Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மருந்துகளை சாப்பாட்டுக்கு முன், பின் ஏன் சாப்பிட சொல்கிறார்கள்?

சில மாத்திரைகளை உணவுக்கு முன்னும், சில மாத்திரைகளை உணவுக்குப் பின்னும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். அதற்குக் காரணம் நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான். நாம் சாப்பிடுவதற்கு முன்பு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பும் வீரியமும் அதிகமாக இருக்கும். உணவு உண்டபின் அதன் வீரியம் குறைவாக இருக்கும்.

பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார். மருத்துவர்கள் ஏன் அப்படி சாப்பிட சொல்கிறார்கள் என்பதை பற்றி இங்கு காண்போம்.

சாப்பாட்டிற்குப் பிறகு :

சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரைகளைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சாப்பாட்டிற்கு முன் :

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தண்ணீரில் கரைத்து :

சில மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். காரணம், மாத்திரை உணவுக்குழாயில் தங்கிவிடாமல் சிறுகுடல் பகுதிக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும் என்பதுதான். இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 கிளாஸ் தண்ணீராவது பருக வேண்டும். உணவுக்குழாயில் மாத்திரை தேங்கிவிட்டால் புண் உண்டாகிவிடலாம்.
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

பின்னால் பேசுபவன் புகழ்ந்து பேசினால் என்ன? இகழ்ந்து பேசினால் என்ன? காதில் வாங்காமல் அடுத்தஅடி எடுத்து வைத்து முன்னேறிக் கொண்டே இரு...
டிக்... டிக்...!!


👉கிராமத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டுக்களை பற்றி நவீன கால குழந்தைகளிடம் கேட்டால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்று கேட்பார்கள்.

👉என்னதான் மொபைல்போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.

👉கிராமப்புறங்களில் விளையாடப்படும் மிக சுவாரஸ்மான விளையாட்டுகளில் ஒன்றுதான் டிக்... டிக்... யாரது?

எத்தனை பேர் விளையாடலாம்?

👉இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர்.

எப்படி விளையாடுவது?

👉முதலில் திருடனாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்விளையாட்டு கேள்வி பதில் முறையில் விளையாடப்படும். கேள்வி பதில் பாடல் போல் இருக்கும்.

👉திருடனாக இருக்கும் நபர் முதலில் டிக் டிக் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

திருடன் : டிக்... டிக்...

மற்றவர்கள் : யாரது?

திருடன் : திருடன்

மற்றவர்கள் : என்ன வேண்டும்?

திருடன் : நகை வேண்டும்.

மற்றவர்கள் : என்ன நகை?

திருடன் : கலர் நகை.

மற்றவர்கள் : என்ன கலர்?

திருடன் : பச்ச கலர் (சுற்றுபுறத்தில் என்னென்ன கலர் இருக்கிறதோ அந்த வண்ணங்களில் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும்.)
👉அவ்வாறு கலர் சொல்லியவுடன் அனைவரும் ஓடிப்போய் அந்த கலர் உள்ள பொருளைத் தொட வேண்டும்.

👉கலரை தொடுவதற்கு முன்னால் பிடிப்பவர் யாரை துரத்தி பிடிக்கிறாரோ அவர் ஆட்டமிழந்தவர். அவர் மீண்டும் விளையாட்டை ஆரம்பித்து மற்றவர்களை பிடிக்க வேண்டும்.

👉திருடனாக இருப்பவர் எந்த கலரை வேண்டுமானாலும் சொல்லலாம்.

👉ஆனால், இரண்டு வண்ணங்கள் அதாவது கலவை வண்ணங்களை சொல்லக்கூடாது.

விளையாட்டின் பயன்கள் :

👉வண்ணங்களை தெரிந்து கொள்ளலாம்.

👉நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
முத்தான சிந்தனை துளிகள்..!

உறுதியான இலக்கு ஒன்றை மனதில் தீர்மானியுங்கள். அதை நோக்கிய பயணத்திற்கான வழியை உலகம் உங்களுக்கென உருவாக்கும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

இன்னும் நேரமிருக்கிறது என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சனையே...!
கிராமங்களில் நாம் மறந்தவை...!!

👉குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குஷிதான். தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் மொபைல்போனில் விளையாட பழகிக்கொண்டனர். அதனால் வெளியில் விளையாடும் சுவாரஸ்மான விளையாட்டுக்களை பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை.

