Tamil short message
130 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

தைரியமாக தன்னம்பிக்கையுடன் இறுதிவரை போரிடுபவர்களுக்கு வாழ்வின் இருளான எல்லாவற்றையும் வெற்றிகொள்வது சாத்தியம்.
படிப்பு விஷயத்தில் பெற்றோர் குழந்தைகளிடத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்...?? தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலர், குழந்தைகளுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு வழிமுறை தெரிவதில்லை. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் சில ஆலோசனைகள் முறையாக பின்பற்றினால், அவர்களது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய ஆலோசனைகள் இதோ உங்களுக்காக... ⭐ ஒரு வீட்டில் தொலைக்காட்சி பயன்படுத்துவது என்பது அவசியமானதுதான். அதே நேரத்தில், படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை நிறுத்திவிட வேண்டும். இந்த விதியை முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ⭐ படிக்கும் நேரத்தில் தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், ஏதேனும் முக்கியமான, பாட விஷயங்களைப் பற்றியோ, வீட்டுப்பாடம் பற்றியோ, சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில், தங்களின் பிள்ளைகள் பேசவேண்டியிருந்தால், அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். ⭐ வீட்டில் போதுமான வசதி இருந்தால், உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். மேலும், உங்களின் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட அனைத்து அவசியமான பொருட்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ⭐ இரவு நேரத்தில், குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். சில நாட்களில், பிள்ளைகள் பள்ளியிலிருந்து விரைவிலேயே வீடு வந்துவிட்டால், உணவுக்கு முன்பே வீட்டுப் பாடத்தை முடிக்க உதவலாம். ⭐ உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் கவனித்து, அதற்கேற்ப அவர்களுக்கு சிறிது நேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து, சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். ⭐ உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து, அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இது குறித்து பேசலாம். அந்த பாடத்தை முடிந்தால் நீங்களே நேரம் ஒதுக்கி சொல்லித்தரலாம் அல்லது டியூஷனுக்கு ஏற்பாடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். ⭐ தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்கும், சிலர் தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண்விழித்து படிப்பார்கள். ஆனால் இது போல் செய்வதை தவிர்த்தல் நல்லது. இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும். ⭐ தேர்வு எழுதும் முன்பாக, நன்றாக மூச்சை இழுத்துவிட்டு ரிலாக்ஸ் செய்யுமாறும் உங்கள் குழந்தைகளிடம் தவறாமல் கூறவும். மேலும் விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக இட வேண்டும். கேள்வித்தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும், தெரியாத கேள்விகளை தவிர்த்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுத வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கூறவேண்டும். மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும் குழந்தைகளிடம் கூறவேண்டும். ⭐ எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும், சாதுவான மற்றும் நார்மலான நிலையில் இருக்கும் குழந்தைகளை படிப்பு விஷயத்தில் அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் சரியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண பெற்றோர்கள் முயல வேண்டும். இவைகளை உங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் கடைபிடித்தால் நன்கு படிக்கும் சிறப்பான குழந்தையை உருவாக்கலாமே!

தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 26, 2018 at 01:45PM.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணமும் ஜாக்பாட்டாய் தெரியும் செவ்வாய் கிரகமும்!

சூரியன், பூமி, சந்திரன் இவை ஒன்றின் நிழலில் ஒன்று மறைந்து கண்ணாமூச்சி ஆடுவதே கிரகணம். எதன் மீது நிழல் விழுந்து அதன் வடிவம் மறைந்து விரிகிறதோ அதன் பெயரில் கிரகணம் அமையும். 

சூரியன்- பூமி- சந்திரன் நேர்க்கோட்டில் நின்று, பூமியின் நிழலுள் சந்திரன் மறைந்து விலகும் விளையாட்டு சந்திர கிரகணம் எனப்படும்.

