Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
என் வாக்கு என் உரிமை...!!


👆வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும்.

👆நீங்கள் 18 வயது நிரம்பியவரா? உங்கள் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கையில்.

👆இந்த ஜனநாயக நாட்டில், மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

சட்டமன்ற தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்துள்ளனர்?

இனி வாக்களித்தாலும் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

👆என்பதை நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

👆தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுவது தான் அவசியமாகிறது.

தற்போது உள்ள சூழலில்,

👆வரிசையில் நின்று வாக்களிக்க நிறைய பேர் யோசிக்கிறார்கள்.

👆தேர்தல் நாள் அன்றுகூட முக்கியமான வேலையை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

👆கோயில்களில் கூடுதல் பணம் கொடுத்தால் சீக்கிரம் சிறப்பு தரிசனம் கிடைத்துவிடுகிறது.

👆திரையரங்குகளில் முன்பதிவு செய்து நேராக இருக்கைக்கு சென்று படம் பார்த்துவிடமுடியும்.

👆இப்படியே பழகிப்போனவர்களுக்கு வாக்களிக்க மட்டும் வரிசையில் நிற்கவேண்டும் என்றால் சிரமமாகத்தானே இருக்கும்.

👆அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்பவர்களை தீர்மானிக்க அரைமணி நேரம்கூட ஒதுக்கக்கூடாதா?

👆வாக்களிப்பது ஒரு முக்கியமான சமூகக் கடமை என்பதை உணர வேன்டும்.

ஏன் வாக்களிக்க வேண்டும்?

👆மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கும் ஒரு தலைமையை மாற்ற நாம் வாக்களிக்க வேண்டும்.

👆ஒரு நல்ல மாற்று அரசை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும்.

👆ஒரு தொகுதியின் வளர்ச்சிக்கு உதவும் ஒருவரை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும்.

👆நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் தீர்மானிப்பதும், செயல்படுத்துவதும் அரசாங்கமும், அரசியல்வாதிகளுமே. ஆதலால், சிறந்த நபரை தேர்ந்தெடுப்பது நம் அவசியமே.

👆வாக்களிக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து வாக்களியுங்கள்.

👆நீங்கள் வாக்களிக்கும் நபர் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் நாட்டையும், நம் சமுதாயத்தையும் வழிநடத்தும் ஆற்றல் வாய்ந்தவர் என்பதை தெரிந்து வாக்களியுங்கள்.

நல்ல அரசாங்கம் அமைவதற்கு கண்டிப்பாக வாக்களியுங்கள்...!

நம் வாக்கு நம் உரிமை...

வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மறவாதீர்கள்.

சிந்தியுங்கள்.... வாக்களியுங்கள் !!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முத்தான சிந்தனை துளிகள்!

'பிறரை வேதனைப்படுத்தி பெறும் வெற்றியை விட பிறருக்கு உதவியதால் பெறும் தோல்வியே மேல்..."
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கோடை வெயிலில் குழந்தைகள் ஆட்டம் போடலாமா?


🌟 கோடை, கத்தரி வெயில் காட்டமாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. கோடை வெயிலின் கடுமை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்ளலாம்.

கோடை வெயிலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :

🌟 வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

🌟 கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடுகின்றன. எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன், தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயிலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

🌟 ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.

🌟 நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கும். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.

🌟 வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

🌟 வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருக வேண்டும். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

🌟 வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.

🌟 வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.

🌟 அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

🌟 வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும்.
முத்தான சிந்தனை துளிகள்!

'உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது...
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முட்டையைப் பற்றி புதிய ஆய்வுத் தகவல்கள்..!


🍳 முட்டை சாப்பிடுவது நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் நீண்டகாலமாக நீடித்து வருகின்றன.

🍳 இதற்கான பதில், நீங்கள் ஒரு வாரத்துக்கு எத்தனை முட்டைகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்கிறது ஒரு புதிய ஆய்வு.

முட்டை உண்பவருக்கு இதயநோய் வரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

🍳 ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதயநோய் மற்றும் முன்கூட்டிய மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளன.

🍳 இதற்குக் காரணம், முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிக அளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்க விவசாயத் துறை கூறுகின்றது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்து உள்ளது.

🍳 முட்டைகளைப் பொறுத்தவரை, ஒரு வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் உட்கொண்டால், இதயநோய் ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.

🍳 ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, மேற்கண்ட இரண்டு நோய்கள் ஏற்படும் அபாயத்தை 27 மற்றும் 34 சதவீதம் அதிகமாக்குகிறது.

🍳 இந்த ஆய்வானது, வயது, உடற்பயிற்சி நிலைகள், புகையிலைப் பயன்பாடு அல்லது ரத்த அழுத்தம் போன்ற எதையும் கணக்கில் எடுக்காமல் மேற்கொள்ளப்பட்டது.

