Tamil short message pinned «இந்த channelல் வரும் பதிவுகள் FaceBook இல் இருக்கும் https://www.facebook.com/tamilshortmessage இருந்து Bot மூலமாக Forward செய்யப்படுகிறது. இந்த channel எந்தவொரு தனி நபர் சார்ந்ததோ / எந்த ஒரு கட்சியை சார்ந்ததோ அல்ல. உங்களின் தொடர் ஒத்துழைப்பிர்க்கு நன்றி.…»
உட்கார்ந்து கொண்டே பணிபுரிபவர்களுக்காக !! இன்றைக்கு பலரும் விரும்பும் வேலை உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான், வெயிலிலும் மண்ணிலும் வேலை செய்வதை கௌரவக் குறைவாக கருதிகின்றனர். ஒரு இடத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருப்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், காட்டிலும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நம்மில் பலருக்கு தெரியாது. அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தும், அதே சமயம் வீட்டிற்குச் சென்று அமர்ந்த படியே டி. வி. பார்ப்பவர்களுக்கு பல வகை நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதனால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கு காண்போம். முதுகுவலி : நம்மில் பல பேருக்கு முதுகுவலி என்பது மிகவும் தொந்தரவு கொடுக்கக் கூடிய வலியாகும். உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் முதுகுவலி ஏற்படும். அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள். லிப்போபுரோட்டீன் அளவு : உட்கார்ந்து கொண்டே வேலைசெய்வதனால் முதுகுவலி மட்டுமே ஏற்படுகிறது என்று நினைக்கிறோம் ஆனால் அது தவறு முதுகு வலி மட்டுமல்லாமல் வேறு சில வகை பிரச்சனைகளும் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடும். ஆரோக்கியத்திற்கு தேவையான கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும். உறுப்புகள் பாதிக்கப்படும் : ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு உடலின் செயல்பாடுகள் குறைந்து விட வாய்ப்பு உண்டு. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். உடல்பருமன் : அதனால் உடலில், இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்காது. அத்துடன் தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். குறிப்பாகக் கழுத்து - முதுகுப் பகுதி தசைகள் இறுகி வலியை உண்டாகுவது, உடலில் கொழுப்புத்தன்மை கூடி உடல் எடை அதிகரிப்பதுடன் உடல்பருமனும் ஏற்படும். சர்கரை நோய் : ஒருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால் அவருக்கு நிமிடத்துக்கு ஒரு கலோரி மட்டுமே எரிய ஆரம்பிக்கும். அது மட்டும் இல்லாமல் அவர்களின் இரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உடலிலே தங்கி விடும் : தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் நொதிகள் மிகவும் குறைந்துவிடும். இதனால் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க செய்யும். இதனால் நமக்கு பல பாதிப்புகள் வந்தடையும். கால் வலி : கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தொடர்ந்து உட்கார்ந்தபடியே வேலை செய்வதை தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடந்தால் பிரச்சனைகள் குறையும் வாய்ப்பு உள்ளது.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
நீங்கள் இப்படியும் ஏமாற்றப்படலாம் ! எவ்வாறு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்? பொதுவாக மக்கள் அனைவரும் தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது லிட்டர் அல்லது ரூபாய் மதிப்பீட்டில் எரிபொருளை நிரப்புகின்றனர். இவ்வாறு வாகனத்தில் எரிபொருளை நிரப்பும்போதும் அனைவரும் இந்த இயந்திரத்தில் சரியான ரூபாய்க்கும், அளவிற்கும் பெட்ரோல் நிரப்பப்படுகிறாதா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஆனால் பல பங்க்-களில் சரியான அளவை இயந்திரத்தில் காட்டப்பட்டாலும் குறைவான அளவில் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படுகிறது. இதற்காக எலக்ட்ரானிக் சிப் வைக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிப் இந்த எலக்ட்ரானிக் சிப்பை பொருத்துவதன் மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒவ்வொரு முறையும் கிட்டதட்ட 5 முதல் 10 சதவீதம் வரையிலான எரிபொருளை பிடித்துக் கொள்கின்றனர். இந்தச் சிப் பெட்ரோலை வெளியேற்றும் ரிமோட் கன்ட்ரோல் வயருடன் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் 940 ml பெட்ரோல் தான் வெளியேறும். இந்தச் சிப்பின் விலை வெறும் 3000 மட்டுமே என்பது பங்க் உரிமையாளர்களை விசாரிக்கும் போது தகவல் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் இருக்கலாம்! மேலும் சோதனை செய்த சிறப்புப் படை போலீஸார் இந்தச் சிப் இந்தியா முழுவதும் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகின்றனர். இந்த நிலையில் மக்கள் தங்களது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தண்ணீர் பாட்டிலில் ஒரு லீட்டர் பெட்ரோலை வாங்கி அளவைச் சரிபார்த்துக்கொள்ளவும். சில பெட்ரோல் பங்க்-களில் பாட்டிலில் பெட்ரோல் அளிக்க மாட்டோம் எனக் கூறினால் விபரத்தைக் கூறி உறுதி செய்துகொள்ளுங்கள். அளிக்க மறுத்தால் உடனடியாகப் புகார் அளிக்கலாம். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பது பெருமை தான். ஆனால், சரியான வழியில் செல்கிறதா என்றும் நாம் யோசிக்க வேண்டும்...
