Tamil short message
126 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வயிற்றுக்குள் அதிசயம்..!!

மனித இரைப்பை அதிசயமான உடல் உறுப்புகளில் ஒன்று. இங்கு மிக மிக அதிகமாக அரிக்கும் தன்மை கொண்ட ஹைட்ரோ குளோரிக் அமிலம் காணப்படுகிறது. இது உணவுகளை செரிக்க உதவுகிறது. பருத்தி இழைகளைக்கூட செரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த அமிலம். ஆனால் அது இரைப்பை சுவரை அரிப்பதில்லை. அதற்கு காரணம் மியூகஸ் எனப்படும் இரைப்பையின் தோல் அடுக்குதான். கோழைபோல வழவழப்பாக காணப்படும் இந்த பகுதி இரைப்பையின் சுவர் பகுதியை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் இருந்து காக்கிறது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்

'எதிலும் நீ நினைப்பதை செய்.. அதற்காக, நீ நினைப்பது அனைத்தும் சரி என எண்ணிவிடாதே..!"
இந்திய சுதந்திர தினம்


அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் !

ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நினைவில் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், 'நம் தேசத்தின் விடிவெள்ளி" என்று சொன்னால் அது மிகையாகாது.

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தினநாள் ஜனவரி 26. இது 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று நம் நாட்டின் 72வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளான இன்று, சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவு கூறுவோம்...!

மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் 'விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர். இந்தியா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.

'நேதாஜி" என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!" என தீர்மானித்து ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.

பாலகங்காதர திலகர் இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் ஒருவர். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கியவர். 'இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை" என கருதப்படுபவர்.

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்.

சுப்பிரமணிய பாரதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.

தேசியக் கொடியின் மூவர்ணங்கள்

காவி - தைரியத்தையும், தியாகத்தையும் குறிக்கும்

வெள்ளை - அமைதி, உண்மை, தூய்மை

பச்சை - செம்மை, நம்பிக்கை, வீரத்தைக் குறிக்கின்றன.

அசோகச் சக்கரம் - நீதியைக் குறிக்கும்.

நாம் துயரின்றி வாழ சிலர்

இன்பத்தை துறந்தார்கள் !

அவர்கள் இன்பத்தை துறந்ததால்

இன்று நாம் துயரின்றி வாழ்கிறோம் !

அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை

அன்போடும், பண்போடும், புகழோடும்

போற்றுவோம்!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்...


😥இந்திய அரசியலில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

😥வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு டிசம்பர் 25, 1924 அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார்.

😥தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியரும் ஆவார். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார்.

😥குவாலியரில் தற்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.

💐தந்தையை போன்று வாஜ்பாயும் கவிப் புலமை கொண்டவர். தேச பற்று மிகுந்த கவிதைகளை வாஜ்பாய் படைத்துள்ளார்.

💐வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போதே அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது.

💐வாஜ்பாய் பேச்சாற்றல் மிக்கவர். ஒருமுறை வாஜ்பாய் பேச்சை கண்டு முன்னாள் பிரதமர் நேருவே வியந்துபோனார்.

💐வாஜ்பாயின் பேச்சு திறமை மற்றும் நிர்வாகத் திறமை ஜன சங்கத்தில் அவர் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்தது.

💐நெருக்கடி காலத்தில் சிறைக்கு சென்றவர் வாஜ்பாய் (1975-1977).

💐1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மார்ச் 19-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.

💐வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச் சாலைகiளாக மாற்றியவர் வாஜ்பாய்.

💐1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் நடந்த இந்தியாவின் அணுகுண்டு சோதனையிலும், 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரிலும் இந்தியா வெற்றிக் கொடி நாட்டியதில் பெரும்பங்கு வகித்தவர் நமது முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்றால் மிகையாகாது.

💐மக்களவை எம்.பியாக 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபாவிற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

💐கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.

😥சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மாலை (16-08-2018) 5.05 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி வாஜ்பாய் காலமானார்.

🙏🙏முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!....🙏🙏
நம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்?

மொபைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன. எனவே, GPS ஆன் செய்து இருக்கும்பொழுது, நம்முடைய தகவல்களை இந்த ஆப்கள் பயன்படுத்திக்கொள்ளும். அதில் கூகுளும் ஒன்று. இந்த ஆப்களைப் பயன்படுத்தும்போது மட்டும், GPS-ஐ ஆன் செய்வதும், பின்னர் அதனை ஆஃப் செய்துவைப்பதும்தான் பலரது வழக்கம். முதல் காரணம், தேவையில்லாமல் மொபைல் சார்ஜ் குறையும். இரண்டாவது, நம்முடைய லொகேஷனைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் எந்த ஆப்பிற்கும் இருக்காது. ஆனால், கூகுள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நீங்கள் கூகுள் மேப்ஸ் வசதியைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், GPS-ஐ ஆன் செய்திருந்தாலும், ஆஃப் செய்திருந்தாலும், அதனால் உங்கள் லொகேஷனைக் கண்டறிய முடியும். 

உதாரணமாக நம் மொபைல் GPS-ஐ ஆஃப் செய்துவிட்டு, சத்யம் தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். உடனே சிறிதுநேரத்தில் அதை மோப்பம் பிடித்து, Rate Sathyam Theatre' என புஷ் நோட்டிஃபிகேஷன் வரும். நாம் சத்யத்தில் படம் பார்ப்பது கூகுளுக்கு எப்படித் தெரியும். இத்தனைக்கும் நாம் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தவில்லை;  கூகுளில்கூட தேடவில்லை; ஆனாலும், கூகுளுக்கு எப்படி நம் இருப்பிடம் தெரிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் இந்தக் கட்டுரையின் இறுதியில். ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு, கூகுளின் சில சூட்சுமங்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.


பலரும் அறியாத டைம்லைன்

ஃபேஸ்புக், ட்விட்டர் டைம்லைன் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலருக்கும் தெரியாத இன்னொரு டைம்லைனும் இருக்கிறது; அது கூகுள் டைம்லைன். கடந்த ஒரு வருடத்தில், ஏதேனும் ஒரு தேதியைச் சொல்லி, அப்போது எங்கு இருந்தீர்கள் எனக் கேட்டால் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா. ஆனால், கூகுள் சரியாகச் சொல்லும். அதுவும் எப்படி, காலை 9 மணிக்கு சென்ட்ரலிலிருந்து கிளம்பி, 10 மணிக்குத் தாம்பரத்தில் இறங்கி, மீண்டும் மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வீட்டுக்கு நடந்துசென்றது வரை அத்தனையையும் துல்லியமாகச் சொல்லும். இதை கூகுள் மேப்ஸின் டைம்லைனில் பார்க்கமுடியும்.

இதற்கு நீங்கள் எப்போதும் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தியிருக்க வேண்டும், மொபைல் இன்டர்நெட் வேண்டும், GPS ஆனிலேயே இருக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. இதில் எது இருக்கிறதோ, அதைவைத்து கூகுளே நம் தகவல்களைக் கணித்து இந்த டைம்லைனில் அப்டேட் செய்துவிடும். இவ்வளவு துல்லியமாக நாம் எங்கு செல்கிறோம், எப்போது செல்கிறோம் போன்ற விவரங்கள் எல்லாம் எதற்காக கூகுளுக்குத் தெரியவேண்டுமா என நினைத்தால், இந்த டைம்லைனை நிறுத்தவும் முடியும். அதாவது, நம்முடைய லொகேஷன் ஹிஸ்டரியை நிறுத்திவைக்கவும் ஆப்ஷன் தந்திருக்கிறது கூகுள். அதைப் பயன்படுத்தி, இந்த டைம்லைன் அப்டேட் ஆவதைத் தடுக்கலாம். ஆனால், கூகுள் நம்மை டிராக் செய்வதைத் தடுக்க முடியாது. நம்மைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேதான் இருக்கும். இதைச் சமீபத்தில் உறுதிசெய்திருக்கிறது AP செய்திநிறுவனம். அந்நிறுவனம் நடத்திய சோதனையில், நாம் லொகேஷன் ஹிஸ்டரியை ஆஃப் செய்திருந்தாலும்கூட, கூகுள் தொடர்ந்து கண்காணிப்பது தெரியவந்துள்ளது. இதை ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய இரண்டிலுமே கண்டறிந்துள்ளனர். இது கூகுளின் பயனாளர்களை முழுமையாக ஏமாற்றும் செயல் என்கின்றனர் டெக் நிபுணர்கள்.


