நாம் உண்ணும் உணவு உடலுக்கு வலிமை தராவிட்டாலும் கெடுதல் அதிகமாக தருகிறது.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
மொபைல் போனை இங்கெல்லாம் வைக்க வேண்டாம்..! நம்ம கையில மொபைல் போன் மட்டும் இல்லேன்னா ஏதோ பாதுகாப்பே இல்லாததுபோல் தோன்றும், எரிச்சல் எரிச்சலாக வரும், நேரத்தை எப்படி செலவிடுவது என்றும் தெரியாது. இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விஷயமாகும். இதில் அதிக நன்மை இருந்தாலும், எண்ணற்ற தீமைகள் அடங்கி உள்ளது. உங்கள் மொபைல் போனை சில இடங்களில் வைத்திருப்பது சாதனத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால் தெரிந்துகொள்வோம் வாருங்கள். இடுப்பு பகுதி : உங்களின் தொடைக்கு அருகில் வைக்கப்படும் மொபைல் போனானது இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. சருமத்தோடு : உங்களின் சருமத்தோடு உங்கள் மொபைல் போனை ஒட்டி வைத்து பேசும் போது, மொபைல் போன்களில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தின் தோலுடன் ஒட்டிக் கொள்ளும், மேலும் மின்காந்த கதிர்வீச்சு இன்னும் நெருக்கமாகிறது. உங்கள் மொபைல் போனுக்கும் தோலுக்கும் இடையே குறைந்தது 0.5-1.5 செமீ இடைவெளியானது இருக்க வேண்டும். சார்ஜ் : சார்ஜ் செய்யும் போது மொபைல் போனை பக்கமாக வைக்க கூடாது, ஏனெனில் அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் உங்கள் உடல் நலத்தை பாதிக்கும். குழந்தைகளின் அருகில் : குழந்தைகளின் அருகில் மொபைல் போனை வைப்பதால் அவர்களின் செயல்திறன் மற்றும் கவனக்குறைவு, சீர்குலைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தலையணை : தலையணை அடியில் மொபைலை வைக்கும் பழக்கம் இருந்தால் அதன் மின்காந்த கதிர்வீச்சினால் தலைவலி ஏற்படும். மேலும் மொபைல் போன் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்களும் கூட ஏற்படலாம்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
வேலையில் நீங்க டாப்பாக இருக்க வேண்டுமா ? இது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. நீங்களும் அந்த மாற்றங்களுக்கேற்ப இணைந்து உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பின்தங்கி விடுவீர்கள். நீங்கள் கற்றுக் கொள்வதையும் உங்களை மேம்படுத்திக் கொள்வதையும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிவேகமாக வெற்றியின் எல்லையைத் தொடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற கற்றுக் கொள்வதற்கான சில வழிகள்! 🏃 உங்கள் படைப்பாற்றலானது உங்களைச் சக பணியாளர்கள் மற்றும் மற்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துச் செயல்பட மட்டும் உதவுவதில்லை, மேலும் உங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்களை உங்களை நோக்கிக் கவனிக்கவும் செய்கிறது. 🏃 உங்கள் வளர்ச்சியை முடக்கிவிடும் பொருட்டு நாளும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். வேலைகளின் தேவைகளுக்கேற்ப உங்களைப் மாற்றிக் கொள்வது அவசியமானதாகும். சுறுசுறுப்பும், விரைவாகப் புரிந்துக கொள்ளும் தன்மை உங்களின் நிறுவனத்திற்கு மட்டுமல்ல உங்கள் சுய மதிப்பிற்கும் மதிப்பைக் கூட்டுகிறது. 🏃 உங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை முயற்சித்துப் பார்ப்பது அத்தியாவசியமானதாகும். நீங்கள் மேம்படுத்த விரும்புவதைக் குறுகிய காலத் திட்டத்தில் செயல்படுத்திக் குறித்து வைத்துக் கொள்வதுடன் பின்னாளில் நீண்ட காலத் திட்டங்களில் அது உங்கள் திறமையை நாளடைவில் மேம்படுத்திக் கொள்ள உதவும். 🏃 உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைத்துக் கொள்வது தேவைப்படுகிறது. இது உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைப்பதில் உதவி புரிவது மட்டுமல்லாமல் மேலும் உங்கள் வேலையில் உதவியாக இருக்கும் தொலைநோக்கு கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. 🏃 உங்கள் ஆற்றலை நீட்டிக்கும் மற்றும் உங்கள் பலத்தைச் சோதனை செய்ய உதவும் பொறுப்புகளை ஏற்கக் கூச்சப்படாதீர்கள். 🏃 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்குள் அடங்காத வேலைகளையும் செய்ய வேண்டியது சமமான முக்கியதுவத்தைப் பெறுகிறது. வேலையிடத்தில் வேலை ஓட்டம் மென்மையாக நகர, தினமும் கூடுதல் கடமைகளை எழுதி வையுங்கள். 🏃 உங்கள் பலவீனமான புள்ளிகளைச் சமாளிக்கத் தொடர்ச்சியாகக் கருத்துப் பின்னூட்டங்களைத் தேடுங்கள். கருத்துப் பின்னூட்டங்கள் என்பவை சிக்கலான அடிப்படையின் ஆதாரக் கூறுகளாகும். 🏃 எது அவசரம் மற்றும் எது முக்கியம் என்பதற்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அவசரமும் முக்கியத்துவமும் கைகோர்த்து இருக்கிறது. அதை சமாளிக்க கற்றுக் கொள்ளவேண்டும். 🏃 நெருக்கடியான சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே அங்கேயே தேங்கிவிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள், பிரச்சனைகளை எதிர்கொண்டு அதன் மீது செயல்படுங்கள். நிதானமாக அனுமதி கேட்பதைவிட, மன்னிப்பு கேட்பது எப்பொழுதும் மிகுந்த நன்மைப்பயக்கக் கூடியது. கற்றுக் கொள்ளுதல் என்பது பலவீனத்தின் குறியீடு அல்ல, அது ஒரு வலிமையின் குறியீடு. இவற்றை பின்பற்றினாலே போதும், வேலையில் நீங்க டாப்புதான்..!

