தமிழர்களின் உழவுத்தொழில் தமிழக மக்கள் பெரிதும் வேளாண் தொழிலையே நம்பியுள்ளனர். உலகில் நடைபெறும் தொழில்களில் தலைமைத் தன்மை வாய்ந்தது உழவுத் தொழில் எனலாம். இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில், "எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்கக் காரோட்டம் என்னவாகும்" என்று கேள்வி எழுப்பினார் கவிஞர் கண்ணதாசன். தமிழகத்தின் உழவுத் தொழிலினை வரிசைப்படுத்தலாம். அவை, 1. உழுதல் 2. சமன்செய்தல் 3. விதைத்தல் 4. நடுதல் 5. நீர்ப்பாசனம் 6. எருவிடுதல் 7. களையெடுத்தல் 8. பயிர்ப்பாதுகாப்பு 9. அறுவடை 10. தூய்மை செய்தல். உழுதல் : உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் காணப்படும் கடினத் தன்மை கொண்ட மண்ணை மென்மைத் தன்மை உடையதாக ஆக்குகின்ற வகையில் மேலும் கீழுமாகப் புரட்டுவது ஆகும். சமன்செய்தல் : நிலத்தை நன்கு உழவு செய்த பிறகு அதைச் சமன் செய்வர். அதாவது நிலத்தின் மேற்பரப்பை மேடு பள்ளங்கள் இல்லாதவாறு இயன்றவரை சரி செய்வர். இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். சேற்று நிலத்தில் இவ்வாறு செய்து பரம்பு வைத்த பிறகு விதை விதைப்பதோ அல்லது நடவு செய்வதோ நடைபெறும். விதைத்தல் : நிலத்தை நன்கு உழவு செய்து பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இக்காலத்தார் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை விதைப்பு முறைகளைச் செய்கின்றனர். நடுதல் : சேற்று நிலத்தில் நாற்றுக்களைப் பரவலாக ஊன்றும் செயலை நடுதல் என்பர். நடுநர்கள் செய்த செயலை இன்று நடவு எந்திரங்கள் செய்யத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாய்ச்சுதல் : வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை நீரின்றி அமையா உழவு என்று கூறின் மிகையன்று. பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறம் தமிழர்களுக்குப் பழைமையானது. எருவிடுதல் : உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும். பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர். பண்டைத் தமிழர்கள் கால்நடைகளின் கழிவுப் பொருள்களாலான தொழு உரத்தையும் இலை, தழைகளாகிய பசுந்தாள் உரத்தையும் பயன்படுத்தினர். இவற்றை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. களையெடுத்தல் : வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். பயிர்ப்பாதுகாப்பு : களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். அறுவடை : பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு மாடுகளை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர். உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். தூய்மை செய்தல் : நெல்லரிந்து, மாடுகளை விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். . இதன்முலம் தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 09:28AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 09:28AM.
உணவு உண்ணும்போது அதிக வியர்வை சுரப்பதற்கு என்ன காரணம்? 🌶 நல்ல சுவையான உணவை உண்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. உணவு காரமாகவும் சூடாகவும் உண்ணவே பலர் விரும்புவதைப் பார்க்கலாம். அப்படி உணவு உண்ணும்போது வியர்வை வருவதற்கு என்ன காரணம்? 🌶 நம்முடைய நாக்கு தாங்கிக்கொள்ளும் அளவை விட சூடான உணவையோ, காரமான உணவையோ உண்ணும்போது நம்முடைய உடல் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இதன் விளைவால் உணவு செல்லக்கூடிய தொண்டைக் குழாய்க்கு தொடர்புடைய அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. 🌶 இதன் காரணமாக நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து இருந்தாலும் கூட, முகத்தில் அதிக வியர்வை வெளியேறும். 🌶 அதன் தாக்கம் அதிகமாகும்போது தும்மல் ஏற்படும், கண்களில் இருந்து தண்ணீர் வெளிவரும். 🌶 காரமாக சாப்பிட நினைப்பவர்கள் மிளகாய்க்கு பதிலாக மிளகு பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது. 🌶 அதிகமான காரத்தினால் நம் உடலில் உள்ள திசுக்கள் கரைக்கப்பட்டு நீராக வெளிவருகிறது. இதுவே ஒவ்வாமை என்று (allergy) சொல்லப்படுகிறது. 🌶 அதிகமான காரத்தை எடுத்துக்கொள்ளும் போது, அதை ஏற்றுக்கொள்ளாத போது உடலில் வியர்வை வெளியேறுவதோடு நாக்கு, உதடுகள் பாதிக்கப்பட்டு சிவந்து விடும். இதற்கு (inflammation) என்று பெயர். 🌶 எனவே அதிக சூடான உணவையும், அதிக காரமான உணவையும் உண்ணுவது பாதுகாப்பானது அல்ல. 🌶 அதே போல் அதிகமாக குளிரூட்டப்பட்ட பானங்களை அருந்துவதாலும், குளிரான நீரை அருந்துவதாலும், நெஞ்சுவலி ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. 🌶 நம்முடைய நாக்கு, தாங்கக்கூடிய அளவிலான காரத்தையே நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தாங்கிக்கொள்ள முடியாத காரமான உணவும், சூடான உணவும், மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 01:27PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 01:27PM.
காமராஜர் 📖 கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 📖 தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய குணநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார். 📖 1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 📖 இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். 📖 இவரது ஆட்சியின்போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், பச்சைத்தமிழன் என்றும் பாராட்டியுள்ளனர். 📖 பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் (1975) மறைந்தார். மறைவுக்குப்பின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 01:50PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 01:50PM.
