Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

விதைகள் தனக்குத் தகுந்த இடத்தை தேடி முளைப்பதில்லை, மாறாகக் கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போல்தான் நம் வாழ்க்கையிலும் விழுந்து விட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்லுங்கள்.
கிராமங்களில் நாம் மறந்தவை !!

பச்சைக் குதிரை...!!


🏃ஆவியம், மணியாவியம் என்று சொன்னதுமே, கடந்த கால நினைவுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.

🏃சிறுவர்கள் துள்ளிக் குதித்து, விளையாடி மகிழ்ந்து, காலச் சுழற்சியில் காணாமல்போன விளையாட்டுக்களில் ஆற்றல் மிக்க ஆவியம், மணியாவியமும் தான் பச்சைக் குதிரை விளையாட்டு.

🏃சிறுவர்களும், இளைஞர்களும் ஒத்த வயதினரோடு விளையாடும் ஒரு விளையாட்டுதான் இது. இந்த விளையாட்டின் ஆரம்பமே காலை தாண்டுவது தான்.


எத்தனை பேர் விளையாடலாம்?

🏃இரண்டிற்கும் மேற்பட்டோர்

எப்படி விளையாடுவது?

🏃இந்த விளையாட்டை சிறுவர்கள் குழுவாக சேர்ந்து விளையாடலாம்.

🏃விளையாட்டில் முதலில் யார் குதிரை போல் குனிந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்துக்கொள்ள வேண்டும்.

கால் தாண்டுதல் :

🏃ஒருவர் தரையில் காலை நீட்டி குறுக்காக அமர்ந்து கொள்ள வேண்டும்.

🏃விளையாட்டில் பங்குகொள்ளும் மற்ற சிறுவர்கள் நீட்டிய காலில் படாமல் குதித்து தாண்ட வேண்டும்.

🏃அதன்பின்,

🏃கால் மேல் கால்

🏃கால் மேல் கை

🏃கை மேல் கை என அமர்ந்திருப்பவர் உயரத்தை கூட்டிக்கொண்டே போவார்.

🏃இந்த உயரங்களை தாண்டிவிட்டால் அமர்ந்திருப்பவர் எழுந்து குனிந்து நிற்பார்.

ஆள் தாண்டல் :

🏃குனிந்துகொண்டு நிற்பவரை அவர் முதுகில் கையை ஊன்றித் தாண்ட வேண்டும்.

🏃குனிந்து நிற்பவர் முதலில் கால் கட்டைவிரலை பிடித்து நிற்க வேண்டும்.

🏃அதன்பின் கணுக்காலை பிடித்து நிற்க வேண்டும்.

🏃அடுத்து முழங்காலை பிடித்து நிற்க வேண்டும்.

🏃அதற்கடுத்து தொடையை பிடித்து நிற்க வேண்டும்.

🏃கடைசியாக, தாண்டுவதற்கு சிரமமாக கைகளை கட்டிக்கொண்டு அல்லது கும்பிட்டுக்கொண்டு குனிந்து நிற்பார்.

தோற்பவர் :

🏃இதில் யாரால் குறிப்பிட்ட உயரத்தை தாண்ட முடியவில்லையோ அவர் தோற்றவராக கருதப்படுவார்.

🏃அதன்பின் தோற்றவர் தரையில் அமர்ந்து காலை நீட்ட வேண்டும். மறுபடியும் ஆட்டம் இவ்விதம் தொடரும்.

ரகசியம் :

🏃குனிந்து நிற்கப்போகிறவர், ஒரு பூவின் பெயரையோ அல்லது உணவுப் பொருளின் பெயரையோ, உதாரணமாக மல்லிகை, தோசை என யாரிடமாவது சொல்லி வைத்துவிட வேண்டும். ஒரு பூவின் பெயர் அல்லது உணவுப்பொருளின் பெயர் சொல்லப்பட்டுள்ளது என்று மட்டும் பிறருக்கு துப்புக் கொடுத்துவிட வேண்டும்.

🏃இப்போது, அவரை குனியவைத்து, மற்றவர்கள் அவரின் முதுகில் கையை வைத்துத் தாண்ட வேண்டும். தாண்டுபவர், ஏதேனும் பூவின் பெயரைச் சொல்வார். அவர் சொல்வது, குனிந்தவர் ரகசியமாக சொன்ன பூவின் பெயராக இருந்தால், தாண்டியவர் அவுட் ஆகிவிடுவார். இப்போது அவர் குனிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், அடுத்தவர் தாண்டுவார்.

பச்சைக் குதிரை விளையாடுவதால் ஏற்படும் பயன்கள் :

🏃இவ்விளையாட்டு சிறுவர்களின் உடல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

🏃குதிக்கும் திறன் வளர்கிறது.

🏃உடல் வலிமைப் பெறும்.

🏃எச்சரிக்கை மனப்பான்மை பெருகும்.

🏃இன்றைய நவீன காலத்தில் காலத்தால் மறைந்துபோன விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது அரிதாகிவிட்டது.

🏃மொபைல்போனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு சமமாக காலத்தால் அழிந்து வரும் கிராமத்து விளையாட்டுகளுக்கும் கொடுக்கலாமே...!!
கிராமங்களில் நாம் மறந்தவை!

கொல கொலயா முந்திரிக்கா

👉 அப்போதெல்லாம் மரத்தடியில் விளையாடினோம்... நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்தோம்...

👉 ஒன்றாக சேர்ந்து விளையாடிய காலங்கள் போய்... இன்று நான்கு சுவற்றுக்குள்ளேயே விளையாடும் காலம் வந்துவிட்டது.

👉 இதற்கு முக்கிய காரணம் குழந்தைகளின் பெற்றோர்களே. வெளியே விளையாடுவதை அனுமதிக்காமல் கைப்பேசியில் விளையாடுவதை தங்களின் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துகிறார்கள்.

👉 எனவே, கைப்பேசியில் விளையாடுவதை தவிர்த்து நம் கிராமத்து விளையாட்டுகளை சொல்லி கொடுப்போம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👭 எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் ஒன்றாகச் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

👭 இந்த விளையாட்டின்போது இடையிடையே பாடல் வரும். இந்த பாடலை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பாடுவார்கள்.

👭 முதலில் ஒரு நபரை விளையாட்டின் தொடக்கத்தில் சுற்றிவர தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு மீதமுள்ளவர்கள் வட்டமாக உட்கார்ந்துக்கொள்ள வேண்டும்.

