சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!
மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக்கொண்டால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

உலக தாய்ப்பால் தினம்
🍼 உலகம் முழுவதும் இன்று உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக சாரணர் தினம்
👮 ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களையும், சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
👮 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
👮 பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாதத்தின் இறுதி வாரமும், ஆகஸ்ட் மாதத்தின் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொறுத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சனைகள் வரும்போது அல்ல,
பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போது
- பாரதியார்

கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்... இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்களே உஷார்!
தொழில்நுட்பம் ஒரு வேலையைச் செய்து முடிக்க எளிதான வழிகளைத் திறந்து விட்டிருக்கிறது துரதிஷ்டவசமாக இது திருடர்களுக்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. குறிப்பாக வங்கி விஷயத்தில். வங்கிக்குச் சென்று காத்திருந்து பணம் அனுப்பியதை ஒரே நிமிடத்தில் எந்த இடத்திலிருந்தும் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் என்று மாற்றிக் காட்டியிருக்கின்ற மொபைல் பேங்கிங் ஆப்கள். இதில் வங்கிகளின் அதிகாரபூர்வ ஆப்களைப் பயன்படுத்துவதில் எந்த வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால், சில போலி ஆப்களால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடலாம். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி வங்கிகளின் போலி ஆப்கள் ப்ளே ஸ்டோரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்தியாவின் பிரபலமான வங்கிகளான ICICI வங்கி, RBL வங்கி, மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றின் போலி ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. குறிப்பிட்ட மூன்று வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து போலி ஆப்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிரெடிட் கார்டின் லிமிட்டை அதிகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இவை பயனாளர்களின் தகவல்களை எளிதில் திருடுவதற்கு வாய்ப்பாக அமைகின்றன. இந்த ஆப்கள் கடந்த மாதத்திலும், இந்த மாதத்திலும் ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்யப்பட்டிருக்கின்றன. அவை தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்குள்ளாக இந்தப் போலி ஆப்களை நூற்றுக்கணக்கானோர் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள். எனவே அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எப்படிச் செயல்படுகின்றன இந்த ஆப்கள்
இது போன்ற ஆப்கள் செயல்படும் விதம் மிக எளிமையானது. தோற்றத்தில் அதிகாரபூர்வ ஆப்களைப் போலவே இவை வடிவமைக்கப்பட்டவை. இதை இன்ஸ்டால் செய்யும் போதும், பயன்படுத்தும் போதும் எந்த வித சந்தேகமும் எழாதவாறு உருவாக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்துபவர்கள் இது தெரியாமல் பயன்படுத்தத் துவங்குவார்கள். இதனுள்ளே வழக்கம் போல தகவல்களை நிரப்புவதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை அனைத்தும் போலியானவை, அது தெரியாமல் அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பிச் சமர்ப்பித்தால் அவை தவறானவர்களின் கைகளுக்குச் சென்று விடும்.
அதில் தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட அதைச் சமர்ப்பிக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு அதற்கான உறுதி செய்தியும் காட்டப்படுகிறது. இதே அதிகாரபூர்வ ஆப் என்றால் அவசியமான தகவல்களை தரவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. ஆனால் இது போலி என்பதால் தகவலைத் தரவில்லை என்றாலும் கூட அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இதில் பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் இதை உருவாக்கியவரின் சர்வருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
அதன் இணையதள முகவரிக்குச் செல்லும்போது திருடப்பட்ட தகவல்களைப் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட இணையதள முகவரி இருந்தால் இந்தத் தகவல்களை யார் வேண்டுமானாலும் அணுக முடியும். எனவேதான் இது மிகவும் அபாயகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் வேறு வேறு ஆப் ஆக ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்யப்பட்டிருந்தாலும் இதை ஒருவரே உருவாக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. கூகுள் நிறுவனம் எவ்வளவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினாலும் இத்தகைய போலியான ஆப்கள் அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. எனவே ஆப்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது நமது கையில்தான் இருக்கிறது.
மொபைல் பேங்கிங் ஆப்களைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஒரு ஆப் அதிகாரபூர்வமானதுதானா என்பதை உறுதி செய்வது மிக அவசியமானது. ப்ளே ஸ்டோரில் அப்படிக் கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் எளிதான வழி ஒன்று இருக்கிறது.
வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆப்பிற்கான லிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்வதன் மூலம் ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யலாம்.
வழக்கமாகக் கேட்கப்படும் விவரங்களைத் தவிர்த்து தேவையற்ற தகவல்களைக் கேட்பது போலத் தெரிந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆப்பைப் பயன்படுத்துவதில் சந்தேகம் இருந்தால் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்களிடமோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இயங்குதளத்தை அடிக்கடி அப்டேட் செய்வது அவசியம்.

பிங்கலி வெங்கய்யா
🏁 இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார்.
🏁 ஆந்திரப்பிரதேசத்தில் இவர் வைரச்சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் வைரம் வெங்கய்யா என்று அழைக்கப்பட்டார்.
🏁 கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றுவதை பார்த்து, நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது வலியுறுத்தினார்.
🏁 காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார்.
🏁 பிறகு அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.
🏁 நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 86வது வயதில் (1963) மறைந்தார்.

தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்
✏ வண்ணம் தீட்டும் புத்தகங்கள், வண்ண படங்கள் கொண்ட புத்தகங்கள் போன்றவை குழந்தைகள் விரும்புவதில் பிரபலமான ஒன்றாகும். ஆனால், இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.
✏ எனவே, இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

எதிர்காலமாக இருந்தது இப்போது நிகழ்காலமாகி விட்டது. இதுவும் கடந்த காலமாக ஆகிவிடும். ஆகவே, ஏன் கவலை?

இனி ஒரு நொடியில் பட்டா சிட்டா ஆன்லைனில்...!
👉 சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
👉 எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பட்டா சிட்டா என்றால் என்ன ?
👉 பட்டா என்பது ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
👉 சிட்டா என்பது குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
👉 அடங்கல் என்பது நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
பட்டா சிட்டா முக்கியத்துவம் :
👉 பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பத்திரங்கள் வாங்கி, பதிவு செய்யப்பட்டு தானே சொத்தினை கிரயம் செய்தேன். பிறகு எதற்கு பட்டா வாங்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் சொத்தின் உரிமை குறித்து, கேள்வி எழும்போது, அந்தச் சொத்தின் தன்மை, அளவு, அமைவிடம், புல எண் போன்ற எந்த விஷயத்தில் பிரச்சனை என்றாலும், அதனை நீதிமன்றங்கள் தீர்த்து வைப்பது உங்களது கிரயப் பத்திரம் மற்றும் பட்டாவை வைத்துதான்.
👉 பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய்த் துறை ஆவணங்கள்தான் உங்களின் அனுபவத்தையும், நிலத்தின் மீதான உங்களின் ஆளுமையையும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள். இவை மட்டுமே உங்களின் உரிமையை ஏற்படுத்துவதில்லை என்றாலும், உங்கள் உரிமையை, கிரயப்பத்திரத்துடன் சேர்த்து, நிலைநாட்டி, உங்களைக் காப்பாற்றும் ஆவணங்கள் ஆகும்.
இனி ஒரு நொடியில் பட்டா சிட்டா ஆன்லைனில்
👉 நிலத்தை வாங்கும் போதோ விற்கும் போதோ, வகைபடுத்தப்பட்ட நிலங்களுக்கு தேவையான பட்டாவை ஆன்லைனிலே சரிபார்த்துக்கொள்ளலாம்.
👉 www.tn.gov.in என்ற இணையதளத்தில், இ-சேவை பிரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்து, பட்டா அல்லது சிட்டா எண்ணை குறிப்பிடலாம். அல்லது சர்வே எண் அல்லது உட்பிரிவு ஏதாவது இருந்தால், அதனை குறிப்பிட்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
சென்னையில் உள்ள சொத்து விவரங்களை சரிபார்த்துக்கொள்ள :
👉 சென்னையில் உள்ள அனைத்து சொத்து விவரங்களையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்துக் கொள்ளலாம்.
👉 அதற்கு முதலில் சான்றுகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், பின்னர் தாலுக்கவை தேர்வு செய்ய வேண்டும், பின்பு பிளாக் நம்பர், தெரு பெயர், சர்வே மற்றும் உட்பிரிவு எண்களை குறிப்பிட வேண்டும்.
👉 அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டால், சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு என்ன, உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட அனைத்தும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இனி (நில உரிமை) பட்டா சிட்டா விவரங்கள் தெரிந்துக் கொள்ள ஒரு நொடி போதும்!

விபத்து ஏற்பட்டால் காரின் இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு உதவும்?!
ஒருவர் தன் உழைப்பினால் சேமித்த பணத்தைக் கொண்டு, கார் வாங்கும்போது கிடைக்கும் பெருமிதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், அவர் தனக்கான இன்சூரன்ஸ் விஷயத்தில் காட்டும் அக்கறையை, தன் காரின்மீது காட்டுகிறாரா என்பது கேள்விக்குறியே! எனவே வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசென்ஸ் எவ்வளவு முக்கியமோ, அதேபோல நீங்கள் வைத்திருக்கும் எந்த வாகனத்துக்கும் இன்சூரன்ஸ் அவசியம். இன்னும் சொல்லப்போனால் ஆக்ஸசரீஸ் மற்றும் கோட்டிங் ஆகியவற்றைத் தாண்டி, இன்சூரன்ஸ்தான் உங்கள் புதிய வாகனத்துக்குத் தரக்கூடிய சிறந்த பரிசு!
கார் டீலர் சொல்லும் இன்சூரன்ஸ்தான் சிறந்தது என்றில்லை; Insurance Regulatory & Development Authority India (IRDAI) ஆணைப்படி, உங்கள் காருக்கு வேண்டிய இன்சூரன்ஸை, நீங்களே எடுத்துக்கொள்ளக்கூடிய முழு அதிகாரமும் உங்களுக்கு உண்டு. எனவே, விபத்து நேரத்தில் கார் இன்சூரன்ஸின் பங்கு குறித்த அடிப்படை விவரத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்.
உங்கள் காரை உங்களின் நண்பர் ஓட்டிச்சென்று, அப்போது ஏதேனும் விபத்து நேர்ந்தால்...
இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்துக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தைக் கருத்தில் கொள்ளும்போது, விபத்துநேர சேதங்களுக்கு என கார் இன்சூரன்ஸில் க்ளெய்ம் செய்ய வழிவகை உண்டு. பெரும்பாலான கார் இன்சூரன்ஸ்களில் இந்த வசதி இருக்கிறது. இதன்படி உங்கள் நண்பர்தான் விபத்து நேரத்தில் டிரைவராக இருந்தாலும், Driver's Clause பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தால், காருக்கான சேதத்தைப் பொறுத்து க்ளெய்ம் வழங்கப்படும்.
லைசென்ஸ் இல்லாதவர், காரை எடுத்துச்சென்று விபத்து ஏற்படுத்தினால்...
இந்திய மோட்டார் வாகனச் (1988) சட்டப்படி, முறையான ஆவணங்கள் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டப்படி குற்றம். எனவே, கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாத ஒருவர் உங்கள் வாகனத்தை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டால், காரில் ஏற்பட்டிருக்கும் சேதத்துக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. மேலும், இதுபோன்ற சூழலில் காரின் இன்சூரன்ஸ் பாலிஸியும் முன்கூட்டியே காலாவதியாகிவிடும். எனவே, லைசென்ஸ் இல்லாமல் புதிதாகக் கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்கள், சரியாக கார் ஓட்டுபவரையோ/அந்த காரின் உரிமையாளரையோ உடன் வைத்துக்கொண்டு பயணிப்பது நலம்.
உங்கள் காரில் நீங்கள் ரேஸில் பங்கேற்றால்...
ரேஸ் டிராக்கில் வேண்டுமானால், அதிவேகத்தில் ஒரு காரை மற்றொரு கார் முந்திச் செல்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கும்; ஆனால் அதுவே சாலையில் என்றால், உங்கள் பாதுகாப்புக்கும், உங்களைச் சுற்றியுள்ள மற்ற நபர்களுக்கும் அது பங்கம் விளைவிக்கும். எனவே உங்கள் காரில் சட்ட விரோதமான ரேஸ்கள் அல்லது தனியார் அமைப்பினர் நடத்தும் ராலிகள் ஆகியவற்றில் பங்கேற்று விபத்து ஏற்படுத்தினால், காரில் ஏற்பட்டிருக்கும் சேதத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் கொடுக்காது.
புவியியல் வரம்பை மீறிச் சென்று, உங்கள் காரில் விபத்து ஏற்பட்டால்...
ஒவ்வொரு கார் இன்சூரன்ஸுக்கும், புவியியல் வரம்பு உண்டு. அதாவது நீங்கள்வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்ல நேரிட்டாலோ அல்லது நீண்ட ரோடு ட்ரிப் செல்லும் ப்ளான் இருந்தாலோ, உங்கள் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இதுகுறித்துப் பேசிவிட்டு, பின்னர் பயணத்தை மேற்கொள்வது நல்லது.
டிரைவர் உங்கள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தினால்...
விபத்து ஏற்பட்ட காரின் உரிமையாளராக இருப்பவருக்கு, அவரின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு, இன்சூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் காருக்கு நீங்கள் டிரைவர் வைத்திருந்து, அவரின் பெயர் காரின் பெர்சனல் இன்சூரன்ஸ் பாலிஸியில் இடம்பெற்றிருந்தால், அவர் காரில் விபத்து ஏற்படுத்தி காயம்பட்டிருந்தால், அவருக்கும் மருத்துவச் செலவுகளுக்கான க்ளெய்ம் கிடைக்கும்.
உங்களிடம் Third Party இன்சூரன்ஸ் இல்லாவிட்டால்...
ஒருவர் தன் புதிய காரை டீலரிலிருந்து சாலைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, அது Third Party இன்சூரன்ஸ் கொண்டிருக்க வேண்டும் என்பது, இந்திய மோட்டார் வாகனச் (1988) சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி செப்டம்பர் 1, 2018 முதலாக, இது கார்களுக்கு என்றால் 3 ஆண்டுகளும் / டூ-வீலர்களுக்கு என்றால் 5 ஆண்டுகளும் செல்லுபடியாகும். எனவே, உங்கள் காருக்கு நீங்கள் நடுத்தர விலையில் இருக்கும் Comprehensive இன்சூரன்ஸ் எடுத்திருந்தாலும், அதில் விலை குறைவான விபத்து நேர Third Party-க்கான சேதாரம் மற்றும் சொந்தச் சேதாரத்திற்கான கவரேஜ் இருப்பது அவசியம். இது இல்லையெனில் பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் மற்றும் விலை அதிகமான Zero Depreciation இன்சூரன்ஸ் ஆகியவையும் நல்ல சாய்ஸ்தான்.

உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றி பெறுவாய்
- நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்