👉உடல் ஆரோக்கியத்துடனும், பலத்துடனும் இருக்க மொபைல்போன் தேவையில்லை, கிராமத்து விளையாட்டுக்களே சிறந்தது என்பதை சொல்லிக் கொடுப்போம்.

குரங்கு விளையாட்டு !!

👉குரங்கு விளையாட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

எப்படி விளையாடுவது?

👉முதலில் உள்வட்டம் ஒன்று, வெளிவட்டம் ஒன்று போட்டுக்கொள்ள வேண்டும்.

👉அதன்பின் குரங்காக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆட்டத்தில் அவர்தான் குரங்காக இருப்பார்.

👉அவரை நடுவில் உள்ள உள்வட்டத்துக்குள் உட்கார வைப்பர். மற்றவர்கள் வெளிவட்டக் கோட்டில் உட்காருவர்.

குரங்கே குரங்கே மணி எத்தனை
ஒன்று
குரங்கே குரங்கே மணி எத்தனை
இரண்டு
குரங்கே குரங்கே மணி எத்தனை
மூன்று
.
.
.
.
குரங்கே குரங்கே மணி எத்தனை
பத்து

👉பத்து என்றதும் எல்லோரும் எழுந்து ஓடுவர். ஓடுபவர்களை குரங்கு பிடிக்க வேண்டும். பிடிபட்டவர் குரங்காக்கப்படுவார். ஓடுபவர் குரங்கு இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் அவரை தொடக்கூடாது.


உந்தி பறத்தல் !!

👉உந்தி பறத்தல் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

எப்படி விளையாடுவது?

👉இரண்டு சிறுவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டும், கால்களால் ஒருவரை ஒருவர் உதைந்துகொண்டும் சுற்றும் விளையாட்டாகும்.

👉அப்படி கைகளை பிடிக்கும்போது வலக்கையை வலக்கையாலும், இடக்கையை இடக்கையாலும் எதிரெதிர் நின்று பிடித்துக்கொள்வர். அப்போது கைகள் பின்னலிட்டது போல் இருக்கும்.

👉அதன்பின் வலப்புறமாக சிறிது நேரமும், இடப்புறமாக சிறிது நேரமும் சுழல்வர். இது ஒரு பொழுதுப்போக்கு விளையாட்டாகும்.

வண்டி விளையாட்டு !!

👉தென்னை மட்டைகளையும், வாழை மட்டைகளையும் பயன்படுத்தி அதன்மேல் சிறுவர்களை அமரச்செய்து இழுத்துச்சென்று விளையாடுவர்.

👉சைக்கிள் ரிம்களை குச்சி ஒன்றால் உந்தி உருட்டிச் சென்று விளையாடுவர்.

👉சைக்கிள் மற்றும் வண்டி போன்றவற்றின் டயர்களை கோலால் தட்டி உருட்டி சென்று விளையாடுவர்.

👉இது குழந்தைகளுக்கு குஷியான மற்றும் பொழுதுப்போக்கான விளையாட்டாகும்.
உப்பு மூட்டை!!

👬விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு நன்றாகப் பசியெடுக்கும். பொதுவாகவே, விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

👬கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு விளையாட்டுதான் 'உப்பு மூட்டை".

எத்தனை பேர் விளையாடலாம்?

👬இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

எப்படி விளையாடுவது?

👬விளையாடும் குழந்தைகள் இரண்டு இரண்டு பேராக 'ஜோடி" அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவருக்கு மிகவும் பிடித்தவருடன் சேர்ந்துகொண்டு 'ஜோடி" அமைத்துக்கொள்ளலாம். 'ஜோடி" சேர்ந்த பிறகு, விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

👬விளையாட்டு தொடங்கும் இடத்தில் ஒரு தொடக்கக் கோடு போட்டுக்கொள்ள வேண்டும். தொடங்கும் இடத்திலிருந்து 50 அடி அல்லது 60 அடி தூரத்தில் ஒரு முடிவுகோடு வரைந்து கொள்ள வேண்டும்.

👬தொடக்கக் கோட்டின் மேல் அனைவரும் காலை வைத்துக்கொண்டு, விளையாடத் தயாராக இருக்க வேண்டும்.