👭 எல்லோரும் வட்டமாக உட்கார்ந்ததும் சுற்றி வருபவர் துண்டு அல்லது துணியைச் சுருட்டிவைத்து கொல கொலயா முந்திரிக்கா... என பாடிக் கொண்டே சுற்றி வருவார். அப்பொழுது வட்டமாக அமர்ந்திருக்கும் மற்ற குழந்தைகளும் நரிய நரிய சுத்தி வா.. என்று பாடுவார்கள்.

👭 அடுத்து, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்..? என்று சுற்றி வருபவர் கேட்க, எல்லோரும், கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி..! என்று ஒரே குரலில் சொல்வார்கள்.

👭 இவ்வாறு பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றி வருபவர் கையில் வைத்திருக்கும் துணியை யார் பின்னாலாவது அவருக்குத் தெரியாமல் போட்டுவிட்டு வட்டத்தைச் சுற்றி வருவார்.

👭 சுற்றி வருபவரின் கையில் துணி இல்லாததைப் பார்த்துவிட்டு, யார் பின்னால் துணி இருக்கிறதோ, அவர் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு சுற்றி வருபவரை துரத்திக்கொண்டு போக வேண்டும்.

👭 துணியால் முதுகில் அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் அவர் அவுட். சுற்றி வருபவர் வேகமாக ஓடி வந்து, யார் பின்னால் துணியைப் போட்டாரோ, அவருடைய இடத்திலே வந்து உட்கார்ந்துவிட்டால் துணியைக் கையில் வைத்திருப்பவர் அவுட்.

👭 ஒருவேளை துணி பின்னால் இருப்பதை உட்கார்ந்திருப்பவர் கவனிக்கவில்லையென்றால், பக்கத்திலே உட்கார்ந்திருப்பவர் சைகையாலேயே சொல்வார்கள். அப்படியும் சொல்வதைக் கவனிக்காமல் இருந்தால், சுற்றி வருபவர் வட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, பின்னால் போட்ட துணியை எடுப்பார்.

👭 கவனிக்காமல் உட்கார்ந்திருப்பவர் முதுகில் ஒரு போடு போடுவார். உட்கார்ந்திருப்பவர் இப்போது எழுந்து, முதலில் சுற்று வந்தவரை விரட்டிப் பிடிக்க வேண்டும். இதில் அவுட் ஆனவர் யாரோ, அவர் பாட்டுப் பாடிக்கொண்டே விளையாட்டைத் திரும்பவும் விளையாட வேண்டும்.

பயன்கள் :

👉 தங்களுடைய தனித்திறனையும், ஆளுமையையும் வெளிக்கொண்டு வர இந்த விளையாட்டு கற்றுத்தருகிறது.
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

ஒரு கதவு மூடப்படும்போது, நிச்சயம் மறுகதவு திறக்கத்தான் படுகிறது. ஆனால், நாம் திறக்கப்பட்ட கதவை எப்போதும் பார்ப்பதே இல்லை. மூடப்பட்ட கதவைப் பார்த்துக்கொண்டு திறக்கப்பட்டதையும் தவறவிடுகிறோம்.
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழப் பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மைப் பலமிழக்கச் செய்யாது.
கிராமங்களில் நாம் மறந்தவை !!

கிச்சு கிச்சு தம்பலம்...!!
👭கிச்சு கிச்சு தம்பலம் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. இது சிறுமணல் கரையில் துரும்பை மறைத்து கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு ஆகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👭இரண்டு பேர்.

விளையாட தேவையானது :

👭கொஞ்சம் மணல்

👭சிறிய குச்சி


எப்படி விளையாடுவது?

👭விளையாடும் இரண்டு நபர் நேரெதிராக அமர்ந்துகொள்ள வேண்டும். நடுவில் ஒரு அடி நீளத்திற்கு மணல் அல்லது மண்ணை நீளவாக்கில் குவித்துக்கொள்ள வேண்டும்.

👭யாராவது ஒருவர் கையில் சிறிய குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிச்சு கிச்சு தம்பலம்...

கிய்யா கிய்யா தம்பலம்...

மச்சு மச்சு தம்பலம்...

மாயா மாயா தம்பலம்...
👭என பாடிக்கொண்டே நீளவாக்கில் குவித்து வைத்திருக்கும் மணல் அல்லது மண்ணுக்குள்ளே அந்த குச்சியை மறைத்து வைக்க வேண்டும்.

👭எடுத்த உடனே மறைத்து வைக்காமல், மணலை முன்னும், பின்னும் தள்ளிக்கொண்டே அந்த சிறிய குச்சியை மறைத்து வைக்க வேண்டும். அப்பொழுது எதிரே அமர்ந்திருப்பவர் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கண்களை திறக்கவும் என்று சொல்லும்போது தான் கண்களை திறக்க வேண்டும்.

👭இப்பொழுது எதிரில் இருப்பவர் அந்த குச்சி எங்கே உள்ளது என்பதை தங்களது இரு கைகளை பின்னி மறைக்க வேண்டும்.

👭கையை மூடிய இடத்தில் அந்த குச்சி இல்லை என்றால், மீண்டும் அந்த குச்சியை வைத்தவரே விளையாட வேண்டும்.

அவுட் :

👭இரு கைகளை பின்னி மறைத்த இடத்தில் அந்த குச்சி இருந்தால் குச்சியை மறைத்து வைத்தவர் அவுட்.

👭அதன்பின் அவுட் ஆனவரின் இரண்டு கைகளையும் முன்னே நீட்ட சொல்லி கை நிறைய மண்ணை நிரப்பி அதன் நடுவில் அந்த குச்சியை சொருக வேண்டும்.

👭பின் அவரின் கண்களை பொத்திக் கூட்டிக்கொண்டு ரகசியமான ஒரு இடத்தில் மண்ணோடு குச்சியையும் சேர்த்து அப்படியே குவித்து வைக்க வேண்டும்.

👭அதன்பின் கண்களை திறக்காமல் மீண்டும் பழைய இடத்திற்கே அவரை கூட்டிவர வேண்டும். பின் அவரின் கண்களை திறந்துவிட்டு, இப்போ அந்த குச்சி எங்கே இருக்கிறது? கண்டுபிடி... என்று சொல்ல வேண்டும்.

👭குச்சியை வைத்த இடத்தை சரியாக கண்டுபிடித்தால், மற்றொருவர் இந்த விளையாட்டை தொடர வேண்டும்.

ஏன் விளையாட வேண்டும்?

👭துப்பறியும் திறன் மேம்படும்.

👭மதிநுட்பம் கூடும்.

👭தெளிந்த சிந்தனை மேலோங்கும்.
விளையாட்டுகளின் பொருள்..!

💐 பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...

💐 பரமபதம் : ஏற்றம், இரக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...

