Old Tamil
383 subscribers
2 photos
1 video
Download Telegram
Channel created
எப்படியெல்லாம் தமிழானது சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறது!

குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி

வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி
குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
படையலை நைவய்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப் பேறை பிரசவமாக்கி
பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
பிறந்தநாளை ஜெயந்தியாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
அவையை சபையாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
இசையை சங்கீதமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
ஆடலை நடனமாக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
அழகை சுந்தராக்கி
முகத்தை வதனமாக்கி
முடியை கேசமாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
உண்மையை சத்தியமாக்கி
நல்லதை புண்ணியமாக்கி
கெட்டதை பாவமாக்கி
கொடையை தர்மமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
நஞ்சை விஷமாக்கி
சான்றை ஆதாரமாக்கி
பெரியதை மஹாவாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி

திருவிழாவை உற்சவமாக்கி

பயணத்தை யாத்திரையாக்கி

உலகத்தை லோகமாக்கி...

எப்படி எப்படி
அழகு
தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன.
தமிழ் மொழியைப் பேணுவோம்..

முடிந்த வரை மேற்கண்ட தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துவோம் தமிழ் வாழ்க!🙏
*🌹##*யானைக்கு 60 பெயர்கள்!*
*யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா?* 🌹

ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.

# யானை (கரியது)
# வேழம் (வெள்ளை யானை)
# களிறு
# களபம்
# மாதங்கம்
# கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
# உம்பர்
# உம்பல் (உயர்ந்தது)
# அஞ்சனாவதி
# அரசுவா
# அல்லியன்
# அறுபடை
# ஆம்பல்
# ஆனை
# இபம்
# இரதி
# குஞ்சரம்
# இருள்
# தும்பு
# வல்விலங்கு
# தூங்கல்
# தோல்
# கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
# எறும்பி
# பெருமா (பெரிய விலங்கு)
# வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
# பூட்கை (துளையுள்ள கையை உடையது)
# ஒருத்தல்
# ஓங்கல் (மலைபோ ன்றது)
# நாக
# பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
# கும்பி
# தும்பி
# நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
# குஞ்சரம் (திரண்டது)
# கரேணு
# உவா (திரண்டது)
# கரி (கரியது)
# கள்வன் (கரியது)
# கயம்
# சிந்துரம்
# வயமா
# புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
# தந்தி
# மதாவளம்
# தந்தாவளம்
# கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
# வழுவை (உருண்டு திரண்டது)
# மந்தமா
# மருண்மா
# மதகயம்
# போதகம்
# விரமலி
# மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
# கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.
# பிடி
# அதவை
# வடவை
# கரிணி
# அத்தினி ஆகியவை பெண் யானைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.
இளந்தளிர் தமிழர் அவை தளத்திலிருந்து

தூய தமிழ் வார்த்தைளை அறிவோம்.

சமஸ்கிருதம் -- - தமிழ்

ப வரிசை

* பகிரங்கம் - வெளிப்படை
* பஞ்சாட்சரம்- ஐந்தெழுத்து
* பரவசம் - மெய்மறத்தல்
* பராக்கிரமம் - வீரம்
* பராமரி - காப்பாற்று , பேணு
* பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
* பரிசோதனை - ஆய்வு
* பரீட்சை - தேர்வு
* பலவந்தமாக - வற்புறுத்தி
* பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
* பலாத்காரம் - வன்முறை
* பாணம் - அம்பு
* பாதம் - அடி
* பாரம் - சுமை
* பால்யம் - இளமை
* பிம்பம் - நிழலுரு
* பிரகாசம் - ஒளி, பேரொளி
* பிரகாரம் - சுற்று
* (அதன்)பிரகாரம் - (அதன்)படி
* பிரசங்கம் - சொற்பொழிவு
* பிரசுரம் - வெளியீடு
* பிரச்சினை - சிக்கல்,இடைஞ்சல், இன்னல்.
* பிரதிநிதி - சார்பாளர்
* பிரதிபலித்தல் - எதிரியக்கம்
* பிரதிபிம்பன் - எதிருரு
* பிரத்தியோகம் - தனி
* பிரபலம் - புகழ்
* பிரமாதமான - பெரிய
* பிரமிப்பு - திகைப்பு
* பிரயோகி - கையாளு
* பிரயோசனம் - பயன்
* பிரவாகம் - பெருக்கு
* பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
* பிரார்த்தனை - தொழுகை,
* பிரியம் - விருப்பம்
* பிரேமை - அன்பு
* பீடிகை - முன்னுரை
* புண்ணியம் - நல்வினை
* புத்தி - அறிவு
* புத்திரன் - புதல்வன்
* புனிதமான - தூய
* புஷ்பம் - மலர், பூ
* புஜபலம் - தோள்வன்மை
* பூஜை - வழிபாடு
* பூர்த்தி - நிறைவு
* பூஷணம் - அணிகலம்-
* போதனை - கற்பித்தல்.
தொகுதிப் பெயர்:

அம்பலம் - village assembly
அவை - audience
அவையம் - jury
ஆசிடை - association
ஆயம் - assembly
இல் அல்லது இல்லம் - house
கடிகை - village council
கணம் - society, host, body
கழகம் - academy
களம் - field
களரி - institute
குழு - faction, committee
குழூஉ - classகுழுமம் - guild
குழாம் - group
குழும்பு - company
கும்பு - gang
கும்பல் - crowd
குறி - village council
பெருங்குறி - meeting, gathering
கூளி - multitude
கூட்டம் - meeting, gathering
திரள் - mass
தொழுதி - herd, flock
தொகுதி - set, aggregation
தொகை - collection, sumநெருள் - big crowd
பண்ணை - farm, a bevy of ladies
பண்ணை - a bevy of ladies
பொதியில் - public hall
மக்கள் - people
மந்தை - ஆனிரை, மானிரை
மன்று, மன்றம் - பொதுவிடம், அம்பலம், அறங் கூறவையம்
மாந்தர் - human beings
மன்பதை - humanity mankind
வகுப்பு - class
தானை, சேனை - army
படை - division, force
பஞிலம் - company
கணகம் - battalion
மன்பதை - regiment
தண்டு - troop
தார் - போர்ப்படையின் முன்னணி
கூழை - போர்ப்படையின் முன்னணி
தூசு, தூசி - கொடி தாங்கிச் செல்லும் கொடிப்படை.

தலைக்கட்டு - கணவனும் மனைவியும் மட்டும் உள்ள குடும்பம் - கணவனும் மனைவி மக்களும் சேர்ந்த கூட்டம்
குடும்பு - பல குடும்பங்கள் சேர்ந்த கூட்டம்
இல் அல்லது குடி - பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் பெருங் குடும்பு
மரபு - தொடர்ந்துவரும் குடிவழி
இனம் - ஒரே வகையான மொழி பேசும் பல குலத்தொகுதி (nation)

~ #பாவாணர்
தொழில் நுட்ப ஆங்கில கலைச்சொற்களுக்கு தமிழ்ச்சொற்கள்.

1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : நன்றி - கற்றது தமிழ்
முகநூலில் கண்டது...!!

தமிழின் சிறப்புக்கு ஒரு சாம்பிள் :

பெரும்பான்மையான மொழிகளில் இலையின் பருவத்தை தனித்தனியே சொல்ல வார்த்தைகள் இல்லை.

கொழுந்து - குழந்தைப் பருவம்

தளிர் - இளமைப் பருவம்

இலை - காதல் பருவம்

பழுப்பு - முதுமைப் பருவம்

சருகு - இறுதிப் பருவம்

தவிர எல்லா தாவரங்களின் இலைகளும் இலை என்று சொல்ல முடியாது.

ஆல், அரசு, அத்தி , மா, பலா , வாழை - இலை

அகத்தி , பசலை - கீரை ( இலை என்று சொல்லக் கூடாது)

அறுகு , கோரை = புல்

நெல் , வரகு = தாள்

உசிலை மரம் = தழை

சப்பாத்தி, கள்ளி போன்ற தாழை இனம் = மடல்

கரும்பு, நாணல் = தோகை

தென்னை , பனை , ஈந்து, கமுகு = ஓலை

ஆங்கிலத்தில் " Leaf " என்றும் வட மொழியில் " பத்திரம் " என்று ஒற்றைச் சொல் மட்டும் இருக்கிறது. ஆனால் தமிழில் இருக்கும் சொல்வளம் அடடா என்னே அற்புதம்...!!
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்


மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?


தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........
தமிழ் பேசும் இந்தியன்!

