உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
🌳 ஒவ்வொரு ஆண்டும் உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம் ஜூலை 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
🌳 உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உலக கல்லீரல் அழற்சி தினம்
👉 கல்லீரலைத் தாக்கும் ஹெபடிடிஸ் (Hepatitis) எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
👉 கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இத்தினம் உலக சுகாதார அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.

முத்தான சிந்தனை துளிகள்!
உழைத்துக்கொண்டிருக்கும் நேரமே உங்களை மதிப்புமிக்க மனிதனாக்கும் நேரம்.
உழைத்துக்கொண்டிருக்கும் நேரமே உங்களை மதிப்புமிக்க மனிதனாக்கும் நேரம்.
உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்.. வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. வாழ்க்கையை சில பேர் ரசித்து அனுபவித்து வாழ்கிறார்கள். சில பேரோ எப்படி மீதி உள்ள நாட்களை தள்ளுவது என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.. எவ்வாறாயினும் பிறந்தால் வாழ்ந்து தானே ஆக வேண்டும். அதே போல் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்ணற்ற விஷயங்களை மனிதர்களை சந்திக்க வேண்டிவரும். அவைகளில் நமக்கு மகிழ்ச்சி தருபவையும் இருக்கலாம், இல்லையென்றால் நமது மகிழ்ச்சியை கெடுக்க கூடியவையாகவும் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் அனுபவித்து, சமாளித்து, கஷ்டம் என்றால் அதிலிருந்து மீண்டு வருவது தான் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலாகும். நம் வாழ்க்கையில் நாம் தினம் தினம் கடந்து வரும், ஆனால் நாம் பெரியளவில் கண்டுகொள்ளாத சில விஷயங்கள்.. இதோ உங்களுக்காக... 💍 இந்த உலகில் நமக்கெல்லாம் பாதுகாப்பான இடம் எது தெரியுமா? கோட்டை போன்ற மதில்களோ, மாளிகை போன்ற வீடுகளோ, குண்டு துளைக்காத வீடோ அல்ல.. நம் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான இடம் என்று நாம் உணர்வது நம்மை ஈன்றெடுத்த தாயின் மடி தான்.. உங்களுக்கு எதாவது பிரச்னை என்றால் அம்மா மடியில் தலை வைத்து சிறிது நேரம் படுத்திருங்கள், உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 💍 பிறப்பும் இறப்பும் மனிதனின் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இந்த உலகில் நாள் ஒன்றுக்கு எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள். அதனைபோல் பெரியவர்களும் இறக்கிறார்கள்.. உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளில் இவ்வுலகில் 1,59,635 பேர் மரணம் அடைகிறார்கள். இறைவன் படைப்பில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று வந்தே தீரும். ஆகவே மரணத்தை கண்டு நாம் ஒருநாளும் பயப்படவோ, உடைந்து போகவோ கூடாது. 💍 தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மனிதர்கள் மனம்விட்டு பேசிக்கொள்வது குறைந்து விட்டது. ஆனால் பின்னிரவு நேரங்களில் அனுப்பப்படும் டெக்ஸ்ட் மெசேஜ்களில் பெரும்பாலோனோர் உணர்வுப்பூர்வமாக பேசிக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..? மேலும் இந்த நேரங்களில் அவர்கள் செய்த சில தவறான விஷயங்களைகூட ஒப்புக்கொள்கிறார்களாம். 💍 இந்தியாவில் நடைபெறும் 100 திருமணங்களில் ஒரு திருமணம் விவகாரத்தில் முடிகிறது. வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் உலகளவில் மிக குறைவாக விவகாரத்து நடைபெறும் நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது உங்களுக்குத் தெரியுமா? 💍 உங்களுக்கு பிடித்த மனதுக்கு நெருக்கமாக நினைக்கும் ஒருவரை தொடர்ந்து 20 விநாடிகள் நீங்கள் இறுக்கமாக அணைத்துக்கொள்ளும் போது வெளியேறும் ஆக்ஸிடாசின், அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்துகிறதாம். 💍 நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த நபராக யாரை கருதுகிறீர்கள் என உங்களுக்குத் தெரியுமா? இந்த வாக்கியத்தை படித்தவுடன் உங்கள் மனதில் யாரோ ஒருவர் சட்டென்று தோன்றுகிறார்கள் அல்லவா.. அவரைத் தான் நீங்கள் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள்.. அத்துடன் அவரையே மிகச் சிறந்த நபராகவும் மனதுக்கு நெருக்கமானவராகவும் கருதுகிறீர்கள்..
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 28, 2018 at 10:15AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 28, 2018 at 10:15AM.
முசோலினி
உலகை உலுக்கிய சர்வதிகாரிகளின் பட்டியலில் இருக்கும் இத்தாலியின் சர்வதிகாரியான பெனிட்டோ முசோலினி 1883ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தார்.
1939ல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரும், முசோலினியும் ஒரே அணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். உலகைப் பயமுறுத்திய சர்வதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடியாக இருந்தவர் இவர்தான்.
சர்வதிகாரியாக விளங்கிய முசோலினி தனது 61வது வயதில் (1945) புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.

பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி
தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 1890ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.
இவர் சாகித்ய அகாடமியின் மகாமகிமோ பாத்தியாய என்ற பட்டத்தையும், வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் போன்ற ஏராளமான பட்டங்களையும் பெற்றுள்ளார்.
தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும் என்ற ஆய்வுக்காக, (History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit) 1930-ல் தமிழாய்வில் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியவர். வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்த இவர் தனது 87வது வயதில் (1978) மறைந்தார்.

சர்வதேச புலிகள் தினம்
அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புலிகள் தினம் ஜூலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக் காடுகளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன.
மனிதர்கள் புலிகளை வேட்டையாடுவதாலும், மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும், புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.
விளையாட்டுகளின் வரலாறு ! விளையாட்டிலே உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு, கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு, குழு விளையாட்டு, தனி விளையாட்டு என பல வகைகள் உள்ளது. விளையாட்டு மனிதனின் உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. அக்காலத்தில் மக்கள் பொழுது போக்கிற்காக விளையாடினர். ஆனால் இக்காலத்தில் விளையாட்டில் பெரும் புல்லியாக மாறவும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளவும் விளையாடி வருகின்றனர். அத்தகைய விளையாட்டுகள் எப்படி தோன்றியது என்பதை பற்றி பார்ப்போம்... கண்ணாமூச்சி : கண்ணாமூச்சி என்று சொன்ன உடனே நம்முடைய சிறு வயது தான் நியாபகத்திற்கு நினைவு வரும். நம்ம ஊரு கண்ணாமூச்சியை மேலைநாட்டினர் வேறுமாரியாக விளையாடுகிறார்கள். அங்கு கண்ணைக் மறைப்பதற்கு பதிலாக ஒருவர் தலையை முழுமையா ஒரு தொப்பியால் மூடிவிடுகிறார்கள். கபடி : கபடி கபடி நியாபகம் இருக்கா !! இன்னும் நம் சிங்கங்கள் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 'கபடி" என்ற சொல்லே, 'கை பிடி" என்ற தமிழ்ச் சொற்களில் இருந்து உருவானதாகும். இன்றைக்கு கபடி விளையாட்டு ஒரு சர்வதேச விளையாட்டாக வளர்ந்து வருவது நமக்கெல்லாம் பெருமைக்குரியது. கோலி குண்டு : நம்ம ஊர் கோலி குண்டு விளையாட்டை பழங்கால ரோமானியர்கள் ஆர்வமான விளையாட்டாக விளையாடி வந்தனர். பெரியவர்களும் குழந்தைகளும் வட்டத்தினுள் உருண்டையான கூழாங்கற்களைக் கொண்டு அந்த ஆட்டத்தை விளையாடினார்கள். பச்சைக்குதிரை : இதுவும் நாம் சிறு வயதில் விளையாடிய விளையாட்டு தான். நாம் பச்சைக்குதிரை தாண்டுவதை மேலைநாடுகளில் 'தவளைத் தாவல்" என்று கூறுகிறார்கள். குண்டு எறிதல் : இன்றைய பெண்மணிகள் குண்டு எறிதலில் சரித்திரம் படைத்து வருகின்றனர். இது ஒரு நவீன தடகள விளையாட்டுகளில் ஒன்று. பதினான்காம் நூற்றாண்டிலேயே இந்த வகை விளையாட்டுகளை மேலைநாடுகளில் ஆடப்பட்டு வந்திருக்கின்றனர். அக்காலத்தில் இளைஞர்கள், கடினமான கற்களை கொண்டு நீண்ட தூரம் வீசி தங்கள் பலத்தைக் காட்டுவார்களாம். ஹாக்கியின் வரலாறு : ஹாக்கி என்பது இந்தியாவின் தேசிய விளையாட்டாகும். இங்கிலாந்திலும் பழங்காலத்தில் ஹாக்கியை விளையாடியுள்ளனர். மட்டைக்குப் பதில் வெறும் கட்டைகளைக் கொண்டு ஆடி இருக்கிறார்கள். கால்பந்து : இந்த விளையாட்டிற்கு வயது நூறுக்கும் மேலாகிறது. ஆனால் பழங்காலத்திலேயே கிரேக்கர்களும், ரோமானியர்களும், சீனர்களும் இதைப் போன்ற விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். 1863-ல் இங்கிலாந்தில் முதல் கால்பந்துக் கழகம் தோன்றியது. பேட்மிண்டன் : இந்த விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். பெண்கள் இந்த விளையாட்டை மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். இந்த விளையாட்டுகள்தான் தற்போதைய காலத்தில் பேட்மிண்டனாக மாறின. வேகமாக மற்றும் வெகுவேகமாக ஆடப்பட்ட பேட்மிண்டன் விளையாட்டு 1860-ம் ஆண்டு தோன்றியது. கிரிக்கெட் : கிரிக்கெட் என்றால் தூக்கத்தில் கூட எழுந்து பார்க்கும் அளவிற்கு நம்மை ஈர்த்துவிட்டது. இன்று நம்மவரின் விருப்பமான விளையாட்டில் ஒன்று, கிரிக்கெட். தென்கிழக்கு இங்கிலாந்தில் தோன்றிய கிரிக்கெட், 18-ம் நூற்றாண்டுகளிலேயே அந்நாட்டின் தேசிய விளையாட்டாக மாறிவிட்டது. 19, 20-ம் நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர் ஆண்ட நாடுகளில் அவ்விளையாட்டு பரவியது. நாடுகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டிகள் 1844-ம் ஆண்டுகளில் இருந்து ஆடப்பட்டு வருகின்றன. முதல் ஆட்டம் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, 1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆடப்பட்டது.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 29, 2018 at 01:18PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 29, 2018 at 01:18PM.
தமிழர்களின் கல்வெட்டுகள்..!! பண்டைக்காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியையே கல்வெட்டு என்று கூறுகிறோம். பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர்களின் முக்கிய நிகழ்வுகள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன. கல்வெட்டுகள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள் குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக்கற்கள் ஆகியவற்றில் கல்வெட்டுகளைக் காணலாம். தமிழ் கல்வெட்டு : கல்வெட்டுகள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்லுகின்றன. இவை அவர்களின் மொழி, சமூகம் வரலாற்றுத் தகவல்களை பற்றி அறிவதற்கு முக்கியமான, ஆவணங்களாக திகழ்கின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து இந்தியாவில் கிடைக்கப்பெற்ற 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பழைய கல்வெட்டுகள் நடுகற்களில் வெட்டப்பட்டவை ஆகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்திகளும் இதற்குச் சான்றாக அமைகின்றன. மாங்குளம் கல்வெட்டு : தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன. இது கிமு 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கல்வெட்டே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையானது ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டு, சங்ககால மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழ் பிராமி கல்வெட்டுகளை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்ததில், இவ்வெழுத்துமுறை கி.மு 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 4-ம் நூற்றாண்டிற்குப் பின், இவ்வெழுத்து முறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்பொழுது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்துமுறையாகவும் வளர்ச்சியடைந்தது. தொல்லியல் ஆய்வகம் : இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு படி எடுத்தல் முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI. இந்திய வரலாற்றுக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860-ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கண்ணிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்டாலும், பல இடங்களில் கல்வெட்டுகளில் சுண்ணாம்பு பூசும்போதும், கட்டுமானப்பணிகளின் போதும் மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில் உள்ளது. எனவே நமது முன்னோர்களின் வரலாற்று பெருமைகளை அறிய உதவும் கல்வெட்டுகளை பாதுகாத்து நமக்கு பின்னால் வரும் சந்ததியர்கள், நமது முன்னோர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள வழிசெய்வோம்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 30, 2018 at 05:30AM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 30, 2018 at 05:30AM.
முத்துலட்சுமி ரெட்டி
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.
இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும், இவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.
தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
எதையும் தடைகற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 81வது வயதில் (1968) மறைந்தார்.
.