💐 கில்லி : கூட்டல், பெருக்கல் கணக்கைக் களிப்புடன் மகிழ்ந்து கற்க...

💐 தாயம் : வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...

💐 சதுரங்கம் : இதர வழி இல்லாதபோதும் இறுதி வரை போராடும் உறுதி மனம் பெற...

💐 நொண்டி : சமமாக இல்லாதபோதும் சாதிக்கத் தூண்டும் சக்தியைப் பெற...

💐 கண்ணாமூச்சி : ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையும், நிதானத்தையும் பெற...
கிராமங்களில் நாம் மறந்தவை !!

ஒரு குடம் தண்ணி ஊத்தி..!

கிராமத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டுக்களை பற்றி நவீன கால குழந்தைகளிடம் கேட்டால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

இதற்கு காரணம் நவீனமயமாகிவரும் நம் வாழ்க்கை முறைதான். குழந்தைகளை வெளியே விளையாட விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட விளையாட்டுக்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

மூன்று பேருக்கு மேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

இந்த விளையாட்டை விளையாடும் முன்பாக, இருவரை முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு, கைகளை முக்கோணம் போல் உயர்த்தியப்படி நிற்பார்கள்.

விளையாடும் மற்ற எல்லாக் குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக முன்னிருப்பவரின் சட்டையைப் பிடித்தப்படி, ஒரே சங்கிலி போல் வரிசையாக நின்றுகொள்ள வேண்டும். கைகளை உயர்த்தி நிற்பவர்களின்; கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்ற வேண்டும்.

அப்போது சுற்றி விளையாடும் குழந்தைகள்...

'ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூத்துச்சாம்...

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டு பூ பூத்துச்சாம்...

மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணு பூ பூத்துச்சாம்...

நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலு பூ பூத்துச்சாம்..."
என பாடிக்கொண்டே, கைகளை உயர்த்தி நிற்கும் இருவருக்கும் இடையில் புகுந்து வருவார்கள். பாட்டு தொடரத் தொடர, சுற்றிச் சுற்றி வந்துக்கொண்டே இருக்க வேண்டும்.


'பத்துக் குடம் தண்ணி ஊத்தி, பத்துப் பூ பூத்துச்சாம்..." என்று பாடி முடித்ததும், கைகளைக் கோர்த்தப்படி நின்றிருக்கும் இருவரும் சட்டெனக் கைகளைக் கீழே இறக்குவார்கள். சங்கிலிபோல் வரும் குழந்தைகளுள் யார் அவர்களின் கைக்குள் வருகிறார்களோ, அவரை அப்படியே இரு கைகளுக்குள்ளும் இறுக்கி பிடித்துக்கொள்வார்கள்.

அப்படி மாட்டிக்கொண்ட குழந்தையை விடுவிக்க, எல்லாக் குழந்தைகளும் போய் கேட்பார்கள்.

மற்ற குழந்தைகள் : என் ஆட்டை ஏன் பிடிச்ச?

இரு குழந்தைகள் : எங்க பயிரில மேஞ்சது. அதனால பிடிச்சோம்!

மற்ற குழந்தைகள் : பணம் தர்றோம். விடுடா

இரு குழந்தைகள் : விட மாட்டோம் போடா.

மற்ற குழந்தைகள் : வானத்தையே வில்லா வளைச்சு தர்றோம். என் ஆட்டை விடு!

இரு குழந்தைகள் : நீ எது தந்தாலும் விட மாட்டோம் போ... - என்று மறுப்பார்கள்.

இருவரும் விட முடியாது என்றதும், கைகளுக்குள் சிக்கியிருக்கும் குழந்தை திமிறிக்கொண்டு வெளியே வர முயற்சிக்க வேண்டும். சில குழந்தைகள் வெளியே வந்துவிடுவார்கள். வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்ட குழந்தை, மற்ற இருவரும் தரும் 'செல்லமான தண்டனை"யை நிறைவேற்ற வேண்டும்.

அதாவது அவர்கள் பாடச் சொல்லும் பாட்டைப் பாட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பாடும் ஏதாவதொரு பாடலுக்கு ஆட வேண்டும்.

பயன்கள் :

இவ்விளையாட்டு எண்களை கற்றுக் கொடுப்பதோடு, தோழமையையும் வளர்க்கும்.

குழந்தைகளின் அறிவு, திறமை, தைரியம், உடல், மனவலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை, குழு ஒற்றுமை போன்ற பல்வேறு நல்லபண்புகளை வளர்க்கும்.
பம்பர விளையாட்டு...!!

🌟 என்னதான் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.

🌟தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிவிட்டது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், மரத்தின் நிழலில் விளையாடிய விளையாட்டுகளும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

🌟அப்படி நாம் மறந்த கிராமத்து விளையாட்டான பம்பர விளையாட்டை பற்றி பார்ப்போமா...!

🌟இன்றைய காலக்கட்டத்தில் பம்பரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

🌟 பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டு ஆகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

🌟 பல பேர்.

விளையாட தேவையானது :

🌟 பம்பரம்

🌟 ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை (கயிறு).


எப்படி விளையாடுவது?

🌟 ஒவ்வொருவரும் கயிற்றையும், பம்பரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தரையில் ஒரு சிறிய வட்டத்தை வரைந்து கொள்ள வேண்டும்.

🌟 பம்பரத்தின் மீது கயிற்றைச் சுற்றிக் கொள்ளுங்கள். பிறகு அனைவரும் ஒன்றாக பம்பரத்தை சுற்றுங்கள். உடனே கயிற்றை வைத்து பம்பரத்தை மேலே எடுத்து வலது உள்ளங்கையில் விட வேண்டும். இதை கடைசியாக யார் செய்தாரோ அவரே தனது பம்பரத்தை வட்டத்திற்குள் வைக்க வேண்டும். அவரே முதல் போட்டியாளர் ஆவார்.

🌟 மற்றவர்கள் வட்டத்திலுள்ள பம்பரத்தை குறி பார்த்து தங்களது பம்பரத்தை வீச வேண்டும்.


🌟 பம்பரத்தை வட்டத்திற்குள் விடும்போது வட்டத்திற்குள் தங்களது பம்பரம் சுற்றினால் அதை முதல் போட்டியாளர் அமுக்கி விட்டால், அவரின் பம்பரத்தையும் உள்ளே வைக்க வேண்டும். மேலும், சுற்றாத பம்பரங்களையும் உள்ளே வைக்க வேண்டும்.