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
கண் சிவந்து போவதற்கான காரணங்கள் !! 👀 அன்றாட வாழ்வில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாதவரை காண்பது அரிது. இந்த மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, என பல பிரச்சனைகள் பரிசாய் கிடைத்திருக்கிறது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் குறைபாடாக கருதப்படுவது கண்ணெரிச்சலும் கண் சிவப்பாக மாறிவிவது தான். 👀 சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போகும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் அதை கண்டு கொள்வதில்லை. ஒரு சிலரோ கடைகளில் கிடைக்கும் சில மருந்துகளை வாங்கி பயன்படுத்துவர். 👀 மருத்துவரின் ஆலோசனை இன்னாமல் மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் தவறான செயல் ஆகும். கண்கள் சிவப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தூக்க மாத்திரை : சில மக்களோ மன அழுத்தம் காரணமாக தூக்கத்திற்கு தூக்க மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி அடிக்கடி தூக்க மாத்திரை சாப்பிடுவதால் கண்களை வறண்டு அலர்ஜியை ஏற்படுத்துவதுடன், கண்களைச் சுற்றியுள்ள திசுக்களில் இரத்த ஓட்டத்தை குறைத்து கண்களை சிவப்பு நிறமாக மாற்றுகிறது. அதிகமாக மது அருந்தக் கூடாது : நாம் அதிகமாக மது அருந்தும் போது, இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து கண்களை சிவந்து போவதற்கு காரணமாக இருக்கிறது. சிகரெட்டினாலும் கூட : தினமும் சிகரெட்டை அடிக்கடி புகைத்தால், அது நமது கண்களைச் சுற்றியுள்ள நரம்புகள் இறுக்கம் அடையச் செய்து, கண்கள் சிவந்து போகச் செய்கின்றது. தூங்குவதால் கூட : கண்களை பாதிக்கும் வகையில் தூங்கும் போதும் கூட இரத்த அழுத்தம் திடீரென கண்களில் அதிகமாகி சிவந்து போகும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்தினாலே அல்லது அதிகம் பார்த்து கொண்டிருந்தாலோ கண் சிவந்து போக வாய்ப்பு உண்டு. எனவே எதுவும் அளவோடு பயன்படுத்தினால் நன்று !!
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
தங்கம் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு இவ்வளவு காரணங்களா? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலை சற்றே மாறுபட்டு இருப்பதை கவனிக்கலாம். ஒரு சில நகரங்களில், தங்கத்தின் விலை அதிகமாகவும், வேறு சில நகரங்களில் சற்று விலை குறைவாகவும் காணப்படும். இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது? எதை சார்ந்தது? இந்திய நகரங்களில் உள்ள தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையைச் சார்ந்தது. எனவே, சர்வதேச நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது எனில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயர்ந்து விடும். யார் கொண்டு வருகின்றார்கள்? நாம் நம்முடைய தேவைக்கு, தங்கத்தைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றோம். இந்தியாவில் தங்கம், மத்திய அரசாங்கம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முகவர் மற்றும் நிறுவனங்கள், போன்றவர்களால் இறக்குமதி செய்யப்படுகின்றது. அதன் பின்னர் அவர்களின் வழியாக மிகப் பெரிய விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும். இறக்குமதி செய்த பின்னர், அவர்கள் தங்கத்தின் சர்வதேச விலைக்கு இணையான உள்நாட்டு மதிப்பை இந்திய ரூபாயில் கணக்கிட்டு, அதனுடன் வரிகளைச் சேர்த்து, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றனர். இந்த விலைதான், இந்தியாவில் தங்கத்தின் முதல் ஆரம்ப விலை. சில்லறை விலை ஏன் மொத்த விலையில் இருந்து மாறுபடுகின்றது? மும்பை போன்ற நகரங்களில் புல்லியன் அசோசியேசன் மூலம் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக மும்பையில் உள்ள இந்திய புல்லியன் ஜுவல்லர்ஸ் சங்கம் தங்க விநியோகஸ்தர் சங்கம் ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து அந்த விலையைச் சில்லறை தங்க விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதற்கு முன்னர் சங்கம், பெரிய விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ளும், மற்றும் எதிர்காலத் தேவையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, தங்கத்திற்கு விலையை நிர்ணயிக்கும். விலையை கணக்கிட பல்வேறு வழிகள்! தங்கத்தின் சர்வதேச விலையைத் தெரிந்து கொண்டு அதனுடன், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பெருக்கினால் தங்கத்தின் உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். இந்த விலையுடன் தங்கத்தை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் லாபம், மதிப்புக்கூட்டு வரி, நகரின் சுங்க வரி மற்றும் உள்ள+ர் தீர்வைகள் போன்றவற்றைச் சேர்த்தால் தங்கத்தின் இறுதி சில்லறை விலையைத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உள்ள+ரில் நகைக்கடையில் தங்கத்திற்குச் செலுத்தும் பணத்தில் இவை அனைத்தும் அடக்கம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நகரங்களில் ஏன் விலை வேறுபடுகின்றது? இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அந்த மாநிலத்திற்கு உரிய உள்ள+ர் தீர்வைகள் வேறுபடுகின்றது. அதோடு போக்குவரத்துச் செலவுகள் மாநிலங்களுக்கு இடையே மிகவும் வேறுபடுகின்றது. ஒரு சில தனிநபர்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற துறைமுகம் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என நினைக்கின்றனர். ஏனெனில் இந்த நகரங்களில் தங்கத்தை இறக்குமதி செய்த பின்னர் ஏற்படக்கூடிய போக்குவரத்துச் செலவு மிகவும் குறைவு. தங்கத்தின் விலையைப் போக்குவரத்து செலவைத் தவிர்த்து பல்வேறு காரணிகள் பாதிக்கின்றது. நாணயப் பரிமாற்ற விலை, தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