ஏன் கூகுள் இப்படிச் செய்கிறது?

விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். நம்முடைய தகவல்களை வைத்துக்கொண்டுதான் கூகுள் நமக்குச் சரியான விளம்பரங்களைக் காட்டுகிறது; அதை வைத்துதான் வருமானம் ஈட்டுகிறது. நம்முடைய கூகுள் தேடல்கள், கூகுள் ஆப்களின் பயன்பாடு ஆகியவற்றின் தகவல்களை இதற்காகப் பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான் நம் இருப்பிடம். உதாரணமாக, சென்னையில் இருக்கும் ஒரு நபருக்கும், மதுரையில் இருக்கும் ஒரு நபருக்கும் ஒரே விளம்பரங்களைக் காட்டமுடியாது அல்லவா. இருவருக்கும் அவர்களின் தேவைக்கேற்ற துல்லியமான விளம்பரங்கள் காட்டினால்தான், விளம்பரதாரர்கள் லாபம் ஈட்டமுடியும். இதற்காகத்தான் நம்முடைய இருப்பிடம் சார்ந்த தகவல்களைக் கண்காணிக்கிறது கூகுள். ஆனால், நாமே இதை வேண்டாம் என்றாலும்கூட தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!

தற்போது இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள கூகுள், `
லொகேஷன் ஹிஸ்டரி என்பது பயனாளர்களின் விருப்பம் சார்ந
்த ஒரு வசதிதான். அது வேண்டாம் என்றால், பயனாளர்கள் அதனை நிறுத்திக்கொள்ளலாம். அதற்கான வழிகள் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே இருக்கின்றன. கூகுள் மேப்ஸ் மூலமாக மட்டுமே கூகுள் பயனாளர்களின் இருப்பிடம் சார்ந்த தகவல்களை எடுப்பதில்லை. கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் காலண்டர், கூகுள் போட்டோஸ் என எந்த ஆப்பில் லொகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்தினாலும், அது கூகுளின் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால், அவையெல்லாம் மேப்ஸ் டைம்லைனில் காட்டப்படாது. இவை முழுமையாக நிறுத்தப்பட வேண்டுமென்றால், கூகுளின் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் பகுதிக்குச் சென்று, Web & App Activity' என்ற ஆப்ஷனை நிறுத்திவிடலாம்" என விளக்கமளித்திருக்கிறது. இதன்மூலமாக கூகுள் நாம் செல்லும் தினசரி இடங்களைக் கண்காணிப்பதை வேண்டுமானால் நிறுத்தமுடியும். ஆனால், முக்கிய இடங்களுக்குச் செல்லும்போது அந்தத் தகவல்கள் தானாக கூகுளுக்குச் சென்றுவிடும். 

சரி... அந்த GPS மேட்டர்?

இதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனால், GPS ஆஃப் செய்துவைத்திருக்கும்போதும் கூகுள் எப்படி நம் இருப்பிடத்தைக் கண்டுகொள்கிறது. இந்தப் பிரச்னை பல ஆண்ட்ராய்டு பயனாளர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், குவார்ட்ஸ் இணையதளம்தான் 2017-ல் முதன்முதலில் இதனை நிரூபித்தது. உடனே இதனை கூகுளின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. கூகுளும் இதை ஒப்புக்கொண்டது. அப்போதுதான் நம் இருப்பிடத்தை கூகுளால் எப்படி வேண்டுமானாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியவந்தது. கூகுள் இதற்காக செல் ஐடி (Cell ID) என்ற கான்செப்டைப் பயன்படுத்தியது. 