🌟மற்றவர்கள் இந்த பம்பரங்களை வட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். யாருடைய பம்பரம் கடைசியாக வட்டத்தில் இருக்கின்றதோ, அந்த பம்பரத்தை வட்டத்திலிருந்து வெளியேற்றி 20 அடி தள்ளி உள்ள வட்டத்திற்குள் சேர்க்க வேண்டும்.

🌟 அனைவரும் பம்பரத்தை சுற்ற வைத்துக்கொண்டே அந்த வட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இடையில் யாருடைய பம்பரமாவது சுற்றாமல் போனால் அவருடைய பம்பரத்தை எடுத்துவிட்டு சுற்றாத பம்பரத்தை கீழே வைக்க வேண்டும்.

🌟 இரண்டாவது வட்டத்திலிருந்து யாருடைய பம்பரம் வெளியேறுகின்றதோ அவரே விளையாட்டில் தோற்றவர் ஆவார். தோற்றவர் பம்பரத்தில் அனைவரும் அவர்களது பம்பர ஆணியால் குத்து வைப்பார்கள். யாருடைய பம்பரம் கம்மியாக குத்து இருக்கின்றதோ அவரே வெற்றியாளர் ஆவார்.

பயன்கள் :

🌟 கைகள் வலுபெறும்.

🌟 எச்சரிக்கை திறன் மேம்படும்.
பாக்கெட் உணவுகளில் கவனிக்க வேண்டியவை !!



இயற்கையான உணவை உட்கொள்ளும் பழக்கம் போய் பாக்கெட் உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. பாக்கெட் உணவுகள் எளிதில் கிடைப்பதாக இருந்தாலும் தரமற்ற பொருட்களின் கலவை அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இயற்கையான உணவுக்கு மாறாக, பாக்கெட் உணவுகளின் சுவையை மட்டும் நாம் பார்க்கிறோம். பாக்கெட் உணவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை பற்றி இங்கு காண்போம்.

முதலில் கவனிக்க வேண்டியவை :

பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, பேட்ஜ் நம்பர், லாட் நம்பர், உணவுப்பொருளில் கலந்துள்ள பொருட்களின் பெயர், அந்த உணவுப்பொருளில் இடம்பெற்றுள்ள புரதம், வைட்டமின் சத்து அளவுகள், எடை அளவு போன்றவற்றை பார்த்து வாங்க வேண்டும்.

இறக்குமதி ஆகும் பொருட்களில் :

மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் அந்த நாட்டின் பெயர் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். சைவ உணவாக இருந்தால் பாக்கெட்டில் பச்சை வண்ண புள்ளியை சுற்றி சதுர வடிவ கட்டம் இடம்பெற்று இருக்கும். அதுவே அசைவ உணவாக இருந்தால் சதுர வடிவ கட்டத்துக்குள் காவி நிற புள்ளி இருக்கும். உணவு பொருளில் முட்டை சேர்க்கப்பட்டு இருந்தால் கூட அதில் காவி நிற புள்ளி இடம்பெற்று இருக்கும்.

இதிலும் முறைக்கேடு இருக்கும் :

முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பாக்கெட்டுகளில் உள்ள உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதியைத்தான். ஆனால் சில நிறுவனங்கள் இந்த தேதிகளை ஸ்டிக்கரில் அச்சிட்டு பாக்கெட்டுகளில் ஒட்டி வைத்து விற்பனை செய்கிறார்கள். இது காலாவதியான உணவு பொருட்களையும் தேதியை மாற்றி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யும். அதனால் முடிந்த வரை ஸ்டிக்கர் ஒட்டி தேதி குறிப்பிட்டுள்ள பாக்கெட்டில் உள்ள உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

பால் பாக்கெட்டுகள் :

பால் பாக்கெட்டுகளில் உபயோகிக்கும் நாள் என்று ஒரு தேதியை குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த நாள் வரை தான் பாலை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்டதில் இருந்து 3 நாட்களுக்குள் அந்த பாலை பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் :

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
கிராமங்களில் நாம் மறந்தவை

செவன் அப்!!

👉குழந்தைகள் விளையாட்டு என்றாலே குஷியாகி விடுவார்கள். எனக்கு விளையாட்டு பிடிக்காது என்று எந்த குழந்தைகளும் கூற மாட்டார்கள்.

👉குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்களின் மூலம் உடலும், மனமும் உற்சாகம் பெறும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு, இட நெருக்கடி, வீடியோ கேம் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் கிராமத்து விளையாட்டுகளை மறந்து போய்விட்டனர்.

👉அவர்களுக்கு கிராமத்து விளையாட்டுகளை சொல்லி கொடுத்து உற்சாகப்படுத்துவோம்... இன்று நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு செவன் அப்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉8க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

👭முதலில் சற்று இடைவெளி விட்டு வட்டமாக அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு யாராவது ஒருவர் 1 என்று சொல்லி வலது கையால் இடது கையின் மீதோ அல்லது இடது கையால் வலது கையின் மீதோ லேசாகத் தட்டியபடி விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

👭இப்படி தட்டும்போது, தட்டுபவருக்கு அருகில் இருபுறமும் அமர்ந்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இடப்புறம் தட்டினால் இடது பக்கத்தில் இருப்பவர், வலப்புறம் தட்டினால் வலது பக்கத்தில் இருப்பவர் விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

👭அடுத்து விளையாட்டை தொடர்பவர் அதேபோல், 2 என்று சொல்லிவிட்டு, அவர் விருப்பம்போல் ஏதாவது ஒரு கையால் மற்றொரு கையில் தட்ட வேண்டும். அவர் எந்தப் பக்கம் தட்டினாரோ அந்தப் பக்கத்தில் இருப்பவர் 3 என்று சொல்லி, அவர் விருப்பம்போல எந்தப் பக்கமாவது கையைத் தட்ட வேண்டும்.

👭இவ்வாறாக அடுத்தவர் 4 என்று கையைத் தட்ட, அதற்குப் பக்கத்திலிருப்பவர் 5 என்று கையைத் தட்ட, அதற்கு அடுத்தவர் 6 என்று சொல்லி கையை தட்ட வேண்டும்.

👭6 என்று சொல்லி கையைத் தட்டியவர் எந்தப் பக்கம் தட்டினாரோ, அந்தப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் உடனே, கையை எடுத்து தலை மேல் வைத்து செவன் அப் என்று சொல்ல வேண்டும்.

👭வலது கையை தலையில் வைத்து இடதுபக்கம் காட்டியப்படி சொன்னால் இடதுபக்கம் அமர்ந்திருப்பவர் அல்லது இடது கையை தலையில் வைத்து வலதுபக்கம் காட்டிச் சொன்னால் வலதுபக்கம் அமர்ந்திருப்பவர் 1 என்று சொல்லி விளையாட்டை மீண்டும் தொடர்ந்து ஆடலாம்.