🍳 'இரண்டு நபர்கள் ஒரே மாதிரியான உணவு முறையைப் பின்பற்றி, முட்டைகள் எடுத்துக்கொள்வது மட்டும் வேறு மாதிரியாக இருந்தால், அதிகம் முட்டை உண்பவருக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது".

பொதுவாக எத்தனை முட்டைகளை உட்கொள்ளலாம்?

🍳 ஒரு வாரத்துக்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.

🍳 முட்டைப் பிரியர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை உண்ணலாம்.

🍳 முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட கூடாது. சரியான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

🍳 இந்த ஆய்வு, அமெரிக்கர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

🍳 அதிகம் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது. ஓர் அமெரிக்கர், ஆண்டொன்றுக்கு 252 முட்டைகளை உட்கொள்கிறார்கள். இந்தப் பட்டியலில் மெக்சிகோ (352) முதலிடத்தில் இருக்கிறது.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.."
இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை....!


👉 இன்றைய பெண்கள் மிகவும் திறமைசாலிகள். எளிதாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. அதனைப் பழகிக் கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். இவையெல்லாம் நமது இளைய சமுதாயத்தை பற்றிய நல்ல செய்தி.

இளமையில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள் :

👉 தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்க்கை முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது. நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதிக்க முடியும். அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

👉 எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு காரியமும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன்களைத் தராது. எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது சுகாதாரம் மட்டுமன்றி, நம் மீது பிறருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும்.

பெற்றோர்களின் கவனத்திற்க்கு..

👉 பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம். நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என்று பார்க்கும்போது, அதற்கு கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது. எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.

👉 உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள். உன்னால் முடியும் நிச்சயமாக நீ வெல்வாய் என்று நம்பிக்கையை உள்ளங்களில் விதையுங்கள். இது நேர்மறை அணுகுமுறை ஆகும். நல்ல பண்பாடு, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் இளைய சமுதாயம் எழுச்சி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
முத்தான சிந்தனை துளிகள்..!

தோல்வியின் அடையாளம் தயக்கம், வெற்றியின் அடையாளம் துணிச்சல், துணிந்தவர் தோற்றதில்லை, தயங்கியவர் வென்றதில்லை..
சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்..!


தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து, இரவு வெகு நேரம் விழித்து டி.வி. பார்த்தல், போன் பேசுதல், செல்போனில் மூழ்குதல் இவற்றினைத் தவிர்த்து 7-8 மணி நேரமாவது அன்றாடம் தூங்க வேண்டும்.

இரவில் தூங்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் :

👉 தூக்கம் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். தூங்கும் பொழுதுதான் நம் உடலில் ரிப்பேர்கள்(சரி செய்தல்) நடக்கின்றன மற்றும் வளர்ச்சி ஏற்படுகின்றது. சக்திகள் சேமிக்கப்படுகிறது. ஊட்டச் சத்துகள் உடலுக்கு அளிக்கப்படுகின்றன.

👉 தூக்கத்தில் தான் ஹார்மோன்கள் சீர் செய்யப்படுகின்றது.

👉 நோய் எதிர்ப்புச் சக்தி கூடுதலாக இருக்கும்.

👉 ஞாபக சக்தி கூடும். தூக்கமின்மை ஒருவரை பித்து பிடித்தவர் போல் ஆக்கி விடுகின்றன.

தூக்கமின்மை :

✔ மறதி நோயினை ஏற்படுத்தும். கவனிக்கும் திறன் வெகுவாய் குறையும்.

✔ தூக்கமின்மை அதிக எடையினைக் கூட்டுகின்றன.

✔ சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும்.

✔ இருதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

✔ மனநிலை பாதிக்கப்படுவார்கள்.

✔ ப்ரஸ்சர் மற்றும் புற்று நோய் பாதிப்புகள் ஆண்களுக்கு கூடும்.

தூக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து இரவு வெகு நேரம் விழித்து இருக்காமல் அன்றாடம் தூங்க வேண்டும்.

'நல்ல சிரிப்பும் ஆழ்ந்த உறக்கமுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடிப்படை மருந்துகள்".....!
முத்தான சிந்தனை துளிகள்..!

வெற்றி என்பது எத்தனை போரில் ஜெயித்தோம் என்பதல்ல, வீழ்ந்த பின் எத்தனை முறை எழுந்தோம் என்பதே...
கோடை....!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளிர்ச்சியான தண்ணீரை அருந்தினால் தான் தாகமே தீர்ந்து போகிறது என்பது பலரது நம்பிக்கையாகும். ஆனால் ஐஸ் வாட்டர் குடிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்புகள் :

☀ உணவு சாப்பிட்ட உடன் குளிர்ச்சியான தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புற்று நோய்க்கும் வழிவகுக்கும்.

☀ ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படும். கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி கொழுப்புகளின் ரத்த நாளங்களில் படிய வாய்ப்புள்ளது.

☀ நெஞ்செரித்தல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, வயிற்று வலி, பக்கவாதம், மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு, தலைவலி ஏற்படும்.

☀ குளிர்ந்த தண்ணீரைத் தவிர்த்து வெந்நீர் பழகினால் ஆயுட்காலம் அதிகரிக்கும்.

☀ உணவு சாப்பிட்ட பிறகு வெந்நீர் மற்றும் கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த முதலுதவி !


🏥 காயம்பட்டவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்யாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும்.

🏥 முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அதற்கென பரிந்துரைக்கப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு அவசர உடனடி உதவி ஆகும்.

🏥 சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும்.

🏥 1878ல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார். ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?
♀ கிருமிநாசினி : உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும்.

♀ தீக்காய மருந்து : தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், சில்வர் சல்பாடையாசின் உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும்.

♀ பஞ்சு : காயங்கள் ஏற்பட்டால் பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்.


♀ பேண்டேஜ் : எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது.

♀ கையுறைகள் : மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது.

♀ கத்தரிக்கோல் : காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்.

♀ முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

சேற்றில் விழுவது ஒன்றும் இழிவில்லை... அங்கேயே கிடப்பது தான் இழிவு.. விழுவது இயல்பு.. நீ எழுவது தான் உன் சிறப்பு..!!
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

நிறைய விஷயங்களை தவறாக புரிந்து கொள்வதை விட, குறைந்த விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதே சிறந்தது...
படிப்பு விஷயத்தில் பெற்றோர் குழந்தைகளிடத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்...??



  தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலரும் அதனை முன்னிட்டு தங்களின் குழந்தைகளுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு வழிமுறை தெரிவதில்லை.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சில ஆலோசனைகள் முறையாக பின்பற்றினால், அவர்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்கள் பின்பற்றவேண்டிய முக்கிய ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.!

⭐ ஒரு வீட்டில் தொலைக்காட்சி பயன்படுத்துவது என்பது அவசியமானதுதான். அதே நேரத்தில், படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை நிறுத்திவிட வேண்டும். இந்த விதியை முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

⭐ படிக்கும் நேரத்தில் தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறித்து ஒவ்வொரு பெற்றோரும் முடிவு செய்ய வேண்டும். அதேசமயம், ஏதேனும் முக்கியமான, பாட விஷயங்களைப் பற்றியோ, வீட்டுப்பாடம் பற்றியோ, சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில், தங்களின் பிள்ளைகள் பேசவேண்டியிருந்தால், அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

⭐ வீட்டில் போதுமான வசதி இருந்தால், உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். அந்த அறை போதுமான வசதியுடன் இருப்பதுதான் முக்கியம்.

⭐ இரவு நேரத்தில், குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

⭐ உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்து, அதற்கேற்ப அவர்களுக்கு சிறிது நேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து, சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.

⭐ சில சமயங்களில் பெரியளவிலான அசைன்மென்டுகள், வீட்டுப்பாடமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் பிள்ளைகள் சோர்வடையாமல் இருக்க, நீங்கள் பொறுமையுடன் கவனித்து அவர்களுக்கு உதவ வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் இதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்.

⭐ உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து, அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இது குறித்து பேசலாம்.

⭐ தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்கும், சிலர் தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண்விழித்து சிலர் படிப்பார்கள். ஆனால் இது போல் செய்வதை தவிர்த்தல் நல்லது. இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும்.

⭐ தேர்வு எழுதும் முன்பாக, நன்றாக மூச்சை இழுத்துவிட்டு ரிலாக்ஸ் செய்யுமாறும் உங்கள் குழந்தைகளிடம் தவறாமல் கூறவும். மேலும் விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக இட வேண்டும். கேள்வித் தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும், தெரியாத கேள்விகளை தவிர்த்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கூறவேண்டும். மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும் குழந்தைகளிடம் கூறவேண்டும்.

⭐ எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும், சாதுவான மற்றும் நார்மலான நிலையில் இருக்கும் குழந்தைகளை படிப்பு விஷயத்தில் அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் சரியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண பெற்றோர்கள் முயல வேண்டும்.