அதாவது GPS மொபைலில் ஆன் ஆகியிருக்கும்போதெல்லாம், அதன்மூலம் நம் லொகேஷன் தெரியும். ஆஃப் ஆகியிருக்கும்போது, அதற்கு மாற்றாக நம் மொபைல் நெட்வொர்க்குகளின் டவர்கள் மூலமாக இதை அறிந்துகொள்ளும். இதற்காகத்தான் செல் ஐடியைப் பயன்படுத்தியது கூகுள். இதனால் நம்மால் எப்போதுமே கூகுளின் கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பமுடியாது. இந்தப் பிரச்னை வெளியே தெரிந்தபோது இதுகுறித்து விளக்கமளித்த கூகுள், `
நாங்கள் கடந்த 11 மாதங்களாகத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகிறோம். விரைவில் இதைக் கைவிடவும் இருக்கிறோம். மேலும், Cell ID மூலமாகப் பயனாளர்களின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டாலும், அவற்றைப் பயனாளர்களின் சேவைக்காகவே பயன்படுத்துகிறோம். அவர்களுக்குச் சரியாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, தகவல்களை அனுப்புவது போன்றவற்றிற்காக மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். மற்றபடி இந்தத் தகவல்கள் கூகுளின் சர்வர்களின் எங்கேயும் பதிவாகாது" என்றது. ஆனால், இப்போதும் நம்மால் GPS அற்ற இடங்களில் கூகுளின் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கமுடியும். அது எப்படி என்பது கூகுளுக்கே வெளிச்சம்!
 
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இந்த ஆண்ட்ராய்டு ஆப்பின் விலை 26,000 ரூபாய்.. இதில் அப்படி என்னதான் இருக்கிறது?


ஐபோன் போன்ற ஒரு ஸ்மார்ட்போனை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி அதில் ஆப்களைப் பயன்படுத்துவதற்கும் பணம் செலுத்த வேண்டுமா என்று யோசித்தவர்கள் பலர். அவர்களுக்கு உதவ வந்ததுதான் ஆண்ட்ராய்டு. ஐஓஎஸ் உடன் ஒப்பிடும்போது இதில் பெரும்பாலான ஆப்ஸ் இலவசமாகவே கிடைக்கும். ஆண்ட்ராய்டு வெற்றியடைந்ததற்கு இதுவும் மிக முக்கியமான காரணம். ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரிலும் பணம் செலுத்தி வாங்கக் கூடிய பல ஆப்ஸ் இருக்கத்தான் செய்கின்றன.

இவை சராசரியாக ஐந்நூறு ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், பலரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத விலையில் ஆப்ஸ் உண்டு. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கூட இவ்வளவு விலை கொண்ட ஆப்கள் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன. அப்படி அதிக விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அதில் என்னதான் ஸ்பெஷல்.

சில ஆப்களின் விலை 26,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து எதை வாங்கலாம் தெரியுமா. கலர் கலராக பல வைரக் கற்களை வாங்க முடியும். மன்னிக்கவும் வைரக் கற்களின் போட்டோவை வாங்க முடியும். உண்மைதான் இதன் மூலமாக எந்த வித உபயோகமும் இருப்பதில்லை. ஆனால், இது போன்ற விசித்திரமான ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கின்றன. 26,000 ரூபாய் செலுத்தி இதை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும்.


அதில் எந்த உபயோகமும் இருக்காது வெறும் வைரக்கல்லின் போட்டோவோ அல்லது நாணயத்தின் போட்டோவோதான் இருக்கும். இந்த விலையில் புதிய அப்டேட்களுடன் உள்ள ஸ்மார்ட்போனையே வாங்க முடியும். ஆனால், இதெல்லாம் தெரிந்தும் கூட சிலர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஐம்பதாயிரம் டவுன்லோடுகளை தாண்டிவிட்டாலும் அதற்குக் கிடைத்த விமர்சனங்கள்தாம் ஆச்சர்யப்படுத்துபவை. மேலும், அவற்றில் பெரும்பாலானவை நேர்மறையானவை. அதில் ஒன்று ``நான் விரும்பியவள் கடந்த வாரம் என்னை நிராகரித்து விட்டாள். அதன் பிறகு சேமித்த பணத்தில் இந்த ஆப்பை வாங்கினேன். பின்பு இதை அவளிடம் காண்பித்தேன் இப்பொழுது எனக்கு ஒரு அருமையான காதலி கிடைத்திருக்கிறாள்" என்று நன்றி தெரிவித்து விமர்சனம் எழுதியிருக்கிறார் ஒருவர். இதெல்லாம் நம்புற மாதிரியா பாஸ் இருக்கு!


