Forwarded from Android Apps & games
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !
'வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே... என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.. செய்வதை விரும்பிச் செய்.. செய்வதை நம்பிக்கையோடு செய்..!"

ஊறுகாயில் உள்ள நன்மைகளும் தீமைகளும் !!
நம்மில் பலருக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது பல வீடுகளில் நடக்கும் ஒரு விஷயம். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் இந்த ஊறுகாயினால் எத்தனை பலன்கள் இருக்கின்றன என்பதை இப்பகுதியில் காண்போம்.
ஆண்டி ஆக்சிஜென்ட் :
ஊறுகாயில் அதிக அளவு ஆண்டி ஆக்சிஜென்ட்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் நமது உணவில் உள்ள இரசாயனங்களால் உண்டாகும் தீமைகளை குறைக்க இது உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது :
ஊறுகாயில் உள்ள ப்ரோபியோடிக் பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. நமது உடலில் செரிமானத்திற்கு எதிராக உள்ள பாக்டீரியாக்களை கொல்ல இவை உதவியாக இருக்கிறது. வினிகர் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உப்பு சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.
சக்கரையை கட்டுப்படுத்தும் :
வினிகர் கொண்ட ஊறுகாய்களை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இது சக்கரையை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
ஜீரண சக்தி:
சிறிய மற்றும் பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கின்றன. இந்த ஊறுகாய்கள் ஆயுர்வேத அடிப்படையிலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய குடும்பங்கள் நெல்லிக்காய் ஊறுகாயை ஜீரமாவதற்காக சாப்பிட்டு வருகின்றனர்.
நெல்லிக்காய் ஊறுகாய் ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் இதில் உள்ள ஹெப்டோப்ரோடெக்ட்டிவ் கல்லீரலை பாதுக்காகவும் உதவியாக உள்ளது. ஒரு ஆய்வில் கல்லீரல் பாதிக்கப்பட்ட மிருங்கங்களுக்கு நெல்லிக்காய் கொடுத்ததன் மூலம் அவற்றின் கல்லீரல் நல்ல நிலைக்கு மாறியது கண்டறியப்பட்டுள்ளது.
தீமைகள் :
ஊறுகாய் என்றாலே அதில் உப்பு தன்மை அதிகமாக இருக்கும். இவை சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் இந்த உப்பு தேவையற்ற பாக்டிரீயாக்கள் மற்றும் பூஞ்சைகளிடம் இருந்து ஊறுகாயை காப்பாற்றுகிறது.
இருப்பினும் அதிக அளவு உப்பை உணவில் சேர்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஊறுகாயில் அதிக அளவு எண்ணெய் சேர்க்கபடுவதால் இது கொழுப்பை அதிகரிக்கிறது. எனவே ஊறுகாயை மிக குறைந்த அளவு எடுத்துக்கொள்வது அல்லது எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.

இன்றைய பொன்மொழி
'அறிவுப்பூர்வமாக பேசுபவர்களை அல்ல... பொறுமையோடு காதுகொடுத்து கேட்பவர்களையே உலகம் விரும்புகிறது !!"