இனி நீங்கள் எளிதில் தப்பித்துவிடலாம்..!! எப்போதும் நம்முடைய கைப்பேசியை மற்றவர்களிடம் கொடுப்பது பலருக்கும் பிடிக்காத ஒரு விஷயமாகும். எனினும் சில நேரங்களில் தெரிந்தவர்களிடம் ஸ்மார்ட்போன்களை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும். அழைப்புகளை மேற்கொள்ளவோ, குழந்தைகள் கேம் விளையாடவோ என சில சமயங்களில் ஸ்மார்ட்போன்களை மற்றவர்களிடம் வழங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது? இதுபோன்ற நேரங்களில் நம்முடைய கைப்பேசியை வழங்கும் முன் எச்சரிக்கையாக சிலவற்றை செய்து வைத்தால், மொபைல் வழங்கியதும் நமக்கு ஏற்படும் அச்சம் வெகுவாக குறைக்கப்படும். ஸ்மார்ட்போன் மற்றவர்கள் கையில் இருக்கும்போது குறிப்பிட்ட சில செயலிகளை மட்டும் பயன்படுத்தாமல் இயக்கி வைக்க முடியும். அது எப்படி ? ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பின் விண்டோஸ் (Pin Windows) எனும் அம்சம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதை செயல்படுத்தினால் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட விண்டோக்களை ஸ்கிரீனில் அனுமதிக்கும். இவ்வாறு செய்யும் முன் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை : 👉குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு லாலிபாப் அல்லது அதற்கும் மேல் வெளியிடப்பட்ட இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் பின்பற்ற வேண்டிவை: 👉ஸ்மார்ட்போனின் செட்டிங்களை திறக்க வேண்டும். 👉செக்யூரிட்டி & லாக் ஸ்கிரீன் (Security & lockscreen) ஆப்ஷன் செல்ல வேண்டும். 👉இனி கீழ்புறம் ஸ்கிரால் செய்து ஸ்கிரீன் பின்னிங் (Screen Pinning) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 👉பிறகு இந்த ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். 👉இதைத் தொடர்ந்து (Ask for unlock pattern before unpinning) ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும். இதன் பின் செயலியை திறக்கும் முன் பாஸ்வேர்டு அல்லது பேட்டர்னை பதிவிட கோரும். 👉இனி நீங்கள் பின் செய்ய வேண்டிய செயலியை ஓபன் செய்து Recent பட்டனை க்ளிக் செய்து சமீபத்தில் பயன்படுத்திய செயலிகளை திறக்க வேண்டும். 👉 செயலியை பின் செய்ய Pin ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். 👉இனி நீங்கள் தேர்வு செய்த செயலி பின் செய்யப்பட்டு விடும். இதனால் மற்ற செயலிகளை திறக்கும் முன் அன்பின் செய்ய வேண்டும். இந்த வசதியெல்லாம் தற்போதைய வெளியிடப்பட்ட ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும்.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் !! ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் தண்ணீரை அளவுக்கு அதிகமாகவும் குடிக்கக்கூடாது. சரி, எவ்வளவு தண்ணீர் தான் குடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையும், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனைப் பற்றி இங்கு பார்ப்போம். சோர்வு : பல காரணங்களால் நாம் அடிக்கடி சோர்வடையக்கூடும். தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள் ஆகும். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட்டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும். ஆக்ஸிஜன் : உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது சுவாச காற்று மாற்றம் குறைபடும். காரணம் இருக்கும் நீர்ச்சத்தினை உடலில் தக்க வைக்க உடல் எடுக்கும் முயற்சி இது. இதனால் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும். கொழுப்பு : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். நீர்ச்சத்து உடலில் குறையும் போது இருக்கும் நீர் சத்தினை தக்க வைக்க அதிக கொழுப்பு சத்தினை உருவாக்கும். கற்கள் : உடலில் நீர்ச்சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு இவை தேங்குவதால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் கற்கள் உண்டாகும். கூடவே வீக்கம், வலி ஏற்படும். மூட்டுவலி : மூட்டுகளுக்கு அதிக நீர்ச்சத்து தேவை. நீர்ச்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும். சருமம் பாதிப்படையும் : நீர்ச்சத்து உடலில் குறைய தொடங்கும் போது அனைத்து உறுப்புகளும், சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதிலேயே முதுமை தோற்றம் பெறுவர். நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். உடலுக்கு மிகவும் அவசியமானது நீர்ச்சத்து, அது குறைய தொடங்கும் போது உடலில் ஓவ்வொரு உறுப்பும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்..
