காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் 10 பாதிப்புகள்!
ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. 'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். 'நேரமில்லை' என்கிறார்கள் சிலர். ’ஏற்கெனவே சாப்பிட்ட உணவு, செரித்துவிட்டதா என்பதை அறிந்து அடுத்த வேளை சாப்பிட்டால், உடலில் நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் இல்லை’ என்கிறது வள்ளுவம். ஆனால், முன்பு எடுத்துக்கொண்ட உணவு செரித்த பிறகும், அடுத்த வேலை உணவைத் தவிர்ப்பது இன்முகம் காட்டி நோய்களை அழைப்பதற்குச் சமம்!
காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக இருக்கிறது. காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் அதிகரிப்பதாக தெரிகிறது.
சர்க்கரை நோய்:
காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள் கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக மாறிவிடுவோம்.
உடற்பருமன்:
உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயருமே தவிர, குறைவது கடினம். காலை உணவைத் தவிர்ப்பவர்கள், ஆரோக்கியமற்ற நொறுவை வகைகளின் மீது அதிக இச்சை கொண்டவர்கள் என்கிறது ஆய்வு.
ஹார்மோன் மாற்றங்கள்:
உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக வெளியாகத் தொடங்கும். உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் 'சாப்பிட்டது போதும்' என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும். லெப்டின் ஹார்மோனின் அளவு குறைந்து, கெர்லின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது, பசி உணர்வு அவ்வளவு சீக்கிரம் அடங்காது. விளைவு… அதிஉணவு.
மூளையின் ஆற்றலுக்கு:
குளுக்கோஸிலிருந்து கிடைக்கும் ஆற்றலை அதிகம் எதிர்பார்ப்பது உடலின் தலைமைச் செயலகமான மூளை! சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது.
வாய் நாற்றம்:
காலை உணவை மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பில் உள்ள லைஸோசைம், வாய்ப் பகுதியில் மையமிட்டுள்ள நுண்கிருமிகளை அழிக்கும். அதுவே உணவைச் சாப்பிடாவிட்டால், கிருமிநாசினியின் ஆதரவின்றி, வாய்ப் பகுதியில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து, விரைவில் வாய்நாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் உண்டாகும்.
உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். காலையில் செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது. உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் பற்றிக்கொள்ளும்.
பல மணி நேர பட்டினியை உடைப்பதன் பொருளே பிரேக்-ஃபாஸ்ட், பட்டினி கிடப்பதை மேலும் அதிகரித்து நோய்களை அழைக்க வேண்டாமே! ’காலை உணவைத் தவிர்ப்பது’ பல்வேறு வகையான நோய்கள் நம்மை ஆட்கொள்ள வழிவகுக்கும். மாவுச் சத்து, புரதம், சிறிது கொழுப்பு நிறைந்த சரிவிகித காலை உணவு, நோய்களை எதிர்க்கும் ஆளுமையை அளிக்கவல்லது. இனி தவறாமல் செய்ய வேண்டிய காலைக்கடன், காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பதே!...
அதிகாலையில் வேலைக்குச் செல்லும்போது, தவறாமல் கஞ்சி, களி போன்ற காலை உணவுகளை தூக்குச் சட்டியில் சுமந்து சென்ற கடந்த தலைமுறையினருக்கு, புதுப்புது நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு. இன்றைய அவசர யுகத்தில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, இடை உணவாக பீட்ஸா, பர்கர் போன்ற நொறுவைகளைச் சாப்பிட்டு சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமுடைய இளம் தலைமுறையினருக்கு, புதுப்புது நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்!

``புரோட்டீன் நிறைந்த சத்தான உணவைத் தர தாய்மாருக்கு விழிப்பு உணர்வு தேவை''
https://t.me/tamilshortmessage
உடலின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகளில் மிக முக்கியமானது
இப்போது, உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, நம் வீடுகளில் பெரியோர் சொல்லும் உணவுகளைத்தான் குழந்தைகள் சாப்பிட்டு வளர்ந்தார்கள். அந்த உணவுகளில் சத்துகள் அதிகம் நிறைந்திருந்தன. அதனால், எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் குழந்தைகள் எந்த உணவைக் கேட்கிறார்களோ, அதைத்தான் பெரும்பாலான பெற்றோர் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதனால், குழந்தைக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போய்விட்டன.
