Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
2) எது குறுகிய காலக் கடன்? 

தனிப்பட்ட தேவைகள் மற்றும் பிசினஸ் தேவைகளுக்காகக் குறுகிய காலக் கடன்களைப் பெறலாம். சம்பளத் தேதி கடன் (payday loan), நுகர்வோர் கடன், விடுமுறை காலக் கடன் எனத் தனிப்பட்ட தேவைகளுக்கான லோன் பல வகைகளில் கிடைக்கின்றன. மாதச் சம்பளம் கிடைப்பதில் தாமதம், திடீர் பணநெருக்கடி அல்லது பணப் பற்றாக்குறை, ஏதாவது ஒரு மாதத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏற்படும் அதிகச் செலவு போன்றவற்றைச் சமாளிக்கக் குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் வாங்கப்படுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

குறுகிய காலக் கடன் என்பது நமக்கு வசதியான கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன. பிசினஸ் தேவைக்காகக் கடன் தேவை எனில், உங்கள் பிசினஸின் வரவு-செலவுக் கணக்கின் அடிப்படையில் பிணையம் ஏதுமின்றியே உங்களுக்குக் கடன் கிடைக்கும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
3) என்ன தகுதி வேண்டும்?

இன்று நம்மிடையே வேகமாகப் பிரபலமாகி வரும் லோன்களில் ஒன்று பேடே லோன். தற்காலிகமாக உங்களுக்குப் பணத் தேவை என்றாலோ அல்லது உங்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பதில் தாமதம் என்றாலோ, இந்த வகையான லோன்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இந்தக் கடனை வாங்கும் ஒருவர், தனக்குச் சம்பளப் பணம் கிடைத்தவுடன், தான் வாங்கிய தொகை / அதன் பகுதி மற்றும் அதற்கான கட்டணம், வட்டி ஆகியவற்றைக் கட்ட வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்து எளிதாக வாங்க முடிகிற கடன் வகைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கடனைப் பெற விண்ணப்பம் செய்தால், தகுதி இருக்கும்பட்சத்தில், சில மணி நேரத்திலேயே சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.

திடீர் மருத்துவச் செலவு, திடீர் பயணம் போன்ற தருணங்களில் உங்கள் சம்பளம் வருவதற்குத் தாமதமாகும் சமயத்தில் இந்த வகையான கடன்கள் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும். இந்த வகையான கடனைத் தர  பல்வேறு தனியார் கடன் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும், இதுபோன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக (ஆண்டுக்கு 20% - 40% வரை) இருக்கும். எனவே, இந்த வகையான கடன்களை வாங்கும்முன், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை மனதில்கொள்வது நல்லது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
4) சிறு தொழில் கடன்

சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு (SME)) ஏற்படும் தற்காலிகப் பணத் தேவைகளுக்கு, அவர்களது தொழில் வரவு செலவு கணக்கின் அடிப்படையில் கடன் வழங்க, பல்வேறு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை உள்ளன. பொதுவாக, கடன் கேட்கும் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கும்முன், அந்த நிறுவனங்களின் கடந்த மூன்றாண்டுக் கால வருமான வரித் தாக்கல் கணக்கு (ITRs) விவரம், பேலன்ஸ்ஷீட், லாப நஷ்டக் கணக்கு விவரம் போன்றவற்றைப் பார்த்துவிட்டுத்தான் கடன் வழங்கப்படும். ஒருவேளை, கடன் தொகை பெரிதாக இருந்தால், கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் பிணையம் கேட்கும்.

பொதுவாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள், கடன் கேட்பவரின் கிரெடிட் ஸ்கோர், இரண்டாண்டுக் கால வருமான வரிக் கணக்கு தாக்கல், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவற்றைப் பார்த்து, திருப்தியடைந்த பின்னர்தான் கடன் வழங்கும். குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இருப்பினும், குறைவான கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கும் சில தனியார் நிறுவனங்கள், அதிக வட்டியில் கடன் வழங்க முன்வருகின்றன.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
5) அவசரக்கடன்

* உங்களுக்கு மிகவும் அவசரமாகக் கடன் தேவையெனில், முதலில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடம் கேட்பதுதான் சரியான தீர்வாக இருக்கும். 