விலை கொடுத்தெல்லாம் வாங்க முடியாது என்பவர்களுக்கும் சில விசித்திரமான சில ஆப்களும் ப்ளே ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் ஒன்று Nothing. பெயரே இதன் முழுக் கதையையும் கூறி விடும் என்றாலும் இதை டவுன்லோடு செய்து அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து பார்த்தால் Nothing என்ற ஏழு எழுத்து வார்த்தை மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஆப்பின் அளவு எவ்வளவு தெரியுமா, 14 எம்பி. இதை இன்ஸ்டால் செய்பவர்கள் பெரும்பாலானோர் யாருமே இதற்கு எதிர்மறையான கருத்தைத் தெரிவிக்கவில்லை. ரேட்டிங்கையும் கூட வாரி வழங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் யாராவது டவுன்லோடு பண்ணுவாங்களா பாஸ்னு நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இறுதியாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் இது பத்து லட்சம் டவுன்லோடுகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

வழக்கமாகப் பலரும் எந்த ஆப் அதிக பயனுள்ளதாக இருக்குமோ அதைத் தேடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தவர்கள் அதற்கு எதிர்மறையாக `மோஸ்ட் யூஸ்லெஸ் ஆப்' என்ற பிரிவையும் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் கிடைக்கும் ஒவ்வொரு ஆப்பும் ஒவ்வொரு ரகம், எடுத்துக்காட்டாக The most Useless App Ever என்ற ஆப். ப்ளே ஸ்டோரில் தேடினால் இதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. thumbnail இமேஜ் கூட இதற்கு இருக்காது அதற்குப் பதிலாக வெற்றிடம் இருக்கும். ப்ளே ஸ்டோரில் இருக்கும் குறைவான அளவு கொண்ட ஆப்களின் லிஸ்டில் இதைத் தாராளமாகச் சேர்க்கலாம். இதன் அளவு வெறும் 4.7kb மட்டும்தான். இன்றைக்கு இருக்கும் இன்டர்நெட் வேகத்தில் ஒரு நொடியில் இன்ஸ்டால் செய்து விடலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது, இன்ஸ்டால் ஆனவுடன் இதை ஒரு கிளிக் செய்தால் திறந்த வேகத்தில் ஆப் க்ளோஸ் ஆகும். அவ்வளவுதான் இதன் வேலை. 

உங்கள புரிஞ்சிக்கவே முடியலையேப்பா.....
இந்தாங்க... உண்மையிலே உருப்படியான ஆப்ஸ்

அண்ட்ராய்டு ஆப்ஸ் க்கு கீழே பொத்தானை அழுத்தவும்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
``நாம் ரன்னிங் போனால் ஒருவருக்கு உதவி கிடைக்கும்!" - பணம் திரட்டும் செயலிகள்

``நாலு பேருக்கு உதவி செய்யணும்னுதான் என் ஆசை. ஆனா எங்க, குடும்பச் செலவுக்கே சம்பாதிக்கிற காசு கரெக்டா இருக்கு” என நினைக்கிறவர்கள் உண்டு. போலவே , ``உதவி செய்யணும்னு ஆசைதான் ,நிறைய பணமும் இருக்கு. ஆனா நேரமே கிடைக்க மாட்டேங்கிறது”. இப்படியும் சிலர் உண்டு . இது போன்ற சூழ்நிலைகள் உங்களைப் பிறருக்கு உதவி செய்யவிடாமல் தடுக்கிறதா. நேரம் , பணம் இவை உங்கள் சமூக சேவை எண்ணத்தில் ஒரு தடையாக இருக்கிறதா, நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகள் மூலமாகவே ஆதரவற்றோருக்கு உதவி செய்யலாம் . அதுவும் , உங்களுடைய பணத்தை உபயோகிக்காமல் . ``எப்படி”என்கிறீர்களா ? இந்த டெக்னோ( techno) காலத்தில் வேறு எதுவாக இருக்க முடியும்; செயலி( app)களால்தாம்!