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் ? இந்தியாவில் வருமான வரி இந்தியா விடுதலை பெற்ற பின்பு இந்திய வருமானவரி சட்டம், 1961இல் இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரிச் சட்டம் செயல்படத் தொடங்கியது. தாமதமாக தாக்கல் செய்வோர் : தாமதமாக தாக்கல் செய்வோர் சில முக்கியமான அம்சங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யும் வரி தாக்கல் அனைத்துமே தாமதமாக தாக்கல் செய்யப்படுபவை என்ற பட்டியலில் இடம்பெறும். தாமதமாக தாக்கல் செய்தாலும் இதில் திருத்தம் செய்ய விரும்பினால் அவ்விதம் செய்வதற்கும் விதிமுறைகள் அனுமதிக்கிறது. ஆனால் அது முந்தைய நிதி ஆண்டினுடையதாக இருக்கக் கூடாது. மேலும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கென வருமான வரி சட்டமானது முந்தைய நிதி ஆண்டுக்கானதை விட அதிக திருத்தங்களைக் கொண்டதாயிருக்கும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் : ஆண்டு மொத்த வருவாய் ரூபாய் இரண்டரை இலட்சத்திற்கு கீழ் வருவாய் அறுபது நிரம்பிய மூத்த குடிமக்களும், ஆண்டு மொத்த வருவாய் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கு கீழ் வருவாய் என்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமக்களும் வருமான வரித்துறையினருக்கு, ஆண்டு தோறும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யத் தேவையில்லை. தண்டனைகள் : வருமான வரித்துறைக்கு ஆண்டு தோறும் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கும், உண்மையான வருவாய்களை வருமான வரி படிவத்தில் காட்டாது வருமான வரியை செலுத்த தவறும் நபர்களுக்கும் வருமானவரிச் சட்டப்பிரிவு 271ர்-இன் படி ரூபாய் 10,000ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும். வருமானவரி படிவம் தாக்கல் செய்யவில்லை என்றால் : வருமான வரிச் சட்டம் பிரிவு 276சிசி-இன் படி, உரிய காலத்தில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யவில்லை எனில் ரூபாய் ஒரு இலட்சம் அபராத தொகை செலுத்துவதுடன், வருமான வரித் துறையினர் மேற்கொள்ளும் குற்ற நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
முகப்பருக்களுக்கான காரணங்கள் !! 🔵 இளைய சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானதாக முகப்பரு உள்ளது. அதுவும் சிலருக்கு அளவுக்கு அதிகமான முகப்பருக்கள் நீண்ட காலம் அப்படியே இருக்கும். 🔵 பொதுவாக இது போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் ஏன் முகப்பரு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 🔵 பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். சாக்லேட் : ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது. எண்ணெய் பசை சருமம் : பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குத் தான் பருக்கள் அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பதால், தூசிகள் சருமத்தில் படிந்து, சரும துளைகளை அடைத்து, அதனால் பருக்களை ஏற்படுத்தும். எனவே இத்தகையவர்கள், தினமும் மூன்று முறை முகத்தை கழுவ வேண்டும். மேலும் தினமும் கற்றாழை முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம். எண்ணெயில் பொரித்த உணவுகள் : சிலருக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் முகப்பருக்கள் வரக்கூடும். எனவே அத்தகையவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடித்து, பழங்களை எடுத்து வர வேண்டும். கவலை மற்றும் மன அழுத்தம் : கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இப்படி ஏற்பட்டால், அவை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை : செரிமான மண்டலம் சீராக இயங்காமல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைக்கு உள்ளானவர்களுக்கும் முகப்பருக்கள் வரக்கூடும். ஆகவே ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் சிறு உடற்பயிற்சியுடன், தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். பொடுகு : தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அந்த பொடுகு முகத்தில் பட்டு பருக்களை ஏற்படுத்தும். எனவே பருக்கள் வருவதை தவிர்க்க வேண்டுமானால், முதலில் தலையை சுத்தமாக பொடுகின்றி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் குறைவாக குடிப்பது : சிலர் தண்ணீரை மிகவும் குறைவாக குடிப்பார்கள். அத்தகையவர்களுக்கும் முகப்பருக்கள் அதிகம் வரக்கூடும். எனவே தண்ணீரை அதிகம் குடித்து பருக்கள் வருவதைத் தவிர்த்திடுங்கள்.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