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.
இதனைத் தடுத்திட ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கடைபிடிக்குமாறு அறிவித்தது.

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!
ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை முட்டாள்கள் கண்களிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை முட்டாள்கள் கண்களிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.
இந்த நிறத்தில் நகம் இருந்தால் மருத்துவரை அணுகவும் ! ♠ நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை குறித்து பல விஷயங்களைச் சொல்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் வரை அனைத்தையும் நகங்கள் சுட்டி காட்டி விடும். ♠ நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உடலிலுள்ள நோய்களுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம். நமது உடலில் ஏற்படும் பாதிப்புகளை பொறுத்து, நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். நகங்கள் மஞ்சளாக மாறுதல் : ♠ நகங்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம், உடலில் பிலிரூபினின் அளவு அதிகமாக இருப்பது தான். ♠ இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்தால், அது கல்லீரல் நோய்களை மட்டுமின்றி, சிறுநீரக நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். ♠ நுரையீரலில் அளவுக்கு அதிகமாக திரவங்கள் தேங்கும் போது, அது நகங்களை மஞ்சளாக்கும். எனவே நகங்கள் திடீரென்று மஞ்சளானால், தாமதிக்காமல் மருத்துவரை உடனே சந்தித்து சோதித்துக் கொள்ளுங்கள். பிறை போன்ற நகம் : ♠ ஒருவருக்கு நல்ல வெள்ளையாக பிறை போன்று பாதி நகத்தில் இருந்தால் அவர்களுக்கு செரிமானம் மற்றும் தைராய்டு சுரப்பிகள் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும். ♠ பிறை போன்று சிறிய அளவில் இருந்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம். மேலும் செரிமான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கும். நகத்தில் வெண்திட்டுக்கள் : ♠ நகத்தில் வெண்திட்டுக்கள் இருப்பது சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருப்பதால் தான். நகங்களை பராமரிக்க : ♠ நகங்களால் பழங்களின் தோல் உரிப்பது, பொருட்களை சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. ♠ நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியை ஏற்படுத்தும். ♠ நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். ♠ சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது, நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். ♠ நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 30, 2018 at 01:47PM.
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய https://t.me/tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
http://www.facebook.com/pages/p/385416831850483
July 30, 2018 at 01:47PM.