மணப்பாகு என்றால் என்னவென்று கேள்விப்பட்டதுண்டா? இன்று மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் 'சிரப்" தான் அன்றைய தமிழர்களின் மணப்பாகு. வேர், பழம் முதலியவற்றின் சாறினை சரியான முறையில் எடுத்து உடல்நலனுக்காக தொடர்ந்து பயன்படுத்தும் முறையே மணப்பாகு எனப்பட்டது. எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால் பிரபலமான 'நன்னாரி வேர் சிரப்"-னை சொல்லலாம். நன்னாரி வேரின் சாற்றில் செய்யப்படுவதால் இதனை நன்னாரி மணப்பாகு என்றும் அழைக்கலாம். ஆனால், இன்று கடைகளில் பல வண்ணங்களில் கிடைக்கும் நன்னாரி சிரப் ஒரிஜினல் நன்னாரி வேர் சிரப் அல்ல. நன்னாரி வேரின் சிறப்புகள் : இந்த நன்னாரி வேர் சிறுநீரகம் சம்மந்தமான அனைத்து சிக்கல்களையும் தீர்க்கக்கூடியது. பொதுவாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடல் சோர்வு, சிறுநீரகப் பிரச்சனை போன்ற அனைத்து சிக்கல்களும் வரவே வராது. காலையும், மாலையும் 10 மில்லி நன்னாரி வேர் சிரப்புடன் எலுமிச்சை சாற்றை கலந்தோ அல்லது தண்ணீர் மட்டும் கலந்தோ ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். குறிப்பாக ரத்தம் முழுவதுமாக சுத்திகரிக்கப்பட்டு நல்ல எனர்ஜி தரும். கூடவே, சிறுநீரகம் சம்மந்தமான எந்த சிக்கலும் வரவே வராது. குறிப்பாக இன்றைய காலக்கட்டங்களில் நாம் இரவில் அதிகம் விழித்து இருக்கிறோம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான். எனவே, அனைவரும் இந்த நன்னாரி வேர் ஜூஸினை தினசரி எடுத்துக் கொள்வது நல்லது. நன்றாக இருக்குமா? அருமையான மணமும், சுவையும் நிறைந்தது இந்த நன்னாரி சிரப். எலுமிச்சை சாற்றை கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும். ஒரிஜினல் நன்னாரி சர்பத்தை எப்படி கண்டுபிடிப்பது? பொதுவாக இன்று நன்னாரி வேரில் ஒரிஜினலாக செய்த சிரப் கிடைப்பதில்லை. எசென்ஸ் மூலம் செய்த நன்னாரி பானங்கள் தான் நிறைய இருக்கிறது. இதனைக் கண்டறிய ஒரு எளிய வழி இருக்கிறது. வெதுவெதுப்பான பாலில் எசென்ஸ் கலந்த நன்னாரி சிரப்பினை ஊற்றினால் பால் திரிந்து விடும். ஆனால், ஒரிஜினல் வேரில் செய்த சிரப்பினை ஊற்றினால் பால் திரியாது. இதனை எளிமையாக நமது வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 02:55PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 02:55PM.
பெண்களின் தற்காப்பு..!! 'அன்னையாய் அன்பை காட்டியும் சகோதரியாய் சண்டையிட்டும் தோழியாய் தோள் கொடுத்தும் காதலியாய் தன் காதலை தந்தும் மனைவியாய் உணர்வை பங்கிட்டும் மகளாய் எனக்கு மன நிறைவை ஊட்டியவளே என்றும் உன் புகழ் பாடவே எந்நாளும் உமக்கு நன்நாளாய் அமையவே வேண்டுவேன் இறைவனை..!" பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது. தனியாக வெளியில் செல்லும் போதும், வீட்டில் தனியாக இருக்கும் போதும் இந்த கலை உதவும். வீட்டிற்கு புதிதாக வரும் நபரின் மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து நாம் அகல கூடாது. ஏனெனில் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் முன், அவர்கள் நம்மை தாக்க நேரிடலாம். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பெண்கள் தனியாக வெளியில் செல்லும் போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்ல கூடாது. இன்னும் சொல்லப்போனால் தங்க, வைர நகைகளை அறவே தவிர்த்து, கவரிங் நகைகளையோ அல்லது பிளாஸ்டிக்காலான நவீன வடிவத்தில் உள்ள நகைகளை அல்லது மணிகளை அணிந்து செல்லவும். பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வௌ;வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின்போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும். முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும். முதன் முறையாக தனியாக பயணிக்கிறீர்கள் என்பது வெளியே தெரியும்படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, குரலில் திடமான பேச்சு வேண்டும். அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் வாங்கக் கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட வேண்டும். மேலும் வெளியூர்களுக்கு தனியாக செல்லும் போது பெப்பர் ஸ்பிரேவை உடன் எடுத்து செல்லுங்கள். இது ஆபத்தான சமயங்களில் உங்களை காக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் வீடு செல்ல வேண்டி இருந்தால் உறவினர் துணையோட வீட்டிற்கு செல்ல வேண்டும். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். யாரையும் எளிதில் நம்பக் கூடாது. யாரை நம்பியும் தம்மை பற்றிய தகவலை சொல்ல கூடாது. அனைவரிடமும் பழகும் போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும். '
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 05:10PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 15, 2018 at 05:10PM.
சுக்கின் மருத்துவப் பயன்கள் !! நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு நமது வீட்டில் உள்ள உணவுப் பொருள்களே சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. எனவே அவைகளில் ஒன்றான சுக்கின் மருத்துவப் பயன்களைப் பற்றி இங்கு தெரிந்துக்கொள்வோம். 👉 சுக்கு, ஐந்து மிளகு மற்றும் ஒரு வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 👉 சிறிதளவு சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 👉 சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, சுக்குநீர் காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி மற்றும் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். 👉 சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமடையும். 👉 தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் சரியாகும். 👉 தினந்தோறும் சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் நீங்கும். 👉 சிறிதளவு சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். 👉 எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு சுக்கின் தூளைக் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 👉 சுக்குடன் சிறிது பால் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும். 👉 சுக்குடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை சரியாகும். 👉 சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினந்தோறும் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவந்தால் விஷக்காய்ச்சல் குறையும். 👉 சுக்கு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால் நீர்க்கோவை நீங்கும். 👉 சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி முற்றிலும் குணமாகும். 👉 சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று சாப்பிட்டால் தொடர் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 16, 2018 at 07:19AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 16, 2018 at 07:19AM.