கற்றாழையின் மருத்துவ குணங்கள்..!! நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம். இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. கற்றாழையின் மருத்துவ குணங்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால், கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்திலும் கற்றாழை கிடைக்கிறது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை எனப் பல வகை இருந்தாலும் இதில் மருத்துவராக செயல்படுவது சோற்றுக் கற்றாழை மட்டுமே. சருமம் : கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு போன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு : கற்றாழை கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும். தோல் அரிப்பு : தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும். வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும். வைட்டமின்கள் : சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது. மலச்சிக்கல் : நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
😂 ஸ்மைல் பிளீஸ் ! 😂 சிரிப்பு : 😂 நன்கு வாய்விட்டு ஒருமுறை சிரித்தால் உடல் டென்ஷன், மனச் சோர்வு நீங்கி, இறுகிய தசைகள் தளர்ந்து விடும். சுமார் ஒரு மணி நேரம் இந்த நல்ல அதிர்வலை இருக்கும். 😂 மனம் விட்டு சிரிக்கும் சிரிப்பு உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும். நோய் எதிர்ப்பு திசுக்களையும், சக்தியினையும் உடலில் உருவாக்கும். 😂 சிரிப்பினால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தினால் உடலில் ஒரு ஆரோக்கிய உணர்வும், உடல்வலி நீக்கமும் ஏற்படும். 😂 சிரிப்பு ரத்தக் குழாய்களை நன்கு இயங்க வைத்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் மாரடைப்பு இருதய நோய் பாதிப்புகள் வெகுவாய் குறையும். சிரிப்பின் வகைகள் : 😆 அசட்டு சிரிப்பு 😆 ஆணவ சிரிப்பு 😆 ஏளனச் சிரிப்பு 😆 சாககச் சிரிப்பு 😆 நையாண்டி சிரிப்பு 😆 புன் சிரிப்பு 😆 மழலை சிரிப்பு 😆 நகைச்சுவை சிரிப்பு 😆 அச்சிதல் சிரிப்பு சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள் : 😍 அன்பு 😍 மகிழ்ச்சி 😍 அகம்பாவம் 😍 செருக்கு 😍 இறுமாப்பு 😍 தற்பெருமை 😍 அவமதிப்பு 😍 புறக்கணிப்பு 😍 வெறுப்பு சிரிப்பின் நன்மைகள் : 😂 வாழ்க்கையினை இனிமையாக்கும். 😂 பயம், படபடப்பு இருக்காது. 😂 மனநலம், மனநிலை உற்சாகமாய் இருக்கும். 😂 உறவுகள் பலப்படும். 😂 கூட்டு முயற்சிகள், வெற்றியாய் முடியும். 😂 வேற்றுமைகள் நீங்கும். 😂 ஆக்கப்பூர்வ சிந்தனைகளும், செயல்களும் ஏற்படும். 😂 தானே தனியாய் அமர்ந்து சிரிப்பது என்பது சரியாக இருக்காது. சிரிப்பதற்கு உடன் மக்கள் வேண்டும். குடும்பம், உறவினர், நண்பர் என நமக்கு ஒரு சின்ன கூட்டம் தேவை. இவர்களுடன் சிரிப்பதற்கான வாய்ப்புக்களை, சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இவர்களுடன் சேர்ந்து தமாஷான சினிமா, டி.வி நிகழ்ச்சியினைப் பாருங்கள். 😂 சிரிப்பான கதை, ஜோக்ஸ் என படியுங்கள். 😂 சிலர் தன் பேச்சிலேயே பிறரை நன்கு சிரிக்க வைப்பார்கள். அவர்கள் இருக்கும் இடமே கலகலவென இருக்கும். அவர்களுடன் அடிக்கடி பேசுங்கள். 😂 குழந்தைகளுடன் விளையாடுங்கள். 😂 புன்னகைக்கு எந்த காரணமும் தேவையில்லை. யாரையும் சந்திக்கும் பொழுது புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள். 😂 உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த நன்மைகளை எண்ணிப் பாருங்கள். இது உங்களை மகிழ்ச்சியானவராக மாற்றி விடும். அதை விட்டு எனக்கு அது இல்லை இது இல்லை என புலம்புவதனையே வாழ்க்கையாக்கி விடாதீர்கள். 😂 பலரின் பேச்சு கூட கோபத்தால் கொப்பளித்தபடி தான் இருக்கின்றது. சாதாரண வார்த்தைகள் என்பதே காண அரிதாகி விடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது. தமாஷ் செய்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சாலேயே பிறரை காயப்படுத்துபவர்களும் உண்டு. கீழ்தரமான இந்த குணங்களை விட்டு பேச்சு கூட பிறரை காயப்படுத்தாத நகைச்சுவையுடன் இருக்கட்டும். இப்படி இருப்பவர்களை அனைவரும் விரும்புவர். வாழ்க்கை என்றால் போராட்டம் தான். சோதனை தான். அதற்காக அழுத கண்ணும், சிந்திய மூக்கும், கையில் கைகுட்டையுமாக வாழ வேண்டுமா என்ன? புன்னகையை உதிர்த்து வாழ்க்கையைப் பெறுவோம் !
