Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
உயிரைக் குடிக்கும் கிருமிகள் !



👉 சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும். ஆரோக்கியம் இல்லாத மனிதன் வாழ்க்கையில் எத்தனை அடைந்து என்ன பயன்? சாதாரண தலைவலியிலிருந்து கொடுமையான புற்று வரை எத்தனை விதமான நோய்கள். சில நோய்கள் இன்னொருவரிடமிருந்து தொற்றுகிறது, சில பரம்பரையாக, உடல் இயக்க மாறுபாட்டால் வருகிறது.

👉 உடலில் நுழைந்து நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள், கிருமிகள் என்னும் பொதுப்பெயரால் சுட்டப்படுகின்றன. கிருமிகளின் இயல்பைப் பொருத்து அவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகை பாக்டீரியா, இன்னொரு வகை வைரஸ்.

👉 ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

கிருமிகள் பரவும் வழிகள்:

👉 கை கழுவுதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.



👉 கிருமிகள் கணினி தட்டசு;சுகள், தொலை கருவி, தொலைபேசி அல்லது கைப்பேசி, மெத்தைகள், சோபா அதிகம் வாழ்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றது, அவைகள் எளிதில் உங்கள் கை விரல்களில் மூலமாக பரவுகிறது.

👉 சலவை செய்யும் போதும் கிருமிகள் பரவ நிறைய வாய்ப்புண்டு ஏனென்றால் அழுக்கு துணிகளை எடுத்து போடும் போதும் வெப்பநிலை குறைந்து இருப்பதாலும் கிருமிகள் அப்படியே தங்குவதினால் துவைத்த துணிகளுக்கும் அவைகள் பரவுகின்றன.

👉 பேனாவையும் பென்சிலும் உபயோகிப்பதனாலும் கிருமிகள் பரவுகின்றன. ஏனென்றால் இதனை நாம் மட்டும் பயன்படுத்துவது இல்லை நண்பர்களும் மற்றவர்களும் பயன்படுத்த நேர்கிறது.

👉 பைகளை பெரும்பாலும் அங்கும் இங்கும் மாற்றப்படுவதினாலும், பையுடன் வெளியில் செல்லும் போதும் கிருமிகள் ஏலத்தில் பரவுகின்றன.

👉 சளி, குருதி, குருதி படிந்த கருவிகள், கொசுக்கள், சாக்கடை, கழிவுநீர் மூலமாகவும் பரவுகிறது. கையில் தும்மல் மற்றும் இரும்பல் பட்டால், அதில் கிருமிகள் பரவி, மற்றவர்களை தொடுவதன் மூலம் இந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவும். சுத்தமற்ற தண்ணீர் மூலமாக அதிகமாக கிருமிகள் பரவுகிறது.



👉 ரூபாய் நோட்டுகள் மூலம் அதிகமாக பரவுகிறது.

👉 பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன.

👉 தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உடல் காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும்.

👉 நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

'நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்... ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

கைபேசி பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் :

👉 குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கைபேசி பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். தொழில்நுட்ப பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுவதாக சமீபத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

👉 38 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் கையடக்க கணினி, கைபேசி பயன்பாட்டினால் அவர்களது சமூக திறன்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடு குறித்தும், 32 சதவீதத்தினர் குழந்தைகளுக்கு மனரீதியான பிரச்சனை ஏற்படுமோ என்று எண்ணி கவலைப்படுவதாகவும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பத்தினால் ஏற்படும் விளைவுகள் :

👉 பிரபல தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான நார்டான் நடத்திய கருத்துக்கணிப்பில் ஐந்து முதல் 16 வயது வரையிலான குழந்தைகளையுடைய பெற்றோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

👉 முன்பு இல்லாததைவிட அதிக ஆர்வத்துடன் குழந்தைகள் தங்களது அதிகமான நேரத்தை கையடக்க கணினிகள், கைபேசிகளின் திரைகளில் செலவிடுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரிட்டனை சேர்ந்த சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே விளையாடுவதைவிட அதிகமான நேரத்தை கைபேசிகளில் செலவிடுவதாகவும், சுமார் 23 சதவீத குழந்தைகள் தங்களது பெற்றோரை விடவும் அதிகமான நேரத்தை கைபேசிகளில் செலவிடுவதும் தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் :

👉 குழந்தைகள் இணையதளத்தில் என்ன செய்கிறார்கள் என்பதையும் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.