CHARITYMILES
நீங்கள் எதிர்நீச்சல் குஞ்சிதபாதம்போல் மரத்தான் போட்டிக்குப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா அல்லது BP, Sugar-ஐ குறைக்க, காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவரா. இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்துவிட்டு பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இந்த ஆப் நீங்கள் எத்தனை தூரம் ஓடியுள்ளீர்களோ, நடந்தீர்களோ அதற்கு ஏற்றார்போல் கணக்கு செய்து காசு ஜெனரேட்( GENERATE) செய்யும் . பிறகு , நீங்கள் ஜெனரேட் செய்த பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் . நீங்கள் அதிக தூரம் ஓட ஓட அதிக பணம் ஜெனரேட் செய்வீர்கள் . நீங்கள் கொடுக்க விரும்பும் தொண்டு நிறுவனத்தையும் நீங்களே தேர்வு செய்யலாம் . ஆப்பை பதிவிறக்கம் செய்யும் போதே தொண்டு நிறுவனத்தை (தற்போது 41 நிறுவனங்கள் அதில் உள்ளன ) தேர்வு செய்து பயிற்சியை மேற்கொள்ளவும் . எவ்வளவு பணம் ஜெனரேட் செய்துள்ளீர்கள் என்ற விவரத்தை மட்டும் தராமல் , GPS மூலம் நீங்கள் எவ்வளவு தூரத்தைக் கடந்துள்ளீர்கள் , எவ்வளவு நேரம் எடுத்துள்ளீர்கள் , எத்தனை கலோரிஸ்( Calories) எரிக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் சேர்த்து தருகிறது இந்த CHARITY MILES ஆப்.


DONATE A PHOTO
கண் தானம் , ரத்த தானம் , தாய்ப்பால் தானம் போல் இது புகைப்பட தானம் . ஜென்z தலைமுறைக்கு ஏற்றதுபோல் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆப். பல் தேய்ப்பது , குளிப்பது , சாப்பிடுவது போல் நம் அன்றாடத்தில் ஒன்றாக ஆகிவிட்ட புகைப்படம் எடுப்பதைத்தான் இந்த ஆப் எதிர்பார்க்கிறது . முதலில் நீங்கள் எந்த நோக்கத்துக்காகக் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்தால் ஜான்சன் & ஜான்சன்( JOHNSON & JOHNSON நிறுவனம் US 1$-ஐ நீங்கள் தேர்வு செய்த நோக்கத்துக்குத் தானமாகக் கொடுக்கிறது . நீங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு புகைப்படத்தை மட்டும் தான் பதிவு செய்யலாம் என்ற நிபந்தனை இருக்கிறது . நீங்கள் உங்கள் படத்தைத்தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை . உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளை , இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து பதிவிறக்கம் செய்யலாம் . இதுவரை முப்பத்தைந்து லட்சத்துக்கு மேல் புகைப்படங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டு நூற்று ஐம்பதுக்கும் மேலான நோக்கங்களுக்கு உதவியிருக்கிறது . ஆனால் இந்த ஆப் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை . வெளிநாட்டு வாழ் இந்தியர்களே ... உங்களுக்குத்தான் .

GOODSHOP
நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் அதிகம் செய்யக்கூடியவரா. அப்போ இந்த ஆப் உங்களுக்காகத்தான் . இந்த ஆப்பின் பிரத்யேக நோக்கம் உங்களுக்குத் தள்ளுபடி கூப்பன்களை வழங்குவதும் , நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்குக் குறைவான விலையைக் கொடுக்கும் கடைகளைச் சொல்வதும் தான் . அதோடு இல்லாமல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு அதன் விலையைக் கணக்கிட்டு , ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்குக் தானமாக வழங்குவது தான் இந்த ஆப்பின் சிறப்பம்சம் . இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்யும் போதே எந்த நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை செலக்ட் செய்து , இந்த ஆப் மூலம் பொருள்களை வாங்க வேண்டும் . வாங்கும் பொருளுக்குச் சிறந்த விலையும் கிடைத்தது போக நல்ல நோக்கத்துக்காகவும் பயன்படுகிறது . ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய் !

