ஆடி தள்ளுபடி..! ஆஃபரா..? ஆப்பா..?
ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50% தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை டிவியிலும் கடைகளிலும் காண முடிகிறது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...!
ஆடி மாத நம்பிக்கைகள் :
👗 ஆடி மாதத்தில் துணிக்கடைக்கே செல்லாத நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆவணி மாத கல்யாணத்திற்குக்கூட ஆடி மாதம் சேலை, துணிகள் எடுக்கச் செல்லமாட்டார்கள்.
👜 இந்த நம்பிக்கை காரணமாக ஆடி மாதம் துணிக்கடைகளின் விற்பனை குறைந்தது. அதனை முறியடித்து, வணிகத்தை மேம்படுத்த துணிக்கடைகள் செய்த வணிக யுக்தி ஆடி தள்ளுபடி விற்பனை.
👗 ஆடியில் 5 முதல் 50 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கிறதே! விடலாமா? என்ற மக்களின் மனநிலையில் ஆடி மாதம் நல்லது அல்ல என்ற நம்பிக்கைகள் மறைந்தது. வியாபாரிகளின் யுக்தி வெற்றி பெற்றது.
50% வரை விலை குறைப்பு உண்மையா..?
👕 முற்றிலும் உண்மையா என நன்கு யோசிக்க வேண்டும். உண்மையாக சொல்லப்போனால் கடைகள் மற்றும் நிறுவனங்கள் 5 முதல் 15% வரையே விலை குறைப்பு செய்கின்றன. அதுவும் அடக்க விலையில் அந்த விலை குறைப்பு இருக்காது. மாறாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய லாபத்தில் 5 முதல் 15% வரை குறைக்கின்றன. அப்படி குறைப்பதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு கடைகளுக்கும் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன.
ஆடி தள்ளுபடியில் கவனிக்க வேண்டியவை :
👕 ஆடி தள்ளுபடியில் அடிமாட்டு விலைக்கு பொருட்கள் வாங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். 50 சதவிகிதம் தள்ளுபடி என்பது சில துணிகளுக்கு மட்டும்தான். இந்த கவர்ச்சித் தூண்டிலில் நீங்கள் சிக்கிவிடாதீர்கள்.
👖 சில நிறுவனங்கள் ஆடி மாத விற்பனைக்கு என்றே கொள்முதல் செய்கின்றன. குறிப்பாக, பல நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் ஸ்டாக் வைத்து விற்பது கிடையாது. சிறிய நிறுவனங்கள், சிறு கடைகள் போன்றவற்றில் புதிய கொள்முதல் மற்றும் ஸ்டாக் சரக்குகள் இரண்டும் சேர்த்து விற்பனை செய்வார்கள். எனவே, எந்த இடத்தில் வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தும், எத்தனை சதவிகிதம் தள்ளுபடி என்பதைப் பொறுத்தும் ஸ்டாக் துணியா அல்லது புதுத் துணியா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
👜 தள்ளுபடியில் வாங்கும்போதே சரியான அளவில், பொருத்தமான பிடித்தமான உடைகளைத் தேர்ந்தெடுத்து விடுவது நல்லது. பில் போடும்போதே இந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்கவும்.
👗 தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் அதிக அளவில் வாங்க வேண்டாம். நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்து பரிசோதிக்கையில் தரம் குறைவு என்றால் மீண்டும் செல்ல முடியாது...!
👡 பொதுவாக தள்ளுபடி துணி வகைகளை இரவில் எடுப்பதையோ அல்லது பளபளவென கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்திலோ எடுக்கவேண்டாம். பகல் நேரங்களில் எடுக்கும்போது தான் பழைய துணியா, புதுத் துணியா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். எனவே, பளபளப்பான வெளிச்சத்தை நம்ப வேண்டாம்.
📻 எலெக்ட்ரானிக் பொருட்களை விற்கும் நிறுவனங்களும் இந்த ஆடி சீஸனில் தள்ளுபடிகளை வாரி இறைக்கின்றன. குறிப்பாக, ஜீரோ சதவிகித வட்டி, குறைந்த முன்பணம், கேஷ் பேக் ஆஃபர் என பல்வேறு சலுகைகளையும் தருகின்றன. இவற்றில் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்குவதே நலம்.
தரமான பொருட்களை ஆடித் தள்ளுபடியில்
தேர்வு செய்து வாங்குங்கள் !

மகிழ்ச்சிகரமாக வாழ சில வழிகள்..!
😃 அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
😃 உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
😃 மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
😃 உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
😃 எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
😃 'உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்" என்று யோசிப்பதைத் தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
😃 இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
😃 நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
😃 உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
😃 உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!
துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...

