Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை."


https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ரசாயனத்தை நீக்குவது எப்படி ?




 உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. பயிர்கள் வளர்வதற்காக விவசாயிகள் பயன்படுத்துகிற ரசாயனங்கள் மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் ரசாயனங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

🍆 காய்கறிகளை சுத்தம் செய்ய தூள் உப்பை விட சிறந்தது கல் உப்பாகும். ஒரு கைப்பிடியளவுக்கு கல் உப்பை சுத்தமான தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் கழித்து, அதில் பழங்கள் மற்றும் காய்கறிகளை போட்டு கழுவினால் பழங்களில் உள்ள ரசாயனம் அழிந்து விடும். ஏனெனில் உப்பில் உள்ள சோடியம், பூச்சி மருந்தின் வீரியத்தைக் குறைக்கக்கூடியது.

🍅 வெங்காயம், இஞ்சி, கேரட், ஆப்பிள், பீட்ரூட், மாம்பழம், ஆரஞ்சு, அவகேடோ, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை உரிப்பது சுலபமானது. இந்த காய்கறி மற்றும் பழங்களைப் பயன்படுத்தும்போது தோலை உரித்தாலே ரசாயனத் தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும். அதன் பிறகு காய்கறி, பழங்களை கழுவிவிட்டு பயன்படுத்தலாம்.

🍆 வினிகர் காய்கறிகளைச் சுத்தம் செய்ய சிறந்ததாகும். காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் மற்றும் ரசாயனங்களைக் கொல்லும் தன்மை வினிகருக்கு உள்ளது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, இரண்டு துளிகள் வினிகரைச் சேர்த்து அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் போட்டு சுத்தம் செய்து சாப்பிடலாம்.

🍅 மஞ்சள் தூள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை மஞ்சளில் உள்ளது. ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து, அதில் 5 ஸ்பூன் மஞ்சள் தூளைச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம் ஆறிய பிறகு, அதில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி பயன்படுத்தலாம். அதிகச் சூடான வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது.

🍆 பழங்கள் மற்றும் காய்கறிகளை தண்ணீரில் கழுவிய பிறகு, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதனால் பழத்தில் உள்ள மேல் தோலில் ஒட்டியிருக்கும் மீதமுள்ள பூச்சி மருந்தும் வெளியேறிவிடும்.

🍅 இரண்டு எலுமிச்சை பழச்சாற்றில் 3 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ள வேண்டும். இதை 200 மி.லி தண்ணீரில் கலந்து, பழங்களின் மேல் தெளிக்க வேண்டும். அதன் பிறகு பழங்களைத் துடைத்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் எலுமிச்சைச் சாற்றில் உள்ள கிருமி நாசினி, பூச்சி மருந்தின் தாக்கதை குறைத்து விடும்.






https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
😴😴 ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வேண்டுமா? 😴😴




  மனிதனின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதன் தேவையான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறையும் மற்றும் மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரையாமல், வயிறு உப்புசத்துடன் இருக்கச் செய்கிறது.

  இன்றைய சூழலில் பல பேர் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் தூக்கம் கிடைக்காமல் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர். இரவில் உடனடி தூக்கத்தைப் பெற உதவும் ஓர் அற்புத பானத்தை பற்றி இங்கு காண்போம்.

மருத்துவ குணங்கள் :

🍵 புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் பாலில் அதிக அளவில் உள்ளது. இரவில் தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்கள் பாலில் உள்ளது, இது தூக்கத்தை தூண்ட பெரிதும் உதவுகிறது.

🍵 இனிப்புச் சுவையைக் கொடுப்பதோடு, மூளையில் மெலடோனின் உற்பத்திக்கும் தேன் மிகவும் உதவுகிறது. தேனும் தூக்கத்தைப் பெற உதவுகிற முக்கிய உணவுப் பொருட்களுள் ஒன்று ஆகும்.

🍵 வென்னிலா எசன்ஸில் இருந்து வெளிவரும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவுகிறது, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற வென்னிலாவும் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

வென்னிலா எசன்ஸ் - 2 துளிகள்

செய்முறை :

🍵 முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்க கொள்ள வேண்டும்.