👬'ரெடி" என்று சொன்னதும், தொடக்கக்கோட்டில் நிற்கும் ஜோடியில் ஒருவர் குனிந்துகொள்ள, அவரின் முதுகின்மேல் இன்னொருவர் உப்பு மூட்டையாக ஏறிக்கொள்ள வேண்டும். (அதாவது, குனிந்துகொண்டவர் முதுகில் ஏறி, கழுத்தை இரு கைகளாலும், அவரது இடுப்பை இரு கால்களாலும் பின்னிக்கொள்ள வேண்டும்).

👬உப்பு மூட்டையாக தூக்கிக் கொண்டவர், முடிவு கோட்டை நோக்கி வேகமாக ஓடவேண்டும். கோட்டை தொட்டதும், அப்படியே உப்பு மூட்டையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

👬அதாவது, உப்பு மூட்டையாக முதுகில் ஏறியிருந்தவர் குனிந்துகொள்ள, குனிந்து இருந்தவர் உப்பு மூட்டையாக ஏறிக்கொள்ள வேண்டும்.

👬இப்போது முடிவு கோட்டிலிருந்து தொடங்கிய இடத்தை நோக்கி, மறுபடியும் ஓடி வரவேண்டும். இதில், முதலில் வரும் ஜோடியே வெற்றிபெற்ற ஜோடி ஆகும்.

விதிமுறை :

👬உப்பு மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடும்போது, உப்பு மூட்டையாக முதுகில் இருப்பவரின் கால்கள் தரையை தொட்டுவிட்டாலோ அல்லது அவர் நழுவி கீழே விழுந்துவிட்டாலோ அந்த ஜோடி 'அவுட்".

பலன்கள் :

👉உடல் ஆரோக்கியம் மேம்படும்.

👉இலக்கை அடையும் திறன் வளரும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு காண்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள்...!
செட் விளையாட்டு !!


🖐தெருக்களில் சிறுவர், சிறுமிகள் விளையாடிய காலம் மாறி, இன்று அனைத்து தெருக்களும் வெறிச்சோடி கிடக்கிறது.

🖐வெயில் காலங்களில் சிறுவர்கள் வெயிலில் விளையாடாமல், நிழலில் நம் வீட்டு திண்ணைகளில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளோ ஏராளம் உள்ளன.

🖐அப்படி நாம் மறந்த விளையாட்டுகளில் ஒன்றுதான் செட் சேர்த்தல்... அது எப்படி விளையாடுவது?... வாங்க தெரிஞ்சுக்கலாம்...

எத்தனை பேர் விளையாடலாம்?

மூன்றுக்கும் மேற்பட்டோர்.

தேவையான பொருட்கள் :

வெள்ளைக் காகிதம்.

பேனா.

எப்படி விளையாடுவது?

🖐வெள்ளைத்தாளை ஒரு நபருக்கு நான்கு சீட்டுகள் வீதம் துண்டு துண்டாக கிழித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

🖐அந்த தாள்களில் அவரவருக்கு பிடித்த ஒரு பெயரை எழுதிக்கொள்ள வேண்டும். அது ஒரு பூவின் பெயராகவோ, நபரின் பெயராகவோ, சினிமா பெயர்களாகவோ, நடிகர், நடிகைகளின் பெயராகவோ இருக்கலாம்.

🖐மற்றொரு தாளில் விளையாடுபவர்களின் பெயரை எழுதிக்கொள்வர். அதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் குறிக்கப்படும்.

🖐பிறகு அனைவரும் குழுவாக அமர்ந்து விளையாட்டை தொடங்குவர். பெயர் எழுதிய தாள்களை நான்காக மடித்து ஒருவர் குலுக்கி போடுவார். ஒவ்வொருவரும் நான்கு சீட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

🖐அனைவரும் தங்களுக்கு வந்த சீட்டுகளை ரகசியமாக பார்த்து வைத்துக் கொள்வர். பின்னர் சீட்டுகளை யார் முதலில் குலுக்கிப்போட்டாரோ அவர்தான் முதலில் தனக்கு தேவையில்லை என்று நினைக்கும் ஒரு சீட்டை அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும்.

🖐இரண்டாவது நபருக்கு முதல் நபர் கொடுத்த சீட்டு தேவையென்றால் அதை வைத்துக் கொண்டு, அவருக்கு எது தேவையில்லையோ அந்த சீட்டை மூன்றாவது நபருக்கு கொடுக்க வேண்டும்.