வீட்டுக்கடன் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியமான 5 காரணங்கள் !!
🏠வீட்டுக்கடன்களைப் பொறுத்தவரை, தொகை பெரியது என்பதால், வங்கிகள் கடன் வழங்குவதை உறுதிசெய்வதற்கு முன் உச்சகட்ட அளவிலான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுடைய விண்ணப்பம், ′குறைவான கிரெடிட் மதிப்பெண்′ என்ற வழக்கமான காரணங்களைத் தவிர்த்து, பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. வீட்டுக்கடன் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய மற்றும் பெரிதாக கவனத்தில் கொள்ளாத 5 காரணங்களை பற்றி பார்க்கலாம்.
அதிகமான மாத தவணை :
🏠 உங்களுடைய வருமானத்தில் நீங்கள் செலுத்தப் போகும் மாத தவணை போக மீதமுள்ள தொகை அதிகமாக இருக்கும் போது, வங்கிகள் கடன் வழங்க தயாராக இருக்கிறது. அதாவது உங்களுடைய நிகர வருமானத்தில் 35 - 40 சதவீதத்துக்கு மேல் மாத தவணை இருக்கக் கூடாது.
🏠நீங்கள் கூடவே கடன் அட்டை, தனிநபர் கடன் மற்றும் கல்விக்கடன் என வருமானத்தில் பெரும் தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் எனில், உங்களுடைய மாத தவணை வருமானத்தில் 80 - 90 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம். இப்படி வருமானத்தில் அதிகபட்சம் மாத தவணைக்குச் செல்லும்பட்சத்தில் நீங்கள் திவால் ஆகும் வாய்ப்பு உள்ளதால் வங்கிகள் கடன் வழங்குவதற்கு மறுக்கின்றன.
அடிக்கடி வேலை மாற்றம் :
🏠 வருமானத்தை அதிகப்படுத்தவும், புதிய வாய்ப்புகளைத் தேடியும் இன்றைய கால இளைஞர்கள் அடிக்கடி வேலை மாறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் உங்களுடைய வருமானத்தை வேண்டுமானால் உயர்த்தலாம், ஆனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அடிக்கடி வேலை மாறுபவர்களுக்குக் கடன் வழங்குவதற்கு யோசிக்கின்றனர்.
கூட்டு விண்ணப்பதாரரின் வீட்டுக்கடன் :
🏠 இது பெரும்பாலும் கவனத்துக்கு வராத காரணம். நீங்கள் வீட்டுக்கடனை கூட்டாக சேர்ந்து விண்ணப்பிக்கிறீர்கள் எனில், விண்ணப்பிக்கும் இருவருடைய கடன் திருப்பிச் செலுத்தும் வரலாறுமே வலுவாக இருக்க வேண்டும். யாரேனும் ஒருவருடைய கடன் வரலாறு மோசமாக இருந்தாலும் அல்லது ஏற்கெனவே அதிகளவு கடன் வாங்கியிருந்தாலும் உங்களுடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியே கடன் வழங்கப்பட்டாலும், கடன் தொகை நீங்கள் கேட்டதை விட குறைவாகவே இருக்கும்.
வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா?
🏠 நீங்கள் கடன் பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் - நல்ல கிரெடிட் மதிப்பெண், போதுமான அளவு வருமானம், நல்ல கடன் வரலாறு அனைத்தும் இருக்கிறது. ஆனால், துர்திர்ஷ்டவசமாக நீங்கள் ஏற்கெனவே கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் திவால் ஆனவர் வீட்டில் தங்கியிருந்தால், உங்களுக்கு வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
🏠 ஏனெனில், ஏற்கெனவே திவால் ஆனவரின் முகவரியை வங்கிகள், நிதி நிறுவனங்கள் தடுப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். அந்த முகவரியில் யாரேனும் தங்க நேர்ந்தால், என்னதான் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், விளைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். வங்கியாளர்களை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி கடனைப் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.
சிக்கல்கள் :
🏠 நீங்கள் வாங்கப் போகும் வீடு சில சமயங்களில் வங்கிகளால் அங்கீகரிக்கப்படாமல் இருந்தால் உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பில்டர் நிதி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். அல்லது, குடியிருப்பு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்களில் தவறுகள் இருக்கலாம். தேவையான அரசு அமைப்புகளின் அங்கீகாரம், ஒப்புதல் இல்லாமல் இருந்தாலும் கடன் மறுக்கப்படுகின்றன.

முத்தான சிந்தனை துளிகள்!
'வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி ஜெயிக்க கூடாது.. ஆனால், ஏமாற்றியவர்களை ஜெயிக்காமல் விடக்கூடாது.."

நம்முடைய ஆறு அடிப்படை உரிமைகள் !!
சுதந்திர உரிமை :
👤 பேச்சு, கருத்து ஆகியவைகள் சுதந்திர உரிமை. அமைதியான, சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை. சங்கம் மற்றும் அமைப்புகள் தொடங்கும் உரிமை. தேசத்தின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்வதற்கான, எங்கு வேண்டுமானாலும் குடியேறுவதற்கான உரிமை.
👤 6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் உரிமை 2002-ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2009-ல் தான் இந்த உரிமை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
சம உரிமை :
👤 சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துதல் குற்றம் ஆகும். அரசுப் பணிகளைப் பெற அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை இருக்கின்றன. தீண்டாமை ஒரு குற்றம் ஆகும். நெடுங்காலம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவது சலுகை அல்ல அவர்களுடைய உரிமை.
கலாச்சார மற்றும் கல்வி கற்கும் உரிமை :
👤 சிறுபான்மையினர் தங்களுடைய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை.
மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை :
👤 தன் விருப்பம்போல எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை.
சுரண்டலை எதிர்க்கும் உரிமை :
👤 வலுக்கட்டாயமாகப் பணியில் அமர்த்தி வேலை வாங்குதல் சட்டப்படி குற்றம் ஆகும். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலை, சுரங்கம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றமானச் செயல் ஆகும்.
அரசியல் அமைப்பைச் சீர்படுத்தும் உரிமை :
👤 அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து அரசே பறிக்கக்கூடும் என்று இந்திய அரசியலமைப்பு கருதுகின்றது. அப்படி நிகழும்பட்சத்தில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக்கொள்ளக் குடிமக்கள் கூறு 32-ன் படி நீதிமன்றத்தை அணுகும் உரிமைகள் உள்ளன.
👤 இக்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியம் நம்முடைய உரிமைகளை அறிந்துகொள்ளுதலும் ஆகும்.