சூரியன்- சந்திரன்-பூமி என்று வரிசைப்படுத்தி சந்திரன் சூரிய ஒளியைப் பூமிக்கு மறைக்க முயன்றால் அது சூரிய கிரகணம்.

சந்திர கிரகண நேரம்:

சூரியன் ஒளி பூமியில் பட்டு அதன் நிழல் பூமிக்குப் பின்னால் விழும். அந்த நிழல் பாதையில் நிலவு கடந்து வரும் காலம்தான் கிரகண நேரம். மேலும் அந்த நிழல் அடர்த்தியின் போக்கில் மூன்று வகையான நேரம் குறிக்கப்படுவது உண்டு. 

மெல்லிய நிழல் பகுதிக்குள் நுழைவது (partial eclipse) முதல் விலகுவது வரை உள்ள மொத்த கால அளவு.

பூமியின் நிழல் பரவி நிற்கும் முழு நீளத்தையும் கடந்து வரும் காலம். இது மொத்த கிரகண (total eclipse) நேரம் எனப்படும். அதாவது மெல்லிய கீற்றாய் மறையத் தொடங்கி பிறையாய் மாறி, முழுதும் மறைந்து மீண்டும் நிழல் விலகி முழு நிலவு வெளிப்படும் கால அளவு.

சரியாக பூமியின் கோள நிழல் நிலவில் விழுந்து ஏற்படும் முழு கிரகண (greater eclipse) நேரம்.

ஆய்வின் படி முழு அளவில் கிரகணம் நிகழும் காலம் (maximum time of full eclipse) அதிக பட்சமாக 1 மணி நேரம் 47 நிமிடங்கள்தாம். கிட்டத்தட்ட அதை நெருங்கிய கால அளவே பதிவானது ஜூலை 16, 2000. அன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் கால அளவு 1 மணிநேரம் 46.4 நிமிடம். இதுதான் 20 ம் நூற்றாண்டின் மிகநீண்ட கிரகணம்.

21 ம் நூற்றாண்டின் மிகநீண்ட கிரகணம் 27 ஜூலை 2018 ல் நிகழும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, 1 மணி நேரம் 42 நிமிடம் 57 நொடிகள் நிகழும் எனக் கணித்துள்ளனர். 

21 ம் நூற்றாண்டின் மிகக்குறுகிய கிரகணம் நிகழ்ந்தது ஏப்ரல் 4, 2015. அது வெறும் 4 நிமிடம் 48 நொடி மட்டுமே.

இந்தக் கால அளவு மாற்றத்துக்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று பூமி - சந்திரன் இடையிலான தூரம். மற்றொன்று, நிழலில் கடந்து போகும் பகுதி. நிழலின் மேல் பகுதியோ கீழ்ப்பகுதியோ கடக்க காலம் குறைவாகவே பிடிக்கும். ஜனவரி 31, 2018 அன்று நிகழ்ந்தது நிழலின் மேற்பகுதியைக் கடந்தது.

27 ஜூலை 2018 அன்று…

இந்தக் கிரகணம் பூமியின் கிழக்கு அரைக்கோளம் நோக்கி இருப்பதால் இதை வட அமெரிக்கர்கள் காண்பது கடினம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா மக்களால்தாம் இதைக் கண்டு ரசிக்க முடியும். தென் அமெரிக்கர்கள் கூட இதன் இறுதிக் கட்டத்தை 28  ம் தேதி காலை சூரிய உதயத்தின் போது பார்க்க சில வாய்ப்புகள் உள்ளன. 27 மாலை சூரியன் மறையும் போது நியூஸிலாந்து நாட்டின் பக்கம் உள்ள மக்களால் இந்தக் கிரகணத்தின் தொடக்கத்தைப் பார்க்க முடியும். 

முழுச் சந்திர கிரகணம் நிகழ்வதை மடகாஸ்கர் மக்களால் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆசிய , ஐரோப்பியா, ஆப்பிரிக்க மக்களால் முழுதாக ரசிக்க முடியக்கூடிய கிரகணம் இதுவாக அமையும்.  