👭அடுத்தடுத்து வேகமாகச் சொல்லியபடி விளையாடும் இந்த விளையாட்டில், யாராவது அவசரப்பட்டு இடதுபக்கம் இருப்பவரை சொல்வதற்கு பதிலாக வலதுபக்கம் இருப்பவரை சொல்லிவிட்டால் அவுட் ஆவார்.

👭6 என்று அருகில் இருப்பவர் சொல்லிய பிறகு, செவன் அப் என்று தலையில் கை வைக்காமல் சொன்னால் அவரும் அவுட் ஆவார்.

👭இப்படி விளையாடும் விளையாட்டில் ஒவ்வொருவராகப் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, கடைசிவரை தொடர்ந்து விளையாடி வரும் இருவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் ஆவார்கள்.

பயன்கள் :

👉எச்சரிக்கை உணர்வு மேலோங்கும்.

👉புத்துணர்ச்சி பெருகும்.

👉தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

👉கைகள் வலுப்பெறும்.

👉புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
கண்ணாமூச்சி ரே.... ரே...

👉கண்ணாமூச்சி சிறுவர்களால் விளையாடப்படும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். சிலர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடிசென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது சிறுவர் சிறுமியர் மட்டுமில்லாமல் பெரியவர்கள் கூட விளையாடுவார்கள்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉இரண்டிற்கும் மேற்பட்டோர்.

எப்படி விளையாடுவது?

👉முதலில் யார் ஒளிந்து கொள்ள வேண்டும். யார் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

👉விளையாடுபவரின் கண்ணை மற்றொருவர் தன் இரண்டு கைகளால் பொத்திக்கொள்வார்கள்.


கண்ணாமூச்சி ரே.... ரே....

காதறுப்பான் ரே... ரே....

நல்ல மூட்டையை தின்னுப்புட்டு

கெட்ட மூட்டையை கொண்டு வா...!!

அல்லது

கண்ணா... கண்ணா... மூச்சி

காட்டு தல மூச்சி....

நல்ல முட்டைய திண்ணுட்டு...

ஊல முட்டைய கொண்டுவா....
👉என பாடிக்கொண்டே மூடியிருக்கும் கண்ணை திறந்து விடுவார்கள். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

👉ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் கண்ணைப் பொத்தியவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். தேடுபவரிடம் அகப்படாமல் கண்ணைப் பொத்தியவரை தொட்டுவிட்டால் பழமாவார்கள். அப்படியில்லையென்றால் கண்ணை பொத்தியிருந்தவர் ஒளிந்து இருந்தவரை தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். இதில் யார் அவுட் ஆகிறார்களோ அவர்கள் கண்ணை பொத்திகொண்டு இவ்விளையாட்டை தொடர வேண்டும்.

👉தற்போது உள்ள கால சூழ்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை காண்பது அரிதாகி கொண்டு வருகிறது. இதுபோன்ற கிராமத்து விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்துவோம்.

பயன்கள் :

👉தேடிக் கண்டறியும் திறன் மேம்படும்.

👉செவிப்புலன் கூர்மையாகிறது.

👉காட்டிக் கொடுக்கக்கூடாது என்னும் பண்பு வளர்கிறது.
கிராமங்களில் நாம் மறந்தவை

பூப்பறிக்க வருகிறோம்....!!

👉கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். விளையாடுவதற்கும் குஷியாக இருக்கும். பல்வேறு பெயர்களில் பல விளையாட்டுக்கள் கிராமப்புறங்களில் விளையாடப்படுகிறது. அதில் ஒன்று தான் பூப்பறிக்க வருகிறோம் என்னும் விளையாட்டு. இவ்விளையாட்டை குழந்தைகள் குழுவாக விளையாடுவார்கள்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉ஐந்திற்கும் மேற்பட்டோர் விளையாடலாம்.


எப்படி விளையாடுவது?

👉முதலில் குழுத்தலைவர்களாக இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் இரண்டிரண்டு நபர்களாக தங்களது ஜோடிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

👉ஒவ்வொரு ஜோடியும் தனியாகச் சென்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு பெயரை வைத்துக்கொள்ள வேண்டும். (பழங்கள், பூக்கள், மரங்கள் என எந்த பெயராகவும் கூட வைக்கலாம்) ஆளுக்கொரு பெயரை வைத்துக்கொண்டு குழுத்தலைவர்களின் அருகில் வருவார்கள்.

👉உதாரணமாக, மாம்பழம் வேண்டுமா? கொய்யாப்பழம் வேண்டுமா? எனக் கேட்பார்கள். குழுத்தலைவர் மாம்பழம் வேண்டும் எனக் கேட்டால் மாழ்பழம் பெயர் கொண்டவர் அவரின் குழுவிற்கு சென்றுவிட வேண்டும். மற்றொருவர் அடுத்த குழுத்தலைவரின் குழுவிற்கு சென்றுவிட வேண்டும். இவ்வாறு தங்களது குழுக்களை முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

👉அதன் பின் இரண்டு குழுத்தலைவர்களும் தங்களது குழுவில் உள்ளவர்களுக்கு ஏதாவது பூவின் பெயரையோ, மாதத்தின் பெயரையோ வைக்க வேண்டும்.

👉இரண்டு குழுவினரும் தங்களது குழுவினருடன் நேரெதிராக நிற்க வேண்டும்.

👉பூப்பறிக்க வருகிறோம்... வருகிறோம்.. இந்த நாட்டிலே எனப் பாடிக்கொண்டு இரண்டாவது குழுவினரை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

👉எந்த பூ வேண்டும்... வேண்டும்... இந்த நாட்டிலே என பாடிக்கொண்டு முதலாவது குழுவினரை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

👉தாமரைப்பூ வேண்டும்.... வேண்டும்.... இந்த நாட்டிலே எனப் பாடிக்கொண்டு இரண்டாவது குழுவினரை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

👉அதன் பின் தாமரைப்பூவின் பெயரை கொண்டவர் முன்னே வர வேண்டும். மற்றொரு குழுவில் இருந்து ஒருவர் முன்னே வர வேண்டும்.

👉இப்பொழுது அந்தந்த குழுவை சேர்ந்தவர்கள் அவர்களை ஒருவர் பின் ஒருவராக இடுப்பை இறுக கட்டிப்பிடித்து கொள்ள வேண்டும்.

👉முன்னே வந்த இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் இறுக பிடித்து இழுக்க வேண்டும்.

