உலக ஓசோன் தினம்
🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ஆம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
🌀 ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம்/உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
🌀 ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஆவி பிடிப்பதில் இவ்வளவு நன்மை இருக்கா ?
சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று சருமத்திற்கு பலவிதமான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அத்தகைய அழகுப் பொருட்கள் தற்காலிகமான அழகைத் தான் தரும் என்பதற்கு உதாரணமாக, தினத்தின் இறுதியில் சருமமானது பொலிவிழந்து, கருமையாக காணப்படும். ஏனெனில் சருமத்தில் அழுக்குகள், இறந்த செல்கள் அப்படியே தங்கியிருப்பதால், அவை பொலிவிழந்த சருமத்தை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக ஆவிப் பிடிப்பது என்பது மிகவும் எளிமையானது. அத்தகைய ஆவிப் பிடிப்பதில் பல வழிகள் உள்ளன. அத்தகைய வழிகள் கூட மிகவும் சுலபமானது.
கரும் புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் நீங்கும் :
வெந்நீரில் ஆவி பிடிப்பதால், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும் :
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
முகப்பரு குறையும் :
ஆவி பிடிப்பதால், முகத்தில் உள்ள பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
முகப்பரு இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும்.
முதுமை தோற்றம் மறையும் :
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
முகம் பொலிவு பெரும் :
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் கிடைக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

தமிழர்களின் ஆரோக்கியம் தரும் அணிகலன்கள்
நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும் ஆடம்பரத்திற்கும் மட்டுமே நகைகள் அணிவதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை.
முக்கியத்துவம் :
நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.
கொலுசு அணிதல் :
பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைகள் நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி அணிதல் :
மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளைக் குறைகிறது.
அரை நாண் கொடி அணிதல் :
சிறு குழந்தைக்கு இடுப்பில் அரை நாண் கொடி அணிவிப்பது வழக்கம். உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணிவிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் குருதி சுற்றோட்டத்தை பேணுவதற்கு தான். மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் செல்லும் இரத்த ஓட்டம் சீராகவும் சமநிலையுடனும் இருக்கவே அரை நாண் கொடி பயன்படுகிறது.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்."

முத்தான சிந்தனை துளிகள் !
'மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்."

சோப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை !!
சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப்பு தயாரிக்கப்படுகிறது. சோப்பு வாங்கும்போது முக்கியமாக டி.எப்.எம், பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் இரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
டி.எப்.எம். என்றால் என்ன?
நாம பயன்படுத்துற சோப்போட தரத்த இப்படி தான் அறிவியல் முறையில சொல்லுவாங்களாம். டி.எப்.எம் (TOTAL FATTY MATTER) என்பது ஒரு சோப்பிற்குள் இருக்கின்ற கொழுப்பு மற்றும் இரசாயன பொருட்களின் விகிதம் ஆகும்.
டி.எப்.எம் - இல் சேர்க்கப்படும் கொழுப்பு எண்ணெயைப் பொறுத்து, சோப்பு தரம் பிரிக்கப்படுகிறது. பி.ஐ.எஸ். என்ற தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்புகள் இருக்கின்றன.
மூன்று நிலை :
⭐ கிரேடு 1 என்பது 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எப்.எம் இருக்கும் சோப்பைக் குறிக்கும். இதன் விலை சற்று அதிகம்.
⭐ கிரேடு 2 என்பது 70 சதவிகிதத்துக்குக் கீழ் டி.எப்.எம் கொண்டது.
⭐ கிரேடு 3 என்பது 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எப்.எம் இருக்கும். 65 சதவீதத்திற்கும் குறைவான டி.எப்.எம். இருந்தால் அது தரம் குறைந்த சோப்பு எனப்படுகிறது.
எனவே சோப்பு வாங்கும்போது டி.எப்.எம். அளவினை பார்த்து வாங்குங்கள்.
அதிக அளவு பி.ஹெச் என்ன செய்யும்?
பி.ஹெச் அளவு என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் சமநிலையைக் குறிப்பது. ஒரு பொருளில் உள்ள அமிலத்தன்மை (Acidic) காரத்தன்மை (Alkalic) இரண்டின் சமநிலை விகிதத்தின் குறியீடு ஆகும். சருமத்தின் பி.ஹெச் அளவு 5.5 ஆகும். சோப்பின் பி.ஹெச் அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது. அதாவது, ஆல்கலின் அளவு அதிகம்.
எதை பயன்படுத்தக் கூடாது :
வீரியம் நிறைந்த இரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.
சோப்பு பயன்படுத்துவது எப்படி?
சோப்பை சருமத்தில் நேரடியாகத் தேய்க்கக் கூடாது. கைகளில் சோப்பைத் தடவி, கைகளால் தேய்த்துக் கழுவுவதே சரி. சிலர் 2-5 நிமிடங்கள் வரை சோப்பை மீண்டும் மீண்டும் தேய்த்து முகம் கழுவுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், சருமம் நிச்சயம் பாதிக்கப்படும்.

