இரவு உணவுகளில் கவனம் தேவை. இல்லையென்றால் பிரச்சனை.*
தமிழில் ஒரு பழமொழி உண்டு. காலை அரசன் போல், மதியம் மந்திரி போல், இரவு யாசகன் போல் சாப்பிட வேண்டுமென்பது தான் அது.
இரவு சிறிதளவுதான் சாப்பிட வேண்டுமென்றாலும் அந்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் பலர் இரவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. பொதுவாக, இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள். நள்ளிரவில் எழுந்து பசியை போக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.
மாமிசம்:
இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாக நிகழும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அது குறைத்துவிடும். மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தவும் செய்யும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக்கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். இதனால் அவருடன் உறங்குபவர்களுக்கும் அது பிரச்னை. எனவே இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம்:
ஐஸ்க்ரீம் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்களைவரை விரும்பப்படும் உணவு. இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
சாக்லேட்:
இதில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
பாஸ்தா:
பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒருநாள் நீங்கள் கடந்து வந்த பாதையை , சற்று பின்னோக்கி பார்த்தால்
புரிந்து கொள்வீர்கள் அர்த்தமற்ற பல விஷயங்களுக்காக தேவையில்லாமல்
கவலைப்பட்டீர்கள்

டிராகன் ஃப்ரூட் ஜூஸ்*🥤🥤🥤🥤
*தேவையான பொருட்கள்:*
டிராகன் பழம் – 2
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு
*செய்முறை:*
முதலில் டிராகன் பழங்களை எடுத்து, இரண்டாக வெட்டியபின், அதில் உள்ள தசைப்பகுதியை மட்டும் சிறிதளவு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மேலும் அதில் மீதி உள்ள பழங்களை துண்டுகளாக நறுக்கவும்.
பின்னர் மிக்சிஜாரில் நறுக்கிய மீதியுள்ள டிராகன் பழங்களை போட்டு, அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அரைத்த ஜூஸை ஒரு டம்ளரிலோ அல்லது பவுலிலோ ஊற்றியபின், அதில் ஏற்கனவே சிறிதளவு நறுக்கிய டிராகன் பழ துண்டுகள், ஐஸ் கட்டிகளை போட்டு பரிமாறினால், சில்லுன்னு வெயிலுக்கு இதமான டிராகன் ஃப்ரூட் ஜூஸ் தயார்.

சுவை மிகுந்த ரவை தேங்காய் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.*
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
திராட்சை - 5
முந்திரி - 5
செய்முறை:
முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்பு பாகு பதம் வந்ததும், வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை பாகில் கொட்டி, ஏலக்காய்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பின்பு சற்று சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்தால் சுவையான ரவை தேங்காய் உருண்டை ரெடி.

கேரட் அல்வா*
*தேவையான பொருட்கள்* :
பொருள் - அளவு
கேரட் துருவல்கால் கிலோ
சர்க்கரை 1 கப்
பொடித்த ஏலக்காய்6
காய்ச்சிய பால் முக்கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
முந்திரி6
திராட்சை 6
உருக்கிய நெய் அரை கப்
ஆரஞ்சு ரெட்பவுடர் கால் டீஸ்பூன்
*செய்முறை :*
ஒரு பாத்திரத்தில் கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும். பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பின் கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
ஆறியவுடன், அதை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கெட்டியான பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் கேரட் விழுது சேர்த்து, கெட்டியான சுருள் பதம் வரும் வரை நன்கு கிளறிவிடவும். பின்னர; அவற்றுடன் உருக்கிய நெய்யை சேர்த்து கிளறி விடவும்.
இவை அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி மற்றும் ஆரஞ்சு ரெட்பவுடர் சேர்த்துக் கிளறி இறக்கினால், கேரட் அல்வா ரெடி.

*கேரட் கேசரி*
*தேவையான பொருட்கள்* :
பொருள் - அளவு
கேரட் அரை கிலோ
பால் 1 கப்
பேரீச்சம் பழம்10
கோதுமை மாவு2 டீஸ்பூன்
சர்க்கரைகால் கப்
தேங்காய் துருவல்கால் கப்
லவங்கம் 3
நெய் 2 டீஸ்பூன்
வறுத்த முந்திரிப்பொடி1 டீஸ்பன்
*செய்முறை :*
பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துருவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும்.
நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.
பாலை, பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும்.
பின்னர; கேரட் தேங்காய்த்துறுவல் இரண்டையும் சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் இவற்றில் போட்டு பாகானவுடன் மற்ற எல்லா பொருள்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும்.
கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டி, மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி.