ஆண்களுக்குத்தான் வருமா? ஆண்களுக்கு மட்டுமே இதய நோய்கள் வரும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில், இந்தக் கருத்து மாறியிருக்கிறது. சமூக ரீதியான காரணங்கள்!! பெண்கள் என்றால் மென்மையான இயல்புடையவர்கள் என்ற சமுதாயப் பார்வை இருந்தது. இதன் காரணமாக கடினமான உழைப்புக்கு ஆண்களும், மென்மையான வேலைகளுக்குப் பெண்களும் நியமிக்கப்பட்டார்கள். இதனால் மென்மையான வேலைகளைச் செய்யும் பெண்கள் இதய நோய்க்கு ஆளாக வாய்ப்பில்லை என்ற தவறான கருத்து நிலவி வந்தது. ஆனால், காலப்போக்கில் பெண்களின் வாழ்க்கைத் தரத்திலும் சமூக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த இரண்டு கருத்துகளையும் தகர்த்து எறிந்துவிட்டன. இன்றையப் பெண்கள்! இன்றைக்குப் பெண்கள் கடுமையான உடல் உழைப்பைத் தரக்கூடிய எல்லா வகையான வேலைகளையும் செய்கிறார்கள். எனவே பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படாது என்ற பழைய கொள்கை தகர்க்கப்பட்டுவிட்டது. ஆண்களைப் போலவே எல்லாவிதமான வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதை அனைவரும் இன்றைக்கு உணர்ந்திருக்கின்றனர். ஆனால் இதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில் பெண்களின் உடலில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. சிறப்பு அம்ஷம் என்ன? பெண்கள் பருவமடைந்த காலத்தில் இருந்து மாதவிலக்கு முற்றுப் பெறுவது வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உடலில் பெண்களை இதய நோய்களில் இருந்து காக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இந்தப் பாதுகாப்பானது மாரடைப்பு எப்பொழுது? 💖 மாரடைப்பு ஆண்களை இளமைப் பருவத்திலும் பெண்களை நடுத்தர வயதிலும் பாதிக்கிறது. மாதவிலக்கு முற்றுப்பெற்ற பெண்கள், ஆண்களுக்கு இணையாக மாரடைப்புக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. 💖 குழந்தை பெறும் பருவ காலங்களில் இதய நோய்களில் இருந்து இயற்கையான பாதுகாப்பு கிடைத்தாலும் உலக அளவில் இதய நோய்களுக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகப் பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 💖 பெண்களுக்கு நடுத்தர வயதில், குழந்தை பெறும் பருவ காலங்களில், மாரடைப்புக்கு ஆளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 💖 பெண்களின் வாழ்க்கை நிலையும், சமூக நிலையும் பெருமளவு மாறியிருப்பதே இதற்குக் காரணம். தற்காலப் பெண்கள் நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு உணவு வகைகளை அதிக அளவு சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றாட உணவில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவு வகைகளையும், இனிப்பு வகை உணவுகளையும், உப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். தற்காப்பு முறைகள் 💖 வயது, உயரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு எடையை ஒரே சீராக வைத்துக் கொள்ளவேண்டும். 💖 உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவை அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும். அளவிற்கு அதிகமாக இருந்தால் தக்க மருந்துகள், தக்க உணவு முறைகள் மூலமாகக் கட்டுப்படுத்த வேண்டும். 💖 30 வயதைக் கடந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறையாவது தங்களுடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைச் சோதித்துக் கொள்ளவேண்டும். 💖 அன்றாடம் உங்கள் வயதுக்கு ஏற்ப, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் பயிற்சி போன்ற ஏதாவது ஒன்றில் அரைமணி நேரம் ஈடுபடலாம். 💖 மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் நல்ல பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நேரத்தை அவற்றிற்காக ஒதுக்கலாம்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 16, 2018 at 10:07AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 16, 2018 at 10:07AM.
டிவி பார்ப்பதால் ஏற்படும் தீங்குகள்! அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக நோய்வாய் படுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் நீங்கள் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம். பாதிப்புகள்: 🌞 உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம். 🌞 நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது. 🌞 ஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்குறீர்கள். இவை அனைத்தும் சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. 🌞 உடல் எடை அதிகமானதாலும் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது. 🌞 உடல் தசைகள் வேலையின்றி இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது. இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 🌞 இந்த என்சைம்கள் தான் உங்களின் உடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன. நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போது உங்களின் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும். 🌞 எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான். நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது உங்களின் உடலில் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி, அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். 🌞 உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 17, 2018 at 12:58PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 17, 2018 at 12:58PM.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது... நம்மால் வெளியிடப்படும் 'சிரிப்பு" என்ற செயலுக்கு ஈடாக உலகில் எதுவும் இருக்க முடியாது. பல கோடி மதிப்புள்ள உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காமல், முகத்தை ஏழுக்கோணத்திற்கு கேவலமாக வைத்துக்கொண்டால் பார்க்கவே சகிக்காது. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் எண்ணங்களையும் ஆற்றலையும் கூட நேர்மறையானதாக மாற்றியமைக்க இந்த சிரிப்பு உதவுகிறது. 'சிரிப்பு சிகிச்சை" என்று கூட தொடங்கப்பட்டுவிட்ட நிலையை பெற்றுள்ளது சிரிப்பு. பல ஹார்மோன்களின் சுரப்பை சீராக்கும் திறன் சிரிப்புக்குள்ளது. முக அழகை வசீகரமாக்கி சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகுடையவர்களாக காட்டுகிறது. மகிழ்ச்சி நம்மை தேடி வரும் என்று நின்று கொண்டு இருக்காமல், அத்தகைய சூழலை நாம் ஏற்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் அவர்களுடைய குறு குறு பார்வையும், செல்லப் பிராணிகளின் சேட்டையும், நம்மை அறியாமலே புன்சிரிப்பை வரவைத்து விடும். உலகிலேயே மிகவும் கடினமாகக் உணரப்படும் விஷயமாக கருதப்படுவது மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். 'வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்" என்ற பழமொழி ஏதோ வாய்ப்போக்கில் சொன்ன ஒரு வாக்கியம் இல்லை. சிரிப்பின் மதிப்பை அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதை கூறி இருக்க முடியும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 18, 2018 at 02:18PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 18, 2018 at 02:18PM.