அண்மையில்,
``ஒரு குழந்தை பிறக்கும்போது, கூடவே கனவும் பிறக்கிறது. ``இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து, ஊக்குவித்தாலே போதும். குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்தான். அதற்காக, அவர்களைப் `படி... படி...' என்று சொல்லி, நச்சரிக்கக் கூடாது. பொதுவாக, குழந்தைகள் ஒரு விஷயத்தைச் சிறப்பாக செய்யவேண்டுமென்றுதான் நினைப்பார்கள். எப்போதுமே ஒருவர்போல இன்னொருவர் ஆக முடியாது. ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு, அந்தத் துறையில் சாதித்துக் காட்டுவார்கள். இதைப் பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து, பெரும்பாலும் ஃபாஸ்ட்புட் உணவுகளையே விரும்புகின்றனர். அதனால்தான், உணவகங்களுக்கு இணையாக மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பெற்றோரின் கனவு நிறைவேற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நல்ல கல்வி தந்தால் மட்டும் போதாது. புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான், ஆரோக்கியமான தலைமுறைசாத்தியமாகும்!
https://t.me/tamilshortmessage
உடலின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகளில் மிக முக்கியமானது
புரோட்டீன்'. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
இன்றைக்குப் பல பெற்றோர் தங்களது குழந்தைகள் பரீட்சையில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறது என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடும் உணவிலுள்ள புரோட்டீன் சத்துக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதைக் கவனிப்பதில்லை. காலையில் எழுந்ததும் அவசர அவசரமாகப் பள்ளிக்கு அனுப்புவதில் காட்டும் வேகத்தை, அந்தக் குழந்தை சத்தான உணவுகளைச் சாப்பிடுகிறதா என்பதில் காட்டுவதில்லை. இதனால்தான் சிறு வயதிலேயே பல குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்களின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இப்போது, உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, நம் வீடுகளில் பெரியோர் சொல்லும் உணவுகளைத்தான் குழந்தைகள் சாப்பிட்டு வளர்ந்தார்கள். அந்த உணவுகளில் சத்துகள் அதிகம் நிறைந்திருந்தன. அதனால், எல்லோரும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் குழந்தைகள் எந்த உணவைக் கேட்கிறார்களோ, அதைத்தான் பெரும்பாலான பெற்றோர் வாங்கிக் கொடுக்கிறார்கள். இதனால், குழந்தைக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போய்விட்டன.
அண்மையில்,
நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்' (National Institute of Nutrition) என்ற அமைப்பு புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் வயதுக்கேற்ப எவ்வளவு சத்துகள் தேவை, அவர்கள் என்ன வகையான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதில், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான புரோட்டீன் அளவில் 20 சதவிகிதம்கூட தருவதில்லை' என்ற அதிர்ச்சிகரமான ஒரு புள்ளிவிவரத்தைக் கூறியிருக்கிறார்கள். எனவே, பெற்றோர் புரோட்டீன் நிறைந்த உணவுகளைத் தர வேண்டும். எலுமிச்சை, புளிசாதம் என்று கொடுக்காமல் பருப்பு, பால், மீன், முட்டை, கோழியிறைச்சி, ஆட்டு இறைச்சி போன்ற உணவுகளைச் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி சாத்தியம்” ``ஒரு குழந்தை பிறக்கும்போது, கூடவே கனவும் பிறக்கிறது. ``இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து, ஊக்குவித்தாலே போதும். குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்தான். அதற்காக, அவர்களைப் `படி... படி...' என்று சொல்லி, நச்சரிக்கக் கூடாது. பொதுவாக, குழந்தைகள் ஒரு விஷயத்தைச் சிறப்பாக செய்யவேண்டுமென்றுதான் நினைப்பார்கள். எப்போதுமே ஒருவர்போல இன்னொருவர் ஆக முடியாது. ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு, அந்தத் துறையில் சாதித்துக் காட்டுவார்கள். இதைப் பெற்றோர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய தலைமுறையினர் வீட்டுச் சாப்பாட்டைத் தவிர்த்து, பெரும்பாலும் ஃபாஸ்ட்புட் உணவுகளையே விரும்புகின்றனர். அதனால்தான், உணவகங்களுக்கு இணையாக மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பெற்றோரின் கனவு நிறைவேற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நல்ல கல்வி தந்தால் மட்டும் போதாது. புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான், ஆரோக்கியமான தலைமுறைசாத்தியமாகும்!