வெளிநாடுகளில் நாணய பரிமாற்றம் செய்யும் முறை!..
₹ இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் இருக்கின்றார்கள்.
₹ ஒருவர் தன்னுடைய குடும்பத்தின் தேவைக்காக, மேற்படிப்பு படிக்க, சுற்றுலா பயணியாக இப்படிபட்ட பல காரணத்தில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அந்நாட்டின் பணம் பரிமாற்றம் செய்யும் முறைகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
வெளிநாட்டு நாணய பரிமாற்ற வழிமுறைகள் :
₹ நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைச் செய்ய பல்வேறு வழிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
ப்ரீபெய்டு ஃபாரெக்ஸ் கார்டுகள் :
₹ ப்ரீபெய்டு அட்டைகள் வெளிநாடுகளுக்கு பணத்தை கொண்டு போவதற்கு ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான வழி ஆகும். ப்ரீபெய்டு அட்டைகள் அனைத்து முன்னணி வங்கிகள் மற்றும் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன.
₹ அந்நிய செலாவணி வெளிநாட்டுக்கு செல்லும் மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி. சிப் மற்றும் பின் ஆகியவை இதில் உள்ளதால் பிற உபகரணங்களை விட பாதுகாப்பானவை ஆகும்.
கட்டணம் :
₹ ப்ரீபெய்டு அட்டைகளை சில நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன இருப்பினும் சில நிறுவனங்கள் அட்டை வழங்குவதற்காக ரூபாய் 100-250 என்று கட்டணத்தை வசூலிக்கின்றன. தினசரி வாழ்க்கை செலவுகள், ஷாப்பிங், முன்பதிவு விமான டிக்கெட் போன்றவற்றிற்காக ப்ரீபெய்டு கார்டுகள் பயனுள்ளதாக இருக்கும்.
₹ சில கல்லூரிகளும் இந்த அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கின்றன. விற்பனை முனையத்தில் ப்ரீபெய்ட் கார்டுகளை ஸ்வைப் செய்வது கட்டணத்தை ஈர்க்காது.
டாப் அப் :
₹ மேலும், நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன் பரிமாற்ற விகிதத்தை லாக் செய்ய முடியும். முன்கூட்டியே செலுத்தப்பட்ட அட்டையை கொள்முதல் நாளில் பொருந்தக்கூடிய அந்நிய செலாவணி விகிதம் ஒன்றாகும். தேவைக்கு ஏற்ப, பெற்றோர் ப்ரீபெய்ட் கார்டுகளில் பணத்தை டாப் அப் செய்யலாம்.
₹ இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏடிஎம்களில் இருந்து சுமார் 20 முதல் 40,000 ரூபாய் வரையிலான பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கின்றன. சில வங்கிகள் திரும்பப் பெற கட்டணம் வசூலிக்கக்கூடும்.
ஃபாரின் கரென்சி டிமாண்ட் டிராப்ட் (FCDD) :
₹ அந்நிய செலாவணி டிமாண்ட் டிராஃப்ட் (FCDD)-வுக்கு ரூ. 300 முதல் 500 செலவாகும், FCDD அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மிகவும் திறமையான வழிகளில் ஒன்றாகும். இது இடைத்தரகர் வங்கி கட்டணங்களை சேமிக்கிறது, மற்றும் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தபடுகிறது. FCDD ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் அதற்குள் பயனாளியின் வங்கியில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
₹ அவசரத் தேவை மற்றும் உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டிய இடத்தில் இதை பயன்படுத்த முடியாது.
வைர் டிரான்ஸ்பர் :
₹ வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கு இது ஒரு விரைவான வழி ஆகும், வைர் டிரான்ஸ்பர்கள் பலவிதமான கட்டணங்கள் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு சுமார் 24 முதல் 48 மணி நேரம் ஆகும். இந்த பரிவர்த்தனை கண்காணிக்க ஒரு குறிப்பு எண் உடனடியாக வழங்கபடும்.

நீல் ஆம்ஸ்ட்ராங்
🌔 நிலாவில் முதன் முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார்.
🌔 இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார்.
🌔 1962-ல் நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.
🌔 1969-ல் மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார். 1969 ஜூலை 20-ம் தேதி நிலாவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தார்.
🌔 ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கவுரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.
🌔 இவரது வாழ்க்கை வரலாற்று நூலான 'ஃபர்ஸ்ட் மேன்: த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்" 2005-ல் வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது 82-வது வயதில் (2012) மறைந்தார்.