👉 குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான விஷயங்களை இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துங்கள்.

👉 சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பகிர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விளக்க வேண்டும்.

'தொழில்நுட்ப காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியமல்ல" :

👉 பிரிட்டனை சேர்ந்த சிறுவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு மூன்று மணிநேரத்தை தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளில் செலவிடுவதாக கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தொழில்நுட்ப காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியமல்ல" 'குழந்தைகளை சரியான நேரத்தில் உண்ண வைப்பது, சரியான நேரத்திற்கு வீட்டுப்பாடங்களை செய்ய வைப்பது, தூங்க வைப்பது உள்ளிட்ட கால பிரச்சனைகள் தொடர்ந்து இருப்பதாகவும், அதோடு குழந்தைகளின் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாட்டை நிர்வகிப்பதும் இணைந்துள்ளது" என்று நார்டான் நிறுவனத்தின் ஐரோப்பாவின் மேலாளரான நிக் ஷா கூறுகிறார்.

👉 49 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் தொழில்நுட்ப சாதன பயன்பாட்டிற்கு விதிமுறைகளை வகுக்க விரும்புவதாகவும், செயல்படுத்துவது சிக்கலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி தவிக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

👉 நகர் புறத்தில் உள்ள நெரிசலான தெருக்களிலும், நெருக்கமாக அடுத்தடுத்த வீடு என மூச்சு முட்ட வைக்கும் பல மாடி குடியிருப்புகள், விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் ஏற்படவிடாமல் பெற்றோர்கள் தடுக்க வேண்டும்.

👉 குழந்தைகளே வருங்கால சமூகம். அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது ஒவ்வொருவரது கடமை.
முத்தான சிந்தனை துளிகள்!

'எண்ணம்தான் வாழ்க்கை, நமது வலிமையான எண்ணமே நமது வாழ்வை உருவாக்கும். இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ.. நிச்சயம் அது நாளை நடக்கும் என்பதே உண்மை..!
இன்றைய பொன்மொழி

'வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது... விழுந்த போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை... எழாதபோது தான் அறிவிக்கப்படுகிறது..."
Forwarded from Android Apps & games
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
May Light always surround you;
Hope kindle and rebound you.
May your Hurts turn to Healing;
Your Heart embrace Feeling.
May Wounds become Wisdom;
Every Kindness a Prism.
May Laughter infect you;
Your Passion resurrect you.
May Goodness inspire 
your Deepest Desires.
Through all that you Reach For, 
May your arms Never Tire.

Happy New Year
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'தோல்வி என்பது அடைக்கப்பட்ட ஒருவழிப் பாதையல்ல... வெற்றிக்கான மாற்றுப்பாதையை கண்டறிவதற்கான வாய்ப்பு...!"
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்.. இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடாதே..!"
சிந்தனை துளிகள்!

'காயமில்லாமல் கனவுகள் காணலாம்... ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது..."
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நீங்கள் வைத்திருக்கும் செல்போன் ஒரிஜினல்தானா என்று கண்டுபிடிப்பது எப்படி?



ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்க்க முடியுமா?

✳ நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டயமாக இருக்கிறது.

✳ சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும்.

✳ உண்மையான நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்க வேண்டும். உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் விற்பனைக்கு வருகின்றன. போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படுகிறது.

போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய வழிமுறைகள் :

✳ முதலில் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

IMEI எண்ணைக் எப்படி கண்டுபிடிப்பது?

✳ சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறியலாம். உங்கள் மொபைலில் *#06# என டைப் செய்தால் உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

✳ அந்த IMEI எண்ணை ஒரு SMS ஆக டைப் செய்து 53235 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.

✳ இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். SMS வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

✳ இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களுடைய செல்போன் ஒரிஜினல்தானா என்பதை இணையத்தின் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

✳ http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

✳ இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

✳ IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்க வேண்டும்.

✳ உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறியலாம்.

✳ நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள் மூலம் கண்டறிய முடியும்.

