தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தேர்வுக் காலம்... மாணவர்களின் உடலும் மனமும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டிய காலம். தேர்வுக் காலத்தில் ஏற்படும் பயம் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். தேர்வு நேரத்தில் உட்கொள்ளும் உணவினால் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு அது தேர்வின்போது மாணவர்களின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும். இதனால் பல மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். அவற்றைத் தவிர்க்கத் தேர்வு நேரத்தில், மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அளிக்கும் திட்டமிட்ட உணவுமுறை அவசியம்.
தேர்வு நேரத்தில் பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள்.
* பால், புரோக்கோலி போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, திராட்சை போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களைச் சாப்பிட வேண்டும்.
* சிக்கன், ஒமேகா 3 சத்து நிறைந்த மீன் வகைகள், முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய உட்கொள்ளவேண்டும்.
* கோடைக்காலத்தில் சளி, இருமல் போன்ற தொற்று பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கீரை வகைகள், நட்ஸ் வகைகள், தயிர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* ஹெவி ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை முழுமையாகத் தவிர்க்கவும். வறுத்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே அவற்றைச் சமைத்து தரலாம்.
* ஸ்நாக்ஸ் வகைகளில், நட்ஸ் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வரவும். பழச்சாறுகளில், மாதுளை ஜூஸ், ஆரஞ்சு, சாத்துக்குடி சாறு அருந்தலாம். சாறாகக் குடிப்பதைவிடப் பழங்களாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
* கோடைக்காலமாக இருப்பதால், உடலுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை. தினமும் மதிய நேரத்தில் இளநீர், நீர்மோர், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது. எலுமிச்சைச் சாற்றில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும் செயல்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் அது உதவும். எனவே தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது நல்லது.
* உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் உணவுகளான வாழைப்பழம், நட்ஸ், முட்டை, மீன், ஆப்பிள், தயிர் போன்றவற்றை படிக்கப்போகும் முன்னரும், பகலில் தூக்கம் வரும்போதும் சாப்பிடுவது நல்லது.
* தேர்வு நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தயிர், மோர் போன்ற பால் உணவுகளை மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவும். வயிற்றுப்போக்கு பிரச்னை இருப்பவர்கள், பால் குடிப்பது பிரச்னையை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கவும். நீர்ச்சத்து அதிகரிக்கும் இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம்.
* ஒரு நாளில் குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக மட்டுமன்றி, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளாகவும் அது இருக்கலாம். தேர்வுக்கு முந்தைய இரவு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது தூங்கவேண்டும். படிக்கும் நேரத்தை அதற்கேற்றாற்போல் அமைத்துக்கொள்வது அவசியம். இரவில் நிம்மதியாக தூங்க பால் மிகவும் நல்லது.
* உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மனஅழுத்தம் அதிகரிக்கும். அது தலைவலிப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். இப்படியான நேரங்களில் சாப்பிடாமலேயே தேர்வுக்குச் செல்வது தவறு. அளவுக்கு அதிகமான உணவுகள் எப்படிப் பிரச்னையை ஏற்படுத்துமோ, அப்படித்தான் சாப்பிடாமல் இருப்பதும். பரிட்சை அன்று காலையில் இட்லி, தோசை, ஓட்ஸ், கோதுமை பிரெட், முட்டை சாப்பிடுவது நல்லது. தேர்வு நாளிலோ, முதல்நாள் இரவோ அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடவேண்டாம்.
* சில பெற்றோர், குழந்தைக்குத் தூக்கம் வருவதுபோல இருந்தால் அதைக் கட்டுப்படுத்த டீ அல்லது காபி கொடுப்பார்கள். ஒரு நாளில் இரண்டு முறைக்கு மேல் டீ, காபி குடிப்பது தவறு.

திருமணத்துக்குப் பின் அம்மாவையும் மனைவியையும் 'பேலன்ஸ்' செய்வது எப்படி? - ஓர் உளவியல் ஆலோசனை
வல்லரசு நாடுகளால்கூட தீர்க்கமுடியாத பிரச்னை என்றால் அது வீட்டில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டைதான். கூட்டுக்குடும்பங்கள் அருகி, தனிக் குடித்தனம் பெருகிவிட்டாலும், மாமியார் மருமகள்களுக்கு இடையே பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.'உன் மனைவி இப்படி பண்றா, அப்படி பண்றா; இது சரியில்ல...அது சரியில்ல' என்று மாமியார்கள் ஒருபுறம், 'உங்க அம்மா பண்றது எனக்குப் பிடிக்கல; அவங்க நடந்துக்கிறது வித்தியாசமா இருக்கு' என்று மருமகள்கள் மற்றொரு புறம், இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் ஆண்கள் தனி ரகம். முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்குஉளவியல் ரீதியில் எப்படித் தீர்வு காண்பது.
'இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வை ஆண்தான் அளிக்க முடியும்'.
"அறிமுகமில்லாத இரண்டு பேர் இணைவதுதான் குடும்ப அமைப்பு. இங்கு அறிமுகமில்லாதது என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும் கலாசார வித்தியாசங்கள்தான். வெவ்வேறுவிதமான பழக்கவழக்கங்களில் வளர்ந்த இரண்டு நபர் திருமணத்தில் இணையும்போது ஏற்படும் அனுசரணை இல்லாத நிலைதான் ஒட்டுமொத்த குடும்பத்திலும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. முறையற்ற தொடர்புகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவையும் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றன.
குறிப்பிட்ட கலாசாரம், பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வளர்ந்த பெண்கள் திருமணமாகி வேறொரு கலாசாரத்துக்குள் செல்லும்போது அதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றனர். அந்தத் தடுமாற்றம் அவர்களது கணவன்மாரிடம் நேரடியாக வெளிப்படுகிறது. பெற்றோர் மனைவி இருவரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு புது மாப்பிள்ளைகளுக்கு மட்டுமே உரியது.
மனைவி மாமியாரைப்பற்றி ஏதேனும் குறை கூறினால் கோபப்பட்டு, 'மாமியார் கெத்தைக் காட்றியா?' என்று அம்மாவை அதட்டாமல் இரண்டு பேரையும் உட்கார்ந்து பேசச் சொல்ல வேண்டும். அப்போதே அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும்.
திருமணமான பின்பு கணவன் மனைவிக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆனால் அதற்கும் ஓர் அளவுகோல் உண்டு. திருமணத்துக்கு முன்புவரை சாப்பாடு ஊட்டிவிட்டு, தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு... என மகனை அரவணைத்த அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும், திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவிக்குச் செய்யும் அதீத பணிவிடைகள் வலியை ஏற்படுத்தும். இதை ஆண்கள் உணர வேண்டும்.
20, 30 வருடம் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு முறையிலிருந்து மாறுவது எந்தப் பெண்ணுக்கும் சிரமமானதுதான். அதேபோன்றுதான் 50, 60 வருடப் பழக்கத்திலிருந்து பெற்றோர் மாறுவதும் சிரமம் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.
'அப்பப்போ மகளை அழைச்சிட்டுவந்து கண்ணுல காட்டிட்டு போங்க' என்று கூறும் மாமனாரிடம் 'அது உங்க மகள் வாழும் வீடு; நீங்க எப்போ வேணும்னாலும் வந்து பார்க்கலாம்' என்று தயங்காமல் கூறி வாருங்கள்.
மாமியார் என்பவர் குனியக் குனியக் கொட்டுபவர், மகனை தன் கையில் வைத்துக்கொள்வார்' என்று மகள்களுக்குப் பல அம்மாக்கள் 'அட்வைஸ்' பண்ணிப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதுண்டு. அதே மனப்பான்மையில் புகுந்தவீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு மாமியார் சாந்த சொரூபியாக இருந்தாலும் பத்ரகாளியாகவே தெரிவார். அதனால் திருமணமான புதிதில் மனைவியிடம் அம்மாவைப் பற்றிய மனத்தாங்கல்களை ஆண்கள் கூறக்கூடாது.
'மாமியார் என்னும் கேரக்டரையே எனக்குப் பிடிக்காது' என்றுகூறும் மனைவிகளுக்கு, 'உன்னுடைய அம்மாவும் மாமியார் ஸ்தானத்தில் இருப்பவர்தான்' என்பதைக் கணவன் நாசூக்காக எடுத்துக்கூற வேண்டும். 'உன்னை எப்படி உன் அம்மா அப்பா செல்லமாக வளர்த்தார்களோ... அதே போலத்தான் என்னையும் என் அம்மா, அப்பா வளர்த்தார்கள்' என்று தங்கள் பெற்றோரைப் பற்றி மனைவியிடம் கூறவேண்டும்.
தான் நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல அடம்பிடிக்கும் மனைவியிடம், 'என் அம்மா, அப்பா இல்லாம நான் இல்ல. அவங்க என்னை அம்போன்னு விட்டிருந்தா நீ எனக்கு கிடைச்சிருக்க மாட்ட' என்று சாதுவாக சொன்னால் போதும், மனைவி அப்படியே 'இம்ப்ரஸ்' ஆகிவிடுவார்.
'உன் மனைவிக்கு நான் இருக்கிறது பிடிக்கவில்லையா' என்று கேட்கும் அம்மாக்களிடம், 'அப்படியில்லம்மா, அவக்கிட்ட பேசி புரிய வைக்கலாம், நான் பேசி சரி பண்றேன்' என்று நிதானமாக எடுத்துக் கூறினால் எந்த அம்மாவும் ஏற்றுக் கொள்வார்.
இன்று பெரியவர்களுக்குத் தேவைப்படுவதே 'சாப்பிட்டீங்களா' என்று அக்கறையுடன் கூடிய ஒரு விசாரிப்புதான். 'உங்க அம்மா போன் பண்ணவே இல்லை'னு மனைவி சொன்னா, 'பள்ளிக்கூடத்துல ஆசிரியருக்கு நாமதான் போய் 'வணக்கம்' சொல்லணும். ஆசிரியர் வந்து நமக்கு 'குட் மார்னிங்' சொல்லணும்னு எதிர்பார்த்தா அது நம்முடைய முட்டாள்தனம்' என்று விளக்குங்கள்.
திருமணத்துக்கு முன்பு ஒரு ஆண் எப்படி இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு அம்மா அப்பாவிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டியது தலையாய கடமை. அம்மாவிடமும் சரி, மனைவியிடமும் சரி, நடந்து முடிந்த எதிர்மறையான

நிகழ்வுகளைக் கூறி எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
உலகத்திலேயே ஒருவருக்குத் துரோகம் நினைக்காதது அம்மா, அப்பா மட்டும்தான் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. உங்களை நம்பி வரும் மனைவியையும் ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள்" .

பிஸ்கட் எவ்வாறு வந்தது?
1500ஆம் நூற்றாண்டுகளில் கடல்வழி வணிகம் தான் அதிகம். அவ்வாறு செல்லும்போது தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க உணவுப்பொருட்களோடு, சமையல்காரர்களையும் அழைத்து செல்லவேண்டி இருந்தது. அவ்வாறு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் இருந்தமையால் சுலபமாக சமைக்கும் மற்றும் நீண்ட நாள் வைத்து உண்ணும் அளவிற்கு ஒரு உணவை கண்டுபிடிக்க முற்பட்டனர் கடல்வழி வணிக மாலுமிகள்.
பதப்படுத்தப்பட்ட தானியங்களின் அறிமுகம் ஒரு நம்பகமான உணவை வழங்கியது. எகிப்திய மாலுமிகள் 'தாவோர் கேக்" என்று அழைக்கப்படும் கம்பு கொண்டு செய்யப்பட்ட தடிமனான ரொட்டியை தயாரித்தனர். இதனை ரோமர்கள் 'பிஸ்கெலூம்" என அழைக்கப்படும் 'பிஸ்கட்" என்று அழைத்தனர். இது கடல்வழி பயணங்களின்போது பசியை போக்கியது.
இவ்வாறு தோன்றிய பிஸ்கட் உலகெங்கிலும் பரவி இன்று தினசரி பயன்படும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பிஸ்கட் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ கம்பு போன்ற சிறுதானியங்களை கொண்டுதான்.
ஆனால், பிஸ்கட் உற்பத்தியை தொழிலாக கொண்ட பல நிறுவனங்கள் இதனை மேம்படுத்துவதற்காக உற்பத்தியில் பல வேதிப்பொருட்களை சேர்த்தனர். இதில் உள்ள வியாபார நோக்கம் என்னவென்றால் குழந்தைகளை கவரும் வகையில் இந்த பாக்கெட்டுகளின் கவர்களுடைய வண்ணம் அமைக்கப்படுகிறது. இப்படி கலப்படமான பிஸ்கட் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமை என்னவென்றால்,
செரிமானக் கோளாறு
நீரிழிவு நோய்
மலச்சிக்கல்
புற்றுநோய்
வளர்சிதை மாற்றம் என பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
இன்றுள்ள சூழ்நிலையில் பிஸ்கட் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இப்படி இருக்கையில் நாம் இதை உடனே பயன்பாட்டிலிருந்து தவிர்க்க முடியாது.
நமது பாரம்பரிய முறையில் நமது பாரம்பரிய பொருட்களான கம்பு, ராகி, வரகு, சாமை என சிறுதானியங்களை கொண்டு எந்த வேதிப்பொருட்களும் சேர்க்காமல் செய்யப்படும் பிஸ்கட்டை உண்ணும்போது வேதிப்பொருட்களின் பக்கவிளைவும் நம்மை பாதிக்காது.
கம்பு பிஸ்கட்டின் நன்மை :
உடல் சூடு தணியும்.
அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
உடல் புத்துணர்வு பெறும்.
உடல் பலம் பெறும்.
ராகி பிஸ்கட்டின் நன்மை :
எலும்புகள் வலுப்படும்.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும்.
உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும்.
தினை பிஸ்கட்டின் நன்மை :
உடலுக்கு தேவையான புரதச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.
இரும்புச்சத்தின் அளவும், கால்சியமும் தானியங்களை விட தினையில் இருமடங்கு உள்ளது.
உடலை வலுவாக்கும்.
சிறுநீரை பெருக்கும்.
இதயத்தை பலப்படுத்தும்.

முத்தான சிந்தனை துளி!
'நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும்? என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை மாற்றி கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது..!"

அப்ரைசல் அட்வைஸ்!
சம்பந்தமே இல்லாமல் திடீரென எல்லோரும் HR.-ஐ வறுத்தெடுப்பார்கள். கூட்டம் கூட்டமாக நின்று சீரியஸாக சீக்ரெட் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலரின் முகம், வீட்டில் இழவு விழுந்ததுபோல இருக்கும். சிலரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போலப் பிரகாசமாக இருக்கும்... இது மாதிரியான காட்சிகளை ஒவ்வோர் அலுவலகத்திலும் அப்ரைசல் மாதத்தில் மட்டுமே பார்க்க முடியும். அப்படியான பரபரப்பு தொற்றிக்கொள்ள இதோ இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கிறது.
பெரும்பாலான இந்திய நிறுவனங்களில் மே மாதம்தான் அப்ரைசல் என்றாலும், அதற்கு முந்தைய மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அதற்கான பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள். இந்தச் சமயத்தில்தான், சம்பள உயர்வைப் பற்றி, உங்கள் நேரடி மேலதிகாரியிடம் பேச முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் தயாரிப்பாளர் விலையை நிர்ணயம் செய்வதுபோல, நீங்கள் செய்யும் வேலைக்கு நீங்கள்தான் சம்பளத்தைத் தீர்மானிக்க வேண்டும். திறமையான பணியாளராக நீங்கள் இருக்கும்பட்சத்தில், சம்பள உயர்வு குறித்த உரையாடலுக்கு உங்களின் மேலதிகாரியைத் தயக்கமில்லாமல் அணுகுங்கள். அப்படி அணுகும்போது, ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
தெளிவு முக்கியம்
முதலில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் அப்ரைசல் முறையை ஆராய்ந்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நிறுவனத்தின் HRக்கு அந்த நிறுவனத்தின் சட்டதிட்டங்கள், சம்பள உயர்வு நடவடிக்கைகள் என அனைத்தும் தெரியும். அதனால், மேலதிகாரியை அணுகுவதற்கு முன்பு, அவர்களிடம் அதுகுறித்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் மேலதிகாரியிடம் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல், ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனத்தைவிட முக்கியமானது. அதனால், சம்பள உயர்வு குறித்த உரையாடல் தெளிவாகவும், அதே சமயத்தில் உங்கள் பணியின் மீது நீங்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்குப் புரியும்படியும் இருப்பது ரொம்ப முக்கியம். ஏனெனில், உங்களின் திறமையை மதிப்பீடு செய்வதில் அவருக்குத்தான் பெரும்பங்கு இருக்கிறது.
உணர்வுகளை ஒதுக்கி வைக்கவும்...
உணர்வுகளை அதிகம் கலக்காமல் உரையாடல் நிகழ்த்துவது நல்லது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, குடும்ப சூழ்நிலைகளை விளக்கிக்கொண்டிருப்பதுதான். அலுவலகத்தில் தனிப்பட்ட விஷயங்களை எப்போதுமே கலக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை நீங்கள்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி, சம்பளத்தை அதிகப்படுத்திக் கேட்பது நியாயம் கிடையாது. அதேபோல உங்களின் பேச்சு, உங்களது திறமையை எடுத்துச் சொல்வதாகத்தான் இருக்க வேண்டும். அதை விற்பனை செய்வதாக இருக்கக் கூடாது.
தகவல் சேகரிப்பு
உரையாடலுக்கு அமர்ந்த பிறகு, தத்துபித்துவென உளறாமலிருக்க, தகவல்களை முன்பாகவே தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பணி சார்ந்த விவரங்களை, திடீர் சப்பாத்திபோல உடனே சமைக்க முடியாது. இதை வாரம் தவறாமல் திரட்டி வைத்திருந்தால் சமயத்தில் கைகொடுக்கும். உங்களின் திறமையை நிரூபித்த பிறகான தருணம்தான், சம்பள உயர்வு பற்றி பேசுவதற்கான மிக முக்கியமான தருணம். இந்தச் சமயத்தில் உங்களின் மேலதிகாரி, உங்கள் மீது மிகுந்த மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார். அப்போது சம்பள உயர்வு பற்றி பேசினால், அவரால் முடியாது என்று சொல்லவதற்கு வாய்ப்புகள் குறைவு.
சக ஊழியர்கள் பற்றி பேசாதீர்கள்
ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததுமே, நம் எல்லோருக்கும் சக ஊழியர்களின் சம்பளம் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால், மற்றவர்களின் சம்பளத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதும், அவரவர்களின் சம்பள விவரங்களை சக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருப்பதும்தான் ஒரு நல்ல பணியாளருக்கு அழகு. ஆனால், பெரும்பாலானவர்கள் முதலில் அதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அப்ரைசல் சமயங்களில், மற்ற ஊழியர்களின் சம்பளத்துடன் ஒப்பீடு செய்து பேச்சுகளை ஆரம்பிப்பார்கள். இதனால் உங்கள் மீதான மதிப்புதான் பாதிக்கப்படுமே தவிர, நினைத்த காரியம் நன்மையில் முடியாது.
முன் அனுமதி பெறுங்கள்
சம்பள உயர்வு குறித்த உரையாடல் மேற்கொள்வதற்கு முன்பாக, மற்ற விஷயங்களைவிட மேலதிகாரியின் மனநிலையை ஆராய்வது ரொம்பவே முக்கியம். அவர் நல்ல மூடில் இருக்கிறாரா அல்லது கடுப்பாக இருக்கிறாரா என்பதைப் பொறுத்துதான் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். பேசுவதற்கான அனுமதியை அவரிடம் ஏற்கெனவே பெற்றுக்கொண்டு, அந்த நேரத்தில் பேசுவது புத்திசாலித்தனம். மற்ற நாள்களில் ஆடை விஷயங்களில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இது மாதிரியான முக்கிய தருணங்களில், ஆடை அணியும் விஷயங்களில் நன்மதிப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்ளுங்கள்.
மெயில் மூலம் பேசாதீர்கள்
அப்ரைசல் பேச்சுகளை, நேரடியாகத்தான் மேலதிகாரியிடம் பேச வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, அதற்கான வேண்டுகோளை ஒரு மெயில் மூலம் தெரிவ

ித்துவிட்டு, அமைதியாகிவிடுவது அல்லது மேலதிகாரியின் பதில் மெயிலுக்காக காத்திருப்பது. இது முற்றிலும் தவறான விஷயம். எந்தவொரு விஷயத்தையும் நேரடியாகப் பேசும்போதுதான், தெளிவான விளக்கத்தைக் கொடுக்க முடியும், அப்போதுதான் எதிர்புறம் இருப்பவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
எனவே, தயங்காமல் மேலதிகாரியுடனான சம்பள உயர்வு குறித்த உரையாடலை இப்போதே ஆரம்பியுங்கள். அதே சமயம், அந்த உரையாடலானது வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அல்லது அந்த வருடத்துக்கான அப்ரைசல் உங்களுக்குச் சாதகமானதாக இல்லை என்றால், வருத்தப்படாதீர்கள். உண்மையை அறியப் பாருங்கள். ஒன்று, நீங்கள் நல்ல நிறுவனத்தில் உள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்வீர்கள். அல்லது நல்ல நிறுவனத்தை நோக்கி நகர்வீர்கள்.

லட்சியத்தை இழக்காதே !!
ஆயிரம் கவலைகள் உன்னை வாட்டினாலும்,
ஆசைகள் உன் லட்சியத்தை பூட்டினாலும்,
அயர்ந்து போகாமல் முன்னேறி வா தோழா....
உலகம் உன்னை தூற்றினாலும்,
உனது கனவுகளை உடைத்தாலும்,
சோர்ந்து போகாமல் முன்னேறி வா தோழா...
ஆயிரம் தோல்விகள் குவிந்து இருக்கும்...
வெற்றி புதையலும் ஒளிந்திருக்கும்..
எனவே மனம் துவண்டு மடிந்து விடாதே...
மனதில் இருக்கும் லட்சியத்தை இழக்காமல் முன்னேறி வா தோழா...

இன்றைய பொன்மொழி
'உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே உனக்கு துணையாக நான் இருக்கிறேன்..
தைரியமாக போராடு..!
- தன்னம்பிக்கை !

சிறந்த வரி!!
உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். ஏனெனில்... வேறு எவராலும் உங்கள் கால்களை கொண்டு நடக்க முடியாது...!

சிறந்த வரி !!
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்குச் சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.

நமக்கு என்ன பிடிக்கும் என தெரிந்து செய்யும் உறவுகளைவிட, என்ன பிடிக்காது என தெரிந்து செய்யாமல் இருக்கும் உறவுகள் சிறப்பானது.
நமக்கு என்ன பிடிக்கும் என தெரிந்து செய்யும் உறவுகளைவிட, என்ன பிடிக்காது என தெரிந்து செய்யாமல் இருக்கும் உறவுகள் சிறப்பானது.
இன்றைய பொன்மொழி
'தேடிக்கொண்டே இருங்கள்... கிடைக்காவிட்டால் கூட தேடிய திருப்தி இருக்கும். இறுதிவரை முயற்சிப்பதே ஆகச்சிறந்த தேடல்!"