இவைகளை உங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் கடைபிடித்தால் நன்கு படிக்கும் சிறப்பான குழந்தையை உருவாக்கலாமே!
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் மனம் திருந்தி வாழ்வான்...!! மன்னிப்பு கொடுக்கத் தெரிந்தவன் மனம் மகிழ்ந்து வாழ்வான்...!!
கிராமங்களில் நாம் மறந்தவை

தட்டாங்கல் ஆட்டம்
👉 தட்டாங்கல் ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு. இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும்.

👉 இந்த விளையாட்டு வௌ;வேறு ஊர்களில், வௌ;வேறு எண்ணிக்கையுள்ள கற்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.

தேவையானவை :

👉 சிறு கூழாங்கற்கள்.

தேவையான கற்களின் எண்ணிக்கை :

👉 ஐந்து (அ) ஐந்திற்கும் மேற்பட்ட

எத்தனை பேர் விளையாடலாம்?

👉 இரண்டு பேர் (அ) குழுவாக

எப்படி விளையாடுவது?

👉 கற்களை கீழே போட்டுவிட்டு ஒரு கல்லை எடுத்து மேலே எறிந்து, அது கீழே விழுவதற்குள் கீழே இருக்கின்ற கல்லை ஒன்று, இரண்டு, மூன்று என்ற முறைப்படி எடுக்க வேண்டும்.

👉 ஒன்னான், ரெண்டான், மூணான், நாலான் என்று விளையாடிய‌ பின் ஒரு கல்லை புறமுன்கையில் வைத்து (உள்ளங்கையின் எதிர்புறம்) அந்தக் கல் கீழே விழுந்து விடாமல் விரல்களை மடக்கி மற்ற‌ கற்களைப் பிடிக்க வேண்டும்.

👉 பின்பு ஐங்கல்லையும் போட்டுப்புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும்.

👉 இவ்வாறு விளையாடினால் பழம் பெற்றவராவார். மீண்டும் முதலிலிருந்தே தொடர வேண்டும். மேலே எறிந்த கல்லை தவறவிட்டால், மற்றொருவர் ஆட்டத்தை தொடரலாம்.

ஏன் தட்டாங்கல் ஆட வேண்டும்?

👉 தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது.

👉 கையும், கை நரம்புகளும் வலுப்பெறுகிறது.

👉 விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

👉 தன்னம்பிக்கை மேம்படும்.

நவீன காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு தட்டாங்கல் என்று ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாது.

வீட்டிற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கொண்டு சேர்ப்போம், பாரம்பரியத்தை மீட்போம்...
கிராமங்களில் நாம் மறந்தவை !!

பல்லாங்குழி


👉 ஜல்லிக்கட்டில் தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் தெரியாத உலகிற்கு இடப்பெயர்ந்து விட்டன.

👉 நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன் இருக்கும் விளையாட்டுக்களுள் ஒன்றான பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி இங்கு காண்போம்.


👉 பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தாலான ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும்.

தேவையானவை :

👉 கற்கள், புளியங்கொட்டை

ஆடுபவர்களின் எண்ணிக்கை :

👉 இரண்டு பேர்

எப்படி விளையாடுவது?

👉 பல்லாங்குழி சட்டத்தில் ஏழு குழிகள் இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை (அ) கற்களை 5, 5 ஆகப் போட்டு வைக்க வேண்டும்.

👉 ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும்.

👉 ஒரு குழியில் நான்கு கொட்டைகள் இருந்தால் அதையும் 'பசு" எனச் சொல்லி தனதாக்க வேண்டும். ஆட்ட இறுதியில் ஒரு பெண் தோற்கும் போது (ஒரு குழிக்குரிய குறைந்த பட்ச சோழிகள் 5 இல்லாமல் இருந்தால்) குழிக்கு ஒவ்வொரு சோழி இட்டு ஆட்டம் தொடங்குகிறது. இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர்.

👉 இவ்விளையாட்டை விளையாடுபவர்கள் அனைத்து சோழிகளையும் பெறவும் முடியும் அல்லது இழக்கவும் முடியும். இவ்விளையாட்டில் இருவர் மட்டுமே விளையாடலாம்.

ஏன் பல்லாங்குழி விளையாட வேண்டும்?

👉 பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்களின் விரல் மற்றும் கைகளுக்கு வலுச்சேர்க்கிறது.

👉 இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய வைக்க, நம் முன்னோர்கள் கண்டறிந்த வழி தான் பல்லாங்குழி விளையாட்டு.

👉 தற்போதுள்ள குழந்தைகள் தெருவில் விளையாடுவது இல்லை. மாறாக வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் ஆகியவற்றின் மோகத்தால் தன் பார்வையைக் கூட இழக்கும் அபாயத்தில் உள்ளனர். அவர்களிடத்தில் பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை கொடுத்து நம் பாரம்பரியத்தையும், நம் குழந்தைகளையும் மீட்டெடுப்போம்.