ஆன்மீக பயணம் 🌞 🙏
441 subscribers
5.91K photos
318 videos
544 files
60 links
இந்து சமய நெறி தகவல்கள் மற்றும் ஆன்மீக சம்பந்தமான தகவல்கள் இங்கு பகிரப்படும்.

உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ள:-

nyanathiruvadi@gmail.com
Download Telegram
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
🌹 கார்த்திகை தீபம் வரலாறு🌹

🌹கார்த்திகை தீபம்

என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகா சமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

🌹 கார்த்திகை மாதம்:

🌹தமிழ்நாட்டில்கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படு ம் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

🌹🌹கார்த்திகை நாள்:

🌹பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களா ல் வழங்கி வந்தனர்.

🌹அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது....

🌹🌹கார்த்திகை விழா:

🌹கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த் திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களி னை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புற ங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற் றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

🌹ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சிய ளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பி ழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

🌹இல்லங்களை விளக்குகளால் அலங்க ரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

🌹கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

🌹 குமராலய தீபம்:

முருகன் தலங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத் திரம் கூடிவரும் நாள்.

🌹விஷ்ணுவாலய தீபம்:

விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திர ம் கூடிவரும் நாள்.

🌹சர்வாலய தீபம்:

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளி லும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

🌹🌹ஐதீகம் :

🌹படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.

சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன் றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுத ற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

🌹🌹திருவண்ணாமலை கார்த்திகை விளக்கு :

🌹காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.

இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

🌹இக்கொப்பரையை 1668-ல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும்.

இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காடா துணி யும் கொண்டு ஏற்றப்படுகிறது.

🌹🌹விரதம் இருக்கும் முறை:

🌹இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத் தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

🌹🌹 வீடுகளை அலங்கரிக்கும் முறை :

🌹பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள் ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடு களை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

🌹🌹கார்த்திகை நட்சத்திரம்:

🌹கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இத னால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்தி கை எனப்படுகிறது.
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
கார்த்திகை நட்சத்தி ரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலு ள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்க ளே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

🌹🌹சங்கநூல்களில் கார்த்திகை :

🌹கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான்.

மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்த து. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

🌹கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது. அழல் என்பது கார்த்திகை- நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத் தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.

🌹 ஆல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத் தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

🌹ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல் களில் குறிப்புகள் உள்ளன.

🌹எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.

🌹ஓம் நமசிவாய...
🌹அண்ணாமலையானே போற்றி..
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
Forwarded from PM AR.KR. மனோகரன் (PM AR.KR. மனோகரன்)
குழந்தை பாக்கியம் தரும் ஐயப்ப வழிபாடு:

சுவாமியே சரணம் ஐயப்பா: ..

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

- அதாவது குழந்தைகளின் கொஞ்சல் மொழியை கேட்காதவர்கள் தான், குழலின் ஓசையும், யாழின் இசையும் இனிமையானது என்று கூறுவார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு...
குழந்தை பாக்கியம் என்பது இறைவனால் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு முக்கியமான வரம் என்பார்கள்..
ஒரு தம்பதிகளின் குழந்தை வரம் என்பது அவர்களின் கர்ம வினை சார்ந்து மட்டும் அல்ல அவர்களின் குடும்ப வம்ச கர்ம வினை சார்ந்தும் தான்..
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தை பாக்கியம் உண்டாகும் ஐயப்பா வழிபாடு என்ன என்று பார்ப்போம்...

திருமண ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் முழு மனதுடன் ஐயப்பனை சரணாகதி அடைந்து வேண்டி கொள்ளுங்கள் அடுத்த வருடம் உங்கள் வீட்டில் கண்டிப்பாக மழலைச்சொல் கேட்கும் இது சத்தியமான உண்மை..

திருமண ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இருவரும் செய்ய வேண்டிய வழிபாடு..
வீட்டை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். (அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் பிற வீட்டில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ) பிறகு சிறிது அளவில் உள்ள மணி ஒன்றை வாங்கி கொள்ளுங்கள் குலதெய்வதை வணங்கி அந்த மணியை குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு வைத்து வேண்டி எடுத்து வந்து தங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து
தம்பதிகள் இருவரும் ஐயப்பனை மனதார பிரார்த்தனை செய்து வேண்டி 48 நாள் விரதம் (பெண்கள் 21 நாட்கள்) இருக்க வேண்டும்..
இந்த 48 நாட்களும் தம்பதிகள் இருவரும் பசுவுக்கு அகத்தி கீரை கொடுக்க வேண்டும்..

இந்த விரத நாட்களில் ஏதோ ஒரு நாள் உங்களின் சக்திக்கேற்ப சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்களை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து வீட்டில் சமைத்து அன்னதானம் செய்ய வேண்டும்..