🖐இதேபோல் விளையாட்டை தொடர்ந்து விளையாடுவார்கள்... இறுதியில் யாருக்கு நான்கு சீட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கிறதோ அவர் குழுவிற்கு நடுவே செட் என்று கூறிக்கொண்டே தரையில் தன் கையை வைப்பார்...

🖐அவரது கை மேல் விளையாடும் அனைவரும் தொடர்ச்சியாக தங்களது கையை வைப்பார்கள்...

🖐குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.

🖐அதாவது, குழுவில் ஐந்து நபர்கள் இருந்தால் செட் அடித்தவருக்கு 500 மதிப்பெண்களும், அவருக்கு அடுத்ததாக கை வைத்தவருக்கு 400 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கப்படும்.

🖐இவ்வாறு தொடர்ந்து விளையாடுவார்கள். இறுதியில் யார் புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்கள் வைத்துள்ளாரோ அவர்தான் ஆட்டத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

பலன்கள் :

👉குழு ஒற்றுமை மேம்படும்.

👉வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
வார்த்தை வட்டம்..!!

⭕விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதை போலவே, குழந்தைகளின் கற்றலுக்கும் வழிவகுக்கிறது. சில விளையாட்டுகளின் மூலமாக குழந்தைகள் கூட்டல், கழித்தல் கணக்குகளை சுலபமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், சில விளையாட்டுகளின் மூலமாக புதிய புதிய சொற்களையும் விளையாட்டு போக்கிலேயே குழந்தைகள் கற்றுக்கொள்வதும் உண்டு.

⭕அப்படியான ஒரு விளையாட்டுதான் 'வார்த்தை வட்டம்".

எத்தனை பேர் விளையாடலாம்?

⭕இந்த விளையாட்டை 15 முதல் 20 குழந்தைகள் வரை விளையாடலாம்.


எப்படி விளையாடுவது?

⭕முதலில் மூன்று போட்டியாளரை தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.

⭕மைதானத்தில் ஒரு பெரிய வட்டமொன்றை போட வேண்டும். வட்டத்திலிருந்து சற்று தூரமாக விளையாடுபவர்கள் எல்லோரும் நின்றுகொள்ள வேண்டும். வட்டத்திற்கும், விளையாடுபவர்களுக்கும் நடுவே மூன்று போட்டியாளர்களும் நின்றுகொள்வார்கள்.

மூன்று போட்டியாளர்கள் : 'சொல்லப்போறோம், சொல்லப்போறோம்... எழுத்து சொல்லப்போறோம்..!" என்று சொல்ல,

மற்றக் குழந்தைகள் : 'நீங்க சொல்லப்போற எழுத்துக்கு விடை சொல்லப்போறோம்" என்று எதிர் பதிலை சொல்வார்கள்.

⭕மூன்று போட்டியாளர்களில் யாராவது ஒருவர், ஏதாவது ஓர் எழுத்தைச் சொல்வார்.

⭕உதாரணமாக, 'மு" என்ற எழுத்தை சொல்லிவிட்டால், உடனே விளையாட்டில் உள்ளவர்கள் ஆளுக்கொரு 'மு" என்ற எழுத்தில் தொடங்கும் ஏதாவது ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும்.

⭕'முறுக்கு", 'முள்ளங்கி", 'முட்டைகோஸ்", 'முந்திரி" என ஒவ்வொருவரும் ஒரு பொருளின் பெயரை சொல்ல வேண்டும். அப்படி சொல்லிவிட்டு, வட்டத்துக்குள் போய் நின்றுகொள்ளலாம்.

⭕பொருளின் பெயரேதும் சொல்லாமல் நிற்பவர்களை பிடிக்க போட்டியாளர்களில் இருவர் துரத்திச் செல்வார்கள்;.

⭕மூன்றாவது போட்டியாளர், பொருளின் பெயரை சொல்லாதவர்கள் யாரும் வட்டத்தின் அருகே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

⭕போட்டியாளர்கள் சொல்லும் எழுத்தில் பெயரை சொல்லாதவர்கள், வட்டத்துக்கு பாதுகாப்பாக நிற்கும் போட்டியாளரை ஏமாற்றிவிட்டு, வட்டத்துக்கு அருகே வருவார்கள்.

⭕அப்போது, வட்டத்துக்குள் இருப்பவர்களின் கையில் அடித்து 'பாஸ்" எனச் சொல்லிவிட்டு வட்டத்துக்குள் சென்றுவிடலாம். இப்படி செய்தால் அனைவரும் பாஸ்.

