Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தயான் சந்த்


இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதற்கு இவரே முக்கியக் காரணம். இவர் ஹாக்கி விளையாடிய முறை இன்றளவிலும் வியக்க வைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இவர் 1948-ல் ஓய்வு பெற்றார். இவரை கௌரவிக்கும் விதமாக டெல்லி தேசிய மைதானத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்மபூஷண் விருது அளித்துள்ளது.

மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் தனது 74வது வயதில் மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மைக்கல் ஜாக்சன்


மகத்தான பாப் இசைக்கலைஞர் என்று போற்றப்படும் மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்காவின் இன்டியானா நகரில் பிறந்தார்.

இவர் வெளியிட்ட த்ரில்லர் இசை ஆல்பம் தான் இன்று வரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. இவர் பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.

இவர் பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த பாப் நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை. அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக்கலைஞர். இவர் படைத்த ரோபோட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலமானவை.

இன்றளவும் பாப் இசையுலகின் ஈடு இணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது 50-வது வயதில் (2009) மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்


இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணு ஆயுதத்தை முதன்முதலாக அமெரிக்கா 1945ஆம் ஆண்டில் வீசியது. அதன் பிறகு இதுவரை 2000 அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும், சுற்றுச்சூழலும் நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைக்குள்ள அணு ஆயுதங்களை கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே, இதன் விளைவுகள் பற்றியும் அதன் பரவலைத் தடுக்க வலியுறுத்தியும் ஐ.நா. சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முத்தான சிந்தனை துளிகள் !

https://t.me/tamilshortmessage

'பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும்"
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நவதானிய சத்துமாவு !!


https://t.me/tamilshortmessage


👉 'உடல் பருமன்" என்ற சொல் இப்போது ஒரு நோய் ஆகிவிட்டது. அதிலும், இந்திய குழந்தைகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

👉 அதில் சொல்லப்பட்டது, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் 22% சதவிகித குழந்தைகள் obesity என்ற உடல் பருமன் பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

👉 இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது நமது உணவு முறைதான். பெற்றோர்கள் தங்கள் குழந்தை நல்ல எடையுடன் கொழுகொழுவென்று இருக்கவேண்டும் என்று கடைகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட ரெடிமேட் மிக்ஸ்களை வாங்கி தருகின்றனர்.

👉 முன்பு வீட்டில், நமது கை பக்குவத்தில் அரைத்த சத்துமாவு தான் குழந்தைகளுக்கு உணவாக இருந்தது. ஆனால், இன்று கடைகளில் கிடைக்கும் பல்வேறு ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருகிறோம். அதில் குறிப்பிட்டது போல் வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. ஆனால், அதுவே நமக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. சில கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து நாம் வாங்கிக்கொடுக்கும் உணவினால் எந்த பயனும் இல்லை.

👉 குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சி காலத்திலேயே இதை சரி செய்ய முடியவில்லை என்றால் அவர்களது வாலிப பருவத்தில் அதிக பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும்.

👉 இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இன்றைய அதிவேக கால ஓட்டத்தில் வீட்டிலேயே அனைத்து உணவுகளையும் தயாரிப்பது என்பது இயலாத காரியம் தான். தாய்மார்கள் வேலைக்கு செல்லும் வீட்டில் இது இன்னும் கடினம். இதற்கு சரியான தீர்வு நாம் வாங்கும் பொருளின் தரத்தை நன்கு ஆராய்ந்து வாங்குவதுதான்.

👉 குழந்தை நல்ல எடையுடனும், பருமனாகவும் இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. வளர்ச்சி என்பது சரிவிகித உணவு, சரிவிகித வளர்ச்சி. குழந்தைகளுக்கு கொழுப்பு, புரதம் என்று அனைத்து சத்துக்களும் அவசியம். இதை பூர்த்தி செய்ய நவதானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவு ஒரு சிறந்த தேர்வு.