இன்றைய பொன்மொழி
'கவலைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும், தற்காலிகமாக்குவதும் உன் கையில் தான் உள்ளது. கவலையை நிரந்தரமாக்கினால் நீ நோயாளி அதையே தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி."
'கவலைகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும், தற்காலிகமாக்குவதும் உன் கையில் தான் உள்ளது. கவலையை நிரந்தரமாக்கினால் நீ நோயாளி அதையே தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி."
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்."

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
'உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்... ஆனால், எல்லைக்குள் ஒருபோதும் உன் வாழ்க்கையை அமைத்து விடாதே...!"

மருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்?
சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும்.
பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார். மருத்துவர்கள் ஏன் அப்படி சாப்பிட சொல்கிறார்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.
சாப்பாட்டிற்குப் பிறகு :
சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு இரசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சாப்பாட்டிற்கு முன் :
சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
தண்ணீரில் கரைத்து :
சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம்.

'வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை.. ஆனால், வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு...!"

ஆவணங்களை லேமினேஷன் செய்யலாமா ?
ஆவணங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்கிற காரணத்துக்காக சொத்துப் பத்திரம் முதல் பிறப்புச் சான்றிதழ் வரை எல்லா ஆவணங்களையும் லேமினேட் செய்து பத்திரப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்படி லேமினேஷன் செய்வது உபயோகம் அல்ல.
லேமினேஷன் தவறானது :
ஆவணங்களைப் பொறுத்தவரை, முக்கியமான காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுபவை. அவற்றின் உண்மைத் தன்மை என்பது மிகவும் கவனமாகவும், கறாராகவும் பார்க்கப்படுகிறது. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை லேமினேஷன் செய்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.
ஆவணங்களை கண்டுபிடிப்பது கடினம் :
லேமினேஷன் செய்வதால், ஆவணங்கள் எந்தத் தருணத்திலும் எந்தவித சேதமும் ஆகாமல் இருக்கும் என்றாலும், அதனுடைய உண்மைத் தன்மை, அதாவது ஒரிஜினாலிட்டியைச் சரி பார்ப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஏற்கெனவே போலிப் பத்திரங்களும், போலி ஆவணங்களும் மிகுந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், லேமினேஷன் செய்வதால் போலியான ஆவணங்களையும், உண்மையான ஆவணங்களையும் பிரித்து அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இதனால் சில சமயங்களில் நம்முடைய காரியம் நடக்காமலேயே போய்விடலாம்.
லேமினேஷன் செய்தவை :
ஆவணங்களை ஏற்கெனவே லேமினேஷன் செய்தவர்கள் அதனை நீக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. பழைய ஆவணங்களையோ, கிழிந்த, தண்ணீரில் நனைந்த ஆவணங்களையோ நீங்கள் லேமினேட் செய்திருந்தால், அதனுடைய காகித நிலையைப் பொறுத்துக் கட்டணம் மாறும்.
எத்தகைய முக்கியமான ஆவணமாக இருந்தாலும், அவற்றை லேமினேஷன் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே சரி. ஆவணங்களைப் பாதுகாக்க ஓப்பன் டைப் ஃபைல் ஃபோல்டர்களைப் (Open type file folder) பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக இருக்கும். இந்த ஃபைல்களை பூச்சிகள் அண்டாமல், தண்ணீரில் நனையாமல் பாதுகாத்தாலே போதும். உங்கள் ஆவணங்கள் எப்போதும் பத்திரமாக இருக்கும்.

சிறுதானிய உணவின் மகத்துவம் !!
அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவுகளுள் சிறுதானியமும் ஒன்றாகும். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.
கம்பு :
ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.
குதிரைவாலி :
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.
தினை :
இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.
சாமை :
இரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.
கேழ்வரகு :
எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.
வரகு :
உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.
சோளம் :
உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

'நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதி பிரச்சனைகளுக்கான காரணம், நம்முடைய சின்ன சின்ன அலட்சியங்களாக தான் இருக்கும்."