WALK FOR A DOG
ஆம் இது விலங்குகள் நலத்துக்கான ஆப். இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்துவிட்டு , உங்கள் வீட்டு நாயை வாக்கிங் கூட்டிட்டு போகும் போது இந்த ஆப்பைப் பயன்படுத்துங்கள் . GPS மூலம் தூரத்தைக் கணக்கிடும் . தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் உதவி செய்ய விரும்பும் விலங்குகள் காப்பகத்துக்கு ‘WOOFTROX’ நிறுவனம் இந்த ஆப் மூலம் தானம் செய்யும் . நிறைய நபர்கள் செய்தால் நிறைய தானம் அந்தக் காப்பகத்துக்குக் கிடைக்கும் . உங்களிடம் , நாய் இல்லையென்றாலும் பரவாயில்லை . நீங்கள் இந்த ஆப்பில் இருக்கும் ‘WALK FOR CASSIE’ ஆப்ஷனை செலக்ட் செய்து நீங்கள் விரும்பும் காப்பகத்திற்காக நடக்கலாம் . இந்த ஆப்-ம் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.
இதெல்லாம் சரி. பொதுவான ஆப்ஸ் என்னலாம் டவுன்லோடு செய்யலாம்.  கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கல்வி முறையை மாற்றியமைக்கும் டெக்னாலஜி... இனி ஜாலியா படிக்கலாம்!

பிள்ளைகளின் அமெரிக்கக் கனவுகளை நினைவாக்கி தன் பிள்ளைகளின் நினைவில் ஏங்கும் பெற்றோர்கள் இங்கே நிறைய பேர். இங்கிருந்த படியே தினமும் அரை மணி நேரம் மகனின் அமெரிக்க வீடுகளில் அமர்ந்து பேச முடியுமா; அங்கிருக்கும் தோட்டத்தில் பேரப் பிள்ளைகளோடு கொஞ்சி விளையாடத்தான் முடியுமா. இந்தக் கேள்விகளுக்கு ``முடியும்" என்று சொல்லும் தொழில்நுட்பம்தான் ஹோலோபோர்டேஷன். கல்வி, மருத்துவம் தொடங்கி பொழுதுபோக்கு வரை அனைத்துத் துறைகளையும் மாற்றி எழுத வரும் புது டெக்னாலஜி.

தொழில்நுட்பங்கள் நம்மைத் தினந்தோறும் வியப்புக்குள் அழைத்துச் செல்கின்றன. புறாவின் காலில் கடிதம் கட்டி செய்தி அனுப்பிய வரலாற்றில் தொடங்கி இன்று பிராட்பேண்டு மூலம் செய்திகளை உடனடியாக பிராட்காஸ்ட் செய்யும் அளவுக்குப் புரட்சிகள் வந்துவிட்டன. இப்படியாகத் தொழில்நுட்பம் பெருகி வரும் நிலையில் ``எழுத்துகளை மறந்து பென்சில் பேனாவுக்கு டாட்டா காட்டி, டிஜிட்டல் இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுக்கும் இன்றைய தலைமுறை அதிகம் விரும்புவது வீடியோ சாட்டிங்தான். அதற்கும் ஹலோ சொல்ல வருகிறது ஹோலோபோர்டேஷன் டெக்னாலஜி.

தொலைதூரத்தில் வாழும் நம் நண்பர்களையோ உறவுகளையோ பார்த்துப் பேச உதவியது 2டி தொழில்நுட்பம். ஆனால், அது அவர்களுடன் நேரில் பேசும் உணர்வை ஓரளவுக்கே தந்தது. அதுவே அவர்கள், 3டி ஆக நம்முன் தோன்றினால்?

ஒரு ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் ஓப்பனிங் காட்சி போல இருக்கிறதா, ஆம். அதுவும் இனி நிஜத்தில் சாத்தியம்தான். இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி செய்ததன் விளைவு, 3டி கேப்சரிங் கருவி. இதன் மூலம் தூரத்தில் இருக்கும் இருவர் பக்கத்தில் உட்கார்ந்து உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். டில்லியில் இருக்கும் அரசியல் தலைவர் சென்னையில் இருக்கும் ஒரு தலைவரோடு பேச விமானம் பிடிக்கத் தேவையில்லை. இந்தத் தொழில்நுட்பத்தைப் பிடித்தாலே போதும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஓர் அறையில் மைக்ரோசாஃப்ட் 3டி கேப்சரிங் கேமராக்களைப் பொருத்த வேண்டும். 2 கேமராக்கள் முதல் கிளாரிட்டிக்காக எத்தனை கேமராக்கள் வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம். தெளிவான, யதார்த்தமான காட்சிகளைக் கணினி தொடர்ச்சியாகப் பதிவு செய்து முப்பரிமாண உருவங்களாக்கி, தகவல்களை கம்ப்ரஸ் செய்து எங்கே வேண்டுமோ அங்கு அனுப்புகிறது. 50 எம்.பி.பி.எஸ். இணைய வேகத்தில் ஒரு சில வினாடியில் நடக்கும் இந்த மாயாஜாலம் அறிவியலின் புதிய சாதனை. 

