TNPSC QUESTIONS & GOVERNMENT JOPS
3.4K subscribers
8 photos
5 files
19 links
TNPSC Questions Papers, Important Questions, Government Jop Vacancy,Current Affairs
Download Telegram
ஆட்சி (Rule of Law) இங்கிலாந்து.
13.ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) இங்கிலாந்து.
14. கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful) இங்கிலாந்து.
15. பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament) இங்கிலாந்து.
16.மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha) இங்கிலாந்து.
17.கூட்டாட்சி முறை (Federal System) கனடா
18. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ஜெர்மன்.
19. பொதுப்பட்டியல் (Concurrent List) ஆஸ்திரேலியா.
20.முகப்புரையின் மொழி (Language of the Preamble) ஆஸ்திரேலியா.
21.மத்திய மாநில உறவுகள் (Centre State Relations) ஆஸ்திரேலியா
22.அரசியலமைப்பு சட்ட திருத்தம் (Amendment of Constitution) தென் ஆப்பிரிக்கா.
இந்திய அரசாங்கச்சட்டம் 1935:
• தற்போதைய அரசியலமைப்பு 75% 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு.
• நெருக்கடி நிலை
• அரசு நிர்வாக அமைப்பு முறை
• ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தோற்றம்.
• 1946 செப்டம்பர் 2ல் இடைக்கால அரசு நேரு தலைமையில் அமைக்கப்பட்டது.
• இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி பெயர் துணை குடியரசுத் தலைவர்,
• ஏனெனில், வைசிராய் அமைச்சரவையின் தலைவராக அப்போதும் தொடர்ந்தார்.
• இடைக்கால அரசில் நேரு வெளியுறவுத்துறை, காமன் வெல்த் உறவுகள் துறைகளைக் கவனித்தார்.
• இடைக்கால அரசில் கல்வி அமைச்சர் சி.ராஜாஜி, சட்டம
மைப்பின் அட்டவனைகள்: Schedules – 12
1. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள்.
2. குடியரசுத்தலைவர், துணைக் குடியரசித் தலைவர், ஆளுநர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள், சம்பளம்.
3. பதவிப் பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள்.
4. இந்திய மாநிலங்களின் ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றியது.
5. அட்டவனைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் பற்றியது.
6. அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் (ம) அருணாச்சல பிரதேச மாநில பழங்குடியினர் நலம் பற்றியது.
7. மத்தியப் பட்டியல் – 97, மாநிலப் பட்டியல் – 66, பொதுப்பட்டியல் 47 பற்றியது.
8. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது.
9. நில சீர்திருத்தச்சட்டங்கள் பற்றியது (முதல் சட்டத் திருத்தம் 1951 ல் சேர்க்கப்பட்டது)
10. கட்சித் தாவல் தடைச்சட்டம் (52வது சட்ட திருத்தம் 1985)
11. பஞ்சாயத்து ராஜ் 73 வது சட்டத் திருத்தம் 1992.
12. நகராட்சி 74 வது சட்டத் திருத்தம் 1992.
இந்தியாவும் அதன் ஆட்சிப் பகுதிகளும் (THE UNION & ITS TERRITORIES)
• இது பகுதி 1 ல் அமைந்துள்ளது.
• Article 1 முதல் 4 வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் ஆட்சிப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது.
• தற்போது 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் (டெல்லி, தேசிய தலைநகரப் பகுதி உட்பட) உள்ளன.
மொழி வாரி மாநிலங்கள் தொடர்பான கமிட்டிகள் :
1. 1948 ஜூன் ல் தார் கமிட்டி அமைக்கப்பட்டு 1948 டிசம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
2. 1948 டிசம்பர் கமிட்டி அமைக்கப்பட்டு 1949 ஏப்ரல் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
3. 1953 டிசம்பர் பசல் அலி கமிட்டி அமைக்கப்பட்டு 1955 செப்டம்பர் அறிக்கை சமர்ப்பிக்கபட்டது.
1950ல் பகுதி A யில் உள்ள மாநிலங்கள், B யில் உள்ள மாநிலங்கள் C யில் உள்ள மாநிலங்கள் D யில் உள்ள மாநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
1956ல் 7வது சட்டத் திருத்தத்தின்பட
ி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956ல் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் என வகைப்படுத்தப்பட்டன.
மாநிலங்கள் உருவான ஆண்டு:
ஆந்திரா 1953 குஜராத் 1960 மகாராஷ்டிரா 1960
கேரளா 1956 மைசூர் 1956 நாகலாந்து 1963
அரியானா 1966 இமாச்சலப் பிரதேசம் 1971 மேகலாயா 1971
மணிப்பூர் 1971 திரிபுரா 1971 சிக்கிம் 1975
மிசோரம் 1987 அருணாச்சலப் பிரதேசம் 1987 கோவா 1987
சட்டீஸ்கர் 2000 உத்தரகாண்ட் 2000 ஜார்கண்ட் 2000 • மைசூர் மாநிலம் 1973ல் கர்நாடகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு பெயர் மாற்றச்சட்டம் 1968 படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. • ஜனவரி 14, 1969ல் தமிழ்நாடு பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