👉நல்ல உணவை பயன்படுத்துவோம்... நம் அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுவோம் !!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வங்கிகளில் எதைப் பொறுத்து கடன் கொடுப்பார்கள்?


https://t.me/tamilshortmessage

நம்மில் பல மக்கள் வங்கியில் கடனுக்காக அலைவார்கள். என்னதான் அலைந்தாலும் ஒரு சிலருக்கு தான் கடன் கொடுப்பார்கள். ஏன் அந்த ஒரு சிலருக்கு?

எப்படி அவர்கள் பெற்றிருப்பார்கள்? என்ற கேள்வி வரும். வங்கியில் அதற்கான சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது. அது என்னவென்று இங்கு காண்போம்.

🔀வங்கிகள், கடன் நிலை தகவல் அறிக்கையின் (கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட் - சுருக்கமாக 'சி.ஐ.ஆர்") அடிப்படையில் தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

🔀கடன் நிலை தகவல் அறிக்கையைப் புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்....

தவணை செலுத்திய பட்டியல் (பேமன்ட் ஹிஸ்டரி)

உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும்.

கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அக்குறிப்பில் '000" தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் 'நெகட்டிவாக" கருதும்.

நடப்பு கடன் இருப்பு

சி.ஐ.ஆர் கணக்குப் பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளைச் சுட்டிக் காட்டும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில் கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

புதிய கடன் வசதிகள்

உங்களுக்கு சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத் தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.

விண்ணப்பித்த விவரங்கள்

நீங்கள் சமீபமாக பல கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக் கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர் நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மழைக்காலத்தில் குழந்தைகளை வதைக்கும் சளி...

https://t.me/tamilshortmessage

வரப்போகிறது மழைக்காலமும், அதைத் தொடர்ந்து பனிக்காலமும். நெஞ்சுச் சளி, அதன் அடுத்தகட்டமான வீசிங்(மூச்சிரைப்பு), அதற்கும் அடுத்த நிலையான ஆஸ்துமா உள்ளவர்களுக்குக் கடினமான காலங்கள் இவை. நெபுலைஸர்(பஃப்) பயன்படுத்தித்தான் இந்தக் குளிர் மாதங்களை அவர்களால் சமாளிக்க முடியும். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள்கூட நுரையீரலில் சளி, வீசிங் என்று அவஸ்தைப்படுவார்கள். குழந்தைகளுக்கு வீசிங் ஏன் வருகிறது, வீசிங் வந்துவிட்டால் அதை எப்படிச் சரி செய்வது. 

குழந்தைகளுக்கு வீசிங் ஏன் ஏற்படுகிறது? 

இது நுரையீரல் சம்பந்தமான பிரச்னை. நம் நுரையீரலானது வெளிப்புறம் பார்ப்பதற்கு பலூன் மாதிரி இருக்கும். உள்ளே சின்னச் சின்ன காற்று உருண்டைகள், கோடிக்கணக்கில், நெருக்கமாக இருக்கும். கோலிகளை எவ்வளவு அருகருகே வைத்தாலும் அவற்றின் இடையிடையே சின்னச் சின்ன இடைவெளிகள் இருக்கும் இல்லையா. அதேபோல, நுரையீரலின் உள்ளே இருக்கிற காற்று உருண்டைகளின் இடையிலும் முடி நுழைகிற அளவுக்கு மெல்லிய இடைவெளிகள் இருக்கும். நாம் சுவாசிக்கும்போது இந்த இடைவெளிகளுக்குள்தான் காற்று உள்ளே போய்  நுரையீரலுக்கு ஆக்சிஜனை கொடுத்துவிட்டு, கார்பன் டை ஆக்சைடுடன் வெளியேறும். பிறகு ஆக்சிஜன், ரத்தத்துடன் கலந்து உடல் முழுக்க எடுத்துச் செல்லப்படும்.

