தமிழ்நாடு அரசியல் செய்திகள் !
832 subscribers
591 photos
8 files
44 links
அனைவருக்கும் வணக்கம்! 🙏

தமிழ்நாடு அரசியல் செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது !✨✨.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் Share செய்யுங்கள்..
Download Telegram
அ.தி.மு.க., பொன் விழா :தலைமை வேண்டுகோள்

:அ.தி.மு.க. பொன் விழாவை அக். 17ம் தேதி சிறப்பாக கொண்டாடும்படி தொண்டர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:
அ.தி.மு.க. 49 ஆண்டுகளைக் கடந்து அக். 17ம் தேதி 'பொன் விழா' காண உள்ளது. இந்த திருநாளை கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டிய நேரமிது.இதையொட்டி அமைப்பு ரீதியாக கட்சி செயல்பட்டு வரும் மாவட்டங்கள் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கும் அவர்களின் படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்க வேண்டும்.
For More detail
👇👇
கோயில்களை திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்க செய்வோம்: அண்ணாமலை

பத்து நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் அரசை ஸ்தம்பிக்கச் செய்வோம்'' என்று தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ. சார்பில் நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோயில்கள் முன் போராட்டம் நடந்தது. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் பா.ஜ.வினர் தீச்சட்டி ஏந்தியும், தேங்காய் உடைத்தும் கோயில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
For More detail
👇👇
குண்டர் சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: அழகிரி கோரிக்கை

சென்னை : சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சீமானை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில், தேர்தல் பிரசார கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ், சோனியா ஆகியோரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, சீமான் பேசினார். தொடர்ந்து, வன்முறையை துாண்டும் வகையில் பேசி வருகிறார்.தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவாக, நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீஸ் துறையினரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
For More detail
👇👇
வெள்ளியில் வழிபட தடை விதித்ததன் மூலம் தி.மு.க.,விற்கு சனி பிடித்து விட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

மதுரை : ''ஹிந்துக்கள் வழிபாட்டுக்கு உகந்த வெள்ளிக்கிழமை வழிபட தடை விதித்ததன் மூலம் தி.மு.க.,விற்கு சனி பிடித்து விட்டது,'' என அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் முன் பா.ஜ., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் ஹிந்துக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். தி.மு.க., அமைச்சர்கள் கோயிலுக்கு செல்வது சந்தோஷம் தான். திருச்செந்துார் கோயிலுக்கு அதிகம் செல்வோர் தி.மு.க.,வினர் தான். செய்த பாவங்கள் தீர நீங்கள்(தி.மு.க.,வினர்) கோயிலுக்கு சென்று சாஷ்டாங்கமாக விழுவீர்கள். நீங்கள் செய்த பாவம் கோடிக்கணக்கான பக்தர்களை கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கவில்லை என்பது தான்.
For More detail
👇👇
மீண்டும் அரசியல் 16ல் சசிகலா துவக்கம்?
சென்னை :'அ.தி.மு.க., தொண்டர்களை விரைவில் சந்திப்பேன்' என்று கூறி வந்த சசிகலா, வரும், 16ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது.

அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார். விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர்.

அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்தார்.

அதன்படி, 16ம் தேதி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் ராமாபுரம் தோட்டத்திற்கு செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
Forwarded from Quality Buttons Bot
🎂🎂On 10.10.2020 we started Hokomart sales. Today we completed the first year. Without your support, this is not possible. Thanks to all our customers and supporters.🎂🎂

🔥From Oct 10 to 12, we sell selected products at offer price.

🥳Hurry!! We have limited stock.

👉For More Details : @hokomartadmin
'கேலோ இந்தியாவில் சிலம்பாட்டம்: 8 கோடி தமிழருக்கு கிடைத்த கவுரவம்'

சென்னை:''கேலோ இந்தியாவில், சிலம்பாட்டம் இணைக்கப்பட்டது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை பேசினார்.

சிலம்பாட்டத்தை, 'கேலோ இந்தியா' எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கொன்னுார் காந்திநகர் காலனியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த, சிலம்பாட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:சிலம்பத்தின் வயது நமக்கு தெரியாது. அகத்திய முனிவர் எப்போது வந்தாரோ, அப்போதே சிலம்பாட்ட கலையும் வந்தது. தமிழகத்திற்கு எவ்வளவு வயதோ, அவ்வளவு வயது சிலம்பத்திற்கு.

நம் பாரம்பரியத்தை விளையாட்டின் வாயிலாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், சிலம்பத்தால் மட்டுமே முடியும்.அதனால் தான், கேலோ இந்தியாவில், சிலம்பாட்டதை பிரதமர் மோடி சேர்த்து இருக்கிறார். இது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம். இனி, இந்த விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்று காட்டுவோம்.

For MOre detail
👇👇
அ.தி.மு.க., அவை தலைவர் யார்? நிர்வாகிகள் இன்று ஆலோசனை!

அ.தி.மு.க.,வில், புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வதில், இரட்டை தலைமையிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாவட்ட செயலர்களுடன் இன்று ஆலோசனை நடக்கிறது.

அ.தி.மு.க., பொன்விழா ஆண்டு 17ம் தேதி துவங்குகிறது. இதனால், மதுசூதனன் மறைவால் காலியாக உள்ள அவைத் தலைவர் பதவியை நிரப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியை கைப்பற்ற, எம்.ஜி.ஆர்., - ஜெ., காலத்தில் பணியாற்றிய மூத்தவர்கள் மத்தியில் கடும் போட்டி உருவாகி உள்ளது.