👉 0,2 அல்லது 2,0 என இருப்பது ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். தரம் மிகக் குறைந்ததாக இருக்கும்.

👉 0,8 அல்லது 8,0 என இருப்பது ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.

👉 0,1 அல்லது 1,0 என இருப்பது அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

👉 1,3 என இருப்பது Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
போகியன்று பொருட்களை எரிக்கும் வழக்கம் எப்படி உருவானது?

உறவுகள் ஒன்றுகூடி மகிழ, உற்சாகமாய்க் குதூகலிக்க, பாரம்பர்யத்தை உணர்ந்துகொள்ள உதவும் திருவிழா பொங்கல். தொடர் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கு இடையே, சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பொங்கலுக்கு முந்தினநாள் போகி கொண்டாடப்படும். தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட வழிகாட்டும் ஒரு முக்கியமான நாள் என்றும் இதைச் சொல்லலாம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் முதுமொழி, போகிப் பண்டிகையையும் தைத் திருநாளையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும். 

அதென்ன
பழையன கழிதல்…’ என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதை பல்வேறு கோணங்களில் அலசலாம். மனதில் இருக்கும் மாசுக்கள், தவறான எண்ணங்கள் மற்றும் எதிர்மறையான சிந்தனைகளை நீக்கிவிட்டு, தூய்மையான எண்ணம் மற்றும் நேர்மறையான சிந்தனையை விதைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், நம்மிடையே பயன்படாத பொருள்களைத் தூக்கி வீசிவிட்டு அல்லது எரித்துவிட்டு, புதிதாக அதற்கு உகந்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆக, இந்த இரண்டு செயல்களுமே பழையன கழிதல்' பழமொழிக்கு ஏற்றவையே. ஆனால் எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தீர்மானிப்பதில் தான் உங்கள் ஆரோக்கியத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. மனதில் இருக்கும் பழைமை அனைத்தையும் நீக்கினால், புதிய ஆரோக்கியம் பிறக்கும்.

போகிப் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன்பே எதை எரிக்கலாம், எதைத் தூக்கி வீசலாம் என்று மனதில் உதிக்கும் எண்ணம் தவறானது. பழைய துணி மற்றும் சில வகையான பொருள்களை எரிப்பதற்கு அறிவியல் பின்புலத்துடன் கூடிய பாரம்பர்ய காரணங்கள் பல உண்டு.

நாப்கின் புழக்கத்தில் இல்லாத அன்றைய நாள்களில், மாதவிடாய் தருணத்தில் பெண்கள் அந்த நாள்களுக்கென பிரத்யேகமான துணியை, துவைத்து துவைத்துப் பயன்படுத்துவர். குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் முதல் அன்றாட பயன்பாடுகள் பலவற்றிலும் பெண்களின் ஆடைகளே அதிக புழக்கத்தில் இருந்தன. அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். ஆக, ஆரோக்கியத்தை மேம்படுத்தவே பழைய துணிகளைத் தீ வைத்து எரிக்கும் அந்த ஏற்பாடு. இதன்படி போகி அன்று பழைய ஆடைகளைக் கொளுத்திவிட்டு, தைத்திருநாளில் புதிய ஆடைகள் உடுத்தும் பழக்கம் உருவாக இதையும் முக்கியக் காரணமாக சொல்லலாம். ஆனால், இன்றைக்கு
போகி' என்றால் எதையாவது எரித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, சைக்கிள் - கார் டயர்களையும், பிளாஸ்டிக் பொருள்களையும், துணிகளையும் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். 

இந்த ஆண்டுமுதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்வக் கோளாறில், ‘போகியன்று பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரியூட்டி புரட்சி செய்கிறேன்’ என்று, உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் தீங்கு விளைவிக்காதீர்கள். பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து வெளியேறும் புகை, புற்றுநோய்க்கான தீனி என்பதை மறந்துவிடாதீர்கள். 