காற்று உருண்டைகளின் இடைவெளிகளில் சளி உருவாகிவிட்டால், முதலில் இருமல், பிறகு மூச்சுவிடக் கஷ்டம், அடுத்தது ஆஸ்துமா என்று வரும். காற்று உருண்டைகளின் இடைவெளிகளில் சளி இல்லாதபட்சத்தில் மூச்சுக் காற்று சுலபமாகச் செல்லும். அங்கே சளி இருக்கிறபட்சத்தில் காற்று சரியாகச் செல்ல முடியாமல் திணறும். அந்த நேரத்தில் குழந்தைகள் கஷ்டப்பட்டு மூச்சுவிடுவார்கள். விளைவு மூச்சு விடும்போது விசில் சத்தம்போல ஒலி எழும்ப ஆரம்பிக்கும். இதைத்தான் மருத்துவர்கள் வீசிங் என்று சொல்கிறார்கள்.

நுரையீரலுக்குள் சளி ஏன் வருகிறது?  

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோவது. இரண்டாவது காரணம், காற்றில் இருக்கிற மாசு. தொடர்ந்து சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறபோது, உடலுக்குத் தேவையான கலோரிகள் கிடைக்காது. அப்போது உடம்பானது தனக்குத் தேவைப்படுகிற சத்தை உடம்பின் செல்களிலிருந்து எடுத்துக்கொள்ளும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் பலவீனப்படும். இந்த நேரத்தில் காற்றில் இருக்கிற மாசு நுரையீரலுக்குள் செல்லும்போது சட்டென்று நுரையீரலில் தொற்று உண்டாகும். கூடவே சளியும் பிடிக்கும். ஈரப்பதம் சற்று அதிகமானால்கூட தும்மல், இருமல், சளி என்று அவஸ்தைப்பட ஆரம்பிப்பார்கள். தொண்டையிலிருந்து நுரையீரல் வரைக்கும் இறுக்கமாக உணர்வார்கள். இதை, ஆங்கில மருத்துவத்தில் அலர்ஜி என்று சொல்வார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கும் வீசிங் வருவதற்குக் காரணங்கள் என்னென்ன?

* குழந்தை கருவாக அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது, அதன் அம்மாவுக்கு வீசிங் பிரச்னை இருப்பது
* கர்ப்பமாக இருக்கும்போது தாய் சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது
* குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது சைனஸ் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது...
* குழந்தை, கருவாக இருக்கும்போது உள்ளுறுப்புகளின் வளர்ச்சியிலேயே குறைபாடு ஏற்பட்டிருப்பது... இவற்றைத் தவிர, முதல் ட்ரைமெஸ்டரில், மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கர்ப்பிணி தாய் ஏதாவது மாத்திரை சாப்பிட்டிருந்தால், அது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியைப் பாதிக்கும். இதுவும் பிறந்த சிசுவுக்கு வீசிங் வருவதற்கான முக்கியக் காரணம்தான்.
மழைக்காலத்தில் குழந்தைகளை வதைக்கும் சளி... தீர்வாகும் அந்த மாமருந்து! 

https://t.me/tamilshortmessage


குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போலவே பஃப், ஆன்டி பயாடிக் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இவற்றால் பிரச்னையை அப்போதைக்குச் சரிசெய்ய முடியுமே தவிர, பிரச்னையின் காரணத்தை மொத்தமாகச் சரிசெய்ய முடியாது. பஃப் எடுத்தால், அதில் இருக்கிற மெடிசின் சளியைக் கரைத்துவிடும். ஆனால், அப்படிக் கரைந்த சளி உடம்பைவிட்டுப் போகாது. கரைந்து ரத்தத்தில் கலந்துவிடும். அந்தச் சளியில் இருக்கிற கிருமி ரத்தத்துடன் உடல் முழுக்கச் சுற்றிவிட்டு, எப்போது நுரையீரலுக்கு வருகிறதோ, அப்போது மறுபடியும் வீசிங் பிரச்னை வரும். 