இன்றைய பொன்மொழி !
https://t.me/tamilshortmessage
'சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்."

வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் !!
https://t.me/tamilshortmessage
👉 பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்னதான் கசப்பாக இருந்தாலும், அதனுள் ஏராளமான நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், எரியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.
👉 சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப் - 2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.
👉 வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
👉 வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
👉 வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும். இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
👉 செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
👉 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
👉 கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

முத்தான சிந்தனை துளிகள் !
https://t.me/tamilshortmessage
'எந்தவித கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்."

வங்கிகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை !!
எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. பல்வேறு தரப்புகளில் முதலீடு செய்யும் வசதி இருந்தாலும் அந்த முதலீட்டுக்கு முன்பு நாம் செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவை பற்றிய விவரங்கள் இதோ !!
கடன்களை திரும்ப செலுத்துங்கள் :
உங்களுக்கு கடன் இருந்தால் முதலில் கடனை அடைத்துவிட்டு முதலீட்டை தொடங்குங்கள். மேலும் அந்த கடனுக்கு நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்துகிறீர்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வட்டி விகிதம் அதிகம் இருந்தால் முதலில் அதை தீர்க்க வழிகாணுங்கள்.
கிரிடிட் கார்டு கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள் :
இருக்கிற கடன்களை திரும்ப செலுத்துவதை விட புதிய கடன்களுக்குள், குறிப்பாக கிரிடிட் கார்டு கடன்களுக்குள், சிக்கிக்கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம். அதிக விலையுள்ள பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்காமல் இருப்பது நல்லது. கிரிடிட் கார்டு மூலம் எந்த ஒரு பொருளும் வாங்கும் முன்பு அந்த பொருள் உங்களுக்கு மிகவும் அவசியம் தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவை இல்லாத பொருட்களை கிரிடிட் கார்டு மூலம் வாங்கிவிட்டு பின்னர் கடனில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
ஒருவேளை கிரிடிட் கார்டில் பொருள் வாங்குவதாக இருந்தால் அதற்குரிய தொகையை மாதம் தோறும் தவறாமல் செலுத்துங்கள். இதற்காக எளிய மாத தவணை முறைகளை பல கிரிடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அதற்கு பதிலாக கிரிடிட் கார்டில் குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்தாதீர்கள்.
பாதுகாப்பு :
ஒரு முதலீட்டை செய்கிறவர்கள் அது ஈட்டித்தரும் வருவாய் குறித்து சிந்திக்கிற அளவுக்கு பாதுகாப்பு குறித்து யோசிப்பதில்லை. நமது முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்பது பற்றி சிந்தித்துப்பாருங்கள்; அது மிக முக்கியம். ஒவ்வொரு சேமிப்பு திட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு அம்சம் இருக்கும். உதாரணமாக, பங்கு முதலீட்டைக்காட்டிலும், வங்கி நிரந்தர வைப்பு நிதி அதிக பாதுகாப்பானது. எந்த அளவிலான இழப்பை உங்களால் சகித்துக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தே எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
வரிச்சலுகை தரும் முதலீட்டுத் திட்டங்கள் :
வரிச்சலுகை பெற வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவர் அதற்கேற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது. அதை விடுத்து வரிச்சலுகையில்லாத திட்டங்களில் சேமிக்க தொடங்கினால், செலுத்த வேண்டிய வருமான வரி அதிகரித்து கிடைக்கும் வருவாயை வரியாக செலுத்த வேண்டியது வரும்.