48 விரத நாட்கள் முடிந்த பிறகு அந்த மணியை சபரிமலை செல்லும் பக்தர்களிடம் இருமுடி கட்டும் போது மணியை கொடுத்து ஐயப்ப மணிமண்டபத்தில் வைத்து வேண்டி அந்த மணியை மீண்டும் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்... அவ்வாறு வேண்டி கொள்ளும் தம்பதிகள் இருவரும் அவர்கள் சபரிமலை சென்று வரும் வரை தாங்களும் தாங்க வீட்டையும் சுத்தமாக வைத்து ஐயப்பனை வணங்கி விரதம் இருக்க வேண்டும்...

அவர்கள் வேண்டி எடுத்து வரும் மணியை உங்கள் வீட்டில் பூஜையில் வைத்து வணங்கி வாருங்கள்.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்...

அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்ததும், உங்கள் வீட்டில் பூஜையில் வைத்து வணங்கி வந்த மணிவுடன் அதே அளவு இன்னொரு மணி செய்து எடுத்து கொண்டு அந்த வீட்டின் ஆண் 48 நாட்கள் விரத இருந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை சென்று அந்த இரண்டு மணியை சன்னிதானம் அல்லது ஐயப்ப மணிமண்டபத்தில் கட்டிவிட்டு ஐயப்பனை வணங்கி நன்றி தெரிவித்து வர வேண்டும்.. (வசதி உள்ளவர்கள் தங்க,வெள்ளி போன்றவற்றில் மணியை செய்து காணிக்கையாக உண்டியலில் செலுத்தலாம்)

எல்லா வேண்டுதலுக்கு இந்த மணி வழிபாடு செய்யலாம்....

சுவாமியே சரணம் ஐயப்பா...
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!

தமிழ் மணம் கமழ..

தாராளமாய் உதித்து

தித்திக்கும் கரும்பின் சாறொடு

தீஞ்சுவை கொண்டு

துணிவே துணையென

தூசுதட்டிப் பொலிவாய்

தைமகள் வந்துதித்தாள்

தொன்மை விளங்க

தோன்றின் புகழொடு..

ஔடதம் காத்து

அஃதே வந்தாள்..

தை பிறந்தது..
வழி பிறந்தது..
யாவர்க்கும்
எண்ணிய எண்ணியாங்கு எய்திட

அறம் பெருக..

ஆற்றல் பெருக..

இனிமை பெருக..

ஈதல் பெருக..

உண்மை பெருக..

ஊக்கம் பெருக..

எண்ணம் சிறக்க..

ஏற்றம் சிறக்க

ஐயன் மொழி மேலும் சிறக்க..

ஒல்காப் புகழொடு

ஓங்கிய நெறியொடு

ஔவை வழியொடு

அஃதே வந்தாய்.!

அறுவடைத் திருநாளில்
ஆரோக்கியமாக
இனிய முறையில்
ஈடில்லாப் பெருமை காத்து
உச்சம் தொட
ஊரார் மகிழ
எளிமையணிந்து
ஏர்பிடித்து..
ஐயமின்றி
ஒற்றுமையோடு
ஓங்கிய வாழ்வதை
ஔவியமின்றி வாழ
அஃதே வாழ்த்துறோம்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

இயற்கை அன்னைக்கு
நன்றி கூறி
கதிர் நிலம்காற்று
நெருப்புஆகாயம்
கால்நடைகள்..
உழவர்கள்..
ஈரடி வகுத்த வள்ளுவம்
யாவர்க்கும் நன்றி கூறும்
நல்விழா.
கொண்டாடி மகிழ்வோம்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
👍🙏🙏🙏🍫🍫🎉🎊
🔯☸️🕉 உலகிலே
🔯☸️🕉 உண்மையான அன்பு
🔯☸️🕉 என்னவன் முருகன்
🔯☸️🕉 தருவதே
🔯☸️🕉 அவன் இன்றி
🔯☸️🕉 அணுவும் அசையாது
🔯☸️🕉 நாங்கள் வெறும் கருவி
🔯☸️🕉 எங்களை இயக்குபவன் நீயே

கந்தனுக்கு அரோகரா !
கடம்பனுக்கு அரோகரா !!
வேலனுக்கு அரோகரா !!!
முருகனுக்கு அரோகரா... அரோகரா... அரோகரா.... அரோகரா...!!!!

சர்வம் சரவணமயம்

இனிய தைப்பூச தின நல்வாழ்த்துக்கள்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல
அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்

🌿 மோர் எடுக்கும்போது
வெண்ணெய் மேலே மிதந்து கிடைக்காது.
அதை கடைந்து தான் பெற வேண்டும்.

அதே போலவே,
அறிவும் மேலோட்டமாக கிடைப்பது அல்ல.
அதை தொடர்ச்சியாக பயிற்சி செய்து,
சிந்தித்து, அனுபவமாக மாற்றி
தான் பலனாக எடுக்க முடியும்.

👉 அறிவை சேகரிப்பது முதல் படி.
👉 அறிவை கடைந்து
ஞானமாக மாற்றுவது தான்
உண்மையான வளர்ச்சி.

---

🔥 1. மோர் போல அறிவும் முதலில் கலவையாக இருக்கும்

படித்தது, கேட்டது, பார்த்தது —
எல்லாம் மனதில் கலந்தே இருக்கும்.