இந்தக் காட்சிகள் எங்கு விரிக்கப்பட வேண்டுமோ, அங்கே தலையில் மாட்டும் கண்ணாடி போன்ற ஹோலோலென்ஸ் ஒன்றைப் பயன் படுத்திப் பார்த்துக்கொள்ளலாம். 3டி கேமராவில் பிடிக்கப்படும் காட்சிகள் தொலைதூரத்தில் இருக்கும் நபர் பயன்படுத்தும் ஹோலோ லென்ஸ் வழியாகக் கொஞ்சம் கூடத் துல்லியம் சிதையாமல் முன்னால் வந்து நிற்கும். நாசா விஞ்ஞானியை மேடையில் பல பார்வையாளர்களுக்கு முன்பு வரவழைத்துப்  பேச வைத்து இந்தத் தொழில்நுட்பத்தை முதன் முதலில் விளக்கியது. இத்தொழில்நுட்பம் மூலம் கோள்கள் குறித்து மிகத் துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வித் துறையிலும் ஹோலோகிராபி பெரும் புரட்சியை ஏற்படுத்தவிருக்கிறது. ஒளி, ஒலி காட்சியாக 2டி ஸ்மார்ட் கிளாஸ், ஆசிரியர்களை விட இது ஸ்மார்ட்டாகப் பாடம் நடத்தும். கல்வித் துறையில் அடுத்த வெர்ஷன் ஹோலோகிராபி கல்விமுறைதான். 3டி காணொலியைப் பயன்படுத்தி, இருக்கும் இடத்திலிருந்து கொண்டே, உலகின் தலை சிறந்த ஆசிரியரிடம், பாடம் படிக்கலாம். ஒரு செல்லை வைத்துக்கொண்டு இருக்கும் இடத்தையே வகுப்பறையாக மாற்றி விடலாம்.

மொபைல் வீடியோ பார்த்து உணவு உண்ணும் குழந்தைகளுக்கு விளையாட்டாக ஏ.பி.சி.டி. கற்றுக்கொடுக்கலாம். சாக் பீஸுக்கும், கரும்பலகைக்கும் ஓய்வு கொடுத்து ஹோலோலென்ஸ் கல்விமுறை, ஒரு மொபைல் ஆப் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தலாம். டவுட் என்றால் ஆசிரியர்களிடம் தயங்கித் தயங்கி நிற்க வேண்டாம். பாடம் புரியவில்லையா மொபைல் ஆப்-ஐ ஒரு க்ளிக் செய்தால் போதும். 

ஹொலோலென்ஸின் வரவு மருத்துவ துறையில் ஒரு மெடிக்கல் மிராக்கிள். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் 3டி தொழில்நுட்பம் மூலம் மனித உடலைப் பற்றி முழுவதுமாய் கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முப்பரிமாண தோற்றத்தில் தோன்றும் மனித உடலைத் தொட்டு அறுத்து ஆராய்ச்சி செய்து மாணவர்கள் கற்றுக்கொள்ள பர்மிஷன் கொடுக்கும் இந்த டெக்னாலஜி தான் ஹோலோபோர்டேஷனின் ஹைலைட். அறுவை சிகிச்சையின் போதும் மனித உடலைக் கண்காணிப்பில் வைக்கவும் ஹோலோபோர்டேஷன் பயன்படுகிறது.

ஓடும் காரில் 3டி கேப்ரசிங் கேமராக்களை பொருத்தி, காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் அமெரிக்க நண்பரை அமர வைத்து,  பேசிக் கொண்டு போக முடியும். உலகம் சுருங்கலாம். ஆனால், இவ்வளவா?