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி? மனித உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கியம். உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த ஒரு சிறுநீரகமே போதும். இதிலுள்ள பெரும் பிரச்னை சிறுநீரக கற்கள் தான். சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வெப்பநிலை முக்கிய காரணம். பருவநிலை மாற்றத்தால், வெப்பம் அதிகரித்து வருவதால், சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது. எப்படி உருவாகுகிறது : உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, குறையும் நீர்ச்சத்தால், சிறுநீர் உற்பத்தியும் குறைந்து, சிறுநீரக கற்கள் உருவாகிறது. குறிப்பாக, உடலில் இருந்து கால்சியம், பாஸ்பரஸ், ஆக்சலேட், யூரிக் அமிலம் அதிக அளவில், சிறுநீர் வழியாக வெளியேறி சிறுநீர் குறையும் போது, அவை, படிமங்களாக உருவாகி, ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து, சிறு நீரக கற்களாக்கிறது. கற்கள் சிறுநீரகத்துக்குள் இருந்தால் வலியா ? கற்கள், சிறுநீரகத்துக்குள் இருக்கும் வரை தொந்தரவு கிடையாது. கீழே இறங்கி, சிறுநீரக பாதையை அடைக்கும் போது, சிறுநீரகம் வீங்கி, வயிற்றுவலி வரும். எங்கு உருவாகும் : கிட்னி ஸ்டோன் என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம் சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் கூட ஏற்படலாம். சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன. 👉 பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். 👉 சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது. 👉 வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும். 👉 மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும். 👉 தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. சாப்பிடக் கூடாதவை : சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
இந்த channelல் வரும் பதிவுகள் FaceBook இல் இருக்கும் https://www.facebook.com/tamilshortmessage இருந்து Bot மூலமாக Forward செய்யப்படுகிறது.

இந்த channel எந்தவொரு தனி நபர் சார்ந்ததோ / எந்த ஒரு கட்சியை சார்ந்ததோ அல்ல.

உங்களின் தொடர் ஒத்துழைப்பிர்க்கு நன்றி. 🙏