குறைந்த பட்ச வயது.
குடியரசுத் தலைவர் 35 துணைக் குடியரசுத் தலைவர் 35
ஆளுநர் 35 பிரதமர் 25 லோக்சபா உறுப்பினர் 25
ராஜ்யசபா உறுப்பினர் 30 சட்டமன்ற உறுப்பினர் (எம். எல்.ஏ) 25
முதலமைச்சர் 25 சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) 30
பஞ்சாயத்து உறுப்பினர் 21 வாக்காளர் 18
திருமண வயதுப் பெண் 18 திருமண வயது ஆண் 21
கட்டாய அடிப்படைக் கல்வி 6 – 14 வரை
குழந்தை தொழிலாளர் என்போர் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள்
அரசுப் பணியாளராக குறைந்தப்பட்ச வயது 18
குறிப்பிட்ட பணிகளுக்கு வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணம்: VAO- 21, EO- 25, SR- 20
குடியுரிமை (Citizenship)
• இது பகுதி 2ல் அமைந்துள்ளது.
• இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை நடைமுறையில் உள்ளது.
• Art 5 முதல் 11 வரை இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது.
அடிப்படை உரிமைகள்? (Fundamental Rights)
• இது பகுதி 3ல் அமைந்துள்ளது.
• Art 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுகிறது.
• இது நடைமுறைக்கு வரும் போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன.
• 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
• தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை
• சமத்துவ உரிமை Art 14- 18
• சுதந்திர உரிமை Art 19- 22
• சுரண்டலுக்கு எதிரான உரிமை Art 23- 24
• சமய உரிமை Art 25- 28
• அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் Art 32
1. சமத்துவ உரிமை
Art. 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
Art. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேற்பாடு காட்ட தடை
Art. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
Art. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை
Art. 17 தீண்டாமை ஒழிப்பு
Art. 18 பட்டங்கள் ஒழிப்பு
2. சுதந்திர உரிமை (Art. 19- 22)
Art.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.
1.பேச்சு (Freedom of Speech and expression)
2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly)
3. சங்கம் அமைக்க (Freedom to form Association)
4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement)
5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement)
6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business)
Art. 20 – சட்ட விரோதமாக கு
ற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு
Art.21 – தனி நபர் சுதந்திரம்
Art.21A – 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
Art. 22கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art. 23 – 24)
Art.23 – சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது.
Art.24 – 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை
4. சமய உரிமை (Art.25-28)
Art.25 – விரும்பிய மதத்தை தழுவ உரிமை
Art.26 – மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை
Art.27 – மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்
Art.28 – குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை
5. கல்வி, கலாச்சார உரிமை (Art.29 -30)
Art.29 – சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்
Art.30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை
Art.31 – நீக்கப்பட்டது.
6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை (Art 32) இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது. டாக்டர் அம்பேத்கர்
இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது.
1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை
2. Writ of Mandamus – கட்டளை நீதிப் பேராணை
3. Writ of Prohibition – தடை நீதிப் பேராணை
4. Writ of Quowarranto – உரிமையேது வினா நீதிப்பேராணை
5. Writ of Certiorari – ஆவணக் கேட்பு நீதிப் பேராணை
இந்திய அரசியலமைப்பு
1.அரசின் கூறுகள் மொத்தம் 4, அவை.
நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம், இறைமை.
2.அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அரசியல் நடைமுறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அடிப்படையான சட்டம்.
3.உலகில் முதன்முதலில் அரிஸ்டாட்டில், 158 கிரேக்க அரசியல் முறைகளை ஆராய்ந்து ஏதென்ஸின் அரசியலமைப்பை (Constitution of Athens) ஏற்படுத்தினர்.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[சுதந்த
ிரத்திற்கு முன்]
1. 1773 ஒழுங்குமுரை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது ஆங்கிலேய நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக இருந்தது.
