சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'மற்றவர்களை வீழ்த்துவது நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்கக்கூடாது. நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவது தான் நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்."

உலக ஆசிரியர் தினம்
✎ மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சி. இத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
✎ ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றிவரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது.

ரெட் அலர்ட் என்றால் என்ன?
கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்தந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
Green Alert :
பச்சை எச்சரிக்கை (Green Alert) கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
Yellow Alert :
மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Amber Alert :
உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும்.
Red Alert :
மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் (Red Alert) அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது. அதாவது மிகக் குறைந்த நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கைதான் ரெட் அலர்ட்.
எனவே ரெட் அலர்ட் பற்றி தெரிந்துகொண்டு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்கவேண்டும்.

முத்தான சிந்தனை துளிகள் !
'நாம் பிறருடைய இன்பத்தை எழுதும் எழுதுகோலாக இருக்கலாம். முடியாத பட்சத்தில் பிறருடைய துன்பத்தை அழிக்கும் ரப்பராகவாவது இருக்கலாம்."
'நாம் பிறருடைய இன்பத்தை எழுதும் எழுதுகோலாக இருக்கலாம். முடியாத பட்சத்தில் பிறருடைய துன்பத்தை அழிக்கும் ரப்பராகவாவது இருக்கலாம்."
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியேயில்லை.."

பி.எப். பணத்தை எதற்கெல்லாம் பெற முடியும் தெரியுமா?
இ.பி.எப் சட்டத்தின் படி, பொருளாதாரத்தின் அணி திரட்டப்பட்ட துறைகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை எதிர்காலத்திற்குச் சேமிப்பாக ஒதுக்கி வைப்பர்.
பல்வேறு காரணங்களுக்காக, இடையில் நாம் பி.எப். பணத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அவை எவை எவை என்று இங்கே பார்ப்போம்...
கல்விச் செலவு :
கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவத்திற்காக :
காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதயநோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6 மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகையோ வட்டியுடன் வழங்கப்படும்.
திருமணத் தேவை :
திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட 50 சதவீத பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கைப் பேரிடர்கள் :
எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 சதவீதமோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் :
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
வீடு கட்ட :
வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டிடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும்.
கடனுக்காக :
நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும்.
நிறுவனம் :
தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.
இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.
ஓர் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது கோர்ட்டை அணுகும்போதோ, தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வருங்கால நிதியில் 50 சதவீத பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு சதவீதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோதோ நூறு சதவீத வட்டியுடன் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.
மற்றவை :
உறுப்பினர் ஒருவர் தனது 54-வது வயதில் 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலும் இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்.
55 வயதை எட்டிய ஓர் உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷ்த்த பென்சன் பீமா யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !
'இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்... ஆனால், வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்."

'மௌனமும், சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள்... மௌனம் நிறைய பிரச்சனைகளை குறைத்து விடும்... சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்..."

ஏடிஎம் பயன்படுத்துவோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!
என்னதான் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வந்தாலும் சில நேரங்களில் ஏதேனும் கோளாரால் பரிவர்த்தனை தோல்வியில் முடிவது என்பது இயல்பு, அது மட்டும் இல்லாமல் சில முக்கியமான நேரங்களில் தோல்வி அடையும்போது நாம் அடையும் துன்பம் அதிகம்.
மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி வரும் வேளையில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அறிவியல் வளர்ச்சியின் பயனாக உலகமே தொழில்நுட்ப மயமாக மாறி வருகிறது. நேரத்தையும் மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கும் பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பங்கள் நமக்கு பயனை தந்தாலும், சில மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. பல்வேறு வழிகளில் மோசடிகளைத் தடுக்க வங்கிகள் முயன்றுவரும் நிலையில், வாடிக்கையாளர்களும் தங்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு சொந்த பணத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஏடிஎம் பயன்படுத்தும் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இங்கு காண்போம்.
கடவுச்சொல் :
கடவுச்சொல்லை மறந்து விடுவோமோ என்ற பயத்தில் பலரும் ஏடிஎம் கடவு எண்ணை, ஏடிஎம் அட்டையில் எழுதி வைப்பார்கள், ஆனால் அவ்வாறு எழுதி வைக்கக்கூடாது.
யாரிடமும் கொடுக்க வேண்டாம் :
நம்மில் பலருக்கு ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த தெரியாது, அப்படிப்பட்ட நிலைமையில் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த கொடுக்கக்கூடாது மற்றும் உங்களுக்கு உதவிபுரிய அனுமதிக்க வேண்டாம்.
ஏடிஎம் கடவு எண் :
வங்கி ஊழியர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தவிர அறிமுகமில்லாதவர்கள் யாரிடமும், ஏடிஎம் கடவு எண்ணை கூற கூடாது.
பரிவர்த்தனையின் போது :
ஏடிஎம் மெஷினில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, உங்கள் ஏடிஎம் அட்டையை உங்கள் கையிலே வைத்துக் கொள்ளுங்கள், பணம் எண்ணுவதற்காக கீழே வைத்து விட்டு மறதியில் சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அதே போல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மொபைல் போனில் பேசுவதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். கடவுச்சொல் உள்ளீடும் போது யாரையும் பார்க்க அனுமதிக்கக்கூடாது.
பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏடிஎம் திரையில், வரவேற்றுத் திரை உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஏடிஎம்-ல் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில் ஏடிஎம்-ல் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.
ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.
பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.
வங்கி பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள் மற்றும் வங்கி அறிக்கைகளை (Bank Statement) தொடர்ந்து சரிபார்க்கவும்.
கைப்பேசி எண் :
உங்களின் தற்போதைய கைப்பேசி எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். அதன் மூலம் உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை குறுஞ்செய்திகள் பெறமுடியும்.
ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் :
உங்களின் ஏடிஎம், டெபிட் அட்டை தொலைந்து போனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடக்கும் போது, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அசாதாரணத்தால் கஷ்டப்பட்டு சேமித்த தொகையை கைவிட்டு விடாதீர்கள்..!