சளிப் பிரச்னைக்குச் சரியான தீர்வு, வெற்றிலை, கற்பூரவல்லி, துளசி மூன்றும்தான். வெற்றிலை, கற்பூரவல்லி, துளசி மூன்றையும் சமமாக எடுத்துக்கொண்டு வாணலியில் லேசாகச் சூடுசெய்து, பிழிந்து சாறு எடுக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு இந்தக் சாற்றில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் கால் டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கொடுத்து வந்தால், நுரையீரலில் இருக்கிற சளி மலம் வழியாக வெளியேறிவிடும். பிஞ்சுக் குழந்தை என்றால், நெஞ்சில் கபம் சேர்ந்திருக்கிறது என்பது உறுதியாகத் தெரிந்தால், மேலே சொன்ன கலவையில் ஒரு சொட்டு மட்டும் தொட்டு நடு நாக்கில் தடவி விடுங்கள். இந்தத் தேன் கலவையை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஃபிரெஷ்ஷாக தயாரித்துதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

துளசி, நுரையீரலில் இருக்கிற நோய்த்தொற்றைச் சரிசெய்யும்; கற்பூரவல்லி இயற்கை பஃப் என்பதால் நுரையீரலில் இருக்கிற சளியைக் கரைத்து ரத்தத்தில் கலக்காமல் மலம் வழியாக வெளியேற்றும். சளிப்பிடித்த குழந்தைகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். சரியாகச் சாப்பிடவில்லையென்றால், சத்து எங்கிருந்து வரும். வெற்றிலை குழந்தைகளுக்குப் பசியையும், செரிமானத்தையும் தூண்டிவிட்டு பிள்ளைகள் உடம்பில் சத்துப்பிடிக்க வைக்கும். உடம்புக்குத் தேவையான சத்துக் கிடைக்க ஆரம்பித்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும். நுரையீரலில் இருக்கிற தொற்றும் சரியாகும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஆல், வேல், பலா, நாயுருவி, வேம்பு, விளா... பற்களைக் காக்கும் இயற்கை பிரஷ்கள்!

https://t.me/tamilshortmessage

வயதுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட டூத்-பிரஷ்களும் பல வண்ணங்களின் கூட்டணியில்  உருவான பற்பசைகளும் ஒவ்வொரு வீட்டின் குளியலறைகளிலும் அணிவகுக்கின்றன. குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்களது பயன்பாட்டுக்கு பத்து வகையான பற்பசைகள் காத்துக்கிடக்கின்றன. உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?', எங்கள் கம்பெனி பற்பசையைப் பயன்படுத்தினால், கிருமிகளிடமிருந்து 12 மணிநேரப் பாதுகாப்பு கிடைக்கும்…’ என்பதுபோன்ற விளம்பரங்கள் நம்மைக் கவர முயல்கின்றன. 

நம் முன்னோர் காலங்காலமாகப் பயன்படுத்திய இயற்கையான பல் துலக்கும் கருவிகள் பற்றி நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்.  

வேம்பு: வேப்பங்குச்சிகளை உடைத்து, அதன் நுனியை பிரஷ் போல திரித்து, வாய்ப் பகுதியில் வைத்ததுமே, எச்சில் சுரப்பு அதிகரிக்கும். கிருமிநாசினி செய்கையுடைய எச்சில், உடனடியாக தனது பணியைத் தொடங்கிவிடும். தொடர்ந்து வேப்பங்குச்சி உதவியுடன் பற்களை மேலும் கீழும், இடதும் வலமும் மென்மையாகச் சுத்தப்படுத்தலாம். ஆக, பற்களின் ஆரோக்கியத்துக்கு இயற்கை தரும் கியாரன்டி இது. கசப்புச் சுவை கொண்ட வேம்பு, கிருமிகளை உடனடியாக மடியச் செய்யும். 

ஆலும் வேலும்: ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற பழமொழியின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அறிவியல் அற்புதமானது. கருவேல மரத்தின் குச்சிகளைப் பொடித்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம். நாட்டுக் கருவேலங்குச்சிகளை நேரடியாகவே பிரஷ் மாதிரி பயன்படுத்தலாம். இதனால் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் நாற்றம் நீங்கும். நாட்டுக் கருவேல மர இலையின் கொழுந்தால் பல் தேய்த்தால், பற்கள் கல் போல பலமடையும்’ என்கிறது சித்த மருத்துவம். பல்லுக் கடுத்த பல நோயகற்றியதைக் கல்லுக்கு நேராகக் கட்டுமே...' என்றொரு சித்த மருத்துவப் பாடல்கூட உண்டு.