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Veja mais no Facebook em: https://ift.tt/2J35bJU
Facebook
குறுந்தகவல்
குறுந்தகவல். 44 likes. தகவல் பக்கம்
அட அப்படியா!! 🌞 ஒரு மாட்டின் இதயம் நிமிடத்திற்கு 60 முதல் 70 முறை துடிக்கிறது. 🌞 ஒரு சாதாரண பசுவின் உடல் வெப்பநிலை 101.5°F ஆகும். 🌞 மனிதர்களைவிட பசுக்கள் குறைந்த மற்றும் உயர் அதிர்வெண்களைக் நன்றாக கேட்கும் திறன் கொண்டவை. 🌞 ஒரு சராசரி மாடு ஒரு நாளில் 40,000 க்Fம் மேற்பட்ட முறை தாடையை அசைக்கும். 🌞 பசுக்கள் உண்மையில் புல்லைக் கடிக்காது, அதற்கு பதிலாக அதன் நாக்கில் சுருட்டும். 🌞 நீங்கள் மாட்டை மேல் மாடிக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் கீழ்நோக்கி அழைத்து வர முடியாது. 🌞 பசுக்களால் வாந்தி எடுக்க முடியாது. 🌞 ஒரு சராசரி மாடு ஒவ்வொரு நாளும் 30 முதல் 50 கேலன்கள் தண்ணீரைப் பருகும். 🌞 கீழ் தாடையில் மட்டும் பற்களை கொண்டது மாடு. 🌞 ஒரு மனிதரின் கைரேகைகளைப் போலவே, இரண்டு மாட்டுப் புள்ளிகளும் ஒரே மாதிரி இருக்காது.
via குறுந்தகவல் Like This page
July 13, 2018 at 06:11PM
via குறுந்தகவல் Like This page
July 13, 2018 at 06:11PM
உடலை வலுப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்!! உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள், சுவாச பயிற்சி, தியானம் ஆகியவை முக்கியமாகும். உடலியக்க பயிற்சிகளுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் அவசியம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவையே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம். 💆 பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு சக்தியை தரும். நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க இது உதவுகிறது. 💆 சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்க உதவுகின்றன. அவற்றுள் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிரம்பி உள்ளது. 💆 மேலும் அவை இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோய் தொற்றுவில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும். அத்துடன் காய்ச்சல் போன்ற உடல்நல பாதிப்பில் இருந்தும் காக்க உதவுகிறது. 💆 மஞ்சள், சோம்பு, பூண்டு போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இதை அன்றாட உணவில் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 💆 எலுமிச்சைப் பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. எலுமிச்சைப் பழத்தை சாறு பிழிந்து தண்ணீர், சூப்கள், சாலட்டுகளில் கலந்து சாப்பிடலாம். 💆 தயிர் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. 💆 பீன்ஸ், சிப்பி வகை மீன்கள் போன்றவற்றில் துத்தநாக சத்துக்கள் அதிகம் உள்ளது. பொதுவாகவே உடலில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்பட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடுகிறது. அதனால் துத்தநாக சத்துக்கள் கொண்ட உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். 💆 கீரையில் தாதுக்கள், வைட்டமின்கள், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு பலவகையான நோய்கள் வராமல் காத்துக்கொள்ள உதவுகிறது. 💆 கேரட், தக்காளி, நெல்லிக்காய், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ போன்றவை அதிகம் நிறைந்திருக்கின்றது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுவில் இருந்தும் காக்கின்றது.
via குறுந்தகவல் Like This page
July 13, 2018 at 07:19PM
via குறுந்தகவல் Like This page
July 13, 2018 at 07:19PM
முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டுமா? பெண்கள் முகத்தைப் பொலிவுடன் வைத்துக்கொள்ள பல செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பிரச்சனைகள் உண்டாகுகின்றது. எனவே செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கை நமக்களித்தப் பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இங்கு காண்போம். 👉 எப்போதும் பயணங்கள் மேற்கொண்ட பிறகு களைப்புடன் வீடு திரும்புபவர்களும், பயணத்திற்கு தயாராக இருப்பவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும். 👉 குளிக்கும்போது கடலை மாவை முகத்தில் பூசி கழுவினால் முகம் பளபளப்பாகும். கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகப்பொலிவைப் பெறலாம். 👉 சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும். 👉 கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவுடன் காய்ச்சிய பாலை குழைத்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும். 👉 மேலும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கிவிடும். 👉 அதைப்போல் முல்தானிமெட்டியை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும். 👉 வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க தயிரை முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். 👉 கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 👉 அதே போல் கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
via குறுந்தகவல் Like This page https://ift.tt/2J35bJU
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
July 13, 2018 at 08:00PM.
via குறுந்தகவல் Like This page https://ift.tt/2J35bJU
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
July 13, 2018 at 08:00PM.