அன்றாட பங்கு வர்த்தகத்தை தவிர்க்கப்பாருங்கள் :
பங்கு சந்தை வர்த்தகத்தில் நிபுணராக இல்லாத பட்சத்தில் அன்றாட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாதீர்கள். உங்கள் முதலீடு ஆபத்தில் முடியலாம். எனவே, உங்களது ஆபத்தை எதிர் கொள்ளும் திறனுக்கு பொருத்தமான வகையிலான அளவுக்கே பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள்.
மொத்தத்தில், முதலீடு என்பது சேமிப்பை ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்வது என்பதல்ல. மேற்கண்ட பல்வேறு அம்சங்களையும் சீர் தூக்கிப்பார்த்த பின்னரே செய்ய வேண்டியது.

சாப்பிடும்போதும் சாப்பாட்டுக்கு முன்பும் தண்ணீர் குடித்தால் என்னவாகும்?
நீரை நாம் தாகம் தீர்க்கும் பண்டமாக மட்டுமே கருதுகிறோம். பல தருணங்களில் நீர் நமக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஒருகாலத்தில் இயற்கையின் மடியிலிருந்து கிடைத்த தண்ணீரை அப்படியே பருகினோம். ஆனால் இன்று சூழலியல் மாற்றங்களாலும் மனிதத் தவறுகளாலும் நிலத்தில் கிடைக்கும் நீரை அப்படியே பயன்படுத்த முடியாது. காய்ச்சிய வெந்நீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு நல்லது.
தண்ணீரை எப்போதெல்லாம் பருக வேண்டும். தவறான உணவு முறை மட்டுமே, செரிமானத்தை பாதிக்கும் காரணி அல்ல. தவறான நேரத்தில் அதிகளவில் தண்ணீர் பருகுவதும் செரிமானத்தை பாதிக்கும். உணவியல் முறைகளில் சில ஒழுக்கங்களை கடைப்பிடித்து வந்தால், உடல் ரீதியான உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.
உணவுக்கு முன்பு...
சாப்பிடுவதற்கு சற்று முன்பு அதிகளவில் தண்ணீர் பருகினால், பசி மந்தப்பட்டு செரிமானம் பாதிப்படையும். செரிமான சுரப்புகளின் தாக்கம் குறைந்து, உள்ளே போகும் உணவு முழுமையாக செரிமானம் அடையாது. மந்தம், உப்புசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் மெதுவாக தலைகாட்டத் தொடங்கும். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் பருகுவது, உணவு வகைகளை கூழ்மமாக்க வீரியத்துடன் காத்திருக்கும் செரிமான சுரப்புகளை தண்ணீர் ஊற்றி சாந்தப்படுத்துவதற்கு சமம். உடல் எடையை குறைக்க சிலர் இம்முறையை பரிந்துரைத்தாலும், ஊட்டங்கள் உடலில் சேராமல் பக்கவிளைவுகளையே உண்டாக்கும்.
சாப்பிடும் போது...
வாய்ப்பகுதியில் வைத்த ஒவ்வொரு உணவுக் கவளத்தையும் இரைக்குடல் நோக்கித் தள்ள, சிலர் தண்ணீரின் துணையை நாடுவதைப் பார்க்கலாம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பது முறையல்ல. அதற்காக சாப்பிடும் நேரத்தில் விக்கல் எடுத்தால்கூட ’நான் தண்ணீரே குடிக்க மாட்டேன்’ என்று அடம்பிடிக்கக்கூடாது. சாப்பிடும்போது சிறிதளவு தொண்டையை நனைப்பதில் தவறில்லை.
டம்ளர் கணக்காக தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால், செரிமானம் உறுதியாக பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு. மேலும் உணவு எதுக்களித்தல் தொந்தரவும் அதிகரிக்கும்.