டயர் மட்டும் ஏன் கறுப்பு நிறத்திலேயே வருகிறது என யோசித்துப்பார்த்தீர்களா? அழி ரப்பர், ரப்பர் பேண்டு, ரப்பர் பைப்பு, ரப்பர் கிளவுஸ், ரப்பர் செருப்பு, ரப்பர் கைக்கடிகாரம் என நாம் ரப்பரை எங்கு பார்த்தாலும் அது பல வண்ணங்களில் கிடைப்பதாக உள்ளது. ஆனால், ரப்பரில் தயாராகும் டயர் மட்டும் ஏன் கறுப்பு நிறத்திலேயே வருகிறது என யோசித்துப்பார்த்தீர்களா? ரப்பரின் உண்மையான நிறம் வெள்ளைதான். ஆனால், கார் டயர் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறது? ரப்பர் பொருள்களைத் தயாரிப்பவர்கள் எந்த நிறம் தேவையோ அந்த நிறத்தைச் சேர்த்துக்கொள்வார்கள். டயர்களை கறுப்பு நிறத்தில் மாற்றுவதற்கு தயாரிப்பாளர்கள் `கார்பன் பிளாக்' என்ற பொருளைச் சேர்க்கிறார்கள். கார் டயர்கள் கண்டுபிடிக்கப்பட்ட 1895-ம் ஆண்டில் இவை வெள்ளை நிறத்தில்தான் வந்துகொண்டிருந்தன. `வல்கனைசேஷன்' எனும் ஒரு முறையைப் பயன்படுத்தி ரப்பரை கடினமாக்குவார்கள். வல்கனைசேஷன் செய்யப்பட்ட பிறகும் ரப்பர் வெள்ளையாகத்தான் இருக்கும். இந்த வெள்ளையான ரப்பராலான டயர்கள் சீக்கிரமே தேய்ந்துவிடுவதாகவும், தொலைதூரப் பயணங்களில் சூடாகி அதன் வடிவம் மாறுவதாகவும் கருத்துகள் வந்தன. இதை சரிகட்ட, ஜிங்க் ஆக்ஸைடு எனும் பொருளை ரப்பருடன் சேர்த்தார்கள். இது, ரப்பரை பால் வெள்ளை நிறத்தில் பளிச்சென காண்பித்தது. நாம் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் கறுப்பு டயர்கள், உலகப்போர் சமயத்தில் உருவானவை. ஜிங்க் ஆக்ஸைடு சுலபமாகக் கிடைக்கும் பொருளாக இருந்தாலும், அதைத் தனியாக உற்பத்தி செய்யவேண்டியிருந்தது. இன்ஸ்டாகிராமில் நம் படத்துக்கு ஃபில்டர் போடுவதுபோல அது ஒரு பெரிய ப்ராசஸ். வேறு எதையாவது பயன்படுத்துவோம் என முடிவெடுத்து, நிலக்கரி மற்றும் பெட்ரோல் சுத்திகரிப்பில் மிச்சமாகும் `கார்பன் பிளாக்' எனும் பொருளை ரப்பரோடு சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கார்பன் பிளாக்கைப் பயன்படுத்துவதால் தேய்மானம் குறைவதைக் கண்டு முதலில் அதை டயரின் டிரெட்டில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இதனால் டிரெட் கறுப்பாகவும் டயரின் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் இருந்தன. இதைத்தான் `ஒயிட்வால் டயர்கள்' என்பார்கள். இந்த ஒயிட்வால் டயர்கள் குறைந்த காலத்துக்கு மட்டுமே உற்பத்தியாகின. இவை மதிப்பானவைபோலப் பார்க்கப்பட்டதால் போலிகள் அதிகமானது. டயர்களை முழுவதுமாக கறுப்பு நிறத்தில் செய்துவிட்டு, பக்கவாட்டு பகுதிகளுக்கு மட்டும் வெள்ளை ரப்பர் கோட்டிங் கொடுத்துவிடுவார்கள். உண்மையான ஒயிட்வால் உங்களிடம் இருந்தால் அதன் மதிப்பு இப்போது மில்லியன் டாலர் கணக்குகளில் இருக்கும். தயாரிப்பின்போது ரப்பருடன் மற்ற கலர் பொருள்களைச் சேர்ப்பதால் கலர் கலர் டயர்களை உருவாக்க முடியும். ஆனால், அது எதுவும் கார்பன் பிளாக் தரும் கடினத் தன்மையையும், சூட்டைத் தாங்கும் திறனையும் பெற்றிருப்பதில்லை. இதனாலேயே அனைத்து தயாரிப்பாளர்களும் கறுப்பு நிற டயர்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் பிளாஸ்டிக் மற்றும் சிலிக்காவைக் கலந்து கலர் டயர்களை உருவாக்கினார்கள். இது சிறந்த கிரிப்புடன் இருந்தாலும் அதிகமாகத் தேய்வதால் பார்வைக்கு மட்டும் பயன்படுத்தினார்கள். குட்ரிச் எனும் அமெரிக்க நிறுவனம், தனது டயர்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறத்தில் கஸ்டமைஸ் செய்துதருகிறது. கலர் டயர்களைத் தயாரிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. எந்த சைஸ், எந்த நிறத்தில், யார் வாங்குவார்கள் என்பதை கணிக்கவே முடியாது. இதனால், தயாரித்துச் சேமித்து வைக்க முடியாது. முன்பதிவு செய்து வாங்குவதாகத்தான் இருக்கும். உங்கள் பைக்குக்கோ அல்லது காருக்கோ டயர் 30 நாளில் வரும் என்றால், அதுவரை காத்திருப்பீர்களா என்ன? கறுப்பு நிற டயர்கள் சூரியக் கதிர்களாலும் ஓசோன் வாயுக்களாலும் பாதிக்கப்படாது. சூரிய வெளிச்சத்திலும் மழைச் சாலைகளிலும் பல ஆண்டுகள் வேலைசெய்தும் இவை நிறம் மாறுவதில்லை. தன்மையும் அப்படியே மாறாமல் இருக்கும். அவை நம் காரின் ஹேண்ட்லிங், ஆக்ஸிலரேஷன், பிரேக், கம்ஃபர்ட், பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியமான விஷயம் என்பதால், அதிக கடினமாகவும் நீடித்து உழைக்கும்விதமாகவும் உள்ள கறுப்பு டயர்களையே எல்லோரும் விரும்புகிறார்கள். டயர்களிலும்கூட `கறுப்பு' உழைப்பின் வண்ணம்!