* பர்சனல் லோன் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வங்கியுடன் உங்களுக்குள்ள உறவைப் பொறுத்து, 30 நிமிடங்கள் முதல் மூன்று தினங்களுக்குள் நீங்கள் அதனைப் பெற்றுவிட முடியும். 

* கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, உங்களது கடன் வரம்பில் 40-80 சதவிகிதத் தொகையை ஏ.டி.எம் மூலம் நீங்கள் எடுக்க முடியும். தினமும் பணம் எடுப்பதில் இடைவெளி இருக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான வங்கிகள், வரம்புக்கு மேலும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அதே சமயம், வரம்புக்குமேல் பெறும் கடனுக்கு, வழக்கமான வட்டியைவிட அதிகமான வட்டி விதிக்கப்படும். 

*உங்களுக்கு ஏற்கெனவே வீட்டுக் கடன் இருந்தால், அதைப் பயன்படுத்தி அதிகபட்சம் 20 ஆண்டுகளுக்கு அல்லது உங்களது வீட்டுக் கடனின் அசல் தொகையைத் திரும்பக் கட்டிமுடிக்கும் வரைக்குமான காலத்துக்கு ரூ.50 லட்சம் வரைக்கும் நீங்கள் டாப்அப் லோன் பெறலாம். 


* உங்களுக்குச் சொந்தமாக வீடு இருந்து, மிகப் பெரிய தொகை தேவைப்படும்பட்சத்தில் நீங்கள் அந்தச் சொத்தின் பேரில் லோன் வாங்கலாம். உங்கள் வீட்டின் மதிப்பைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை பெற முடியும். திருப்பிச் செலுத்தும் காலம் 2 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். சொத்து மதிப்பில் 65% வரை கிடைக்கும். 

* அதே போன்று தங்கத்தின் மதிப்பில் 60% வரை லோன் கிடைக்கும். வங்கிகளில் ரூ.10,000 முதல் ரூ.25 லட்சம் வரைப் பெற முடியும். மேலும்  பங்குப் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், வைப்புநிதி பத்திரங்கள் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஈடாக வைத்துப் பெறலாம். ஷேர்கள் மற்றும் ஃபண்டுகளுக்கு அதன் மதிப்பில் 50 சதவிகிதமும், வைப்பு நிதிக்கு அதன் மதிப்பில் 75 சதவிகிதமும் வங்கிகள்  தரும். 
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
6) மறக்கக்கூடாதவை!

உங்களது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்படும் பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான ஒரு கருவியாகவே குறுகிய காலக் கடனை நீங்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், அந்தக் கடனை வாங்கும்முன் அதனை எப்படித் திருப்பிச் செலுத்தப்போகிறோம் என்பதற்கான திட்டத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். இதுபோன்ற கடன்களை உரியக் காலத்தில் திருப்பிச் செலுத்தாமல் போனால், அது உங்களின் கிரெடிட் ஸ்கோரைப் பாதிப்பதோடு, அதிகமான தொகையை அபராதமாகவும் செலுத்த நேரிடும். எனவே, அத்தகைய நிலையைத் தவிர்ப்பது நல்லது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்



இன்று இவரின் 73வது நினைவு தினம்.....!
🏁 இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

🏁 ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

🏁 பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த வேலையை துறந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

🏁 இவர் 1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவினார்.

🏁 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார். இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 48-வது (1945) வயதில் மறைந்தார்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இன்றைய பொன்மொழி

'வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது."

- ஹெலன் கெல்லர்.

https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா? அப்பாவா?


  பெண்களுக்கு, உறவு முறைகளில் மிகவும் முக்கியமான உறவு தந்தை. உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள். அதேபோல ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ் எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிகமிகத் தேவையென்று சொல்லப்பட்டு உள்ளது.

டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் :

அப்பா என்பவர் தனது டீன் ஏஜ் மகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி, அன்பு, அரவணைப்பு நிறைந்தவர், ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கையை வளர்ப்பவர், பண்புகளை ஊட்டுபவர் என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.