உணவுக் கவளங்களுக்கு இடையில் தண்ணீர் மட்டுமே பருகப்பட்ட காலம் மருவி, இப்போது வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்களும், மதுபானங்களும் பருகப்படுகின்றன. வறட்சியை உருவாக்கும் ஒரு கனமான பீட்ஸாவையோ, பர்கரையோ சாப்பிடும்போது, அதை உட்செலுத்த கலர்கலர் குளிர்பானங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உணவு மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக செரிமானம் கேடடைவது மட்டுமின்றி, வயிற்றுப் புண் முதல் புற்றுநோய் வரை ஏற்படலாம்.
சாப்பிடும்போது அதிகளவில் தண்ணீர் பருகுவதைத் தடுக்க, உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். உணவை நன்றாக மென்று எச்சில் சுரப்பின் ஈரத்தோடு கலந்து உட்தள்ளும் போது தாக உணர்வு அவ்வளவாக ஏற்படாது. அவசர அவசரமாக சவைக்காமல் சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றும். சாப்பிடும் நேரத்தில் தேவைக்கேற்ப சிறிது தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளலாம். பெரிய பாட்டில் முழுக்க தண்ணீரை நிரப்பி கண்முன்னே வைத்துக்கொண்டு சாப்பிட்டால், தேவையைவிட அதிக தண்ணீர் பருக வேண்டிய சூழல் ஏற்படும்.
சாப்பிட்ட பின்
சாப்பிட்டு முடித்த சிறிது நேரம் கழித்து தண்ணீர் பருகுவதே செரிமானத்திற்கு உகந்தது. செரிமான கருவிகளின் சீரிய செயல்பாட்டுக்கு தண்ணீரும் அவசியம். ஆனால் அது சரியான நேரத்தில் குடிப்பதும் முக்கியம். நாம் உட்கொண்ட உணவுகளின் உட்கூறுகள் செரிமானத்தின்போது உடைந்து சத்துக்களாக உருவாக செரிமான சுரப்புகளோடு சேர்த்து தண்ணீரின் துணையும் தேவை.
பொதுவாக தண்ணீர் உடனடியாக உடலுக்கு பலத்தை அளிக்கக்கூடியது. அதுவும் மிதமான வெந்நீர், குடற்பகுதியின் இயக்கத்தையும் துரிதப்படுத்தும். அவற்றின் ’பெரிஸ்டால்டிக் அசைவுகளை’ (Peristaltic movements) ஊக்கப்படுத்தி செரிமானத்தை முறைப்படுத்தும். உடலில் சேரும் கழிவுகள் விரைவாக வெளியேறுவதற்கும் உதவும். வெந்நீரை அருந்துவதால் வாத நோய்கள் ஏற்படாது .
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குழாயில் வரும் நீரைத் தூய்மைப்படுத்த, ஒரு வெள்ளைத் துணி மட்டும் போதும். சிறந்த வடிகட்டியாக செயல்பட்டு நீரில் உள்ள மலினங்களை நீக்கும். ஆனால் இன்று வெள்ளைத் துணியை மட்டும் நம்பி தண்ணீரை அருந்த முடியுமா? இயற்கையாக விளையும் காய்களில் கூட மாசு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், குடிக்கும் நீரில் அதிகரித்திருக்கும் மாசைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே தண்ணீரைக் காய்ச்சும்போதே, சீரகம், நெல்லிவற்றல், தூதுவளை இலைகள், தேற்றான் கொட்டை போன்ற மூலிகைகளை தேவைக்கேற்ப சேர்த்துக்கொண்டால் தண்ணீரோடு சேர்த்து, நமது உடலில் தேங்கியிருக்கும் மலினங்களும் நீங்கும்.

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
https://t.me/tamilshortmessage
'நாம் எப்போதும் நம்பிக்கையை தளரவிடாமல், மேலும் நல்லதை செய்ய முயற்சிக்க வேண்டும்."

தமிழர்களின் நீர்வளமும், பாசன முறைகளும் !
அக்காலத்தில் தமிழ்நாட்டில் (சுதந்திரத்திற்கு முன்) நீர்வளமும், பாசனமும் நல்ல நிலையில் இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பு வரையிலான சரித்திரத்தை இங்கு கண்போம்.