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 09:20AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 09:20AM.
உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? ஒரு வெற்றி பெற்ற மனிதனாவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக, மதிப்புமிக்க மனிதனாவதற்கு முயற்சி செய்யுங்கள்’ என்று குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein). `மதிப்புமிக்க’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிடுவதில் அர்த்தமிருக்கிறது. நம்மில் பலருக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிவதில்லை. அதாவது, தங்கள் மதிப்பை தாங்களே உணராதவர்களாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். இந்த உலகில் யாரும் யாரைவிடவும் குறைந்தவரில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. `ஒன்றுக்கும் உதவாது என நினைக்கும் சிறு துரும்புகூட பல் குத்த உதவும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர். இதை மனதில் கொள்வோம். நம்மை நாமே மதிக்கக் கற்றுக்கொள்வோம். எதற்கும், யாருக்கும் அஞ்சாமல் நம் திறமையின் மேல் நம்பிக்கைவைப்போம். நாம் விலை மதிப்பில்லாதவர்கள்; தனித்துவமானவர்கள். சிலரால் நம்மைச் சரியாக மதிப்பிட முடியாமல் போகலாம். நம் மதிப்பு அவர்களுக்குத் தெரியாததுதான் அதற்குக் காரணமாக இருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் புறக்கணிக்கப்பட்டால், மனதை விட்டுவிடக் கூடாது. `அவர்கள் நம்மைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நம்மை நாமே எடை போட்டுக்கொண்டு, நம் மதிப்பைத் தெரிந்து வைத்திருக்கவேண்டியதும் அவசியம்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 10:36AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 10:36AM.
தங்கத்தில் இத்தனை விதமா? தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம். மற்றொன்று ஆபரணத்தங்கம். கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும். அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் என்பது. தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும். அதாவது 24 கேரட், 22 கேரட் 18 கேரட் 14 கேரட் 10 கேரட் 9 கேரட் 8 கேரட் என தரம் பிரிக்கின்றனர். தங்கத்தின் அளவு : 24 கேரட் தங்கத்தில் 99.9 சதவிகிதம் சுத்த தங்கம் இருக்கும். 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தூய தங்கம் இருக்கும். 18 காரட் தங்கத்தில் 75 சதவிகிதம் தூய தங்கம் இருக்கும். 14 காரட் தங்கத்தில் 58.5 சதவிகிதம் தூய தங்கம் இருக்கும். 10 கேரட்டில் 41.7 சதவிகிதம் தூய தங்கம் இருக்கும். 9 கேரட்டில் 37.5 சதவிகதம் தூய தங்கம் இருக்கும். 8 கேரட் தங்கத்தில் 33.3 சதவிகிதம் தூய தங்கம் இருக்கும். கலக்கும் உலோகங்கள்! 24 காரட் தங்கம் என்றால் சுத்தமான தங்கம். 22 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் மற்றும் ஜின்க் என %ன்று உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 91.70 சதவீதமும், வெள்ளி 5 சதவீதமும், காப்பர் 2 சதவீதமும், ஜின்க் 1.30 சதவீதமும் 22 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 18 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன, ஜின்க் சேர்க்கப்படுவதில்லை. தங்கம் 75 சதவீதமும், வெள்ளி 15 சதவீதமும், காப்பர் 10 சதவீதமும் 18 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 14 காரட் 14 காரட் தங்கத்தில் வெள்ளி, காப்பர் என இரண்டு உலோகங்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கம் 58.30 சதவீதமும், வெள்ளி 30 சதவீதமும், காப்பர் 11.70 சதவீதமும் 14 காரட் தங்கத்தில் இருக்கின்றன. 10 காரட் மற்றும் 9 காரட் 10 காரட் மற்றும் 9 காரட் தங்கத்தில் 18 மற்றும் 14 காரட் போன்று ஜின்க் பயன்படுத்தப்படுவதில்லை. 9 காரட் தங்கத்தில் வெள்ளி 42.5 சதவீதமும், காப்பர் 20 சதவீதமும் கலக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிதளவு மட்டும் 10 காரட் தங்கத்தில் வித்தியாசம் இருக்கும். இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ஆபரணத்தங்கத்தில் 22 காரட் சுத்த தங்கத்தையே பெரும்பாலான ஜீவல்லரி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து விற்கின்றனர். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள். தரத்தை அறிய ஹால்மார்க் : பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை. இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த அமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது. முத்திரையை யார் கொடுப்பார்கள்? BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும். ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொல்லர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 01:11PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 19, 2018 at 01:11PM.