எலுமிச்சை ஜூஸை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் !! பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் எலுமிச்சை ஜூஸை குடிப்பார்கள். மேலும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால், அது நமது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக்குகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பல்வேறு பக்க விளைவுகளையும் உண்டாக்குகிறது. அதைப் பற்றி இங்கு காண்போம். 👉 எலுமிச்சைப் பழச்சாற்றினை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், அதிலுள்ள அதிகப்படியான அமிலம் நமது பற்களில் உள்ள எனாமலை அரித்து, பற்கள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். 👉 எலுமிச்சைச் சாறு வயிற்று உபாதைகளைச் சரிசெய்யும். ஆனால், அதை மிக அதிகமாக குடிக்கும்போது, அதிலுள்ள சிட்ரிக் அமிலம் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். மேலும் இது வயிற்றை மந்தமாக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். எனவே அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. 👉 எலுமிச்சையிலுள்ள அஸ்கார்பிக் ஆசிட், நமது சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நமது உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் சோடியத்தை வெளியேற்றி, சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 👉 எலுமிச்சை ஜூஸ் குடித்த பின் அதிக தாகம் மற்றும் வறட்சி ஏற்பட்டால், எலுமிச்சை சாற்றின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஜூஸில் அதிக அளவில் எலுமிச்சை சாறு இருப்பதால், அது நமக்கு அதிகப்படியான வறட்சியை ஏற்படுத்தும். 👉 பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் வலியை குணப்படுத்துவதற்கு எலுமிச்சை சாறும், உப்பும் சேர்த்துப் பயன்படுத்துவார்கள். ஆனால், உடனடியான பலன் வேண்டுமென எண்ணி, அதிக அளவில் எலுமிச்சைச் சாறினைப் பயன்படுத்தினால், அதுவே பல் கூச்சத்தை உண்டாக்கி விடும். 👉 சருமத்தில் எண்ணெய் பசையைப் போக்க பலரும் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதுண்டு. ஆனால் வறட்சியான அல்லது எண்ணெய்ப்பசை குறைவாக உள்ள சருமத்தில் எலுமிச்சை சாற்றினை தடவும்போது, அது சருமத்தை மேலும் வறட்கியாக மாற்றிவிடும்.
via குறுந்தகவல் Like This page http://www.facebook.com/pages/p/385416831850483
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
July 13, 2018 at 08:31PM.
via குறுந்தகவல் Like This page http://www.facebook.com/pages/p/385416831850483
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
July 13, 2018 at 08:31PM.
http://www.facebook.com/pages/p/385416831850483
குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!! குழந்தைகளின் உணவு விஷயத்தில் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் டீ, காபியை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். ☕ முதலில் டீ, காபி போன்ற பானங்களை 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லதாகும். ஏனெனில் டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது பசியைக் குறைக்கிறது. ☕ டீயில் 2 சதவீதம் கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருளாகும். ☕ மேலும், இது நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தி விடும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படும். ☕ டீ, ஒரு டையூரிடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலியுடன் சிறுநீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். ☕ மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போக வாய்ப்பு உள்ளது. ☕ டீ நேரடியாக மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள அல்கலாய்டின் பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரத்தச்சோகை ஏற்படுகிறது. ☕ காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
https://t.me/tamilshortmessage
July 13, 2018 at 08:45PM.
குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!! குழந்தைகளின் உணவு விஷயத்தில் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் டீ, காபியை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். ☕ முதலில் டீ, காபி போன்ற பானங்களை 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தவிர்ப்பது நல்லதாகும். ஏனெனில் டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது பசியைக் குறைக்கிறது. ☕ டீயில் 2 சதவீதம் கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் பொருளாகும். ☕ மேலும், இது நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தி விடும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலைவலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படும். ☕ டீ, ஒரு டையூரிடிக் அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலியுடன் சிறுநீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். ☕ மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போக வாய்ப்பு உள்ளது. ☕ டீ நேரடியாக மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள அல்கலாய்டின் பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் இரத்தச்சோகை ஏற்படுகிறது. ☕ காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
https://t.me/tamilshortmessage
July 13, 2018 at 08:45PM.
நிலவைப் பற்றிய சில தகவல்கள் !! 🌝 சூரிய மண்டலத்தில் ஐந்தாவது பெரிய இயற்கை செயற்கைக்கோள் நிலவு. 🌝 நிலவு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. 🌝 நிலவை அடைந்த முதல் விண்கலம் லூனா 1. 🌝 பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384400 கி.மீ. ஆகும். 🌝 நிலவில் காற்று மண்டலம் இல்லை. 🌝 சூரியனை விட நிலவு 400 மடங்கு சிறியது. 🌝 பூமியைவிட நிலவில் பலவீனமான ஈர்ப்பு விசை உள்ளது. 🌝 மனிதனின் எடை பூமியில் இருப்பதை விட நிலவில் ஆறு மடங்கு குறைவாக இருக்கும். 🌝 இதுவரை 12 பேர் மட்டுமே நிலவில் நடந்துள்ளனர். 🌝 நிலவில் 500,000 அதிகமான எரிமலை பிளவுகள் இருக்கின்றன.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 14, 2018 at 07:05AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 14, 2018 at 07:05AM.