பாரம்பரிய முறைகள் :
தமது பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களையும் பயிரிட்டு வந்தனர். இயற்கையிலேயே நீர்வளம் மிகுந்த இடங்களில், அங்குள்ள தேவைகள், மண்வளம், கலாச்சாரம், தட்ப வெப்பத்திற்கு ஏற்ற கிணறுகள், ஏரிகள், வெள்ளப் பாசனக் கால்வாய்கள், ஊற்றுக்கால்கள், கசக்கால்கள் ஆகியவற்றை புத்திசாலித்தனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர். வாழ்வுக்கே ஆதாரமாக விளங்கும் இந்த நீர்நிலைகளைப் புனிதமாகக் கருதி வணங்கியும் வந்தனர்.
ஏரிகள் :
தமிழ்நாட்டில் மட்டும் 44,000 பெரிய ஏரிகள் இருந்தது. சங்கிலித் தொடராக அமைந்த இந்த ஏரிகள் வழியெல்லாம் உள்ள நிலங்களைச் செழுமையாக்கிக் கடைசி மட்டத்தில் கோயில் குளங்களாக முடிந்தன என்பதையும் அறிய முடிகிறது.
வெள்ளப் பாசனக் கால்வாய்கள் :
பாரம்பரியமாக நதிகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் வெள்ளப் பாசனம் செய்துவந்தன. அதாவது, வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவை வழிந்து, நதியின் இரு புறங்களிலும் உள்ள வயல்கள் மூழ்கிவிடும். இதன் மூலம் அந்த வயல்களில் பாசனம் நடைபெறும்.
இவை மேற்பரப்பு நீராதாரங்களின் கசிவுகளால் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளால் ஆனவை.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் :
ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய காலங்களில், நீராதாரங்கள் கிராம அளவில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டன.
பண்டைய காலத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகம், பாசன அமைப்பு முறைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை அனைத்தும் மக்களிடமே இருந்துவந்தது. கூடவே, அவற்றுக்கான அதிகாரம், கட்டுப்பாடு, பொறுப்பு ஆகியவையும் இருந்தன.

பாம்பன் பாலம் வரலாறு :
1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899ல் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.
பாலத்தின் அமைவிடம் :
தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்றும் கூட அழைக்கலாம்.
பாலத்தின் அமைப்பு :
ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும், இதனை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றது.
5000 டன் சிமெண்ட், 18 ஆயிரம் டன் இரும்பு, 18 ஆயிரம் டன் ஜல்லி கற்கள் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டன.
பாலம் தூண்கள் அமைப்பதற்கான கற்கள் 270 கி.மீ தூரத்தில் இருந்தும், மணல், 110 கி.மீ தூரத்தில் இருந்தும் கொண்டு வரப்பட்டன.
270 அடி நீளம் கொண்ட தூக்கு பாலத்தில் இரு தூக்கிகள் உள்ளன. ஒன்றின் எடை 100 டன்.
2.3 கி.மீ தூரத்தில், இந்த பாலத்தை கடந்து, மாதம் சராசரியாக பத்து கப்பல்கள் செல்கின்றன.
1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைத்தார்.
பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும், இருப்பினும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.
சிறப்புகள் :
நீரணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.
இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்துக்கு நூறு வயதிற்கு மேல் ஆகிறது. 2014ம் ஆண்டு ஜனவரி 28ல், நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன், அதனை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ் !!
💪 ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
💪 உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிட வேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ்நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)
💪 உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.
💪 உணவை கையால் எடுத்து சாப்பிட வேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
💪 சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)
💪 சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
💪 குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது.
💪 அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
💪 தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்.
💪 காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
💪 இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
💪 தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
💪 படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
💪 டீ, காப்பி போன்றவற்றை தவிர்த்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.
💪 நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
💪 தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணெய்க் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
💪 காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
💪 உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!
https://t.me/tamilshortmessage
'வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்விப்பதில் தான் உள்ளது."