⭕போட்டியாளர்கள் சொல்லும் எழுத்தில் பெயரை சொல்லாதவர்கள், வட்டத்துக்குள் இருப்பவர்களின் கையை தொட்டு பாஸ் சொல்லாத வண்ணம் அவர்களை பிடிக்க (தொட) வேண்டும். அவ்வாறு தொட்டுவிட்டால் அவர்கள் 'அவுட்".

⭕போட்டியாளர்கள் முதலில் எந்த மூன்று பேரை தொடுகிறார்களோ, அவர்கள் அடுத்த போட்டியாளர்களாக மாறிவிடுவார்கள்.

பலன்கள் :

👉புது புது வார்த்தைகளை கற்றுக்கொள்ளலாம்.

👉குழு ஒற்றுமை மேம்படும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இப்போது இருக்கும் உங்கள் நிலைதான் முடிவான ஒன்று என இருந்துவிட வேண்டாம். இதனைவிட மிகச்சிறந்தது உங்களை நோக்கி வர காத்திருக்கிறது. அதனால் எந்த நிலையிலும் நம்பிக்கையுடன் இருங்கள்!
அச்சுறுத்தும் சர்க்கரை நோய்..!


சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.

சர்க்கரை நோய்:

உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்ககூடிய நுழைவு வாயிலாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் 3 வகையாக உள்ளது.

1. முதல்வகை சர்க்கரைநோய்

2. 2-ம் வகை சர்க்கரைநோய்

3. கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் சர்க்கரைநோய்

முதல்வகை சர்க்கரைநோய்:

💪 முதல் வகை சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இந்த வகை நோயால் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் கொடுக்க வேண்டும்.

2-ம் வகை சர்க்கரைநோய்:

💪 2-ம் வகை சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறை பண்புகளை கொண்டு செல்லும் ஜீன்கள் 2-ம் வகை சர்க்கரைநோயை உருவாக்ககூடியது. பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும். எனவே மாத்திரைகளுடன் இன்சுலின் மருந்து தேவைப்படும். இவர்களுக்கு உணவு பழக்கத்தில் கட்டுபாடு தேவை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்:

💪 2% முதல் 4% வரை பெண்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்த போதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:

மன அழுத்தம், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், பரம்பரையாக வருதல், அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், கட்டுபாடற்ற உணவுகளை உண்ணுதல் ஆகியவை சர்க்கரை நோய்க்கான காரணங்களாக உள்ளது.

சர்க்கரை நோயை கண்டறியும் முறை:

1. ரத்தப் பரிசோதனை:

காலை உணவிற்கு முன்னும் உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு உணவிற்கு முன் 80 முதல் 120 மில்லிகிராம் டெசிலிட்டர், உணவிற்கு பின் 100 முதல் 140 மில்லிகிராம் டெசிலிட்டர் இருக்க வேண்டும்.

2. சிறுநீர் பரிசோதனை:

சிறுநீரில் சர்க்கரையின் அளவு உள்ளதா என கண்டறிய வேண்டும்.

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்:

இந்த நோயை கவனிக்காமல் விட்டால் பார்வை இழப்பு, இதயகோளாறு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம் மயக்கமுற்ற நிலை ஏற்படும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்வது?

இந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

சுறுசுறுப்பாய் இருப்பீர்களானால் எல்லாம் சுலபமே. சோம்பல் கொண்டவர்களுக்கு எதுவும் எளிதல்ல.
கொக்கு பற... பற... கோழி பற... பற...!!


👉கிராமப்புற விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக இருக்கின்றது.

👉சில விளையாட்டுகளை விளையாடினாலே போதும் உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் கொக்கு பற...பற... கோழி பற...பற..

எத்தனை பேர் விளையாடலாம்?

எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.


எப்படி விளையாடுவது?

🐥இந்த விளையாட்டுக்கான தலைவரை முதலில் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

🐥முதலில் விளையாடுபவர்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்தோ அல்லது நின்று கொண்டோ விளையாடலாம்;.

🐥இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வட்டத்திற்கு நடுவில் நின்று கொள்ள வேண்டும்.

🐥தலைவர் கொக்கு பற... பற... என்று சொன்னவுடன் விளையாடும் அனைவரும் பறவையை போல தனது இருக்கைகளையும் பறப்பது போல அசைக்க வேண்டும்.