👉அவரவர்கள் குழுவில் இருக்கும் மற்றவர்கள் அவருக்கு உதவியாக பின்னால் நின்று இழுக்க ஆரம்பிப்பார்கள். அப்படி இழுக்கும்போது, ஏதாவது ஒரு குழுவில் இருக்கும் முதல் நபர் மற்றொரு பக்கம் இழுக்கப்படுவார். யார் இழுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்ற குழுவாகும். அதன் பிறகு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்.

பயன்கள் :

👉குழந்தைகள் தங்களுக்குள் இருக்கும் பாடும் திறனையும், கேள்வி கேட்கும் திறனையும், பதில் சொல்லும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த விளையாட்டு உதவுகிறது.
கிராமங்களில் நாம் மறந்தவை

உயிர் கொடுத்தல்!!

👉தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா வீடுகளிலும் அலைபேசிதான் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக உள்ளது.

👉பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியிலும் படிப்பு, படிப்பு என்று மட்டுமே கூறி பள்ளியிலும் விளையாடுவது இல்லை. வீட்டிலும் விளையாடுவது இல்லை.

👉ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவதாக இருக்கின்றன.

👉அவ்வாறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் உயிர்கொடுத்தல். இந்த விளையாட்டில் ஓடியாடுவதும் உண்டு. உட்கார்ந்து விளையாடுவதும் உண்டு.


எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

👉விளையாட்டை தொடங்கும் முன், முதல் போட்டியாளரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

👉முதல் போட்டியாளரை தேர்வு செய்த பிறகு, விளையாட்டை தொடங்கலாம்.

👉திறந்தவெளி மைதானத்தில் விளையாடப் போகும் சிறுவர்கள் நின்றிருப்பார்கள்.

👉விளையாட்டு துவங்கியதும் முதல் போட்டியாளர் மைதானத்தில் இருக்கும் சிறுவர்களை துரத்த வேண்டும்.

👉அவர் தொட்டுவிடாமல் இருக்க, சிறுவர்கள் அங்குமிங்குமாய் ஓடுவார்கள். யாராவது ஒருவரைத் தொடுவது போல் பக்கத்தில் அவர் வரும்போது, அவருக்கு நெருக்கமாக இன்னொருவர் பின்பக்கமாய் வர, அவரைத் தொட்டுவிடும் ஆசையில், முதலில் துரத்தியவரையும் தவறவிடுவார்.

👉யாரையாவது மிக நெருக்கமாய் தொடுவதற்கு போனால், அவர்கள் சட்டென தரையில் உட்கார்ந்துகொண்டு, 'பாஸ்" என்பார்கள்.

👉அதன்பிறகு அவர்களைத் தொடக்கூடாது. தொட்டாலும் அவர்கள் 'அவுட்" கிடையாது. அடுத்து, வேறு யாரையாவதுதான் போட்டியாளர் துரத்திச் செல்ல வேண்டும்.

👉பாதியில் உட்கார்ந்தவர் மீண்டும் விளையாட வேண்டுமானால், விளையாடி கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் உட்கார்ந்திருப்பவருக்கு உயிர் கொடுக்க வேண்டும். அப்படி உயிர் கொடுத்துவிட்டால், மீண்டும் அவர் விளையாட்டைத் தொடரலாம்.

👉துரத்துபவர் வேறு யாரையாவது தொடுவதற்கு முயற்சி செய்துகொண்டே, 'பாஸ்" சொல்லிவிட்டு உட்கார்ந்திருப்பவர் மீதும் ஒரு கண் வைத்துக்கொண்டே துரத்த வேண்டும்.

👉யாராவது அவரை தொட்டு அவருக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படி வருபவரைத் தொட்டுவிட வேண்டும்.

👉போட்டியாளர் யாரையாவது தொட்டுவிட்டால், 'அவுட்". அப்படி அவுட் ஆன நபர் போட்டியாளராய் மாறி, மற்றவர்களை துரத்தி பிடிக்க வேண்டும்.

பயன்கள் :

👉கால்கள் வலுப்பெறும்.

👉உதவும் மனப்பான்மை மேலோங்கும்.

👉இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
தாய விளையாட்டு...!!

👉கிராமத்து விளையாட்டுக்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தற்போது கிராமத்து விளையாட்டுக்களை காண்பது என்பது மிகவும் அரிது. அரிதாகி கொண்டு வந்தாலும் இன்றுவரை பலரால் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் தாயம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடலாம்.

விளையாட தேவையானது :

👉நான்முக தாயக்கட்டை

👉ஆறு சோழிகள் அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவார்கள்.


எப்படி விளையாடுவது?

👉தாயம் என்பது ஆட்டத்தை ஆரம்பிக்க சொல்லக்கூடிய வார்த்தை. இந்த சொல் ஆட்டத்தில் ஒன்றை குறிக்கும்.

👉இந்த விளையாட்டை பெரும்பாலும் நான்முக தாயக்கட்டையை வைத்துதான் விளையாடுவார்கள்.

👉நான்முக தாயக்கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0).

👉இரு நான்முக தாயக்கட்டைகளை உருட்ட வேண்டும். இரு தாயக்கட்டைகளின் விழும் எண்களை கூட்டுனால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் வரும்.

👉இதில் வரும் 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மற்றொருமுறை தாயக்கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

👉இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருக்க வேண்டும்.

👉ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தை தொடங்க வேண்டும்.


👉தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து காய்களை முதற்கட்டத்தில் வைக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும்.

👉அதேகட்டத்தில் வேறு ஆட்டக்காரரின் காய்கள் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.

👉சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும்.

👉1, 5, 6 அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு, தாயக்கட்டையை உருட்டலாம்.

👉ஒரு முறை காய்கள் சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை ஏற்கனவே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.

👉அப்படி மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசி கட்டத்திலேயே தங்கிவிடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.

👉காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை பழம் என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

👉முதலில் எந்த ஆட்டக்காரர் 4 அல்லது 6 காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.

பயன்கள் :

👉கைகளுக்கு வலுசேர்க்கும்.

👉புத்திக்கு வேலை கொடுக்கிறது.
ராஜா... ராணி... விளையாட்டு...!!


👑ஒரு கையில் நொறுக்குத் தீணியும், மறுகையில் போனும் வைத்து விளையாடுவதினால் உடல் சோர்வு, உடல் எடை அதிகரித்து ஆரோக்கியம்தான் குறையும்.

👑குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான். ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை.

👑விளையாட்டு என்றவுடன் நமக்கு மைதானம்தான் நினைவிற்கு வரும். ஆனால், வீட்டுக்குள்ளேயும், வீட்டுத் திண்ணையிலும், குடும்பத்தில் உள்ளவர்களுடனும் அல்லது நம் நண்பர்களுடனும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளும் உள்ளது.