இன்றைய பொன்மொழி
'நம் பிரச்சனைக்கு மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்.. அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது."

'தயங்குபவர்களுக்கும்...
பயப்படுபவர்களுக்கும்...
யோசிப்பவர்களுக்கும்...
இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை...
துணிவும், முயற்சியும்தான் வெற்றியின் முதற்படி..."

FIR என்றால் என்ன?
First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை" என்று கூறுவார்கள். FIR என்பது இந்தியாவில் ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்துமூலமான ஆவணமாகும்.
இரண்டு வகையான குற்றங்கள் :
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள், போன்றவைக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
முதல் தகவல் அறிக்கையை யார், எங்கு புகார் தாக்கல் செய்யலாம்?
பாதிக்கப்பட்ட நபரோ, அவருடன் துணை வருபவரோ குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளரிடமோ, அவரின் கீழ் பணிபுரியும் காவலர்களின் முன்போ புகாரினை பதிவு செய்யலாம். குற்றம் பற்றி அறிந்த யாரேனும் ஒருவர் கூட புகாரை தாக்கல் செய்யலாம். அவர் கண்கூடாக பார்க்காவிட்டாலும், செவிவழியாகக் கேட்ட செய்தியாக இருப்பினும், புகாராகப் பதிவு செய்யலாம்.
முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்யலாம்?
வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ காவல் நிலைய ஆய்வாளரிடமோ, புகாரை பெற்றுக்கொள்ளும் பொறுப்பிலிருக்கும் காவல் அதிகாரியிடமோ புகாரை பதிவு செய்யலாம். நாம் கொடுக்கும் தகவல்களை அவர்கள் பதிவு செய்த பின்னர், புகார் கொடுப்பவர் கையொப்பமிட வேண்டியது அவசியம். ஒரு முறை முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு நிறைவடைந்து விட்டால், நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் அதனை திருத்துவது இயலாத காரியம்.
முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்படும்போது கவனிக்க வேண்டியவை...
✔ முதல் தகவல் அறிக்கையை குற்றம் நடைபெற்றவுடன் காலதாமதம் இல்லாமல் உடனடியாக தாக்கல் செய்வது அவசியம்.
✔ புகார் கொடுப்பவரின் வார்த்தைகளிலே, அவர் கொடுப்பது போலவே புகார் பதிவு செய்யப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
✔ முதல் தகவல் அறிக்கையில் எளிமையான வார்த்தைகளில் குற்றம் நடைபெற்ற இடம், தேதி, நேரம், ஏதாவது பொருட்சேதம் இருப்பின் அதனைப் பற்றியும், உயிர் இழப்பு இருப்பின் அதனைப் பற்றியும் குற்றத்துக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தேகப்படக்கூடிய நபர் என்று அனைத்தையும் தெளிவுபட குறிப்பிட வேண்டும்.
✔ FIR தயாரிக்கப்பட்ட பின், புகார் கொடுப்பவரின் கைரேகையோ, கையொப்பமோ பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம்.

எந்த இடத்தில் நாம் நிராகரிக்கப்படுகிறோமோ அதே இடத்திலிருந்து தான் நமக்கான ஒரு புதிய வாழ்க்கை தொடங்குகிறது.
நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுவோமேயானால் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.....

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்?
📱 இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் எல்லாம் குழந்தைகள் அழுதால் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள்.
📱 ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தங்களது ஸ்மார்ட் போனை அவர்கள் கையில் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்.
📱 கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தையை சமாளிப்பதற்காக ஸ்மார்ட் போனில் ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்துவிட்டு அவர்கள் கையில் கொடுத்துவிடுகின்றனர். அதனால் குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர்.
அடிமையாகும் குழந்தைகள்:
📱 பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்றைய நிலவரத்தில் குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி வருகின்றது. ஒரு வயது குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து வைத்திருக்கிறது.
📱 உங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றார்கள்? கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு தானே உபயோகப்படுத்துகின்றனர்.
📱 இது சரியான முறையல்ல. நீண்ட நேரம் அதே நிலையில் குழந்தைகள் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படும்.
📱 குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து பயன்படுத்த கற்றுக்கொடுங்கள். தலை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.
📱 அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள் அல்லது வேறு செயல்களில் குழந்தைகளின் கவனத்தை ஈடுபடுத்துங்கள்.