சர்வதேச நண்பர்கள் தினம்
நட்பு ஒரே நாளில் உதிர்ந்துவிடும் மலரல்ல
அது என்றென்றும் வானில் மின்னும் நட்சத்திரம்...!
உலகில் உள்ள வேறுபாடுகளை எல்லாம் கடந்து
ஒற்றுமைக்கு வழி வகுக்கும் புனிதம்...!
இன்பத்தில் சிரிக்கும் இதழாய்
வலியில் துடிக்கும் இதயமாய்
தோள் கொடுக்கும் தோழமை இது...!
ஒரே வகுப்பறையில் பயின்றதற்காக
ஒரே கருவறையில் வளர துடிக்கும்...!
தோல்வியின் போதெல்லாம் துவண்டு விடாமல்
தேற்றி ஏற்றிவிடும் ஏணியாய் இருக்கும்...!
புரிதலில் சந்தித்து உணர்தலில் பேசி
உயிர்வரை என்றும் நேசிக்கும்
நமக்கு வரமாய் கிடைத்த நம் நட்புகள்...!
👪 உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம். அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.
👪 உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று நண்பர்கள் தினம்...!
👬 இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும், கிரீட்டிங் கார்ட் மூலமும், நேரில் சந்தித்தும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
👬 நண்பர்களால் மட்டுமே சாதி, மத வேறுபாடு இன்றி பழக முடியும். புராணக் கதைகளில் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் கர்ணன் மற்றும் துரியோதனின் நட்பு. இவர்களின் நட்பு ஆழமானது. தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கி நட்புப் பாராட்டியவன் துரியோதனன்.
👬 நட்பு என்பது சாதாரணச் சொல் அல்ல. பெற்றோர், சகோதரன்/சகோதரி, மனைவியிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயத்தைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நல்ல நண்பர்களைப் பெருக்கிக் கொண்டால் நலமான வாழ்வு வாழ முடியும். நட்பு வட்டம் நன்மை தரக்கூடியது. காலம் கூட நட்பை வெல்ல முடியாது!
வரலாறு :
👬 உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு.
👬 அமெரிக்கர்களின் நண்பர்கள் தினம் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.
👬 பிறகு அது மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி, தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
நட்பைப் பற்றி...
👬 உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று, நட்பு. நண்பனுக்குத் துயரம் வரும்போது சென்று ஓடி காப்பாற்றுபவேனே உண்மையான நண்பன்.
👬 இந்த நண்பர்கள் தினத்தில், தலைமுடி நரைத்தாலும் நான் உன்னிடம் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை என்று வயதானவர்கள்கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
👬 பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று.
👬 குழந்தை பருவ நட்பில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது. மாங்காயை உப்பு, காரம் சேர்த்து சாப்பிடுவது, காக்காய் கடி கடித்து பகிர்ந்து கொள்வது. இவ்வாறு குழந்தை பருவ நட்பு நம் நினைவில் இருந்துக் கொண்டே இருக்கும்.
துன்பத்தில் கை கொடுப்பவன் தோழன்
தோல்வியின் போது தோள் கொடுப்பவன் தோழன்
அன்பை பூரணமாய் தருபவன் தோழன்
நிழல் போல் காப்பவன் தோழன்
முயற்சியை ஊக்குவிப்பவன் தோழன்
வெற்றிக்கு வழிகாட்டுபவன் தோழன்
தோழன் இருந்தால் போதும்
விண்மீனையும் எட்டி பிடிக்கலாம்
சூரியனை போல் பிரகாசிக்கும் நட்பை
போற்றுவோம்...!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!

தஞ்சை பெரிய கோவில்..!!
🙏 தஞ்சை பெரிய கோவில் தஞ்சாவூரில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது நமது தஞ்சை பெரிய கோவில். தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது பிரகதீசுவரர் கோவில் அல்லது தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோவில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10-ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இத்தகையதொரு பிரம்மாண்டமான கோவிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
🙏 இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோவிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத்திருக்கோவிலில் புகுத்தி கோவில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
🙏 கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்.
🙏 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை.
🙏 இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம், கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது.
🙏 இங்குள்ள சிவ லிங்கம் மூலஸ்தானத்தின் நிலை கதவைவிட பெரிதானது, அப்படியானால் லிங்கத்தை வைத்தபிறகு கோவிலை கட்டினார்களா? அப்படி இருந்திருக்க முடியாது காரணம் ஆகம விதிப்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் லிங்கத்தை கடைசியாகத்தான் பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும். அப்படியானால் அவர்களுக்கு லிங்கத்தை சிறிதாக்கி உள்ளே எடுத்துசென்று பெரிதாக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.
🙏 இங்குள்ள முருகன் சன்னதியில் உள்ள சிற்பங்களில், மெல்லிய முடி மட்டுமே செல்லும் அளவுக்கு சிறிய துளைகள் செய்துள்ளார்கள்.
🙏 எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது.
🙏 தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4-வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம்பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே.
🙏 இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கும் இது 1987-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
🙏 இந்த கோவிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவாக 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.