PLU-வின் முக்கியத்துவம்! நாம் கடைகளில் வாங்கும் ஒருசில பழங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள் ஒட்டப்பட்டிருக்கும் அதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் யோசித்தது உண்டா? இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம். பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர் குறியீட்டிற்கான அர்த்தம் என்ன? சந்தைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட, நச்சுக்கொல்லியினால் தயாரிக்கப்பட்ட மற்றும் இயற்கை முறையில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அனைத்து வகை காய்கறிகளையும் விற்பனை செய்கிறார்கள். எனவே இது போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு தான் பழங்களில் பி.எல்.யு எனும் குறியீட்டு போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. பி.எல்.யு என்றால் என்ன? பி.எல்.யு (PLU) என்பது Price Look Up நம்பர் எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள், பழங்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டதா? மரபணு மாற்றம் செய்யப்பட்டதா? அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம். குறியீட்டை வைத்து கண்டுபிடிப்பது எப்படி? நான்கு இலக்க குறியீடு : காய்கறி மற்றும் பழங்களில் 1441 இது போன்று நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு : நாம் வாங்கும் காய்கறி மற்றும் பழங்களில் 81442 இது போன்று 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருந்தால், அது மரபணு மாற்றம் செய்து, விளைவிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. 9-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு : காய்கறி மற்றும் பழங்களில் 94532 இது போன்று 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால், அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் என்பதைக் குறிக்கிறது. இனிமேலாவது நீங்கள் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அது எவ்வகையானது என்பதை அறிந்துக் கொண்டு வாங்குங்கள்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 20, 2018 at 02:19PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 20, 2018 at 02:19PM.
ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி ஆச்சு 50 வருஷம்... அலோ அது உண்மையா?!
பூமியில் இருந்து 3.50 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய விண்வெளி சாகசங்களுக்கு முன்னோடியாக இருந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்வு அது.
பூமியில் உள்ளது போல் மனிதர்கள் உயிர் வாழ தேவையான பிராணவாயு, தண்ணீர் போன்றவை இல்லாத ஓரிடம் சந்திரன். எனவே மனிதன் அங்கு சென்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பப்பட்டு வந்தது. இத்தகைய நிலையில் சந்திரனுக்கு யார் முதலில் செல்வது என்ற ஆய்வில் வல்லரசுகளாக திகழ்ந்த ரஷ்யாவும், அமெரிக்காவும் ஈடுபட துவங்கின. அதன் முதன் முயற்சியாக பூமியை சுற்றி ''ஸ்புட்னிக்'' எனும் விண்வெளிக் கப்பலை 1957-ல் மிதக்க விட்டது. அதன் தொடர்ச்சியாக 1961-ல் ககாரின் என்ற வின்வெளி வீரரை ராக்கெட்டில் அனுப்பி பூமியைச் சுற்றிவிட்டு பத்திரமாக திரும்பி வர செய்து சாதித்தது ரஷ்யா. இதற்குப் போட்டியாக அதே ஆண்டில் ஷெப்பர்டு என்ற விண்வெளி வீரரை ராக்கெட் மூலம் பூமியைச் சுற்றிவர செய்தது அமெரிக்கா. இரண்டு ஆண்டுகளுக்கு பின் 1963-ம் ஆண்டு ஜூன் 16-ல் வாலண்டினா தெரஸ்கோவா என்ற இளநங்கையை பூமியைச் சுற்றி பறக்க செய்து பதிலடி கொடுத்தது ரஷ்யா.
இரு வல்லரசுகளுக்கு இடையே நடந்த இந்த விண்வெளி பயணப் போட்டியில் தனது நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்டிராங் என்பவரைச் சந்திரனில் காலடி பதிக்க வைத்து சாதனை சிகரத்தை அடைந்தது அமெரிக்கா. சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை 1969 ஜூலை 15-ல் துவக்கியது அமெரிக்கா. அதற்கான ஒத்திகைகளும் முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. மறுநாள் இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி முனையில் இருந்து ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 வீரர்களுடன் சந்திரனை நோக்கி 'அப்பல்லோ 11' என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. மறு நாளே தாங்கள் நலமுடன் இருப்பதாகவும், சரியான திசையில் ராக்கெட் பயணித்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் பூமிக்கு தகவல் கொடுத்தனர்.
மணிக்கு 3500 மைல் வேகத்தில் சென்ற ராக்கெட் 18-ம் தேதி சந்திரனை நெருங்கியது. மறுநாள் சந்திர மண்டலத்தினுள் புகுந்த ராக்கெட் சந்திரனை சுற்றத் துவங்கியது. 20-ம் தேதி மாலை சந்திரனுக்கு அனுப்பட்ட பிரதான ராக்கெட்டில் இருந்து ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் ஆகிய இருவரும் சந்திரனுக்குள் செல்லக் கூடிய பூச்சி போன்ற வடிவம் கொண்ட 'ஈகிள்' வண்டியினுள் சென்றனர். இரவு 12 மணி நெருங்கவிருந்த வேலையில் இந்தப் பூச்சி வண்டியானது பிரதான ராக்கெட்டில் இருந்து வெளிவந்து சந்திரனை சுற்றியது. சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின் சந்திரனை அடைந்தது அந்த வண்டி. அதனுள்ளேயே இருந்தவாறு ஓய்வு எடுத்தனர் வீரர்கள் இருவரும்.
21-ம் தேதி காலை சரியாக 8.26 மணிக்கு பூச்சி வண்டியில் இருந்த வெளியே வந்த ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தன் கால் தடத்தினை பதித்தன் மூலம் 'நிலவில் கால் பதித்த முதல் மனிதன்' என்ற அழியாத சரித்திரத்தினையும் படைத்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தார். சந்திரனில் சிறிது தூரம் நடந்த இருவரும் அங்கிருந்த கல், மண் ஆகியவற்றை சேகரித்ததுடன், தங்கள் நாட்டு கொடியினையும் அங்கு நட்டார்கள்
உலகம் வியக்கும் சாதனையினைப் படைத்த விண்வெளி வீரர்கள் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் மீண்டும் பூச்சி வடிவ வண்டிக்குள் சென்று பிரதான ராக்கெட்டிற்குள் நுழைந்தனர். அங்கிருந்து பூமியை நோக்கி பறந்த அந்த ராக்கெட் 24-ம் தேதி இரவு 10 மணி 19 நிமிடங்களுக்கு பத்திரமாக கொலம்பியா கடலில் வந்து இறங்கியது. உலகின் உயர்ந்த சாதனையினை படைக்க உதவிய 'அப்பலோ 11' ஐ தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது. இதற்கு செலவிடப்பட்ட தொகை 1.74 லட்சம் கோடி ரூபாய்.