பகுதி கிரகணம்( Partial eclipse) 27 ஜூலை 18:24  UTC (இந்திய நேரம் 27 ஜூலை இரவு 11 : 54) ல் தொடங்குகிறது.

முழுக் கிரகணம் ( total eclipse) 27 ஜூலை 19:30  UTC (இந்திய நேரம் 28 ஜூலை 1:00) தொடங்குகிறது.

சிறந்த கிரகணம் ( Greater eclipse) 27 ம் தேதி 20:22  UTC (இந்திய நேரம் 28 ம் தேதி 1:52) நிகழ்கிறது

முழுக் கிரகணம் 21:13  UTC (இ. நே. 28 ஜூலை 02:43) ல் முடிகிறது.

பிற்பாதி கிரகணம் 22:19  UTC (இ.நே 28 ஜூலை 03:49) க்கு முடிகிறது.

கிரகணம் தொடங்கி முடிய 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும்.
 

இரட்டிப்பு விருந்து:

இந்தக் கிரகணம் நீண்டு நிகழக் காரணம் நிலவு நம்மை விடத் தொலைவில் இருக்கும். இதை அப்போஜி( Apogee) நிலை என்று சொல்வார்கள். இதனால் நிலவின் அளவு சிறிதாகத் தெரியும். சிறிய உருவம் பெரிய நிழலைக் கடக்க காலம் எடுக்கும் அல்லவா?

இந்த ஆண்டின் மிகச்சிறிய முழுநிலவு ஜூலை 27 அன்றுதான் தெரியப்போகிறது.

இதே தூரத்தின் காரணமாக இன்னொரு நிகழ்வும் நமக்கு விருந்து. ஜூலை 27 அன்று நிலவு செவ்வாய்க்கு மிக அருகில் செல்லும். அன்றைய இரவு நிலவுக்கு மிக அருகில் செவ்வாய் தெரியும். இது மட்டுமன்றி 2003 ல் இருந்து  சூரியன்- பூமி- செவ்வாய் சரியான நேர்கோட்டில் நிற்கும் நிகழ்வும் அன்றுதான் நிகழ உள்ளது.

ஒன்று கவனித்தீரா? இரண்டு நீண்ட கிரகணமும் நிகழ்ந்தது ஜூலை மாதத்தில்தான். அதற்குக் காரணம் இந்தத் தூரம்தான். ஜூலையில்தான் சூரியனை விட்டு பூமியும் விலகி நிற்குமாம்.

சூரியன் - பூமி - சந்திரன் - செவ்வாய் எல்லாம் ஒரே நேர்கோட்டில் நிற்கும் நாள் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் விருந்து தானே? நமக்கும் இந்த ஜூலை 27 - 28 வானில் விருந்துதான்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கார்கில் போர் நினைவு தினம்


🏁 ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர்.

🏁 நாட்டு மக்களுக்காக இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி, கார்கில் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலக சதுப்புநிலக் காடுகள் தினம்


🌳 புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே, இவற்றை அழியாமல் பாதுகாத்திட ஜூலை 26ஆம் தேதி உலக சதுப்புநிலக் காடுகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஏ.டி.எம் பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்...!!
இன்று அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஏ.டி.எம் மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுக்கும் வசதி வந்துவிட்டது. ஏ.டி.எம். வசதி போல், இன்று வங்கிகள் வழங்கும் ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தினால், உங்கள் காரியங்களை இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம்.

வசதிகள் பெருக பெருக, பிரச்சனைகளும் பெருகும் என்பது இதற்கு பொருந்தும்.

இரும்புத்திரை :

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? என்பதை இரும்புத்திரை திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

ஏ.டி.எம் பயன்படுத்தும் போது....