யாருக்கும் அடிமையாய் இருக்காதீர்கள், உங்களுக்கு தேவை என்று நீங்கள் உணரும் எல்லைவரை மட்டும் கடைபிடியுங்கள். ஆனாலும் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே எஜமானனாய் இருங்கள்
- ஓஷோ.

சாலை விபத்து...
🚍 போக்குவரத்து என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் ஒரு நிகழ்வு ஆகும். இதில் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக சாலை போக்குவத்து விளங்குகிறது.
🚍 சாலை போக்குவரத்தையே மக்கள் பெரும்பாலும் விருப்பமாக தேர்வு செய்கின்றார்கள். ஆகவே 2010-ஆம் ஆண்டு உலகமெங்கும் உள்ள வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி 1.015 பில்லியன் வாகனங்கள் இயங்குகின்றன.
விபத்து குறித்த அறிக்கை :
🚍 2008 ஆண்டு நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 73 சதவீதம் சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன. மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகள் நடந்து 17 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் சாலை விபத்துகள் 4.1 சதவீதம் குறைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
🚍 இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் 1,50,785 பேர் மரணமடைந்தும், 4,94,624 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்களில் 46.3 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.
சாலை விபத்து :
🚍 சாலை விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றபடாததால் தான் அதிக அளவு சாலை விபத்துகள் நடக்கின்றது. வாகனங்கள் அதிகரித்து வரும் வேளையில் ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும். சாலையில் வாகன ஓட்டி ஒருவர் செய்யும் சிறு தவறினால் எவ்வளவோ பேர் பலியாகிறார்கள். யாரோ ஒருவர் பலியானால் கூட அந்தக் குடும்பமே நாசமாகிப் போய்விடும். இதை மனதில் பதியும்படி சொல்லித் தரவேண்டும்.
🚍 மேலும், நாட்டில் 86 சதவீதம் விபத்துகள் 13 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. அவை தமிழ்நாடு, மத்தியப்பிரேதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகும்.
சாலை விதிமுறைகள் :
🚍 முன் செல்லும் வாகனத்தை எக்காரணம் கொண்டு முந்தக்கூடாது.
🚍 ஒரு வழிப்பாதை எனப்படும் ஒன் வேயில் நிச்சயம் வாகனத்தை இயக்கக் கூடாது.
🚍 தங்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டும் போது அதற்குரிய சைகைகளை காட்டி, பின்னால் வரும் வாகனத்தை முன்னர் செல்ல அனுமதிக்க வேண்டும்.
🚍 வலது புறமோ, இடது புறமோ வாகனத்தை திருப்பும் போது அதற்கான இன்டிகேட்டரை போட வேண்டியது அவசியமானதாகும்.
🚍 டிராபிக்கில் பச்சை சிக்னல் விழுந்தவுடன் தான் வாகனத்தை செலுத்த வேண்டும்.
🚍 மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது.
🚍 பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களும், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களும் வாகனம் ஓட்ட தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
🚍 ஆகவே, சாலை விதிகளை மதிப்போம், உயிரை பேணிக்காத்து விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

ஆயிரம் வருடங்களாக மனிதனுடன் பயணிக்கும் பயிர்... எள்ளு!!
👉 மனிதன் முதலில் பயன்படுத்திய எண்ணெய் எள்ளில் இருந்து எடுத்ததுதான். அப்படிப்பட்ட எள்ளில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கிறது.
எள்ளு தரும் பயன்கள் :
👉 எலும்பை வலுப்படுத்தும்.
👉 இரத்த அழுத்தம் சீராகும்.
👉 இருதயம் பலம் பெரும்.
👉 கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
👉 மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி.
👉 முடி உதிர்தல் கட்டுப்படும்.
👉 இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்ட எள்ளு நம் உணவு பட்டியலில் வருவதில்லை. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயன்பாடும் இன்று குறைந்து விட்டது. முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இதை தினசரி பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
👉 எள்ளு சிறந்தது தான் ஆனால் உணவில் தினசரி பயன்படுத்த வழி என்ன? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு. நமது பாரம்பரிய உணவுமுறையில் இதற்கான வழி இருந்தது. நம் உணவில் எள்ளு உருண்டை, எள்ளு மாவு, எள்ளு சீடை என்று பலவிதமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று இவை அனைத்தும் நாம் மறந்து விட்டோம். அதனால், ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டோம்.
'சுவை மட்டும் தருவது உணவல்ல
சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"