ஆலம் விழுதுகளும் பல்துலக்க ஏற்றவை. ஆல மரத்தின் பாலைக் கொண்டு வாய் கொப்பளித்தால்,
அசைகின்ற பல்லும் இறுகும்’ என்று கூறுமளவுக்கு, பற்களின் நலன் சார்ந்தது. ஆல மரத்தின் பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலும் இதன் குச்சிகளால் பல் துலக்கினாலும் பற்கள் நீண்டகாலம் நிலைபெறும். இதேபோல், நாயுருவி வேர் கொண்டு பல் துலக்க, முகம் வசீகரமாகும்’ என்கிறது ஒரு பாடல் குறிப்பு. 

வாய்க்கொப்பளிக்க குடிநீர்: சுக்கு, மருதம்பட்டை, வெள்வேல மரப்பட்டை, மருக்காரைப் பழம், எருக்கன் வேர், ஆவாரம் பூக்கள், பிரப்பன் கிழங்கு போன்றவற்றைச் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து, தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். சூடு ஆறிய அந்த நீரைக் கொண்டு வாய்க்கொப்பளிக்கலாம். சில வாரங்கள் தொடர்ந்து செய்தால்
முதியவர் பற்களும் இளைஞர் பற்கள் போல உறுதிபெறும்’ என்கிறது தேரையர் பாடல் ஒன்று.

பற்பொடிகள்: திரிபலா சூரணம், நெல்லிக்கட்டை, ஓமம், இந்துப்பு, காசுக்கட்டி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு, உலர்ந்த புதினா இலைகள் போன்றவற்றைப் பற்பொடியாகவும் பயன்படுத்தலாம். வேப்பங்கொழுந்து, கருவேலமரக் கொழுந்து மற்றும் ஆவாரம் பூக்களை பல் துலக்கப் பயன்படுத்தலாம்.  

அறிவியல் ஒப்புமை: அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, மேற்சொன்ன பெரும்பாலான இயற்கைப் பொருள்கள் துவர்ப்புச் சுவையுடையன. சில கசப்புச் சுவை உடையன. பொதுவாக துவர்ப்புச் சுவை உள்ள பொருள்கள், ஈறுகளைப் பலப்படுத்தி, ஈறுகளில் உள்ள புண் மற்றும் வீக்கத்தைக் குணமாக்கி பற்களை உறுதிப்படுத்தும். துவர்ப்புச் சுவைக்குக் காயங்களை ஆற்றும் தன்மையும் இறுகலடையச் செய்யும் குணமும் உண்டு. கசப்புச் சுவைக்கு கிருமிநாசினி செய்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, வேம்புக்குக் கிருமிநாசினி செய்கை உண்டு என்பது உலகறிந்த செய்தி.

உடனடியாக செயற்கையான பிரஷ்களை தூக்கி வீசிவிட்டு, இயற்கைப் பொருள்களுக்கு மாற முடியாவிட்டாலும், வாரத்தில் சில நாள்கள் மட்டுமாவது இயற்கையான பல்துலக்கும் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கலாம். 

ஒருமுறை பல்துலக்கியதும் தூக்கி வீசும் `யூஸ் அண்ட் த்ரோ’ முறையில் பற்குச்சிகளைப் பயன்படுத்துவதால், கிருமிகள் தாக்க வாய்ப்பில்லை. குச்சிகளின் உதவியுடன் தினமும் நாக்கைச் சுத்தப்படுத்த வேண்டும். பல்துலக்கும்போது, சில நிமிடங்களாவது மனதை ஒருநிலைப்படுத்தி பற்களை கவனிக்க வேண்டும்.

தினமும் பற்களைக் கண்ணாடியில் பார்த்து, அதில் ஏதேனும் சொத்தை இருக்கிறதா, ஈறுகள் பலமுடன் இருக்கின்றனவா, பல் அரிப்பு இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அரிப்பு, சொத்தை போன்றவை அதிகளவில் இருந்தால் மருத்துவர் உதவி தேவை. எந்தவிதமான தொந்தரவுகளும் ஏற்படாமல், பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இயற்கைப் பொருள்களை நாடுவோம். இயற்கை… நம் வரவுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM