Tamil short message
129 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
பால கங்காதர திலகர்


👉 விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் 1856ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.

👉 இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.

👉 ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.

👉 முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் தன்னுடைய 64வது வயதில் (1920) மறைந்தார்.
சந்திரசேகர ஆசாத்


🏁 இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் 1906ஆம் ஆண்டு ஜீலை 23ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும்.

🏁 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது, நீதிபதி இவரிடம் முகவரியை கேட்டதற்கு தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார்.

🏁 கோபம் அடைந்த நீதிபதி அவரை 15 பிரம்படி கொடுத்து சிறையில் அடைக்க சொன்னார். ஆசாத், ஒவ்வொரு அடி விழும்போதும் 'பாரத் மாதா கீ ஜெய்" என முழங்கினார். பிறகு இவர் 'சந்திரசேகர ஆசாத்" என்று அழைக்கப்பட்டார்.

🏁 லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை சுட்டதால், 1931-ல் இவரை ஆங்கிலேய காவல்துறையினர் சுற்றி வளைத்த போது பிடிபடக்கூடாது என்று தன்னைத்தானே (24 வயது) சுட்டுக்கொண்டார்.
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

'நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்"

- காந்திஜி.
கேட்டட்' குடியிருப்பில் வசிப்பவர்கள் செய்ய வேண்டியவை!



கேட்டட் கம்யூனிட்டி', 24 மணி நேரப் பாதுகாப்பு' இதுதான் இளம் பெற்றோருக்காகவே திரும்பத் திரும்பச் சொல்லப்படும் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை விளம்பர வாக்கியங்கள். கணவனும், மனைவியுமாக வேலைக்குப் போகையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து வளர்ப்பதை விட வேறு என்ன விருப்பம் அவர்களுக்கு இருந்துவிட முடியும்? அதற்காக உரிமையாளராக இருந்தும் வாடகையை ஒட்டிய அளவு மெயின்டனன்ஸ்' தொகையையும் தர தயாராகத்தான் இருக்கிறோம். அடுத்த எலைட் விளம்பர வாக்கியம் - '100% ப்ரைவஸி'. அதாவது, ஒவ்வொரு வீட்டின் கதவையும், ஜன்னல்களையும், பால்கனியையும் வேறு யார் பார்வைக்கும் படாதமாதிரி கட்டித்தருகிறோம் என்கிறார்கள். உங்கள் வீட்டுக்குள் நடப்பது யாருக்கும் தெரியப்போவதில்லை, போலவே நீங்களும் யார் முகத்தையும் பார்த்து தொலைக்க வேண்டாம், என்பது தற்போது அடுக்குமாடி வீடுகளுக்கான கூடுதல் தகுதி!

கிராமத்துக்கும், நகரத்துக்குமான மனநிலையிலான வித்தியாசம் என்னவென்று கேட்டால், நகரத்தில் மனிதர்களுக்கு வந்துவிடும் முகங்களின் ஒவ்வாமைதான் என்பேன். கிராமத்துத் திண்ணைகளில் அமர்ந்து வெற்றிலை மென்றுகொண்டிக்கும் பெருசுகள் பத்து சிசிடிவிக்குச் சமம். யார் வீட்டுக்கு யார் வந்தாலும் போனாலும், திண்ணையாரிடம் தகவல் இருக்கும். எப்போதாவது தென்படும் புதிய முகங்களை தெரிந்துகொள்ளும் சுவாரஸ்யம் நகரங்களில் வசிப்போரிடம் எப்படி இருக்கும்? பேருந்து, இரயில், பொது இடங்கள், அலுவலகம் என எங்கெங்கிலும் உடல்கள், முகங்கள், வியர்வை, வரிசைகள், காத்திருப்புகள். கூடடையும் ஒவ்வொரு மனிதனும் தனிமையைத்தான் விரும்புகிறான். இங்கே வசதி என்பதே ப்ரைவஸி'யின் அளவுதான். வீட்டிற்காக எத்தனைக்கு எத்தனை பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்களைப் பார்க்கும் / நீங்கள் பார்க்க விரும்பும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறையும். 


குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள பெற்றோர் செய்ய வேண்டியவற்றில் முக்கியமாக சிலவற்றைச் சொல்லலாம். 

சின்ன கிராமம் போல, தனி சமூகம் போலவே மாறிவிட்ட
கேட்டட்' குடியிருப்புகளில் வசிப்பவர்கள் செய்யவேண்டியவற்றைப் பார்க்கலாம். 

1. அடுக்குமாடி குடியிருப்பின் முக்கியப் பயனே பல்வேறு மனிதர்களோடு இணைந்து வாழலாம் என்பதுதான் என்று புரிந்து கொள்ளுங்கள். ஓர் அவசரம் என்றால் ஓடி வரவேண்டிய இடத்தில் இருப்பது உறவினர்களை விட, நண்பர்களை விட அக்கம்பக்கத்து வீட்டார்தான். அவர்களோடு இணக்கமாக இருங்கள். சின்னச் சின்ன விட்டுக்கொடுத்தலில் பல நன்மைகள் உண்டு. 

2. குடியிருப்பு சங்க மீட்டிங்கைத் தவிர்க்க பொய்களை தேடாமல், கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமாகப் பேசுங்கள். தனியே நாட்டுக்கென்று கிளம்பிச் சென்று சேவை செய்ய எல்லோராலும் முடியாதுதான். ஆனால், வசிக்கும் குடியிருப்புச் சங்கத்தில் தன்னார்வலராகவோ நிர்வாகியாகவோ இருந்து பாருங்கள். நாங்கள் முன்பிருந்த குடியிருப்பில் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஜீரோ-வேஸ்ட்டை சாத்தியமாக்கிக் காட்டினார்கள்.

3. கண்காணிப்பு கேமரா என்று ஒன்று இருக்குமே தவிர, அது வேலை செய்கிறதா, அதை யாராவது பார்க்கிறார்களா என்பது எதுவும் நமக்குத் தெரியாது. அதை அவ்வப்போது நிர்வாகிகள் பார்ப்பதும், பார்ப்பதைத் தெரியப்படுத்துவதும் அவசியம்.

4. குழந்தைகளை பார்க், நீச்சல் குளம், நீச்சல் குளத்தையொட்டிய குளியலறை, மொட்டைமாடி இப்படிக் குடியிருப்பின் உள்ளுக்குள்தான் என்றாலும் தனியே  விடாதீர்கள். பாதுகாப்புக்காக அப்பா அல்லது அம்மா யாராவது ஒருவர் இருக்க வேண்டும்.

5.பொதுவாக ஜனவரி முதல் வாரத்துக்குப் பிறகு, உடற்பயிற்சி கூடமென்பது குடியிருப்பின் ஒதுக்குப்புறமான இடங்களில் ஒன்றாக மாறிவிடும். அதிலும் அதற்கென்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தால், மற்ற நேரங்களில் அதன் சாவி யார் பொறுப்பில் இருக்குமென்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேலும், பூட்டிக்கிடக்கும் வீடுகளையும், பேஸ்மென்ட் பார்க்கிங்கையும், மொட்டை மாடியையும் யாராவது பயன்படுத்துகிறார்களா எனக் கண்காணிப்பதும் முக்கியமான ஒன்று.

6. தனியார் நிறுவனமே என்றாலும், காவல் பணிக்கென அவர்கள் அனுப்பும் ஆட்களின் விவரங்கள் குடியிருப்புச் சங்க நிர்வாகிகளிடமும் இருக்க வேண்டும்.

7. கடைசியாக, உங்களைத் தெரியாவிட்டாலும், உங்கள் குழந்தை குடியிருப்பில் பரிட்சயமானதாக இருக்கட்டும். கலைநிகழ்ச்சிகளில், பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதியுங்கள். மனிதர்களை வாசிப்பதை விட சிறந்த படிப்பொன்றும் இருக்கப் போவதில்லை.


திடீரென இவ்வுலமே பாதுகாப்பற்றதாக, குழந்தைகளை வளர்ப்பது கடினமானதாகத் தோன்றிவிட்டது. எல்லா செய்க்யூரிட்டிகளையும் துரத்தி விட்டு, சிசிடிவி கேமரா மட்டும்கொண்டு நாமே கண்காணித்தால் போதுமே என்று வாட்ஸ் அப்பில் விவாதிக்கிறார்கள். ஆனால், இங்கே எல்லோரும் கயவர்கள் என்று பொதுமைப்படுத்துவதோ, மனிதத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கோ அவசியம் வந்து
விடவில்லை என்றே நம்புகிறேன்.


இதற்கு என்னதான் விடை? 

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

அதாவது, முன்பின் அறிமுகமில்லாதவரை நம்புவதும் நன்கு அறிந்தவரை சந்தேகப்படுவதும் எப்போதும் துன்பத்தையே தரும் என்கிறது குறள். இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் நம் வாழ்வியலுக்கான, சமூகத்திற்கான வழிகாட்டியாக இருக்கும் வள்ளுவத்திடம் எப்போதும் போல் சரணடைவோம்.
கடலையும் நம்ம ஊர் கருப்பட்டியும் !! உண்ணும் உணவின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதன் பயன்களை அறிந்து உண்ணுவது அவசியம். நியுயார்க்கில் உள்ள எம்போசா பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு நடத்தியது. உணவு பழக்கங்கள் மற்றும் அந்த உணவு தரும் பயன்கள் பற்றிய ஆய்வு அது. அதில் வேர்கடலை அதிகம் நோய் எதிர்ப்புசக்தி கொண்டுள்ளது என்று தெரிந்துள்ளது. 'ஏழைகளின் புரதம்" என்றழைக்கப்படும் கடலையானது 30 விதமான ஊட்டச்சத்துக்களை கொண்டது. அவை அனைத்தும் உடலுக்கு பல்வேறு வகையான பலன்களை தரக்கூடியது. இதில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை வேகப்படுத்தும். எனவே, சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம். மேலும், நைட்ரிக் அமிலம் இருப்பதால் அது உடலில் உருவாகும் நைட்ரேட் இரத்தக் குழாயை விரிவடைய செய்யும். எனவே, ரத்த அழுத்தம் குறையும். நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும். நல்ல கொழுப்புகளை கொண்ட கடலை வைட்டமின் A, B3, போலிக் ஆசிட் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தவை. இதில் உள்ள நியாசின் குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கும். நரம்பு மண்டல நோய்க்கு சிறந்த நிவாரணியாக பயன்தருகிறது. கால்சியம், வைட்டமின் D உள்ளதால் எலும்பு, பல் வளர்ச்சிக்கு நல்லது. அதேபோல் 'பெண்களின் தோழி" என்றழைக்கப்படும் கருப்பட்டியும் அதிக மருத்துவ பயன்களை கொண்டது. முக்கியமாக பெண்களுக்கு பருவகாலம் முதல் மகப்பேறு வரை, மாதவிடாய் காலங்களில் பக்கபலமாக இருப்பது கருப்பட்டி. இதில் நாம் மேற்சொன்ன கடலையில் பித்தம் அதிகம். எனவேதான், பாரம்பரியமாக நம் முன்னோர்கள் கடலை சாப்பிடும்பொழுது கூட வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்வார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் சத்தான கடலையை வறுத்து, கூடவே கருப்பட்டி சேர்த்து இரண்டையும் நல்ல பதத்தில் அரைத்து செய்யும் பண்டம் 'கடலை கருப்பட்டி உதிரி". அதீத சுவையும், மிகச் சிறந்த ஆரோக்கியத்தையும் தரும். நமது கடலை கருப்பட்டி உதிரியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம். 'பயனறிந்து உண்ணுவோம், பயனடைவோம்"

தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 23, 2018 at 04:00PM.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அலெக்ஸாண்டர் டூமாஸ்


✍ உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.

✍ இவர் தனது 20வது வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார். இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.

✍ 'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ", 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்", 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்" ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ்பெற்றன.

✍ சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என 1,200 நூல்களை எழுதியுள்ளார்.

✍ எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 68வது வயதில் (1870) மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

'ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை"

- லியோ டால்ஸ்டாய்.
என்ன இருக்கு இந்த ஈர்ப்புவிசையில்? ஈர்ப்புவிசை என்றால் என்ன? பூமியில் நிலையாக நாம் இருக்க காரணம் ஈர்ப்புவிசைதான். நம் செய்யும் அனைத்துக்கும் ஈர்ப்புவிசை தேவை. ஈர்ப்புவிசை தினசரி வாழ்வில் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும் நமது உடலில் ஈர்ப்புவிசையின் தாக்கம் அதிகம் உண்டு. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட பின், ஈர்ப்பு விசை நமது உடலில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். ஏனெனில் ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில் உடல் தடுமாறும். உயரம் அதிகரிக்குமா? விண்வெளியில் பணி செய்த விண்வெளி வீரர்களுக்கு, உயரம் அதிகரித்தும், எலும்பின் அடர்த்தி குறைந்திருப்பதையும் கண்டறிந்த அறிவியலாளர்கள் முன்னும் பின்னுமான விண்வெளி பயண மாற்றங்களை பதிவு செய்ய முயற்சித்தனர். பூமியில் ஈர்ப்பு விசையற்ற அறையை உருவாக்கி, அதில் வீரர்களை தங்கவைத்து உடல்நலனைக் கண்காணித்து பல்வேறு உண்மைகளைத் தொகுத்தனர். ஈர்ப்புவிசை பரப்பில் நமது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது, உடலின் மெக்கானோ ரிசெப்டர் %லம் இது குறித்த தகவல்கள் உடனே %ளைக்கு கடத்தப்பட்டு ரத்தம் உறைதல் செயல்பாடு தொடங்குகிறது. இதுவே ஈர்ப்புவிசையற்ற சூழலில், செல்களின் இயக்கத்தில் அயனிகளின் செயல்பாடு அதீதமாகி, செல்களின் வளர்சிதைமாற்றம் முடக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் மாற்றம்: ஈர்ப்புவிசையற்ற இடத்தில் உடலின் மேற்பகுதியிலுள்ள %ளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்போது, உடலின் நிலையைப் பற்றி %ளைக்கு அறிவிக்கும் நியூட்ரான் ட்ரான்ஸ்மிட்டர்கள், %லக்கூறுகளின் செயல்பாடுகள் தடைபடுகின்றன. விண்வெளியில் ஒரு மாதத்திற்கு 1% எலும்பு அடர்த்தி குறையும். ஈர்ப்புவிசையற்ற நிலையில் புரதம் மற்றும் டிஎன்ஏ செயல்பாடு வளர்சிதைமாற்றம் தடைபடுவதால், புதிய எலும்பு திசுக்கள் உருவாவதில்லை. எனவே விண்வெளியில் உள்ள வீரர்களின் உடலில் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. பாதிப்புக்கு என்ன தீர்வு? விண்வெளி வீரர்கள் செல்களுக்கு பாதுகாப்பு தர தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி (பளு தூக்குதல், நடைப்பயிற்சி) செய்கிறார்கள். எலும்பு சேதாரத்தை இவை பெருமளவில் தடுப்பதில்லை. செல்களின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி இயக்கும் நியூட்ரோட்ரான்ஸ்மிட்டரான GABAவைப் பயன்படுத்திய போதும் விஞ்ஞானிகளால் இதன் இயக்கம் ஏற்படுத்தும் உடலின் மாற்றங்களை தெளிவாக அறிய முடியவில்லை. எளிதாக செரிமானம் ஆகும் நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகள் %லம் ஈர்ப்பு விசையற்ற பாதிப்புகளைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். முன்பு பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய சவால்தான். ஆனால் அதனை நாம் கடந்துவந்திருப்பது நம் முயற்சிகளால் தான்.

தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 24, 2018 at 10:48AM.
ஷிகெல்லா... மக்கள் என்ன செய்ய வேண்டும்?


நிபா வைரஸைத் தொடர்ந்து இப்போது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியாவின் பாதிப்பில் சிக்கியிருக்கிறது கேரள மாநிலம். நிபாவின் அச்சத்திலிருந்து மீண்டு, நிம்மதி பெருமூச்சுவிட்டு சரியாக ஒன்றரை மாதங்கள்... வந்துவிட்டது ஷிகெல்லா பாக்டீரியா.


1897-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் கியோஷி ஷிகா (Kiyoshi Shiga) என்பவர்தான் இந்த பாக்டீரியாவை முதன்முதலில் கண்டறிந்தவர். உலகளவில் இந்த பாக்டீரியா பாதிப்பால் வருடத்துக்கு 74,000 முதல் 6,00,000 பேர் உயிரிழக்கிறார்கள். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் கடுமையான வயிற்றுவலி, வயிற்றுப்போக்குதான் முதலில் உண்டாகும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’’.

`
பெரும்பாலும் குழந்தைகளைத்தான் இந்த பாக்டீரியா தாக்குகிறது. ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால், இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த சிவப்பணுக்களை சிதைத்துவிடும். அதனால், சிறுநீரகம் பழுதடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. சுத்தமில்லாத தண்ணீர், உணவின் வழியாகத்தான் இது பரவுகிறது. உடலுக்குள் சென்று பெருங்குடலைத்தான் முதலில் இது பாதிக்கும். அதனால், வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் . மலம் கழிக்கும்போது ரத்தக்கச்சிவு உண்டாகும். உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால் நான்கைந்து வாரங்களுக்குத் தொடர்ச்சியாக இந்தப் பாதிப்பு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் சாதாரண வயிற்றுப்போக்குதான் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மலத்தைப் பரிசோதனை செய்வதன் மூலமாக இந்த பாக்டீரியா பாதிப்பைக் கண்டறியலாம். இதைச் சரிசெய்வதற்கான மாத்திரை, மருந்துகள் இருக்கின்றன. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை.



மக்கள், சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னதாக, பாத்ரூம் சென்று வந்த பின்னர் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். அதோடு ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுகளை உட்கொண்டால் இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்’’.

``ஷிகெல்லா காலம் காலமாக இருக்கிற ஒரு பாக்டீரியா. இது நிபாபோல புதிதான ஒன்றல்ல. இந்த பாக்டீரியாவைக் கண்டறிவதும் சிகிச்சையளிப்பதும் எளிமையான ஒன்று. வயிற்றுப்போக்கை உருவாக்கும் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பைத் தடுக்கும் அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன.



குழந்தைகளுக்கு டயரியா போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். மக்களும் தாங்கள் குடிக்கும், பயன்படுத்தும் நீரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமான உணவுகளையே சாப்பிட வேண்டும்’’ .
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தேவையற்ற கொழுப்பைக் கரைத்து தொப்பை மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்கும் எளிய முறை ! 👉 தொப்பையும், உடல் பருமனும் புதியதொரு மன அழுத்தத்தை இன்று பெரும்பான்மையோரிடம் விதைத்து வருகிறது. உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் என மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்க அதற்கான உடலியல் மாற்றங்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 👉 தொப்பையைக் குறைக்க பல வழிமுறைகள் கூறப்பட்டாலும் அவ்வழிமுறைகள் அனைவரின் உடலுக்கும் உகந்ததாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு உண்டாலும் தொப்பை கூடுவதில்லை. இதற்கு காரணம் அவர்களின் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை, நமது வழக்கில் கூறுவதானால் பித்தத்தன்மை ஆகும். 👉 நமது சித்த மருத்துவமுறை உடலின் வாதம், பித்தத்தை அடிப்படையாக கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனையே 'மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று வழக்காகக் கூறுவர். இதன் அடிப்படை என்னவெனில், உடல் இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களே தொப்பைக்கும், உடல் பருமனுக்கும் முதற்காரணமாகும். இந்த அமிலத்தன்மையை குறைக்காமல் வேறெந்த முறையை பின்பற்றினாலும் பயன் இருக்காது. 👉 எனவே, அமிலத்தன்மையை குறைக்க மிகச்சிறந்த வழி இஞ்சி மற்றும் நல்லெண்ணை குளியல். இஞ்சிச்சாறு தொடர்ச்சியாக அருந்தி வந்தால் அமிலத்தன்மை குறைய வழி செய்யும். 👉 ஒரிஜினல் நம்ம ஊர் நாட்டு இஞ்சியுடன், இனிப்பு சேர்த்து பருகும் ருசியான இஞ்சிச்சாறு பானம் தினசரி பயன்பாடாக முன் காலத்தில் இருந்து வந்தது. இன்று காபியும், தேநீரும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டன. 👉 ஒரு டம்ளர் அளவு தினமும் மாலை வேளையில் பருகி வந்தால் உடல் இலகுவாகும், தேவையற்ற சதை எளிதில் கரையும்.

தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 25, 2018 at 01:45PM.
உலக கருவியல் தினம்


👥 உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். அதன்பிறகு, உலகம் முழுவதும் குழந்தைப்பேறு இல்லாத பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.

👥 முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!


'அரைகுறையாக எதையும் செய்யாதீர்கள். நல்லது என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதை செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்."

- கில்ப்பின்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வாகுமா ஜீன் எடிட்டிங்?

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை, குளோனிங் போன்ற மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ஜீன் எடிட்டிங் (Gene Editing).’ பெற்றோரின் உருவத் தோற்றம் முதல் குணநலன்கள்வரை குழந்தைகளுக்கு எடுத்துச்செல்வது மரப்பணுக்கள்தான். ஒருவர் நோய்வாய்ப்படுவதற்கும் அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த மரபணுக்களே பிரதான காரணிகளாக இருக்கின்றன. 


ஆண்டொன்றுக்கு விளைச்சல் தரும் நெற்பயிரை ஆறுமாதங்களில் விளைவிப்பது... ஒரு ஏக்கரில் விளையும் பயிரை அரை ஏக்கர் நிலத்திலேயே விளைவிப்பதெல்லாம் மரபணு மாற்றத்தால் சாத்தியமாகியிருக்கிறது. இதனால் மக்கள்தொகைப் பெருக்கத்தால் நேரும்  உணவுத்தட்டுப்பாட்டை பெருமளவுக்குக் குறைத்திருக்கிறோம். விலங்குகளிலும் மரபணு மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, மனிதர்களுக்கும் மரபணுக்களை மாற்றலாம் என்பது தொடர்பான சோதனை முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட விதை, பயிர், காய், கனிகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக எழுந்துகொண்டிருந்தாலும், அறிவியல் துறையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நின்றபாடாக இல்லை. அந்தப் பரிசோதனைகளில் சில நன்மைகளும் நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன.  

அதென்ன ஜீன் எடிட்டிங்... அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?’’

மனித உடலில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொரு செல்லின் உட்கருவுக்குள்ளும் 23 ஜோடிகளாக 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. இந்தக் குரோமோசோம்களுக்குள் ஆயிரக்கணக்கானமரபணுக்கள் (Genes) இருக்கின்றன. மரபணுக்களில் ஏற்படும் மாற்றம், நமது உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது. 

மரபணுவின் ஒரு பகுதியை நீக்குவது அல்லது மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப முறையை
ஜீன் எடிட்டிங் (Gene Editing) அல்லது ஜெனட்டிக் இன்ஜினீயரிங்' (Genetic Engineering) என்கிறோம்.

அதாவது, நல்ல பண்புகளுக்குக் காரணமாக இருக்கும் மரபணுக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கருவை உருவாக்கவும், அந்தக் கருவிலிருந்து நாம் விரும்பும் பண்புகளை உடைய ஒரு புதிய உயிரியை உருவாக்கவும் இந்த நவீனத் தொழில்நுட்பம் உதவும். அதோடு, நோய் உருவாக்கத்துக்குக் காரணமாக இருக்கும் மரபணுவை அடையாளம் கண்டு, அதை மாற்றியமைக்க, நீக்க ஜீன் எடிட்டிங் உதவுகிறது. இதன் மூலம் அந்த உயிரிக்கு மரபணு அடிப்படையிலான மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.  

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நோயைக் குணப்படுத்தலாம்; நாம் விரும்பும் பண்புகளை உடைய மரபணுவை உருவாக்கலாம்; நம் விருப்பத்துக்கேற்ப மரபணுவை மாற்றம் செய்லாம்; ஒரு புதிய தாவரம் அல்லது விலங்கை உருவாக்கலாம். முக்கியமாக, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பரம்பரை நோய்கள், புற்றுநோய்கள், டவுண் சிண்ட்ரோம், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியுமா என்பது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட சில ஆய்வுகளில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. 

உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் 11 வயது குழந்தை ஒன்றுக்கு லூக்கிமியா (Leukemia) என்ற ரத்தப்புற்றுநோய் இருந்தது. அதைக் குணப்படுத்த ஜீன் எடிட்டிங்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த அறிக்கையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ஹேமட்டாலஜியின் (American Society of Hematology) கருத்தரங்கில் சமர்ப்பித்திருக்கிறார்கள்.  

அதேபோலத்தான், இங்கிலாந்திலிருக்கும் நஃபீல்டு கவுன்சில் ஆன் பயோஎத்திக்ஸ்,
குணப்படுத்த முடியாத நோய்களுக்காவது முதற்கட்டமாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்’ என்று பரிந்துரை செய்திருக்கிறது. இதே கருத்தை, அமெரிக்கா ஜர்னல் ஆஃப் தி மெடிக்கல் சயின்ஸ் (The American Journal of the Medical Sciences), அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (American Medical Association) ஆகியவையும் பரிந்துரைத்திருக்கின்றன. பல நாடுகள் ஜீன் எடிட்டிங்கை நடைமுறைக்குக் கொண்டுவரத் தயங்குவதற்குக் காரணமும் இருக்கிறது. சிலர் ஜீன் எடிட்டிங்கைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், மருத்துவத்துக்கு உதவும் என்கிற வகையில் இது போன்ற தொழில்நுட்ப முயற்சிகள் வரவேற்கப்படத்தான் வேண்டும். ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்’’
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நீங்கள் தூங்கும் நேரம் போதுமானதா !! அது ஒரு கனாக் காலம் என்பது போல 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, தூக்கத்தில் கூட கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல், ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கங்கள் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் அதிகரித்துவிட்டன. யாருக்கு எவ்வளவு தூக்கம் அவசியம்? ▶ பெரியவர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ▶ மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். ▶ புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. ▶ பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். ▶ இளம்பருவத்தினருக்கு 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். பிரச்சனைக்குக் காரணம் என்ன? கல்வியமைப்பு மற்றும் நண்பர்களுடனான பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இப்போதெல்லாம் கல்வி பயிலுபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, முறையற்ற தூங்கும் நேரம் போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும். பாதிப்புகள் என்ன? முறையான தூக்கம், தேவையான தூக்கம் இல்லையென்றால் கவலை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுடனான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தூக்கமின்மையால் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அறிகுறிகள் என்ன? குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகளாகும். தூக்கமின்மையைப் போக்க வேண்டுமா? ▶ தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும். ▶ தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ▶ அதிகாலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ▶ தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைத் தரும். ▶ படுக்கச் செல்லும் முன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் !! 8 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகின்றவர்களில் 58 சதவீதம் பேரின் வேலைகள் சரியான தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் 35 முதல் 65 வயது வரையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொண்டு மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சி, சத்தான உணவுகள் போன்றவற்றை கடைபிடித்தால் அது இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு அறிகுறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 25, 2018 at 08:00PM.