பன்னீர் recipie*_
தேவையான பொருட்கள்:
க்யூப் பன்னீரின் இரண்டு பாக்கெட்டுகள்
200 கிராம் உறைந்த பட்டாணி
4 பெரிய தக்காளி, உரிக்கப்பட்டு நறுக்கியது
1½ தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
1½ தேக்கரண்டி தரையில் சீரகம்
1 தேக்கரண்டி மஞ்சள்
கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
1 பச்சை மிளகாய், இறுதியாக வெட்டப்பட்டது
சூரியகாந்தி எண்ணெய்
கொத்தமல்லி ஒரு சிறிய கொத்து, தோராயமாக நறுக்கப்பட்ட
உப்பு, சுவைக்க
*செய்முறை*
ஒரு வறுக்கப்படுகிறது பான் எண்ணெயை அதிக வெப்பத்தில் சூடாக்கவும். பன்னீர் சேர்த்து வெப்பத்தை குறைக்கவும். அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும், பின்னர் சமையலறை காகிதத்தில் அகற்றி வடிகட்டவும்.
அதே வாணலியில், இஞ்சி, சீரகம், மஞ்சள், கொத்தமல்லி தூள், மிளகாய் சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும்.
தக்காளியைச் சேர்த்து மென்மையாக்கத் தொடங்கும் வரை சமைக்கவும்.
மென்மையான அமைப்பை உறுதிப்படுத்த கரண்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தவும்.
மணம் வரும் வரை ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.
உப்பு சேர்த்து பட்டாணி மற்றும் பருவத்தை சேர்க்கவும்.
இரண்டு நிமிடங்கள் இளங்கொதிவிட்டு பன்னீரில் கிளறி கரம் மசாலா சேர்க்கவும்.
கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து அரிசி அல்லது ரோட்டியுடன் பரிமாறவும்.

சைவப் பிரியர்களுக்கான, சைவ நெத்திலி குழம்பு*
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ பாதி அளவு, வெங்காயம் – 2 , தக்காளி – 3, பூண்டு பல் – 10 அல்லது 15, பச்சை மிளகாய் – 2, தனி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி- 1 டேபிள் ஸ்பூன், சோம்பு பொடி – 1/2 டேபிள் ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு.
தாளிக்க: கருவேப்பிலை, நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், கடுகு – 10 கிராம், வெந்தயம் – 10 கிராம்
முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை நன்றாக நரம்பு நீக்கி சுத்தம் செய்து அதை மஞ்சள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி வேக வைக்கும் போது இதில் உள்ள துவர்ப்பு தன்மை நீங்கிவிடும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் போட்டு நன்றாக கடுகு வெடிக்கும் வரை காத்திருந்து, பின்பு அரிந்து வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு இத்துடன் கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.
பிறகு அரிந்து வைத்துள்ள தக்காளியும் சேர்த்து விடுங்கள். இது ஒரு புறம் வதங்கிக் கொண்டிருக்கட்டும். இதற்கிடையே ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்புத் பொடி, சாம்பார் பொடி, உப்பு அனைத்தையும் கலந்து குழம்பு கூட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
தக்காளி நன்றாக வதங்கியவுடன் அதில் வேக வைத்துள்ள வாழைப்பூவை கொட்டி கிளறி விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் வெங்காயம் தக்காளி உடன் இந்த வாழைப்பூவும் வதங்கியவுடன் கரைத்து வைத்திருக்கும் இந்த குழம்பு காரைசலை அதில் கொட்டி விடுங்கள். மூடி போட்டு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். மேலே சிறிது கொத்தமல்லியை தூவி விடுங்கள். சைவ நெத்திலி குழம்பு தயார்.
இந்தக் குழம்பு அப்படியே மீன் குழம்பின் சுவையுடன் இருக்கும். இதை சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். இட்லி, தோசை போன்றவைகளுக்கு கூட இந்த சைவ நெத்திலி குழம்பு நன்றாக இருக்கும்

பணமே என்றாலும் கிழியும் வரை தான் நம்முடையது என போட்டி..!
கிழிந்துவிட்டால் யாரிடம் தள்ளி விடலாம் என போட்டி..!
உயர்ந்தது என்று எதுவும் இல்லை இந்த உலகில்….

என்னாலும் வாழ முடியுமென்று தினசரி தனக்கு தானே ஊக்கப்படுத்திக் கொள்...
வேறு யார் கையையும் நம்பி எதிர்பார்க்காதே நீ நினைத்தால் மட்டுமே உன்னால் ஜெயிக்க முடியும் என்பதை உணர்ந்துக் கொள்...

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.
அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...
நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...
இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...
இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்......

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''
மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''
மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்:
மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''
கடைசியாக மனைவி கேட்டாள்:
நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''
மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: என் மகன் kகீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.
உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும்........