ஒரு பெண் சந்திக்கும் முதல் ஆண் :

ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தான். அவரிடம் இருந்துதான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக்கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.

சின்ன வயதில் மழலையாக இருக்கும் போதிலிருந்து அவளுக்கு தேவையான எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். திடீரென ஒரு நாள் வளர்ந்து நிற்பாள். என் டாடி சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தவள், டாடிக்கு ஒண்ணும் தெரியாது என்று பல்டி அடிப்பாள்.

உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார் எனும் நிலைமைதான் இருக்க வேண்டுமே தவிர அவர்கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவேக்கூடாது.

என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக். என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.

மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நீங்கள் பேசுவதை விட, உங்கள் மகள் பேசுவதை அதிகமாய் கேட்கவேண்டும். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது, நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்!

அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.

சமூகம் சார்ந்த பல விஷயங்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.

பெண்ணின் திருமண வயது வரும்போது, என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும் என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்!

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.

இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்!..

https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வீட்டிலே தேன் வளர்க்கும் எளியமுறை!

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்குப் பெரியவர்கள் அடிக்கடி  சொல்லும் உதாரணம், தேனீ மாதிரி உழைக்கணும் என்பதே. அப்படிப்பட்ட தேனீக்கள் நாளுக்கு நாள் அழிந்துவருகின்றன. அப்படி அழிந்து வரும் தேனிக்களைப் பாதுகாக்கவும், அதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சனிக்கிழமை 'உலக தேனீக்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. 

உலகின் மிகச் சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகக் கருதப்படுவது தேன். ஒரு தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80,000 தேனீக்கள் இருக்கும். அதில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டும் தான் இருக்கும். 250-க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால் ராணித் தேனீ  2 லிருந்து 7 வருடம் வரை உயிருடன் இருக்கும். வேலைக்கார தேனீக்கள் அதிகபட்சமாக 42 நாட்கள் உயிருடன் இருக்கும். ராணித் தேனீ ஒரு நாளைக்கு 2,000 முதல் 3,000 முட்டைகள் வரை இடும். வருடத்துக்கு 5 முதல் 7 லட்சம் முட்டைகள் இடும். தன் மொத்த வாழ்நாளில் ஏறத்தாழ 1 மில்லியன் முட்டைகள் வரை உருவாக்கும். இவற்றுக்கு 6 கால்கள் உண்டு. தன்னுடைய இறக்கைகளை ஒரு நிமிடத்துக்கு 11,400 முறை வேகமாக அடிக்கும். நிமிடத்துக்கு 190 முறை அடிக்கும். ஒரு மணி நேரத்தில் 25 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும். 

பல்வேறு உயிரினங்களில் தலைவனாக இருப்பது ஆண்கள்தான். ஆனால் இங்குப் பெண் அதாவது, ராணித் தேனீதான் தலைவன். அனைத்து தேனீக்களும் இதன் கட்டுப்பாட்டுக்குள் தான். பல்வேறு  கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் முக்கிய வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீக்கு அடிமையாக வேலை செய்யும். அது மட்டுமல்லாமல் ஆண்தேனீக்களும் ராணித்தேனீக்களுக்கு அடிபணியும். பார்ப்பதற்குக்கூட ஆண்தேனீயைவிட ராணித் தேனீ பெரியதாகவே இருக்கும். ஒரு தேனீ தன் வாழ்நாள் முழுவதும் ஒன்றரை டீ-ஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். ஒரு கோடிக்கும் அதிகமான இடங்களுக்குப் பயணம் செய்து தேன் சேகரிக்கும். தேனீக்கள் தன்னுடைய கூடு இருக்கின்ற இடத்திலிருந்து 12 கி.மீ தூரம் வரை சென்று தேனைச் சேகரிக்கும். உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளராக தேனீக்கள் இருக்கின்றன. உயிரினங்களின் யானை, ஆமை தான் அதிக ஞாபகசக்தி கொண்டவை. ஆனால் அவர்களைக் காட்டிலும் கூர்மையான ஞாபகசக்தியைக் கொண்டது தேனீக்கள். தேனீக்கள் மிக அதிகமாகச் சுத்தம் பார்ப்பவை. 

உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு 42% அதிகரித்திருக்கிறது. தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவையே. செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் தேன் சேகரிக்கச் சென்ற தேனீ கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் அலைந்து திரிந்து இறுதியில் இறந்துவிடுகிறது. அதேபோல், மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்குவதால் தேனீக்கள் இறந்துவிடுகிறது. தேனீக்களை அழிக்காமலே தேன் எடுக்கும் எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. ஆனாலும், நெருப்பு மூட்டித் தேன் எடுக்கும் பழங்கால முறையையே இன்றைக்கும் பலர் பின்பற்றி வருவதும் தேனீக்கள் அழிய ஒரு காரணமாக இருக்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலர் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து  வயல்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்கவும் முயல்கிறார்கள். தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர் என்று பலர் தேனீக்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். 

தேனீ வளர்ப்பு ஊரறிந்த விஷயம், ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலை. தேனீக்களை மிக எளிதாக வீட்டின் அருகிலேயே வளர்க்கலாம். தேனீக்கள் வளருவதற்குப் பாதுகாப்பு முக்கியம். முக்கியமாக எறும்புகள் இருக்கும் இடத்தில் அவற்றை வளர்க்கவே கூடாது. தேன் கூடு வைத்த பிறகு அடிக்கடி அந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பெட்டியில், எலி, பல்லி, பாம்பு, பூச்சிகள், கரிச்சான் குருவி, மெழுகு பட்டுப்பூச்சி, குளவி, கதம்ப வண்டு போன்றவை உயிரினங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேனீப் பெட்டிகள் நன்கு விளைந்த மரப்பலகைகள் கொண்டு செய்யப்பட வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் தான் தேனீக்களால் சீரான வெப்ப நிலையைப
் பராமரிக்க இயலும். பச்சை மரப் பலகைகள் கொண்டு தேனீப் பெட்டிகள் செய்தால் நாளடைவில் பெட்டியின் பாகங்கள் வளையும். இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் பெட்டிக்குள் புக நேரிடும். பெட்டிகளில் வெடிப்புகள் பிளவுகள் இல்லாமல் இருத்தல் அவசியம். பெட்டியை ஆடாமல் வைக்க மரம் அல்லது இரும்பாலான தாங்கிகளைப் பயன்படுத்தலாம். தாங்கிகளின் கால்கள் எறும்புகள் ஏறாமல் தடுப்பதற்காக நீருள்ள கிண்ணத்துக்குள் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், தேன் கிடைக்காது. காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்குத் தொடர்ந்து இருக்காது. ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். 

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தேனீப் பெட்டிகள், தேன் பிரிக்கும் இயந்திரம் என்று அனைத்தும் கடைகளிலும் வந்து விட்டன. தேனீப் பெட்டிகள் 6,500 ரூபாய் வரை கிடைக்கிறது. எந்தக் கலப்படமும் இல்லாதத் தூய்மையான தேனில் உயிர் காக்கும் நன்மைகள் உள்ளன. இயற்கை முறையில் உடலைப் பருமனாக மாற்றவும், உடல் பருமனை குறைப்பதிலும் அதிக பங்குவகிக்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வந்தால், குமட்டல் மற்றும் தலைவலி குணமாகும். தேனையும் மாதுளம் பழரசத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், இதய நோய்கள் தீரும். கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி, அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் குணமாகும். வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றித் தேன் தடவ வேதனைக் குறையும். இவை, கிராமப்புறங்களில்  கண்டுணர்ந்த இயற்கை வைத்திய முறைகள். அதுமட்டுமின்றி ரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நல்ல தூக்கம் வருவதற்கும், குடல் புண், வாய்ப்புண், ரத்த சோகை போன்ற பல்வேறு நோய்களையும் தேன் குணமாக்குகிறது.

எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். தற்போது பயன்பாட்டில் இருப்பவை சுத்தமான தேன்களாக இருப்பதில்லை. வியாபாரத்துக்காகக் கலப்படம் செய்யப்படுகிறது. அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.