👑அதில் வீட்டுத் திண்ணையில் நம் உறவுகளுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றுதான் ராஜா ராணி.

எத்தனை பேர் விளையாடலாம்?

👑ஐந்து பேர்.

தேவையான உபகரணங்கள் :

👑வெள்ளைக் காகிதம் (பேப்பர்)

👑பேனா

எப்படி விளையாடுவது?

👑ராஜா, ராணி, மந்திரி, திருடன், போலீஸ் என வெள்ளைத்தாள்களில் எழுதிக் கொள்ளவும். பின்னர் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண்கள் தனித்தனியாக கொடுக்கப்படும்.

உதாரணமாக,

👉ராஜாவுக்கு அதிக மதிப்பெண்களும் (10000)

👉ராணிக்கு ராஜாவை விட குறைந்த மதிப்பெண்களும் (5000)

👉மந்திரிக்கு ராணியை விட குறைந்த மதிப்பெண்களும் (1000)

👉போலீஸூக்கு மந்திரியை விட குறைந்த மதிப்பெண்களும் (100)

👉திருடனுக்கு மதிப்பெண்கள் ஏதும் இல்லை (0)😊

👑பின் அவர்களில் ஒருவர் சீட்டுகளை மடித்து, குலுக்கிப் போடுவார். அதற்கு பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுச் சீட்டை எடுக்க வேண்டும்.

👑அனைவரும் அவர்களுக்கு வந்த சீட்டை ரகசியமாக பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ராஜா, ராணி மற்றும் மந்திரி சீட்டு வந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர்.

👑அதில் போலீஸ் என்று எழுதிய சீட்டு வந்தவர், தனது துப்பறியும் திறனை கொண்டு அங்கு இருப்பவர்களில் திருடன் யாரென்று கண்டறிய வேண்டும். ஆனால் திருடன் சீட்டு வந்தவர், தான் திருடன் இல்லை என்பது போல் முகபாவனை செய்வர்... ஆனால், அதுவே அவரை திருடன் என்பதை காட்டி கொடுத்துவிடும்.

👑போலீஸ் திருடனை சரியாக கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு அதே மதிப்பெண்களும் (100), தவறாக இருந்தால் போலீஸஷுக்கு திருடனின் மதிப்பெண்களும் (0) வழங்கப்படும். திருடனாக இருப்பவருக்கு போலீஸின் மதிப்பெண்கள் (100) வழங்கப்படும். இவ்வாறாக ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுவர்.

👑பின் ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவர்களுக்கான மதிப்பெண்களை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வர். இதில் நாம் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் விளையாடலாம். இறுதியாக அனைவரின் மதிப்பெண்களும் கூட்டப்படும்.

👑தொடர் ஆட்டங்களில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர் தோற்றவராகக் கருதப்படுவார். அதிகப் புள்ளிகள் பெற்றவர் வென்றவர் ஆவார்.

பலன்கள் :

👉கணிதத்திறன் மேம்படும்.

👉கண்டறியும் புலமை மேம்படும்.
பாண்டி ஆட்டம்....!


🌟 இன்றைய காலங்களில் குழந்தைகள் விளையாட்டிற்கு செலவிடும் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த நவீன மயமான காலத்தில் குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிகவும் அவசியம்தான். அதே சமயம் குழந்தைகள் விளையாட்டிலும் ஆர்வமாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

🌟 குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம் ஆகும். தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டுகள் என்னவென்று தெரியாமல் கூட வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றன.

🌟 ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் பழைய விளையாட்டுக்களை குழந்தைகள் மறந்து விட்டனர். குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விளையாட்டு என்பது அவசியமாக இருக்கிறது.

🌟 குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து சோம்பலைத் தவிர்த்து விளையாடும் பண்டைய விளையாட்டுகளில் ஒன்று தான் பாண்டி ஆட்டம் ஆகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

🌟 இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம்.

விளையாட தேவையானது :

🌟 சிப்பி அல்லது ஓடு.

எப்படி விளையாடுவது?

🌟 பாண்டி ஆட்டம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். மண்தரையாக இருந்தால் இந்த விளையாட்டு விளையாடுவதற்கு நன்றாக இருக்கும்.

🌟 இந்த விளையாட்டை விளையாடுவதற்கு எட்டு அல்லது பத்து கட்டங்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு சிப்பி ஒன்றை விளையாடும் நபர் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

🌟 முதலில் சிப்பியை ஒன்றாவது கட்டத்தில் போட்டு விட்டு அவற்றை எட்டு அல்லது பத்து கட்டங்களுக்கும் நொண்டி அடித்து செல்ல வேண்டும். பிறகு மறுபடியும் மீண்டும் எட்டாவது கட்டத்தில் இருந்து நொண்டி அடித்தவாறு இரண்டாவது கட்டத்தில் நின்றுக் கொண்டு ஒன்றாவது கட்டத்தில் இருக்கும் சிப்பியை எடுக்க வேண்டும்.

🌟 பின்பு இதே மாதிரி இரண்டு, மூன்று நான்கு என ஒவ்வொரு கட்டமாக சிப்பியை போட்டு இதை போன்று விளையாட வேண்டும். இவ்வாறு விளையாடி முடித்த பிறகு சிப்பியை எட்டாம் கட்டத்தை தாண்டி போட வேண்டும். நொண்டி அடித்தவாறு ஒவ்வொரு கட்டமாக சென்று, காலால் எற்றித்தள்ளி சிப்பியை மிதிக்க வேண்டும்.

🌟 எட்டு கட்டங்கள் முடிந்த பிறகு ஆட்டம் கொஞ்சம் கடினமாக இருக்கும். சிப்பியை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வைத்து கண்களை மூடிக்கொண்டு ரைட்டா, ரைட்டா என்று கேட்டவாரே கோடுகளை மிதிக்காமல் செல்ல வேண்டும். கடைசியில் தலைக்கு மேல் கையை கொண்டு சிப்பியை வீசும் போது 'வெயிலா, மழையா (அல்லது) யானையா, பூனையா" என்று பாடிக் கொண்டு சிப்பியை வீச வேண்டும்.

🌟 இதை எல்லாம் விளையாடி முடித்தால் எட்டு கட்டங்களில் ஒரு கட்டம் அவர்களுக்கு சொந்தமாகும். விளையாடும் போது அதில் அவர்கள் காலை ஊன்றிக்கொள்ளலாம். மற்றவர்கள் அதை தாண்டி தான் செல்ல வேண்டும்.