உங்களுடைய Smartphone-களை வேகமாக சார்ஜ் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்! 📲 நீங்கள் Smartphone வாங்கும்போது அதனுடன் வழங்கப்பட்ட சார்ஜரைக் கொண்டே சார்ஜ் செய்ய வேண்டும். 📲 Computer-ல் USB Cable-ஐ கொண்டு உங்களுடைய மொபைலுக்கு சார்ஜ் செய்யும் போது சார்ஜ் ஆக வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்து கொள்ளும். 📲 எனவே Smartphone-களுக்கு சார்ஜ் செய்ய சாதாரண சார்ஜரை மட்டும் பயன்படுத்தினால் வேகமாக சார்ஜ் செய்து கொள்ளமுடியும். 📲 Smartphone-களை Airplane Mode-ல் வைத்து சார்ஜ் செய்வதன் மூலம் விரைவாக சார்ஜ் செய்திட முடியும். 📲 ஏனெனில் மொபைல் Airplane Mode-ல் இருக்கும் போது இணையம், மற்றும் நெட்வொர்க் சிக்னல் ஆகியவற்றின் பயன்பாட்டை நிறுத்தி மொபைலின் இயக்கத்தை குறைக்கும். இதனால் Smartphone-கள் வேகமாக சார்ஜ் ஆகிவிடும். 📲 முக்கியமாக மொபைல் Airplane Mode-ல் இருக்கும் போது உங்களுக்கு எவ்வித அழைப்பும், குறுந்தகவல்களும் வராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 📲 மொபைலை சார்ஜ் செய்யும்பொழுது Wifi, Bluetooth, Mobile data போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை Off செய்து வைப்பதன் மூலமும் விரைவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். 📲 பின்னணி பயன்பாடுகள் அதாவது மொபைலின் மெயில், பேஸ்புக் போன்ற பயன்பாடுகளை அணைத்து வைத்து சார்ஜ் செய்வதன் மூலம் வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். 📲 போன் தயாரிப்பாளர்கள் வழங்குகின்ற பேட்டரிகளை பற்றிய தொகுப்புகளை படித்து உங்களுடைய பேட்டரி மோசமானதா அல்லது ஒரிஜினலா என்பதை அறிந்து கொள்ளுங்கள். 📲 ஒரு வேலை பேட்டரி ஒரிஜினல் அல்ல என்பதை அறிந்தால், அதனை உடனடியாக மாற்றி விடவேண்டும். இப்படி செய்வதால் விரைவில் சார்ஜ் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 14, 2018 at 10:14AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 14, 2018 at 10:14AM.
காளானின் மருத்துவ குணங்கள் !!! உலகில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. பல வகை காளான்கள் விஷத்தன்மையும் கொண்டவை. நாம் சமையலுக்காக உபயோகப்படுத்தக்கூடியது white button மற்றும் oyster உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகைகளைத்தான். ரத்த அழுத்தம் : காளானில் குறைந்த அளவு சோடியமும் மற்றும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள Beta Glucan பாலிசாக்கரைடு பித்த உப்புகளுடன் பிணைந்து ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, காளான் உண்பது இதய நலத்துக்கு மிகவும் நல்லது. இதயத்திற்கு : காளானில் இருக்கும் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் சீராகவும் செயல்படுகிறது. புரதம் மட்டும் பொட்டாசியம் சத்து அதிகம் காலானில் உள்ளது. 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி.யும், சோடியம் 9 மி.கி.யும் உள்ளன. எனவே, இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளானை சொல்லலாம். புற்றுநோய் : புற்றுநோய் செல்களை அதிகரிக்கவிடாமல் தடுக்கும் தன்மை படைத்தது காளான். சில வகை காளான்கள் கீமோ தெரபி சிகிச்சையில் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கும் திறன் கொண்டவை.ஆன்டி ஆச்சிடென்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு மட்டுமல்லாமல் புற்றுநோயையும் தடுக்கவல்லது காளான். கொழுப்பை கட்டுக்க்குள் வைக்கிறது : இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. வயிற்றுபுண் சரியாகும் : காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். பெண்களுக்கு : மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது. மற்ற பயன்கள் : ‣ காளானில் உள்ள புரதம் உடலுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியது. ‣ காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் கே, சி, டி, பி போன்றவற்றுடன் எண்ணற்ற மினரல் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் இருப்பதால் நோய் சார்ந்த சிகிச்சை முறையில் காளானை மருத்துவத்துறையில் பயன்படுத்துகிறார்கள். ‣ காளான் உண்பதால் ஆஸ்துமா போன்ற சுவாச அமைப்பு குறைபாடுகளை தடுக்க முடியும். காயங்களை எளிதில் ஆற்றுவதற்கும் காளான் உதவும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கவும் காளான் நல்ல சாய்ஸ். ‣ மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். ‣ காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். குறிப்பு : காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 08:07AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 08:07AM.