2. 1784 பிட் இந்திய சட்டம்.
3. 1793, 1813, 1833, 1853 சாசனச் சட்டங்கள்
• 1793 முதல் சாசனச் சட்டம்.
• 1813 இந்தியர்களின் கல்விக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கியது.
• 1833 சாசன சட்டம் நிறைவேற்றம்.
• சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வு அறிமுகம்.
• வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் ஜெனரல் ஆனார்.
• இதன்படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு.
• 1853 இறுதியான சாசனச் சட்டம்.
4.1858 சிப்பாய்க் கலகத்தின் (1857) விளைவாக ஆட்சி கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசிற்கு மாறியது.
5. 1861ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
• இந்திய மக்களின் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள கவர்னர் ஜெனரலுக்கு வழிவகுத்தது.
6. 1872ம் ஆண்டு கவுன்சில் சட்டம்.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்ற கவுன்சிலுக்குள் நுழைந்தனர்.
8. சட்டமியற்றும் பணிகளுடன் பட்ஜெட் பற்றிய விவாதங்களை (நிபந்தனைகளுக்குட்பட்டு) நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
9.1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம்.
• வகுப்பு வாரி பிரதிநித்துவம் புகுத்தப்பட்டது.
• முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வழங்கப்பட்டது.
10. 1919 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்.
• இரட்டை ஆட்சி முறையைப் புகுத்தியது.
11. 1935 இந்திய அரசாங்கச் சட்டம்.
• அனைத்திந்திய கூட்டாட்சி (All India Federation)உருவாக வழிவகை செய்தது.
• பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது.
• மாகாண சுயாட்சி வழங்கப்பட்டது.
12. 1946 கேபினட் மிஷன்(Cabinet Mission Plan) திட்டம்.
• தற்போதைய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1946 மே 16ல் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டது.
13. 1947 இந்திய விடுதலைச்சட்டம்.
• இந்தியாவை இரு நாடுகளாகப் பிரித்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு டொமினியன்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்திற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
i. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
ii. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
iii. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
iv. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.Lநேரு.
v. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
vi. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
vii.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.
இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி[ சுதந்திரத்தி
ற்கு பின்]
1. 1947 ஜூலை 16ல் பாகிஸ்தான் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
2. இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9ல் டாக்டர் சச்சிதானந்த சிங்காவை இடைக்கால தலைவராகக் கொண்டு நடைபெற்றது.
3. 1946 டிசம்பர் 11ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இந்திய அரசியலமைப்பை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
1. மத்திய அதிகாரக் குழு தலைவர் J.L.நேரு.
2. அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர் குழு தலைவர் V.B.பட்டேல்.
3. மாகாண அரசியலமைப்புக் குழு தலைவர் V.B.பட்டேல்.
4. மத்திய அரசியலமைப்புக் குழு தலைவர் J.L.நேரு.
5. வரைவுக் குழு தலைவர் B.R.அம்பேத்கர்.
6. கொடி குழு தலைவர் J.B.கிருபளானி.
7.வகைப்படுத்தல் குழு தலைவர் K.M.முன்ஷி
இவற்றுள் முக்கியமானது வரைவுக்குழு. இந்த வரைவுக்குழு (Drafting Committee)7 பேர் கொண்டது.
1.B.R.அம்பேத்கர் தலைவர்
2.N.கோபாலசாமி அய்யங்கார்
3. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
4.K.M.முன்ஷி
5. முகமது சதவுல்லா
6. N.மாதவ ராவ்
7. T.கிருஷ்ணமாச்சாரி
• இந்திய அரசியலமைப்புக்கான கருத்தினை முதன் முதலில் (Idea) தெரிவித்தவர் M.N.ராய்.
• இந்திய அரசியலமைப்புக்குழு ஆலோசகர் ( Advisor) B.M.ராவ்.
• இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது (Adopted).
• 1950 ஜனவரி 26ல் நடைமுறைக்கு வந்தது (Came into Force).
• இந்திய அரசியலமைப்பை உருவாக்க ஆன காலம் 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்.
• ஜூலை 22, 1947ல் தேசியக் கொடி அரசியலமைப்பு சபையால் ஏற்கப்பட்டது.
• ஆந்திராவை சேர்ந்த பிங்காலி வெங்கையாவினால் இது வடிவமைக்கப்பட்ட
து.
