Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
யார் தலைவன்?... கண்டுபிடிக்கலாமா...!!

👉விதவிதமான விளையாட்டுக்களை மொபைல்போனில் மட்டும்தான் விளையாட முடியுமா என்ன? நம் நண்பர்களோடு சேர்ந்து குழுவாகவும் விளையாடலாம்.

👉இன்று நாம் பார்க்க இருக்கும் விளையாட்டில் குழுவாக விளையாடும் விளையாட்டில் யார் தலைவன்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉பத்திற்கும் மேற்பட்டோர்.


எப்படி விளையாடுவது?

👉விளையாடும் முதல் போட்டியாளர் சிறிது தூரம் தள்ளிச் சென்று தன் இரு கண்களையும் மூடிக்கொள்ள வேண்டும்.

👉அதன்பின் பெரிய வட்டம் ஒன்றை போட்டு அதில் போட்டியாளர்கள் அனைவரும் நின்றுக்கொள்ள வேண்டும். அதில் யார் தலைவன் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

👉இப்பொழுது விளையாட ஆரம்பிக்கலாம்.

👉குழுத்தலைவர் நின்ற இடத்தில் இருந்தப்படியே ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும். உதாரணமாக கைத் தட்டுவது, தலையை சொறிவது என ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும்.

👉குழுத்தலைவர் செய்வதை போல் மற்ற போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இப்பொழுது விளையாடும் முதல் போட்டியாளர் வட்டத்தை சுற்றி வந்து இதில் யார் தலைவர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

👉குழுத்தலைவர் அடிக்கடி தன் செயலை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் போட்டியாளர்களும் செயலை மாற்ற வேண்டும்.

👉முதல் பேட்டியாளர் யாரை பார்த்து செயலை மாற்றுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

👉முதல் போட்டியாளருக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்குள் குழுத்தலைவரை கண்டுபிடித்துவிட்டால் அவர் முதல் போட்டியாளராக மாறி ஆட்டத்தை தொடர வேண்டும்.

👉அவ்வாறு கொடுக்கப்படும் மூன்று வாய்ப்பிலும் முதல் போட்டியாளர், குழுத்தலைவரை கண்டுபிடிக்கவில்லை என்றால் முதல் போட்டியாளர் அவுட் ஆவார்.

👉இப்பொழுது வட்டத்தில் இருப்பவர்கள் செய்யச் சொல்லும் ஏதாவது ஒரு செயலை அவுட் ஆனவர் செய்ய வேண்டும். உதாரணமாக, நடனம் ஆடுவது, பாடல் பாடுவது.

பலன்கள் :

👉குழு ஒற்றுமை மேம்படும்.

👉கூர்ந்து கவனிக்கும் திறன் புலப்படும்.
சிந்தனை துளிகள்..!

பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
Gmail மின்னஞ்சல்களை Schedule செய்வது எப்படி..!


Gmail லோகோ :

✉ அலுவலகம் ரீதியில் மின்னஞ்சல்களை அனுப்பும் போது சில சமயங்களில் அவற்றை அனுப்ப சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

✉ சில சமயங்களில் பின்னர் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மறந்து, தாமதமாக மின்னஞ்சல் அனுப்புவோரும் உண்டு. அப்படி உள்ளவர்களுக்கு Gmail ஷெட்யூல் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.

✉ கூகுள் Gmail சேவையின் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூகுள் மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வதுடன் மூன்று புதிய வசதிகளை வழங்கியுள்ளது.

ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய உதவும் வழிமுறைகள்..!

Gmail ஷெட்யூல் :

✉ முதலில் வெப் பிரவுசரில் mail.google.com வலைதளம் சென்று உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்.

✉ Gmail சைன்-இன் செய்ததும் ′Compose′ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இது திரையின் மேல்புறம் இடதுபக்கம் காணப்படும். மின்னஞ்சலை டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.

✉ அடுத்து மின்னஞ்சலை அனுப்புவதற்கான பட்டனிற்கு பதில் அதன் அருகில் இருக்கும் கீழ்புற அம்பு குறியை கிளிக் செய்ய வேண்டும். இனி அனுப்ப வேண்டிய நேரத்திற்கு ஷெட்யூல் செய்ய வேண்டும்.

✉ இவ்வாறு செய்ததும் புதிய ஆப்ஷன் திறக்கும். அதில் மின்னஞ்சல்களை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும்.

✉ தேர்வு செய்த ஆப்ஷன்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரம் இடம்பெறவில்லை எனில், ′Pick date %26 time′ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

✉ இனி காலெண்டரில் நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

✉ மின்னஞ்சல் ஷெட்யூல் செய்யப்பட்டதும் அது மின்னஞ்சலின் இடதுபுறம் இருக்கும் ′scheduled′ பகுதியில் இருக்கும்.