மூத்த நிர்வாகிகள் பொன்னையன், சைதை துரைசாமி, ஜெயகுமார், தமிழ்மகன் உசேன், வரக்கூர் அருணாசலம், செம்மலை, லியகாத் அலிகான், கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களின் பெயர்கள், அவைத் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், ஜெயகுமாரை அவைத் தலைவராக்க ஆலோசிக்கப்படுகிறது.
FOr More detail
👇👇
நாளை! காலை 8 மணிக்கு துவங்குகிறது ஓட்டு எண்ணிக்கை: மக்களின் ஆதரவை அறிய தி.மு.க.., அ.தி.ம.க., ஆர்வம்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 78.4 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் ஆர்வமாக உள்ளன. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட தேர்தலில், 77.43 சதவீதமும்; இரண்டாம் கட்ட தேர்தலில், 78.47 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
For More detail
👇👇
19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு; கும்பகோணம் மாநகராட்சியாக தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 19 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

கும்பகோணம் மாநகராட்சியை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்த அறிவிப்பு, சட்டசபையில் வெளியிடப்பட்டது. தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளுடன், அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
For More detail
👇👇
பொன் விழா மாநாடு: அ.தி.மு.க., ஏற்பாடு

அ.தி.மு.க., பொன் விழா ஆண்டை ஒட்டி, பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்களின் கூட்டறிக்கை:கடந்த 1972- அக்., 17ல், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
For More detail
👇👇
அ.தி.மு.க.,வின் 50 வரலாற்று உண்மைகள்

நாளை பொன் விழா காணும் அ.தி.மு.க., வரலாற்றின் 50 முக்கிய சம்பவங்களை பதிவு செய்கிறேன்...

* அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்

* 1971 தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு போட்டியாக தன் மகன் மு.க.முத்துவை நடிக்க வைத்து, ரசிகர் மன்றங்களை உருவாக்கினார்

* தி.மு.க., ஆட்சியில், லஞ்சமும், ஊழலும் பெருகியதை காமராஜர் கண்டித்தார். நல்லாட்சிக்கு உத்தரவாதம் கொடுத்த எம்.ஜி.ஆருக்கு, மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
For More detail
👇👇
Forwarded from Quality Buttons Bot
🥳 இந்த வார சலுகை

💁 இப்பவும் சொல்றோம் எப்பவோம் சொல்லுவோம் ! நாங்கள் விற்பனை செய்கின்ற விலையை விட நீங்க கம்மியா வாங்கிட்டா உங்க FULL AMOUNT REFUND ( PROOF NEEDED WITH Same Quality ) 🤡

🤪 Flipkart , Amazon la check பண்ணி பார்த்துட்டு J𝙤𝙞𝙣 𝙋𝙖𝙣𝙣𝙪𝙣𝙜𝙖 !

💸 சும்மா ஒரு TIME PASS-க்கு J𝙤𝙞𝙣 𝙋𝙖𝙣𝙣𝙪𝙣𝙜𝙖 𝙉𝙖𝙣𝙗𝙖𝙧𝙜𝙖𝙡𝙖 , ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த விலை இருந்தால் ?

👇🏻💥🔥

⚠️JOIN KNOW⚠️
▭▬▭▬▭▬👇🏻▭▬▭▬▭▬
🙂 Will accept only 50 entries🙂
❤️ BEST Quality and BEST Price ❤️
👆👆👆Join Fast 👆👆👆
▭▬▭▬▭▬👆🏻▭▬▭▬▭


👍 பொருள் நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வாங்க எங்கள் நிறுவனம் ( Hokomart Thamizhan ) சார்பாக வாழ்த்துக்கள் 🥳

For More Details : @hokomartadmin

💥 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏
தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா காட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான கொள்கையே காரணம். 1969க்கு பின் கருணாநிதி கொண்டு வந்த மதுபான விற்பனை தமிழினத்தை நாசம் செய்து வருகிறது.

ஐந்து மாதங்களாக மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட குடும்ப தலைவிக்கு ரூ.1000, பழைய பென்ஷன் திட்டம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. பஞ்சப்படி வழங்க நிதியில்லை என்கிறார் நிதியமைச்சர்.

மத்திய அரசின் இலவச தடுப்பூசி, ரேஷனில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டங்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லையெனில் தமிழகத்தில் பட்டினிச்சாவு அதிகரித்திருக்கும், என்றார்.
அ.தி.மு.க., பொன்விழா கொண்டாட்டம் துவக்கம்
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தை ஒட்டி மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் துவங்கியது. சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

பின்னர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.மீண்டும் ஆட்சி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:துணிவு துாய்மை தன்னல மறுப்பு ஆகிய உயர்ந்த பண்புகளின் உறைவிடமான எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கம் பொன்விழாவை கொண்டாடுகிறது.
For More detail
👇👇
தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் - தொல்.திருமாவளவன் பேட்டி

மத்திய அரசு இயற்கை மருத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவை சேர்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்டங்கள் என்றாலும் இந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தை காட்டியுள்ளது. அ.தி.மு.க. சரிவை சந்தி்த்துள்ளது

தி.மு.க.வின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றாக இந்த வெற்றி உள்ளது. அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொதுமக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

சமூக நீதி அரசியல் பேசும் மண்ணில் தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார். இதை நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிக்காட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்களே, சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல் அவரின் செயல்பாடுகள் உள்ளன.

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்றுவது கடினம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒண்றிணைய வேண்டும்.
For More detail
👇👇