பின்கோடு எண் எவ்வாறு உருவானது?
அஞ்சல் குறியீட்டு எண் என்று அழைக்கப்படும் பின்கோடு, இந்திய அஞ்சல் துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணை வைத்து எந்த அஞ்சலகம் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 6 இலக்கங்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. இந்தியா 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணின் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. பின்னால் இருக்கும் மூன்று இலக்கங்கள் அஞ்சலகத்தை குறிக்கிறது. சமயப்புரம் அஞ்சலகக் குறியீட்டு எண் 621112. இதில் 62 என்பது தமிழ்நாட்டையும், 1 திருச்சி மாவட்டத்தையும், பின்னால் உள்ள மூன்று இலக்கங்கள் அஞ்சலக இடத்தை குறிக்கின்றன. தமிழ்நாட்டின் அஞ்சல் குறியீட்டு எண்களில் முதல் இரு இலக்கங்கள் 60 முதல் 66 வரை அமைத்திருக்கின்றன. இந்த எண்களைப் பார்த்தாலே தமிழ்நாடு என்று சொல்லிவிடலாம். 67-69 கேரளா, 51-53 ஆந்திரப் பிரதேசம், 56-59 கர்நாடகா, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 605 என்று எண்களை வழங்கியிருக்கிறது.

ஆரோக்கியம் தரும் பூண்டு பொடி !!
'சுவை மட்டும் தருவது உணவல்ல
சுவையோடு ஆரோக்கியமும் தருவதே சிறந்த உணவு"
👉 நம் பாரம்பரிய உணவுகளில் அதிகப்படியான சத்துக்களும், பயன்களும் உள்ளன. அதுபோலவே, நம் பாரம்பரிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பூண்டு. பூண்டு ஒரு சிறந்த ஜீரணி, இது உடலுக்கு அதிகப்படியான ஜீரணசக்தியை தருகிறது.
👉 உடல் எடை குறைய, வாயு தொல்லை நீங்க, காசநோய், புற்றுநோய், வாதநோய், இரத்தச்சோகை, இரத்த அழுத்தம், நெஞ்சுகுத்து, சளி, இருமல் என அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பூண்டு பயன்படுகிறது.
👉 வரலாற்றில் கிரேக்க நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தகுதி ஊக்கியாக ′performance enhancing' பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
👉 பச்சை கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் என நம் பாரம்பரிய பொருட்களோடு நாட்டு ரக பூண்டை பொடி செய்து சேர்த்ததே பூண்டு பொடி ஆகும்.
👉 அனைத்து டிபன் வகைகளுக்கும் சட்னிக்கு பதிலாக பூண்டு பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து குலைத்து சாப்பிட்டால் சுவை அசத்தும். தோசையின் மீது பொடியை தூவி அப்படியே சாப்பிடலாம். மேலும் சூடான சாதத்துடன் நல்லெண்ணெய், பூண்டு பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவை அடடா அப்படி இருக்கும்.

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?
👉 நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனம், பேருந்து, இரயில் வண்டி போன்றவற்றில் பயணிக்கும் போது நாம் காலை தொங்க விட்டுக் கொண்டுதான் உள்ளோம். அது மட்டுமின்றி, சினிமா தியேட்டர், பள்ளிகள், அலுவலகங்கள், வீடுகள், சோபாக்கள், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
👉 இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.
👉 இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
👉 நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
👉 நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகளுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.
👉 மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது.
👉 எனவே சம்மணங்கால் போட்டு அமர்ந்தால் சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
👉 உணவு உண்ணும்போது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
👉 இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம். யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும். அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
👉 ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.
👉 கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.
👉 சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.
👉 சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.