🐥பறவைகளின் பெயர்களைச் சொல்லி, 'பற... பற..." என்று சொல்ல, அனைவரும் தனது கையை அசைக்க வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தலைவர் 'நாய் பற... பற..." என்று சொல்ல, அனைவரும் கை அசைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் பறவையை போல கை அசைத்தால் அவர் 'அவுட்". நாய் பறக்குமா, என்ன?

🍑இதேபோல் தேங்காய் என்றால் உட்கார வேண்டும்.

🌴தென்னைமரம் என்றால் எழுந்து நிற்க வேண்டும்.

🍩வடை என்றால் கைகளை வடை தட்டுவது போல் தட்ட வேண்டும்.

☕டீ அல்லது காபி என்றால் காபி குடிப்பது போல சைகை செய்ய வேண்டும்.

🗿இப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது தலைவர் சிலை என்று கூட சொல்வார். அப்போது அனைவரும் சிலைபோல அசையாமல் நிற்க வேண்டும்.

🐥நாம் சிலையாக நிற்கும்போது தலைவர் வந்து நமக்கு சிரிப்பு காட்டுவார், சோதனைகள் செய்வார். என்ன செய்தாலும் நாம் நிற்கும் நிலையிலிருந்து மாறாமல் அப்படியே நிற்க வேண்டும்.

🐥பின் அவர் வேறு ஏதேனும் ஒன்றை சொல்லும் வரை சிலை போலவே நிற்க வேண்டும். மீறி அசைந்தால் அவர் 'அவுட்".

🐥இப்போது, 'அவுட்" ஆனவர் தலைவராக நின்று, இந்த விளையாட்டை நடத்த வேண்டும்.

பயன்கள் :

👉உடல் வலிமை மேம்படும்.

👉மூளையின் செயல்பாடு துரிதமாகும்.

👉கூர்ந்து கேட்கும் திறன் அதிகரிக்கும்.

👉எடுக்கும் முடிவில் நிலையாக இருக்கும் திறன் மேம்படும்.
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

வாழ்வில் முன்னேறி சென்றாலும் கடந்து வந்த வாழ்க்கையை மறக்காதீர்கள்... ஏனெனில் உயர பறக்கும் பறவை கூட தாகத்திற்கு தரையை நோக்கி தான் வருகிறது..!!
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!

வாழ்க்கையில் வெற்றி பெற இத்தனை படிகளா என மலைக்காதீர்கள். எல்லாப்படிகளும் கடக்கக்கூடியவையே! உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே செயலில் வெற்றியைத் தருகிறது.
கிராமங்களில் நாம் மறந்தவை..!!

👉நாம் மறந்தாலும் நம் நினைவைவிட்டு நீங்காத விளையாட்டுக்கள் பல உண்டு. ஒவ்வொரு விளையாட்டையும் விளையாடும்போது வரும் சுகமே தனி.

👉அப்படி நாம் மறந்து போன விளையாட்டுக்களில் சிலவற்றை இங்கு காண்போம்.
கரகர வண்டி
👉இவ்விளையாட்டு சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

👉சிறுவர்கள் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தானே சுழல்வர்.

👉சுற்றும்போது,

கரகர வண்டி

காமாட்சி வண்டி (இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே சுற்றுவர்)

👉என்று பாடிக்கொண்டே சுற்றுவர்.

👉இவ்வாறு சுற்றும்போது வரும் கிறுகிறுப்பு ஒருவகை தனி இன்பத்தை தரும்.

👉சுற்றும்போது மயக்கம் வந்தால் உட்கார்ந்துகொள்வர் அல்லது படுத்துக்கொள்வர்.
காத்தாடி
👉சிறுவர்களுக்கு பிடித்த மிகவும் பொழுதுப்போக்கு விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

👉பனை ஓலையை வெட்டி, ஒரு சிறு குச்சியில் குத்தி காற்றாடிகளைச் செய்வர்.

👉இவ்வாறு செய்யும் காற்றாடியைக் கையில் பிடித்துக்கொண்டு காற்றை எதிர்த்தாற்போல ஓடும்போது பனை ஓலைத்துண்டுகளும் ஒருங்கே சுற்றும்.

👉இதைக்கண்டு சிறுவர்கள் மகிழ்வதும் உண்டு.
தட்டான் பிடித்தல்
👉இது சிறுவர்கள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.