இதன் பின்னரும் அமெரிக்கா சந்திரனுக்கு பலமுறை ராக்கெட்டுகளில் மனிதர்களை அனுப்பி பல்வேறு சோதனை நடத்தி வந்தது. ஒரு கட்டத்தில் அங்கு மனிதன் வாழும் சூழல் இல்லை என்பதால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்வத்தை குறைத்து கொண்டது.
இந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் அது உண்மையில்லை என்ற பேச்சு கிளம்பியது.
"உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். இங்கேயிருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி.க்காக அடித்துக் கொள்கிறார்களே. அது போல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது."
நிலவைத் தொட்ட நீல் ஆம்ர்ஸ்டிராங்குக்கும் அவர் டீமுக்கும் இந்தப் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

மாதங்களின் பெயர்க்காரணம்!
12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தைப் பற்றி காண்போம்.
ஜனவரி :
ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.
பிப்ரவரி :
மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.
மார்ச் :
மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியதுதான் மார்ச் மாதம் ஆகும்.
ஏப்ரல் :
ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.
மே :
இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும்.
ஜூன் :
ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும்.
ஜூலை :
மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார்.
ஆகஸ்ட் :
ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது.
செப்டம்பர் :
ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
அக்டோபர் :
அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது.
நவம்பர் :
நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
டிசம்பர் :
டிசம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான டிசம் என்றால் பத்து என்று அர்த்தம். இதனால் டிசம்பர் என்று அழைக்கப்பட்டது. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், பன்னிரென்டாம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்..!!
சிதம்பரம் நடராஜர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் என்றும், சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றும், சிதம்பரம் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
சிலையின் வரலாறு :
சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும் தோஷமும் தீர, தில்லை சிவகங்கை குளத்தினில் மூழ்கி குணமடைந்ததால், தில்லை நடராஜருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணினான். அதன்படி, நமச்சிவாய முத்து என்ற ஸ்தபதியைக் கொண்டு தாமிரத்தால் ஆன சிலையை வடிவமைத்தான். இதுவே தில்லை நடராஜர் சிலையாகும். சிலையின் அழகில் மயங்கிய மன்னன், அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச் செய்தான். அடுத்து இரண்டு சிலைகள் அதேபோல் செய்தான். பின் இதுபோல் சிலையை இனி உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கையை அரசன் துண்டித்துவிட்டான். சிற்பி அசராது மரத்தால் ஆன கை செய்து, அதற்கு பிறகு மற்றொரு ஐந்தாவது சிலையினை செய்தான். இதனால் ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும்.
கோவிலின் கட்டிட அமைப்பு :
இக்கோவிலில் நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும்.
கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளம் கொண்டதாகவும், 60 அடி அகலம் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும்.
கோவிலின் சிறப்புகள் :
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.
சிதம்பர ரகசியம் :
மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது, இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிலையின் சிறப்புகள் :
சிலையின் முன்னால் இருந்து பார்த்தால் நடராஜர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில் இருப்பார். பின்புறம் இருந்து பார்த்தால் ஒருகால் தூக்கி ஆடுவது தெரியும்.
எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் திருமூலரும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வாழ்க..! தமிழரின் பெருமை வாழ்க..!

நீங்கள் வாங்கும் பால் கலப்படமானதா? கலப்படம் என்பது இன்று, நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு தனிப் பொருளாக உள்ளது. வண்டிக்கு போடும் பெட்ரோலில் இருந்து, நம் உடலுக்கு ஊட்டும் உணவுப் பண்டம் என அனைத்துமே இன்று கலப்படத்தில் திளைக்கிறது. உடுத்தும் ஆடையில் கலப்படம், பூசிக்கொள்ளும் முகப் பூச்சில் கலப்படம் என்றால், அதன் விளைவைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளல்லாம். ஆனால், நாம் உட்கொள்ளும் உணவில் கலப்படம் என்றால், நம் உடலே அதற்கு முழு இரையாகி விடுகிறதே! விழிப்புணர்வு : ஒரு பக்கம் இதை எதிர்த்து போராட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரோ ஆர்கானிக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே கலப்படத்தைக் கண்டறிந்து அதை ஒழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது போல தற்போது பரவி வரும் பால் கலப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம், விட்டமின் ஏ, பி12, தையாமின் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலும், மக்களுடைய பால் நுகர்வு அதிகரித்துள்ளதாலும், தேவைக்கு ஏற்ப பால் வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளதால் தனியார் பால் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதனால் தான் கலப்படமும் அதிகரித்துள்ளது. வெளுத்ததெல்லாம் பாலா? கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள் யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்து விடுவார்கள். அவர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழிதான் இது. இப்போது பால் விஷயம் இதற்கு ஒருபடி மேலே போய்விட்டது. நம்பிக்கை தளர்ந்துபோய்விட்டது. நாம் அருந்தும் பால் வெள்ளையாக இருந்தாலும்கூட நிஜமான பால் எவ்வளவு? கலப்படம் எவ்வளவு? என்ற கேள்வி பிறந்துவிட்டது. முன்பெல்லாம் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று பரிசோதிப்பார்கள். தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையும். வேறு தீமை இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ஸ்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் வேதிபொருட்களை சேர்க்கிறார்கள். சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயம் வழங்கிய விதிமுறைப்படி பால் கலப்பட தேசிய ஆய்வு பல்வேறு மாநிலங்களிலும் பால் சாம்பிள் வாங்கிப் பரிசோதித்த போது பல்வேறு கலப்படங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2,000 சாம்பிள்களில் சோதனை நடந்தது. அவற்றில் 30 சதவீதம் மட்டுமே நிஜமான பால் என்றும் 70 சதவீதம் கலப்படப் பால் என்றும் நிரூபணம் ஆயின. மேலும் சுத்தமான பாலுடன் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பால் பவுடரும் கலக்கப்படுகிறது. இதன் கெட்டித் தன்மைக்கு டிடர்ஜண்ட் பவுடரையும் கலக்கிறார்கள். யூரியா போன்ற ரசாயனம் சேர்த்த பாலை அருந்தினால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. மருந்து : பசும்பாலை மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பாலுக்கு வைரஸ் எதிர்ப்பு சக்தி உண்டு என்றும் கூறப்படுகிறது. சிறார்களுக்கு நல்ல ஊட்ட உணவு. ஆனால் மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு என்ன? ஆகவே, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிக் கண்ட கண்ட பாலை வாங்க வேண்டாம். வாங்கும் பால் தரமானதுதான என்பதை பார்த்து வாங்கி உடல் நலனைக் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 22, 2018 at 02:32PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 22, 2018 at 02:32PM.