🍵 பின்னர் டம்ளரில் அந்த பாலை ஊற்றி, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 துளி வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

🍵 தினமும் இந்த பானத்தை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுக்கையில் படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.








https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !

'வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்..."

https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அன்னை தெரசா



🌹 அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி ஓட்டோமான் பேரரசிலுள்ள அஸ்கபிலில் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்(கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் 'ரோஜா அரும்பு" என்று பொருள்).

🌹 இவர் 1950ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். 45 வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர்.

🌹 1970ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் எனவும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

🌹 அன்னை தெரசா 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தன்னுடைய 87-வது வயதில் மறைந்தார். அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.


https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

'சரியானது எது என்று உணர்ந்த பிறகும், அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!"


https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
https://t.me/tamilshortmessage

வாழைப்பழத் தோலில் உள்ள மருத்துவ குணங்கள் !!




வாழைப்பழம் மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோலிலும் எண்ணற்ற வியக்கத்தக்க நன்மைகள் உள்ளது. இதில் பல ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் அதிகமாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

வாழைப்பழத் தோலின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

பற்கள் பளபளக்க :

வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும் பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் பற்களை பளிச்சிட வைக்கும்.

மரு :

மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.

பருக்கள் :

வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.

சுருக்கம் :

வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.

வலி நிவாரணி :

வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு அரை மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால், இன்னும் சிறப்பாக செயல்படும்.

சிரங்கு :

சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.

பூச்சிக் கடிகளுக்கு மருந்து :

கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு :

வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா திர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும், மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பற்றி எரியும் பெட்ரோல் !

https://t.me/tamilshortmessage


⛽ சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து வையுங்கள். இதனால் பெட்ரோல் வீணாவதை தவிர்க்கலாம்.

⛽ கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக்கொண்டிருந்தால் வெகு வேகமாக எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும்.

⛽ நிழலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் வீணாவதை பெருமளவு தவிர்க்கலாம்.

⛽ வாகனங்களை நிறுத்தியவுடன் இன்ஜினையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

⛽ எக்ஸாஸ்ட் பாதையில் எந்தவித ஓட்டையோ, அடைப்போ இருக்கக்கூடாது.

⛽ வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுது நீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.

⛽ பெட்ரோல் - டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகமாகும்.

⛽ இந்தியச் சாலைகளில் 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினால் 40 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும்.

⛽ வாகனத்தில் போதுமானளவு ஆட்களை மட்டுமே ஏற்ற வேண்டும். அதிக எடையை வாகனம் சுமந்து செல்லும் போது எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

⛽ ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாகக் குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே மிகச் சிறந்தது. அதிக வேகத்தில் செல்வதால் எரிபொருள் செலவு அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும்.

⛽ பழக்கமில்லாத, புதிய பாதைகளில் செல்லும்போது, சரியாக விசாரித்து விட்டுச் செல்ல வேண்டும். இதனால் இடத்தைத் தேடுவதற்கான நேரம், எரிபொருள் செலவைக் குறைக்கலாம்.

⛽ பெட்ரோல் - டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பக்கூடாது. பெட்ரோல் - டீசல் நிரப்பிய பிறகு, அதனை சரியாக மூடுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்க முடியும்.

⛽ கார்களில் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். ஆனால் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்க முடியும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மற்றவரிடம் பேசும்போது இதை கவனியுங்கள் !!

https://t.me/tamilshortmessage

👉 மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

👉 மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

👉 மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

👉 நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

👉 நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்..

👉 பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்... அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.... நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

👉 நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்..

👉 குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பணிவோடு பேசவும்..
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முத்தான சிந்தனை துளிகள்!

https://t.me/tamilshortmessage

'அதிருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் நாமே தேடிக்கொள்ளும் வறுமை."

- சாக்ரடீஸ்.