👉தட்டான்களை சிறுவர் சிறுமியர்கள் பொறுமையாக பிடிப்பர். அப்படி தட்டானை பிடிக்கும்போது அது சுருண்டு கையைக் கடிக்கும்போது விட்டுவிடுவர். தட்டானும் பறந்து ஓடிவிடும். இது ஒரு வேடிக்கை விளையாட்டு.

👉தட்டான் பிடிக்கும்போது பாட்டும் பாடுவர்.

தட்டான் தட்டான்

காத் தட்டான்

கள்ளத் தட்டான்

கள்ளன் வந்தால் ஓடிப்போ !!
மெல்ல வந்து கிள்ளி போ !!

👉விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு ஆர்வம்தான். அதுவும் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக விளையாடும் விளையாட்டில் பொழுது கழிவதே தெரியாது.

👉மீண்டும் மீண்டும் விளையாடும் தூண்டும், சளைக்காத விளையாட்டு தான் மெல்ல வந்து கிள்ளி போ.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉10திற்கும் மேற்பட்டோர் விளையாடலாம்.


எப்படி விளையாடுவது?

👉முதலில் இரண்டு அணிகளை தனித்தனியாக பிரித்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணிகளிலும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

👉அதன்பின் இரண்டு அணியினரும் எதிரெதிராக அமர்ந்துக்கொள்ள வேண்டும். இரண்டு அணி தலைவர்களும் தங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் பழத்தின் பெயரையோ, பூவின் பெயரையோ ரகசியமாக வைக்க வேண்டும்.

👉யாருக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று எதிரணியினருக்கு தெரியக்கூடாது.

👉இப்போது விளையாட்டு ஆரம்பிக்கப்படும். இரண்டு அணிக்கும் சுமார் ஐந்து அடியாவது இடைவெளி இருக்க வேண்டும்.

👉முதல் அணித்தலைவர் எதிரணியில் உள்ள ஒருவரின் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். மேலும் எதிரணியில் உள்ள மற்றவர்களும் தங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது கீழே குனிந்து கொள்ள வேண்டும்.

👉இப்பொழுது முதல் அணித்தலைவவர் தங்கள் அணியில் உள்ள ஒருவரை மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ என்பார்.

👉உடனே மல்லிகைப்பூ பெயர் கொண்டவர் சத்தமில்லாமல் எழுந்து வந்து கண்ணை மூடியுள்ளவரை கிள்ளி விட்டு போய் அமர்ந்து கொள்வர்.

👉முதல் அணித்தலைவர், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்கு போடுங்க.. என்று கூறுவார். உடனே முதல் அணியில் உள்ள அனைவரும் கீழே குனிந்து கொள்வர்.

👉அதன்பின் முதல் அணி தலைவர், கண்களைத் திறந்து விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் தன்னை கிள்ளிய மல்லிகைப்பூ யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

👉யார் திருட்டு முழி முழிக்கிறாரோ, யார் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாரோ, யார் பதற்றமாக இருக்கிறாரோ அவர்தான் கிள்ளியிருப்பார் என்று யூகிப்பர்.

👉கண் பொத்தப்பட்டவருக்கு, யார் கிள்ளினார்கள் என்பதைச் சொல்லவோ, குறிப்பாகவோ காட்டக்கூடாது.

👉தன்னை கிள்ளிய மல்லிகைப்பூ யார் என்பதை சரியாக காட்டி விட்டால் இரண்டாவது அணியினர் ஆட்டத்தை தொடரலாம்.

👉தவறாக சொல்லிவிட்டால் முதல் அணியினரே ஆட்டத்தை தொடர்வர்.

பலன்கள் :

👉யூகிக்கும் திறன் மேம்படும்.

👉குழு ஒற்றுமை உண்டாகும்.
கிரெடிட் கார்டில் பணம் பறிபோகாமல் தடுக்கும் வழிகள்..!

🏧 நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்சினைகள் தீரும்.

🏧 கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது.

🏧 இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும். போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம்.

🏧 ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு.

🏧 இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

🏧 ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளன.

🏧 இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

🏧 இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும்.

🏧 அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும்.

🏧 இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.

🏧 மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும்.

🏧 அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று தான் செலுத்த முடியும்.

🏧 தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும் தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும். கிரெடிட் கார்டை வாங்கும் போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம்.

🏧 ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும்.

🏧 முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்க வேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்.