இன்று ஏ.டி.எம் பயன்படுத்தாதவர்களே இல்லை என்றே கூறலாம். பணத்தை பெற வங்கிக்கு செல்வதை காட்டிலும், ஏ.டி.எம்-யை தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம்-ல் நாம் சந்திக்கும் முதல் பிரச்சனை பணத் திருட்டு.

பணம் திருடு போவதை தடுக்க...

ஏ.டி.எம் கார்டின் முதல் பக்கத்தில் இருக்கும் 16 இலக்க எண்ணையும், ஏ.டி.எம் பின்புறத்தில் இருக்கும் 3 இலக்க எண்ணையும்.. உங்களை தவிர வேறு எவருக்கும் தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்.... உங்கள் மொபைலுக்கு நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம்... உங்கள் ஏ.டி.எம் கார்டு Expire ஆகிவிட்டது எனக்கூறி இந்த 16 இலக்க எண்ணையும், ஏ.டி.எம் பின்புறத்தில் இருக்கும் 3 இலக்க எண்ணையும் கேட்டால் கொடுத்துவிடாதீர்கள்.

ஏ.டி.எம் சம்பந்தமாக போன் மூலம் வங்கியில் இருந்து யாரும் தொடர்புகொள்ள மாட்டார்கள். ஆதலால், இதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது...

ஏ.டி.எம்-ல் நீங்கள் பணம் எடுத்து முடித்தவுடன் Do you want to continue? என்று கேட்கும். இதற்கு நீங்கள் Yes or No என்பதை கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கீழே Clear, Cancel என்பதை கொடுத்துவிட்டு வர வேண்டும். ஏனெனில் இதன் மூலம் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. ஆதலால், நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும் நீங்கள் ஏ.டி.எம் PIN நன்பரை கொடுக்கும்போது பக்கத்தில் யாரும் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஸ்கிம்மர் கருவி :

ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏ.டி.எம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும்.

கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏ.டி.எம் கார்டை நுழைக்கும்போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர் மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏ.டி.எம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.

இதற்கு எச்சரிக்கையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏ.டி.எம் கார்டு நுழைக்கும் இடத்தில் வித்தியாசமாக உணர்ந்தீர்கள் என்றால் ஜாக்கிரதையாக சோதித்த பின்னரே பணம் எடுக்க கார்டை நுழைக்க வேண்டும்.

நெட்பேங்கிங் :

இன்று ஆன்ராய்டு போன் வந்தபின் பெரும்பாலானோர் நெட்பேங்கிங்கை தான் பயன்படுத்துகின்றனர். இதிலும் ஹேக்கர்ஸ் வந்து நம் தகவல்களை திருடத்தான் செய்கின்றனர். வங்கி website போல் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் திருடுகின்றனர்.

அதனால் நாம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது அது சரியான website தானா என்பதை சரிபார்க்க வேண்டும். நெட்பேங்கிங் password-டை தேவையற்ற இடத்தில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களை கவனத்தில் கொண்டாலே பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் பெரும்பாலான திருட்டுகளை தவிர்க்கலாம்...
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

நாளை இறந்துவிடுவீர்கள் என்றால் எப்படி வாழ்க்கையை வாழ்வீர்களோ அப்படி வாழுங்கள்! நீண்ட நாள் வாழ்வீர்கள் என்றால் எப்படி கற்றுக் கொள்வீர்களோ அப்படி கற்றுக் கொள்ளுங்கள்!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தேசிக விநாயகம் பிள்ளை


🏁 தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

🏁 இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை 'கவிமணி" என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

🏁 மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

🏁 இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78-வது வயதில் (1954) மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சோமசுந்தர பாரதியார்


✍ விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.

✍ இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

✍ தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் 'நாவலர்" என்ற பட்டத்தை வழங்கியது.

✍ தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80-வது வயதில் (1959) மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பெர்முடா முக்கோணம்

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சரியங்களை தன்னுள் வைத்திருக்கிறது. உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம்.

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.