விதிமுறைகள் :

🌟 சிப்பி கட்டம் தவறி விழக்கூடாது.

பயன்கள் :

🌟 இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தரும்.

🌟 தன்னம்பிக்கையைத் தரும்.

🌟 உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கோலிக்குண்டு..!

🌑 'எனக்கு விளையாடவே பிடிக்காது" என்று குழந்தைகள் யாராவது சொல்வார்களா? நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். அனைவரும் ஒன்றாக கூடி விளையாடும் போதுதான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது, பல குழந்தைகள் எந்த விளையாட்டை விளையாட வேண்டுமென்று சொல்கிறார்களோ அந்த விளையாட்டைத்தான் விளையாடுவார்கள்.

🌑 ஒவ்வொரு குழந்தைகளும் அவர்களின் ரசனைக்கேற்பவும், அவரது உடல்நிலைக்கேற்பவும் சிலவிளையாட்டுகள் பிடிக்கும். சில விளையாட்டுகள் பிடிக்காது. தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கிப் பழகிக் கொள்ளுங்கள். அதில் மிகவும் சிறப்பானது நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது, அப்படி விளையாடும் போது நல்ல நெருக்கமும் உங்களுக்கிடையே புரிதலும் அதிகமாகும்.

🌑 கிராமப்புறங்களில் பல வகையில் சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று தான் கோலிக்குண்டு.

எத்தனை பேர் விளையாடலாம்?

இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் விளையாடலாம்.

விளையாட தேவையானது?

கோலிக்குண்டு.

எப்படி விளையாடுவது?

🌑 கோலிக்குண்டு விளையாட்டுகளை இரண்டு வகையில் விளையாடலாம். அவை வட்டத்தினுள் கோலிக்குண்டை வைத்து விளையாடுவது, மற்றொன்று குழியைத் தோண்டி அதனுள் கோலியைப் போட்டு விளையாடுவதாகும்.

🌑 குழியினுள் கோலி குண்டை போடும் முறையில் விளையாடும்போது குண்டு தங்கும் ஆழத்திற்கு குழி அமைத்துக்கொள்ள வேண்டும். விளையாடும் நபர்கள் அனைவரும் குழியை நோக்கி கோலிக்குண்டுகளை வீச வேண்டும்.

🌑 இவ்வாறு வீசி முடித்த பின்பு எந்த கோலிக்குண்டு குழியில் அல்லது அதற்கு அருகில் விழுந்ததோ அவர்கள்தான் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படுவார். பிறகு அவர் விளையாட்டைத் தொடரலாம். குழியின் மேற்புறத்தின் ஓரமாகக் கட்டை விரலை ஊன்றி, சுற்றியிருக்கும் கோலிகளைத் தனது கோலியால் குறி பார்த்து அடிக்க வேண்டும்.


வட்டத்திலிருந்து வெளியே தள்ளும் முறை :

🌑 வட்டத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு அடி தள்ளி கோடு இட வேண்டும். விளையாடும் நபர் அனைவரும் அந்தக்கோட்டிலிருந்து கோலிக்குண்டுகளை தூக்கி எறிய வேண்டும். முதலில் எறிந்தவன் வட்டத்தில் உள்ள கோலி அடிக்கும்போது எத்தனை கோலிக்குண்டுகள் வெளிவருகிறதோ அந்த கோலிக்குண்டுகள் அனைத்தும் அவனுக்கே சொந்தம். இவ்வாறு அனைத்து கோலிக்குண்டுகள் தீரும் வரை விளையாடுவார்கள்.

🌑 இந்த விளையாட்டில் வெற்றிப் பெற்றவர்கள் தோற்றவரின் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம். மற்ற வகை ஆட்டத்தில், கோலி அடிப்பவர்கள், மற்றவர்கள் கூறும் கோலிகளை அடிக்க வேண்டும். அவ்வாறு அடித்தால், கோலிகளை பெறுவார்.

குண்டை அடிக்கும் முறை :

🌑 கட்டைவிரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் அல்லது ஆட்காட்டி விரலின் விசையால் கோலிக்குண்டை அடிக்க வேண்டும்.

பயன்கள் :

👉 விரல்கள் வலுப்பெறும்.

👉 கூர்மையான கண்பார்வை கிடைக்கும்.

👉 சேமிக்கும் குணம் வளரும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்... ஏனெனில் வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது. உங்களுக்காக நீங்கள் மட்டுமே நடக்க முடியும். அதனால் பாதையும் உங்களுடையதாக இருக்க வேண்டும்.
குச்சி விளையாட்டு...!!


👉தற்போது கிராமத்து விளையாட்டுகள் எல்லாம் அரிதாகி கொண்டு வருகிறது. மறைந்து போன விளையாட்டுக்களை நினைவுக்கூறும் வகையில் இன்று நாம் விளையாட இருக்கும் விளையாட்டு... குச்சி விளையாட்டு.

👉இந்த விளையாட்டு மிகவும் கவனத்துடன் விளையாடக்கூடிய விளையாட்டாகும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉இரண்டு நபர் முதல் விளையாடலாம்.

விளையாட தேவையானது :

👉ஒரே அளவில் 10 குச்சிகள்.

👉சற்று நீளமான குச்சி ஒன்று.

எப்படி விளையாடுவது?

👉விளக்குமாறில் உள்ள சீவக்குச்சிகளை ஒரே அளவில் 10 குச்சிகளை எடுத்துக்கொள்ளவும். அதன்பின் இக்குச்சிகளைவிட சற்று நீளமுள்ள குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

👉இந்த 11 குச்சியையும் ஒரு சேர பிடித்து அவற்றை நிலத்தில் ஒரே வீச்சில் எறிய வேண்டும். அல்லது உள்ளங்கையால் உருட்டியும் போடலாம்.

👉பின் கீழே விழுந்துக்கிடக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக அலுங்காமல் எடுக்க வேண்டும். அலுங்காமல் எடுத்த குச்சிகள் வெற்றிப்புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

👉அப்படி குச்சி எடுக்கும்போது அலுங்கினால் ஆட்டம் கைமாறும். அடுத்தவர் அந்த ஆட்டத்தை தொடர்வார்.

👉இதில் பெரிய குச்சியை எடுத்தால் 10 புள்ளிகள் கிடைக்கும். இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டு கூட்டிக்கொள்ள வேண்டும். இதில் யார் அதிக புள்ளிகள் பெற்றாரோ அவரே வெற்றியாளர் ஆவார்.

விளையாட்டின் பயன்கள் :

👉இவ்விளையாட்டு பொறுமையை வெளிப்படுத்தும்.

👉விரல் நடுக்கத்தை குறைக்கும்.