👉 அதில் எது தேவையானது?
👉 எது வீண்?
👉 எது செயல்படும்?

இதைக் கண்டறிவதற்கு
கடையும் பொறுமையும் தேவை.

---

🔥 2. கடைதல் = சிந்தனை + பயிற்சி

மோரை கடையாமல் வைத்தால்
அது மோர் தான்.

👉 அறிவையும் அப்படியே விட்டால்
அது தகவல் தான்.

சிந்தித்தால் — தெளிவு.
பயிற்சி செய்தால் — திறன்.
செயல்படுத்தினால் — பலன்.

👉 இதுவே அறிவை
வெண்ணெயாக்கும் செயல்முறை.

---

🔥 3. அவசரத்தில் வெண்ணெய் கிடைக்காது

ஒரு இரண்டு சுற்று கடைந்தால்
வெண்ணெய் வராது.

👉 தொடர்ந்து,
ஒரே தாளத்தில்,
பொறுமையுடன்
கடைய வேண்டும்.

அதே போல,
ஒரே நாளில் அறிவால்
பெரிய மாற்றம் எதிர்பார்க்காதே.

👉 தொடர்ச்சி தான் ரகசியம்.

---

🔥 4. அறிவு பலன் தருவது

பயன்படுத்தும்போது தான்

வெண்ணெய் எடுத்தும்
அதை பயன்படுத்தாவிட்டால்
என்ன பயன்?

👉 அறிவும் அப்படித்தான்.

படித்ததை வாழ்க்கையில்
பயன்படுத்தும் நாளில் தான்
அது உனக்கு சேவை செய்ய ஆரம்பிக்கும்.

---

🔥 5. எல்லா மோரிலும்

வெண்ணெய் இருக்கிறது

கிராம மோர், நகர மோர் —
எல்லாவற்றிலும் வெண்ணெய் உண்டு.

👉 அதுபோல
ஒவ்வொரு மனிதனிடமும்
அறிவு வளர்ச்சிக்கான
விதை இருக்கிறது.

வித்தியாசம் ஒன்றே —
யார் கடைகிறார்கள்,
யார் விடுகிறார்கள்.

---

🔥 6. தவறான கடைதல்

மோரை சிதைக்கும்

அவசரம்,
மேலோட்டம்,
அரை மனம் —

👉 இவை இருந்தால்
மோர் கெடும்.

அறிவிலும் அதே.
மேலோட்டமாக கற்றால்
தவறான முடிவுகள் வரும்.

👉 ஆழம் தேவை.
புரிதல் தேவை.

---

🔥 7. வெண்ணெய் மேலே வரும் போது

உழைப்பு மறைந்து போகும்

வெண்ணெய் கிடைத்ததும்
மோரைக் கடைந்த வலியை
யாரும் பேசமாட்டார்கள்.

👉 அறிவால் பலன் கிடைத்ததும்
உன் முயற்சியை
பலர் காண மாட்டார்கள்.

பரவாயில்லை.
பலன் தான் சாட்சி.

---

🔥 8. அறிவு மட்டும் போதாது

அதை சுத்தப்படுத்த வேண்டும்

மோரில்
நெய்யாக மாறும் சக்தி இருக்கிறது.
ஆனால் அதற்கு
வடிகட்டல் தேவை.

👉 அறிவிலும்
தேவையற்றதை நீக்கி,
தேவையானதை மட்டும்
பிடித்து வைத்தால் தான்
ஞானம் உருவாகும்.

---

🔥 9. தினசரி சிறு கடைதல்

பெரிய பலனை தரும்

ஒரு நாள் அதிகமாக கடைவதை விட
👉 தினமும் சிறிது கடைதல்
நிலையான பலனை தரும்.

தினமும் 20 நிமிடம் கற்றல்.
தினமும் ஒரு சிந்தனை.
தினமும் ஒரு பயன்பாடு.

👉 இதுவே
அறிவின் வெண்ணெய்.

---

🔥 10. பலன் கிடைக்கும் நாள்

உனக்கே தெரியும்

வெண்ணெய் மேலே மிதக்கும் போது
“இது தான்” என்று
உனக்கே தெரியும்.

👉 அறிவிலும் அதே.

ஒரு நாள் நீ உணர்வாய் —
“இப்போது நான்
முன்பதை விட தெளிவாக இருக்கிறேன்.”

அந்த தெளிவே
உண்மையான பலன்.

---

🌟 முடிவுரை

அறிவு சேகரிப்பது
ஒரு தொடக்கம்.
அதை கடைந்து
வாழ்க்கையில் பயன்படுத்துவது
உண்மையான பயணம்.

👉 அவசரப்படாதே.
👉 மேலோட்டமாக விடாதே.
👉 தொடர்ச்சியை கைவிடாதே.

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல
அறிவை வளர்த்துக்கொண்டு
அதன் உண்மையான பலனை பெறவேண்டும்.

இன்று சிறிது கடை.
நாளை இன்னும் சிறிது கடை.
ஒரு நாள்
அறிவு உனக்கு
சாதனையாக மாறும்.

🌹🌹🌹

🙏சிவாயநம