பிளாஸ்டிக்குகளைப் பார்க்க அழகாகத் தோற்றமளிக்கும். ஆனால் அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி யாரும் யோசிப்பதில்லை. தூக்கி எறிந்தால் மக்காமல் பூமியை மலடாக்குவது மட்டுமல்லாமல், அதை எரிக்கும்போது காற்றில் கலப்பதால், அதிலிருந்து வெளியாகும் தீமை உண்டாக்கும் வேதிப்பொருள்கள், மனிதர்களையும் மலடாக்கும் என்பது உறுதி. இன்றைய சூழலில் குழந்தைப்பேறின்மை அதிகரித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்தால், பல்வேறு உண்மைகள் புலப்படும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிவரும் புகை தீவிர நெஞ்சக நோய்களை ஏற்படுத்தி, வாழ்நாள் முழுவதும் துன்பத்துடன் உழலச் செய்யும். 

தீபாவளித் திருநாள் முடிந்ததும், காற்று மாசு அளவு எப்படி அதிகரிக்கிறதோ, அதைப் போலவே பிளாஸ்டிக் பொருள்கள் மட்டுமன்றி வேறு சில பொருள்களையும் சேர்த்து எரிப்பதால் காற்று பெருமளவில் மாசடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கெனவே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் இடம்பிடித்திருப்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். இப்படி நாளுக்குநாள் காற்றின் மாசு கூடிக்கொண்டே சென்றால், நோய்களின் எண்ணிக்கை தொடர் சங்கிலியாக நீண்டுகொண்டே இருக்கும். 

டயர்களை எரிப்பதால் கந்தக ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, டையாக்சின், பென்சீன் போன்ற பல பொருள்கள் ஆகாயத்தில் உற்சாகமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் இவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்குவதில் தொடங்கி, கண் எரிச்சல், நுரையீரல் நோய்கள், நரம்பு மண்டலக் கோளாறுகள் என நீண்டு இறுதியாகப் புற்றுநோயையும் ஏற்படுத்தும். இப்படியாக மனிதர்களைத் தொடர்ந்து தாக்குவதால் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு, புதுப்புது நோய்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். முதியோர், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் குழந்தைகள்
நச்சுப் புகையை சுவாசிப்பதால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். 

போகிப் பண்டிகையன்று ஆங்காங்கே மலைபோல குவிந்திருக்கும் குப்பைமேடுகள் கொளுத்தப்படுவதைப் பார்க்கலாம். எனவே, குப்பைமேடுகளுக்கு அருகே சில கிலோமீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காற்று மாசுபடுவதால் மனிதர்களுக்கு மட்டுமன்றி, உயிர்ச் சங்கிலியை பாதுகாக்க உதவும் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் வாழ்நாள் வெகுவாகக் குறையும் என்கிறது ஆய்வு. மேலும் குறிப்பாக, நீங்கள் அடிக்கடி பார்த்து மகிழும் பறவைகள் போகிப் பண்டிகை தினத்தில் இருந்து பல நாள்கள் உங்களை விட்டு விலகிச் செல்லும். இந்தப் போகிப்பண்டிகையின்போது அதைக் கவனியுங்கள். `தனக்காக வாழ்வதல்ல மனிதம்; அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளிப்பதுதான் மனிதம்' என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.

ஆக, போகிப் பண்டிகை என்பது சுற்றுச்சூழலின் உயிர்ப்பினைக் கெடுக்கும் நாளாக மாறிப்போனது வருத்தமான விஷயமே. உணர்வுரீதியாக ஆரோக்கியத்துடன் கொண்டாடப்பட்ட நாள்கள் மறைந்து, விஷப்புகையை சுவாசிக்கும் ஒரு நாளாக போகிப் பண்டிகை மாறிப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே, இனியாவது நமது முன்னோரின் மரபு சார்ந்த விஷயங்களுக்குச் சற்று செவி மடுப்போம். நம் மரபுக்கான காரணங்களை சிந்தித்து, ஆரோக்கியம் காக்கும் பண்டிகையாகப் போகியை மாற்றுவோம்.

தனி மனிதனாக நம்மால் இந்தப் பூவுலகுக்கு என்ன செய்யமுடியும் என்பதை யோசித்துச் செயல்படுவோம். போகிப் பண்டிகை என்றால் பிளாஸ்டிக் பொருள்களையும் நாம் உடுத்தும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தும் நாள் என்றும் ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை மேளம் போல அடித்து சத்தம் எழுப்பும் நாள் என்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தராமல், போகியின் உண்மையான மகத்துவங்களை சொல்லிக் கொடுப்போம். சுற்றுச்சூழலைச் சிதைக்காத வகையில் பாரம்பர்ய விழாவைக் கொண்டாடுவோம்.   
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்!

'எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்.. வெற்றி நம்மை தேடி வரும்.."
Media is too big
VIEW IN TELEGRAM
பிறந்த தை...
நம் அனைவருக்கும்

ஆரோக்கியத்....தை
நலத்.....தை,
வளத்......தை,
சாந்தத்.....தை
சமத்துவத்....தை,
நட்பில் இறுக்கத்....தை,
பந்தத்.....தை
பாசத்....தை,
நேசத்.....தை
இரக்கத்.....தை,
உற்சாகத்......தை,
ஊக்கத்.....தை,
ஏற்றத்....தை..
சுபிட்சத்.....தை,

கொடுத்து...

பஞ்சத்.....தை
வஞ்சத்......தை
வன்மத்....தை
துரோகத்....தை,
அலட்சியத்....தை
அகங்காரத்.....தை
ஆணவத்....தை
கோபத்.....தை,
குரோதத்.....தை,
சுயநலத்.....தை,

எடுத்து...

எல்லோரும்
இறையருளால் இனிதாய் வாழ
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பொங்கலும் மண்பானையும்..!!


🍚 பொங்கல் அன்று காலையில் வழக்கமான நாட்களைப் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக டி.வி.யை ஆன் செய்து வைத்து விட்டு, அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவாறே, குக்கரில் பச்சரி, வெல்லம் போட்டு ஒரு விசில் வந்ததும் பொங்கல் ரெடியாகி விடுகிறது. இதில் எந்தவித ஆட்டம் பாட்டமோ, கொண்டாட்டமோ இருப்பதில்லை.

🍚 அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவருமே டி.வி. முன் அமர்ந்து பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியையும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நிகழ்ச்சியையும் பார்த்தவாறு, பொங்கலையும், கரும்பையும் சாப்பிடுவார்கள். இதனால் கரும்பு, சர்க்கரை பொங்கலில் உள்ள தித்திப்பு அவர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் வீட்டிற்குள்ளேயே பொங்கல் பண்டிகையை முடித்து கொள்கின்றனர்.

🍚 இரண்டு நாட்கள் இப்படி கழிய, மூன்றாம் நாளான காணும் பொங்கல் அன்று கார் அல்லது ஆட்டோவில் நேராக பீச், பூங்கா என போய் உட்கார்ந்து, எதையாவது வாங்கி தின்று விட்டு மீண்டும் வீடு வந்து படுத்து உறங்கி விடுகிறோம். இந்த நிகழ்ச்சிகளில் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் கூட ஒன்றாக கலந்து கொள்வதில்லை. ஒருவர் பீச்-க்கு போனால், ஒருவர் தியேட்டருக்கும், இன்னொருவர் பூங்காவுக்கும் செல்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கூட அனைவரும் ஒன்று சேராமல் கொண்டாடப்படும் விழாக்களில் எப்படி சந்தோஷம் களை கட்டும்.

🍚 வழக்கமான நாட்களைப்போலவே, இன்றைய பொங்கல் திருநாளும் கழிந்து விடுகிறது. வழக்கமான நாட்களுக்கும், பொங்கல் திருநாளும் உள்ள வித்தியாசம் என்ன என்றால், பொங்கல் அன்று புத்தாடை அணிவதும், வேலைக்கு செல்லாமல், பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதுமே. இன்று கொண்டாடப்படும் குக்கர் பொங்கல், நாளை ஆன் லைன் பொங்கலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

🍚 குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் உண்டாகும் மனஅழுத்தம், சோர்வு போன்றவற்றை போக்குவதற்காகவே பண்டிகைகள் பல கொண்டாடப்படுகிறது. ஆனால், பண்டிகை நாட்களையும் வழக்கமான நாட்களை போலவே கழித்தால் அதனால், நமக்கு பயன் என்ன?

நாம் மறந்தது மண்பானை பொங்கல் மட்டுமின்றி, கோடி சந்தோஷத்தையும் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது வாழ்வதுக்கு மட்டுமில்லாது, கொண்டாட்டத்தையும், ஊர் கூடி கொண்டாடும்போது கோடி சுகம் உண்டாகும் என்பது உண்மையே.