தொலைநோக்கி..!! தொலைநோக்கி என்பது தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன் ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின. கலிலியோ தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். அதன்பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் பங்கு தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம். சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார், காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம். அதற்கு மாறாக சந்திரன் கரடுமுரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன்முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது. தொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16-ஆம் நூற்றாண்டிலேயே விவரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608-ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தன. இந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் அய்சக் நியூட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது புறம் குவிந்த கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத்தான் செய்யும் என்பதை உணர்ந்த நியூட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார். இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத 'முதல் தொலைநோக்கி" உருவாக்கப்பட்டது. இத்தொலைநோக்கிகளுக்கு 'பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ் கோப்புகளும் செயல்படுகின்றன. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதுதான் 'ஹப்பிள் டெலஸ்கோப்". பூமியில் உள்ள டெலஸ் கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்தி வாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால்தான் இதற்கு 'தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப்" என்று பெயரிட்டுள்ளனர்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 22, 2018 at 04:43PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 22, 2018 at 04:43PM.
சாக்லேட் விரும்பி உண்பவர்களா நீங்கள்? இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாக்லேட்டை விரும்பி உண்ண ஆரம்பித்துவிட்டனர். கடைகளில் பல விதங்களில் இவை கிடைக்கின்றன. சில சாக்லேட்டில் உலர்ந்த பழங்களும், முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளும் போட்டு தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகள் அடம் பிடித்தாலும் வாங்கித் தராத பொருளாக டார்க் சாக்லேட் இருந்தது. ஆனால் அதில் உள்ள சத்து அளவிட முடியாதது என்பதை தற்பொழுது மக்கள் புரிந்து கொண்டதால், தற்போது பெற்றோர்கள் தாமாகவே குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். ஏனெனில் அந்த அளவில் சத்துக்களானது இவற்றில் உள்ளன. டார்க் சாக்லேட் கோக்கோ மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதை உண்பதால் இதய நோய், மூளை நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவையிலிருந்து எளிதாக விடுதலை பெற முடியும். இதயம் பலம் பெற! டார்க் சாக்லேட்டை ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை போக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றது. ஏனெனில் இதன் தன்மை இரத்தத்தை பெருக்குவதுடன், இரத்தம் உறைவதையும் தடுக்கும். ஐரோப்பிய நாடுகளில் சாக்லேட் இதய நோய்களை குணப்படுத்தும் என்று கண்டரியப்பட்டுள்ளது. இதனை செயல்முறையாகவும் நிருபித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதயத்தில் செயல்பாடு நிறுத்தம், பக்க வாதம், நினைவாற்றல் குறைவு மற்றும் மனநலம் பாதித்து பைத்திய நிலைக்கு சென்றடைதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களை வைத்து இதனை செய்துள்ளனர். வாரத்துக்கு 2 முதல் 6 சாக்லேட் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தக் குழாய் உதறல் நோய் பாதிப்பு குறைந்தது. இதன் மூலம் அதிக சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு அதிக கலோரி ஏற்பட்டு இதய தசைகள் மற்றும் ரத்த குழாய் தசைகளை வலுப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே இதய நோயாளிகள் சாக்லேட் சாப்பிடுவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள டார்க் சாக்லேட் உதவும். மேலும் சர்க்கரை நோயின் இரண்டாம் நிலையை போக்கவும் இவை உதவும். ஏனெனில் இதில் ஃப்ளேவோனாய்டுகள் (flavonoids) இருப்பதால், இவை செல்களை சீராக செயல்பட உதவுகின்றது. அதுமட்டுமின்றி, இதில் குறைந்த அளவு க்ளைசீமிக் இண்டெக்ஸ் இருப்பதாலும், இன்சுலின் அளவை கூட்டி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது. சிந்திக்கும் திறனை அதிகரிக்குமா? டார்க் சாக்லேட் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, மூளையையும் சிறப்பாக செயல் பட வைக்கின்றது. அதிலும் இவை மூளைக்கு சிந்திக்கும் திறனை வழங்குகின்றன. மேலும் வலிப்பு வராமல் காக்க டார்க் சாக்லேட் உண்ண வேண்டும். புற்றுநோயை கட்டுப்படுத்துமா? டார்க் சாக்லேட்டில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது. இதனால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இந்த ரேடிக்கல்கள் வயதாவதால் தோன்றும். மேலும் இதன் மூலம் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது. ஆனால் இதை டார்க் சாக்லேட் முற்றிலும் குணப்படுத்துகின்றது. அதிலும் வயதான தோற்றத்தை டார்க் சாக்லேட் உண்பதால் போக்க முடியும். இரத்த சோகை, இரண்டாம் ரக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்வதால் குணமாகும். பல் பிரச்சனை உண்டாகுமா? டார்க் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் பற்களில் உள்ள எனாமல் தன்மையை பலப்படுத்தும். அதவாது மற்ற இனிப்பை போன்று இவை பற்குழியை ஏற்படுத்தாது. எந்த வகை உணவை உண்டாலும் நன்றாக வாய் கொப்பளித்தால் தீங்கேதும் இல்லை.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 23, 2018 at 12:55PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 23, 2018 at 12:55PM.