கிழமை = உரிமை
(உரிமை உடைத்த / உடைய)


நிலகிழார் = நிலத்திற்கு உரிமை உடையவர்


� திங்கள் கிழமை = சந்திரனுக்கு உரிமை உடைய நாள்


� செவ்வாய் கிழமை = செவ்வாய் எனும் கோளுக்கு உரிமை உடைய நாள்


� அறிவன் கிழமை = அறிவன் (புதன்) என்ற கோளுக்கு உரிமை உடைய நாள்


� வியாழன் கிழமை = வியாழன் எனும் கோளுக்கு உரிமை உடைய நாள்


� வெள்ளி கிழமை = வெள்ளி எனும் கோளுக்கு உரிமை உடைய நாள்


� காரி கிழமை = கருமை நிறம் கொண்ட (சனி) கோளுக்கு உரிமை உடைய நாள்


� ஞாயிறு கிழமை = கதிரவனுக்கு உரிமை உடைய நாள்
உலக தாய்மொழி தினம்
பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான்.

குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தாயின் ஒலியை தாய்மொழி வடிவில்தான் முதலில் அறிகிறது. எனவே தாய்மொழி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் விழி போன்றது.பல மொழிகளைக் கற்று அறிந்த அறிஞனால் ஏதேனும் ஒன்றை புரிந்த கொள்ள அவன் முதலில் பயன்படுத்துவது தாய்மொழியே ஆகும்.

உலக தாய்மொழி தினம் உருவான விதம்

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின் உருது பாகிஸ்தானின் அரசு மொழியாக இருந்தது. 1952-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மக்கள் வங்கமொழியை அரசு மொழியாக அங்கரீக்க கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை போராட்டமாக வெடித்த நிலையில் 1952, பிப்ரவரி 21 அன்று தாகாவில் ஊரடங்கு உத்திரவு இடப்பட்டது. உத்திரவினையும் மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் உயிர் நீத்தனர்.

இந்த நான்கு மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.
வங்கதேச அரசின் முயற்சிகள் மற்றும் அனைத்துலக ஆதரவு அமைப்புகள் காரணமாக 1999 பிப்ரவரி 21 அன்று பொது மாநாட்டில் உலக தாய்மொழி தின அறிவிப்பினை யுனெஸ்கோ வெளியிட்டது.

பல்வேறு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதையும் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதையும் கொள்கையாகக் கொண்டு இவ்வறிப்பு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது.
2000 ஆண்டு முதல் ஒவ்வொரு
வருடமும் பிப்ரவரி 21-ஆம் நாள்
உலக தாய்மொழி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு சர்வதேச மொழிகளின் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.வங்காளதேச நாட்டில் உலக தாய்மொழி தினம் கடைப்பிடிப்பதற்காக அன்றைய தினம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியின் சிறப்பு

தாய்மொழியைப் பயிற்று மொழியாக கொண்ட ஜெகதீஸ் சந்திர போஸ், பி.சி.ராய், எடிசன் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்கள் பலர் உலகில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றனர்.

ஜப்பானியர்கள், ஜெர்மனியர்கள் போன்றோர் தங்கள் தாய்மொழி மூலம் கல்வி கற்று பொருளாதார தன்னிறைவு பெற்று தாங்களும் முன்னேறி தாங்கள் சார்ந்த நாட்டினையும் முன்னேற்றி வருகின்றனர்.

பல மொழி புலமை பெற்ற பாரதியும் தன்னுடைய தாய்மொழியாம் தமிழ்மொழியானது தான் கற்றறிந்த மொழிகளில் மிகவும் இனிமையானது என “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று குறிப்பிடுகின்றார்.

காந்திஜியும் “குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் தோன்றும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். தெரிந்தறியாத ஒரு மொழியின் மூலம் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் எண்ணங்களுக்கிடையேயான இணக்கத்தைக் குறைத்துவிடும்.
எனவே தாய்மொழியே பயிற்று மொழியாக இருப்பது சிறந்தது” என 1917-ல் புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் உரை ஆற்றியுள்ளார்.

இந்திய தேசிய கீதம் இயற்றியவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஆங்கில மொழியில் கவிதைகளை திறம்பட எழுதியவரும் ஆகிய ரவீந்தரநாத் தாகூரும் தன் தாய்மொழியான வங்களாத்தில் நன்கு புலமைப் பெற்றதாலே கவிதை உலகில் புகழின் உச்சியை தொட்டார்.
காந்திஜியும் தன் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய்மொழியிலேயே எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும்.