இந்திய குடியரசு தினம்.....!!!
தன்னுடைய உடலையும் இரத்தத்தையும்
தாய்நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம் இது...!
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும் சுற்றி திரியும்
பறவைகளை போல
நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்த சுதந்திரத்தை
பத்திரப்படுத்தி வாழ்வோமாக.....!
நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத உணர்வாய்.!
அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்....!
இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய குடியரசு தினம்..!!
👉நமது இந்திய நாடானது, விடுதலை பெற்ற பிறகு 1950ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
👉ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்கு பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
👉இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
👉இந்நாளில் நம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரை நீத்த தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
👉மேலும், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
குடியரசு என்பதன் பொருள் :
👉குடியரசு என்றால் குடிமக்களின் அரசு, அதாவது மக்களாட்சி என்று பொருள். தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப் பெயர். 'மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு" என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
👉நமது, இந்திய நாடானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம். இதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.
👉சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய நாட்டில் பல வேறுபாடுகள் புதைக்கப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைகிறோம்
தன்னுடைய உடலையும் இரத்தத்தையும்
தாய்நாட்டிற்காக தியாகம் செய்தவர்களை
நினைவுக்கூரும் தினம் இது...!
சுதந்திரக்காற்றை சுகமாய்
அனுபவிக்கும் சுற்றி திரியும்
பறவைகளைப் போல
நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்த சுதந்திரத்தை
பத்திரப்படுத்தி வாழ்வோமாக.....!
நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத உணர்வாய்...!
🎈குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...!!🎈

உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சமீப காலமாக சற்று அதிகமாகவே உணர ஆரம்பித்திருக்கிறது உலகம். பயன்படுத்த எளிமையானவை, செலவு குறைவு எனப் பல காரணங்களால் மக்களிடையே பிளாஸ்டிக் பொருள்கள் பிரபலமாகத் தொடங்கின. தொடக்கத்தில் சிறிய அளவில் பயன்பாட்டில் இருந்தபோது தெரியாத அதன் பாதிப்பு பின்னர் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வழிகள் ஆராயப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழகத்தில்கூட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களும் இது போன்ற தடையை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன. ஒருசில மாநிலங்களில் நிலைமை இப்படி இருக்க மற்றொரு பக்கம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது புதுடெல்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று.
50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் பிளாஸ்டிக் கழிவுகள்
இந்தியாவில் ஒரு நாளில் 26,000 கிலோ டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அதில் 15,500 டன் கழிவுகள் முறையாகச் சேகரிக்கப்படுகின்றன. அதிலும் மறுசுழற்சிக்குச் செல்பவை என்று பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இப்படி உள்நாட்டில் குவியும் கழிவுகளே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போது அதனுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவுகளும் இணைந்து கொள்கின்றன. உலகில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் 10-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் மறுசுழற்சி செய்வதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. மறுசுழற்சி தொழிலில் வர்த்தக வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இறக்குமதி செய்யப்படும் கழிவுகளின் அளவு சமீப காலமாக அதிகரித்துள்ளது. 2016-2017 நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளின் அளவு 12,000 டன்கள். அது கடந்த 2017-2018-ம் நிதியாண்டில் 48,000 டன்களாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது 2018-2019 நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 25,000 டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் மலாவி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியானவை.
இந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. பின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது இல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது. இது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களும், ரசாயனங்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால் மண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. சீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை இறக்குமதி செய்து குவிக்கிறது.
சட்டத்தில் உள்ள குறைபாடுகளால் நடக்கும் முறைகேடு
இப்படி இறக்குமதியில் நடக்கும் முறைகேடுகளுக்குச் சட்டத்தில் உள்ள ஓட்டைதான் காரணம். மறுசுழற்சி செய்வதில் இருந்த சிக்கல்கள் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகளை குறிப்பாக PET பாட்டில்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அடுத்தடுத்த திருத்தங்கள் மூலமாகச் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதி தரப்பட்டது.
தற்பொழுது அதன் மூலமாகவே முறைகேடாகக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் விளைவுகளைத்தான் தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகளின் அளவுகள் காட்டுகின்றன. உள்நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க அரசு எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவைதான். அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து உள்ளே வரும் கழிவுகளை கட்டுப்படுத்தத் தவறினால் உலகநாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியாக இந்தியா மாறும் நிலை ஏற்படலாம்.

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!
'உயிரே போகும் நிலை வந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதே..! இழந்தவைகளை மீண்டும் கொண்டு வரும் ஆற்றல் அது ஒன்றிற்கு மட்டும் தான் உண்டு..!"

இதை எல்லாம் அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்...!!
👶 குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதை தான், அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவர்கள். குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உணவு :
👶 குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட நீங்கள் அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.
பழங்கள், காய்கறிகள்:
👶 பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டுமே அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் தான். உங்கள் குழந்தைகளுக்கு அனைத்து உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள்.
விளையாட்டுகள் :
👶 குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு நீச்சல், வில் வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லி கொடுக்க வேண்டும்.
வாசிப்பு திறன் :
👶 குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.
தண்ணீர் பாட்டில் :
👶 பிளாஸ்டிக் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்குகின்றன. எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
👶 அலுமினியம், எவர்சில்வரால் ஆன தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை சொல்லித்தர வேண்டும்.
டிஃபன் பாக்ஸ் :
👶 பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ்சில் உணவு சாப்பிடுவது நல்லது இல்லை. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரால் ஆன டிஃபன் பாக்ஸ்சில் உணவு சாப்பிடுவது நல்லது.