அனைத்தும் மாயம்!

இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்தவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

1872 - மேரி செலஸ்டி கப்பலும், 1918 - யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ் கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.

1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயச் சக்திகள்

கரீபியன் தீவை சேர்ந்த மக்களும், முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.

பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடலில் 4,40,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சமீபத்தில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. சிறிய மணல் திட்டு போன்று இருந்த இது, நாட்கள் செல்ல செல்ல பெரிதாகி ஒரு தீவு போன்று மாறியுள்ளது, இது பார்ப்பதற்கு பிறை வடிவில் உள்ளது.

இந்த தீவிற்கு ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது.

ஆராய்ச்சியாளர்களின் அறிவுரை!

சங்கு சேகரிப்பாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் இந்த தீவுக்கு செல்வதில் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பெரிய அளவிலான திமிங்கலங்களின் ஆதிக்கம் இருப்பதால் உள்ள+ர்வாசிகள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு வேறு உருவாகியிருப்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுத் தோட்டம் ! மாடித் தோட்டம் !!


📙 வீட்டில் சிறிய திறந்தவெளிப் பகுதி இருந்தாலும் நிறைய செடிகளை ஆரோக்கியமாக வளர்க்க முடியும். வீட்டில் சிறிய அளவு மண் தரைதான் இருக்கிறது. அதில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், வீட்டுக்குப் பயன் தரும் எளிய காய்கறிச் செடிகளையும் வளர்க்கலாம்.

📙 வீட்டுத் தோட்ட விவசாய முறை உலகளவில் இன்றும் பிரபலமாகி வருகிறது. கிச்சன் கார்டன், ஹோம் கார்டன் என பலபெயர்களில் அழைக்கப்பட்டாலும், இது நம் முன்னோர்கள் செய்து வந்த புறக்கடை தோட்டத்தின் மறுவடிவம் தான்.

📙 நகர்ப்புறத்தில் இட நெருக்கடி, நேரமின்மை போன்றவை எல்லாம் இருந்தாலும், நம் வீட்டில் இருக்கும் மாடி அல்லது பால்கனியில் தோட்டம் அமைப்பது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதுடன், வயிற்றுக்கு ஆரோக்கியமான உணவையும் தரும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ஆரோக்கியம் தரும் பூண்டு பொடி !!


'சுவை மட்டும் தருவது உணவல்ல
சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"

👉 நம் பாரம்பரிய உணவுகளில் அதிகப்படியான சத்துக்களும், பயன்களும் உள்ளன. அதுபோலவே, நம் பாரம்பரிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பூண்டு. பூண்டு ஒரு சிறந்த ஜீரணி, இது உடலுக்கு அதிகப்படியான ஜீரணசக்தியை தருகிறது.

👉 உடல் எடை குறைய, வாயு தொல்லை நீங்க, காசநோய், புற்றுநோய், வாதநோய், இரத்தசோகை, இரத்த அழுத்தம், நெஞ்சுகுத்து, சளி, இருமல் என அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பூண்டு பயன்படுகிறது.

👉 வரலாற்றில் கிரேக்க நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தகுதி ஊக்கியாக ′performance enhancing' பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

👉 பச்சை கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், என நம் பாரம்பரிய பொருட்களோடு நாட்டு ரக பூண்டை பொடி செய்து சேர்த்ததே பூண்டு பொடி ஆகும்.

👉 பூண்டு பொடியை இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் சட்னிக்கு பதிலாக பூண்டு பொடி, நல்லெண்ணெய் சேர்த்து குலைத்து சாப்பிட்டால் சுவை அசத்தும். தோசையின் மீது பொடியை தூவி அப்படியே சாப்பிடலாம். மேலும் சூடான சாதத்துடன் நல்லெண்ணெய், பூண்டு பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவை அடடா அப்படி இருக்கும்.


'சுவை மட்டும் தருவது உணவல்ல
சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"