• இந்திய அரசியலமைப்பு ஆரம்பத்தில் (Article) 395 ஷரத்துக்கள் (Schedule) 8 பட்டியல் (தற்போது 12), Part 22 பகுதிகள் கொண்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள்:
1. இந்திய அரசியலமைப்பு உலகிலேயே நீளமான மற்றும் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு.
2. பகுதி நெகிழும் நெகிழா தன்மை (Partly Flexible and Partly Rigid) கொண்டது?
3. இதில் சில பிரிவுகளை 2,3,4 போன்றவற்றை சாதாரணமாக திருத்தி விடலாம்.
4. சில பிரிவுகளை 52,63 போன்றவற்றை பிரிவு 368ன் சிறப்பு திருத்தத்தின் படி கையாள வேண்டும். எனவே, இது பகுதி நெகிழும் நெகிழா தன்மையுடையது.
5. இது அரைகுறை கூட்டாட்சி (Quazi Federal) எனப்படுகிறது.
• அரைக் கூட்டாட்சி என்பது கூட்டாட்சி முறை சாராமல் ஒற்றையாட்சி முறையையும் சாராமல் (Unitory) இரண்டும் கலந்த முறையில் உள்ளது.
6. நாடாளுமன்ற முறை (Parliamentary Type)
7. இரு அவைகள் (Bicameralism) லோக் சபா, ராஜ்ய சபா கொண்டது.
8. நீதித்துறை மேலாண்மை (Superemacy of Constitution) இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றம்
9. வயது வந்தோர் வாக்குரிமை
18 வயது வந்தோர் ஓட்டுப் போட 61வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் வழி வகுத்தது.
10. அடிப்படை உரிமைகள் (Fundamental Rigihts)
• இது பகுதி IIIல் அமைந்துள்ளது.
11. வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles of State Policy)
12. ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship)
13. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
• இது பகுதி IV ‘A’ ல் Art 51 ‘A’ 42வது சட்டத் திருத்தம் 1976ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.
• தற்போது 11 அடிப்படைக் கடமைகள்
• இது ரஷ்ய அரசியலமைப்பிலிருந்து கொண்டு வரப்பட்டது.
14. சிறப்பான முகப்புரை (The Preamble)
• இது இந்திய அரசியலமைப்பின் சாவி எனப்படுகிறது.
• இந்தியாவை, இறைமையுடைய சம தர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசு எனக் குறிப்பிடுகிறது.
• SSSDR SOVERIGN SOCIALIST SECULAR DEMACRATIC REPUBLIC என இந்தியாவை குறிப்பிடுகிறது.
• முகப்புரை ஒரே ஒரு முறை திருத்தப்பட்டுள்ளது.
• 1976ம் ஆண்டு 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் சமதர்ம (Socialist) சமயச் சார்பற்ற (Secular) ஒற்றுமை & ஒருமைப்பாடு Unity & Integrity ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
• முகப்புரை கருத்து (Idea) அமெரிக்க அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது. முகப்புரை மொழி (Language of the Preamble)
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் முக்கிய அம்சங்கள் பெறப்பட்ட நாடுகள்:
1. அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) அமெரிக்கா.
2. முகப்புரை (Preamble) அமெரிக்கா.
3.நீதிபதிகள் பதவி நீக்கம் (Removal of judges of SC – HC) அமெரிக்கா. 4.தனித்தியங்கும் நீதித்துறை () அமெரிக்கா.
5.நீதிப்புனராய்வு (Judicial Review) அமெரிக்கா.
6. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) ரஷ்யா.
7.ஐந்தாண்டுத் திட்டம் (Five Year Plan) ரஷ்யா.
8.வழிகாட்டு நெறிமுறைகள் (DPSP) அயர்லாந்து.
9. ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் (Nomination of Rajyasabha Member) அயர்லாந்து.
10. குடியரசுத் தலைவர் தேர்தல் முறை (Method of election of the president) அயர்லாந்து.
11.பாராளுமன்ற முறை (Parlimentary Type) இங்கிலாந்து.
12. சட்டத்தின்
*♨ கஜா புயல் :-*

*🌀புயலுக்கு பெயர் வைத்தவர்கள் யார்?*

*புயல்களும் அதன் பெயர்களும் !*

 புயல் என்றவுடன் அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன? என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும், வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை? இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

*புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?*

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

*யார் முதலில் பெயர் வைத்தது?*

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

*எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?*

வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.

இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.

*இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !*

✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் - கஜா

*கஜா புயல் :-*

தமிழகத்தை புரட்டிப் போட வரும் புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு பெயர் வைத்துள்ளது.