✉ இங்கு ஷெட்யூல் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ரத்து செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் டிராஃப்ட்ஸ் பகுதியில் திறக்கும்.
சிறந்த வரிகள் !!

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே...
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...

நம்மை அவமானப்படுத்தும்
அந்த நொடியில் வாழ்க்கையை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது...
கல் எடுத்தல்...!!

💫விளையாட்டுகள் என்பது குழந்தைகளுக்கு பொதுவாக பொழுதுபோக்காகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். கற்பித்தல் முறையில் கூட ஒரு விளையாட்டை சொல்லி கொடுப்பார்கள்.

💫குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாட்டுகளில் ஆர்வமாகவும், ஈடுபாட்டுடனும் விளையாடி மகிழ்வார்கள் என்று சொல்லலாம்.

💫கிராமப்புறங்களில் ஓடி ஆடி, சுறுசுறுப்பாக விளையாடும் விளையாட்டுகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'கல் எடுத்தல்".

எத்தனை பேர் விளையாடலாம்?

💫இந்த விளையாட்டை 5 பேர் விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

💫இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முதலில் 20-க்கு 20 அடி அளவுள்ள பெரிய சதுரமொன்றை வரைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சதுரத்தை நான்கு சதுரங்களாக்கிக்கொள்ள வேண்டும். நான்கு சதுரங்கள் சந்திக்கும் மையப்புள்ளியில் சிறிய வட்டத்தை வரைந்துக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தில் நான்கு சிறு கற்களை வைத்துக் கொள்ளுங்கள்.

💫முதல் போட்டியாளர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விளையாட்டை தொடங்கலாம்.

💫விளையாடும் ஐந்து போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் சதுரங்களின் மூலைகளில் நின்றுக்கொள்ள வேண்டும். முதல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சதுரத்தின் எல்லாப் பக்கங்களிலும் சுற்றிச் சுற்றி ஓடி வர வேண்டும்.

💫மீதமுள்ள நான்கு போட்டியாளர்கள் முதல் போட்டியாளர் அருகே இல்லாதபோது மற்றும் கவனிக்காத நேரமாகப் பார்த்து சதுரத்தின் நடுவில் இருக்கும் கல்லை வேகமாய் சென்று எடுத்துக் கொண்டு மீண்டும் நின்ற இடத்திற்கு வர வேண்டும்.

💫அவ்வாறு கல்லை எடுக்கும்போது பிறபோட்டியாளார்களை முதல் போட்டியாளர் சதுரத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொடுவதற்கு ஓடி வருவார். அவர் உங்களை தொட்டுவிட்டால் நீங்கள் அவுட் ஆகிவிடுவீர்கள். அவருக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

💫ஐந்து போட்டியாளர்களில் யார் அதிக மதிப்பெண்களை எடுத்து இருக்கிறார்களோ? அவரே போட்டியின் வெற்றியாளார் ஆவார்.

விதிமுறைகள் :

💫போட்டியாளர்கள் சதுரத்தின் வெளியே செல்லக்கூடாது.
💫முதல் போட்டியாளார் சதுரத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் உள் நுழையலாம்.

பலன்கள் :

💫புத்திக்கூர்மை ஏற்படும்.
💫இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..!

மலையைப் பார்த்து வியந்து நிற்கும் நீ அந்த மலையின் மீது ஏறினால் அதுவும் உன் காலுக்கடியில் இருக்கும் என்பதை மறந்துவிடாதே. நம் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களும் அதே போலத்தான் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.
மாத்திரை வேண்டாம் கருவேப்பிலை போதும்...!!

👉கருவேப்பிலை பற்றியும் அதன் ஆரோக்கிய பயன்கள் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம். நமது உணவுப்பழக்கத்தில் தினமும் பயன்படுத்தும் ஒன்றுதான் என்றாலும் நம்மில் பலர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தான் உணவு உட்கொள்கிறோம். அதிலும் குழந்தைகள் அதை தொடுவதேயில்லை.

கருவேப்பிலை ஏன் தினமும் சேர்க்க வேண்டும்?

1. முடி உதிர்தல் கட்டுப்படும், நரைமுடி கருப்பாகும்.

2. கண் பார்வை தெளிவாகும்.

3. சர்க்கரை நோய் வராது.

4. கெட்ட கொழுப்பை நீக்கும்.

5. உடல் எடையை சீராக வைத்திருக்கும்.

6. இரும்புச்சத்து அதிகம் கொண்டது.