தாய்மொழியாம் தமிழின் சிறப்பு

நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும். தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள் சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தமிழ்மொழி உலகில் தோன்றிய மொழிகளுள் மிகப் பழமையான மொழியாக மொழி ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

தமிழ்மொழி ஏனைய மொழிகளைவிட மிகநீண்ட இலக்கண இலக்கிய மரபுகளை உடையது. அதனாலே தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
இன்றைக்கு இணையத்தில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவும் தமிழ் உள்ளது. காலத்தினால் பிறமொழிகளின் ஆதிக்கம் அதிகரித்த போதும் இன்றைக்கும் நிலைத்து வழக்கத்தில் இருக்கும் மொழி தமிழ் என்பது பெருமை கொள்ளத்தக்க விசயமாகும்.

ஒவ்வொருவரும் தம்தம் தாய்மொழியைப் போற்றி பாதுகாக்க உலக தாய்மொழி தினத்தில் உறுதி மொழி ஏற்று அதனை செயல்படுத்த முனைவோம்.


படித்ததில் பிடித்தது

பகிர்வு...👍
ஆளும் தமிழ்
t.me/UnnalMudiyum
தமிழ் மொழி தினம்
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!

1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement.

- ஔவையார் / Avvaiyaar...ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!

- ஔவையார் / Avvaiyaar...
*தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?*

*தேன்*

கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்

*தேன்*

கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..

ஐயா நீங்கள்
கூறியதை நினைத்

*தேன்* !

கொல்லிமலைக்கு நடந் *தேன்*!

பல இடங்களில் அலைந் *தேன்*!


ஓரிடத்தில் பார்த்
*தேன்*!

உயரத்தில் பாறைத் *தேன்*!

எப்படி எடுப்பதென்று மலைத்
*தேன்*!

கொம்பொன்று ஒடித் *தேன்*!

ஒருகொடியை பிடித்
*தேன்* !

ஏறிச்சென்று கலைத்
*தேன்*!

பாத்திரத்தில் பிழிந்
*தேன்*!

வீட்டுக்கு வந்
*தேன்*!

கொண்டு வந்ததை வடித் *தேன்*!

கண்டுநான் மகிழ்ந் *தேன்*!

ஆசையால் சிறிது குடித்
*தேன்* !

மீண்டும் சுவைத் *தேன்* !

உள்ளம் களித் *தேன்*!

உடல் களைத் *தேன்* !

உடனே படுத் *தேன்*!

கண் அயர்ந் *தேன்*!

அதனால் மறந் *தேன்*!

காலையில் கண்விழித் *தேன்*!

அப்படியே எழுந் *தேன்*!

உங்களை நினைத் *தேன்*!

தேனை எடுத் *தேன்*!

அங்கிருந்து விரைந் *தேன்*!

வேகமாக நடந் *தேன்*!

இவ்விடம் சேர்ந் *தேன்*!

தங்கள் வீட்டை அடைந் *தேன்*!

உங்களிடம் கொடுத் *தேன்*!

என் பணியை முடித் *தேன்*!

என்றார் அதற்கு

*தேன்*

பெற்றவர்

தேனினும்

இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை

தமிழ்த் *தேன்*

என்று உரைத்தனரோ? என கூறி மகிழ்ந் *தேன்*. என்றார்.💐

படித்ததில் ரசித்தது...
2021....வருடத்தின் நன்றிகள்....

இவ்வருடத்தில் என்னை சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி...

என்னை அழ வைத்தவர்களுக்கு மிகவும் நன்றி...

என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி...

என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி...

என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி...
எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி...

என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி...
என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி...

என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி...
என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி...

எனக்கு உதவியவர்களுக்கு நன்றி...
எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி...

ஏனெனில்
நீங்களே என் தன்னம்பிக்கைக்கு காரணம்...
எனக்குள் இருக்கும் ஆற்றலை
எனக்கே உணர்த்தியது நீங்கள்தான்
எதையும் கடந்து செல்ல உதவியது நீங்கள்தான்
எந்த சவாலையும் சந்திக்கும் தைரியத்தை தந்ததும் நீங்கள்தான்...

அன்பான
நண்பர்களுக்கும்,
நட்புகளுக்கும்
உறவுகளுக்கும்
உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார
நன்றிகள்.......

வாழ்க வளமுடன்....!!!!

Bye Bye 2021
Wish you happy new year 2022

Wish your family அண்ட் you


உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022

By Yours @adhikesan