7. ரத்தசோகைக்கு சிறந்த மருந்து.

8. காலை எழுந்ததும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பைத் தரும்.

9. கல்லீரலை பாதுகாக்கிறது.

10. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

👉இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான நன்மைகள் கருவேப்பிலையில் உண்டு. இதில் உள்ள carbohydrates, phosphorous, iron, copper, minerals, fiber, calcium, Vitamins A, B, C and E போன்ற சத்துக்கள் எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது.

மாத்திரை வேண்டாம் :

👉இன்றைய சமூக சூழலில் சிறுவயதிலேயே பல குழந்தைகள் கண் பார்வை கோளாறில் கண் கண்ணாடி அணிந்து செல்வதை பார்க்கிறோம். முடி உதிர்தல், இளம்வயதில் நரை முடி, உடல் சோர்வு, துரித உணவு பழக்கத்தால் உடல் எடை கூடுதல் போன்ற பல உடல் பிரச்சனைகளை இன்றைய சமுதாயம் சந்தித்து வருகிறது.

👉இதுபோன்ற அனைத்து சிக்கல்களுக்கும் நாம் உடனடியாக அணுகுவது மருத்துவரைத்தான். அவர்களும் நமது உடலின் சத்து குறைபாட்டிற்கு ஏற்ற மாத்திரைகளை பரிந்துரைகின்றனர். அதில் முழு பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. முடிந்த வரை நமது உடலுக்கு தேவையான சத்துக்களை தினமும் நாம் உட்கொள்ளும் உணவின் வழியில் சேர்த்துக்கொள்வது தான் சிறந்த தீர்வு.

கருவேப்பிலை தினமும் எடுத்துகொள்ள எளிய வழி :

👉என்னதான் கருவேப்பிலையின் குணங்கள் மற்றும் சிறப்புகள் நமக்கு தெரிந்தாலும் அதை குழந்தைகளை சாப்பிட வைப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு ஒரு எளிய வழி சுத்தமான நாட்டு கருவேப்பிலையை நிழலில் காயவைத்து அரைத்து மிக ருசியான இட்லி/தோசை பொடியாக செய்துவிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நல்லதையே உண்போம்... நலமுடன் வாழ்வோம்!!
இணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது..!


💻 இன்றைய தலைமுறையினரின் முன்னால் நிற்கின்ற மாபெரும் சவால் டிஜிட்டல் யுகத்தில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதுதான். இணைய பயன்பாட்டின் போது மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

அப்படி ஒரு அதிர்ச்சிச் சிக்கல் நம் முன்னால் வந்தால் என்ன செய்ய வேண்டும் :

💻 முதலில் பதற்றத்தையும், பயத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும். உலகம் என்ன நினைக்கும், உறவினர்கள் என்ன நினைப்பார்கள், நமது பெயர் கெட்டுபோய் விடுமே என்பது போன்ற சிந்தனைகள் எதுவுமே தேவையற்றவை.

💻 முதலில் வருவது அச்சுறுத்தலாக இருந்தால், கொஞ்சமும் பயத்தை வெளிப்படுத்தாமல் பேசவேண்டியது மிக மிக அவசியம்.

💻 நமது பயம் தான் எதிராளியின் ஆயுதம். உங்கள் புகைப்படத்தையோ, வீடியோவையோ, உரையாடலையோ இணையத்தில் பதிவு செய்வேன், சமூக ஊடகங்களில் பகிர்வேன் என யாராவது மிரட்டினால் துணிச்சலாய் பேசுங்கள். இப்படிப்பட்ட பகிர்வுகள், மிரட்டல்கள் எல்லாமே சட்ட விரோதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

💻 டிஜிட்டல் மிரட்டல் வந்தால் அவற்றை 'ஸ்கிரீன் ஷாட்" எடுத்து வையுங்கள். குரலில் மிரட்டல் வந்தால் அதை ரிக்கார்டு செய்து வையுங்கள். அந்த நபரைத் தெரிந்தால் அவரைப் பற்றிய தகவல்களைச் சேமியுங்கள். முதலில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லுங்கள். மீண்டும் மிரட்டல் தொடர்ந்தால் 'சைபர் கிரைமில்" வழக்கு பதிவு செய்யுங்கள்.

💻 ஒரு வேளை உங்களுக்கு மிரட்டல் ஏதும் வராமலேயே உங்களுடைய படம் ஏதேனும் தளத்தில் பதிவானாலும் பயப்படத் தேவையில்லை.

💻 எல்லா வலைத்தளங்களுக்கும் ஒரு 'காண்டாக்ட்" பகுதியும், மின்னஞ்சலும் இருக்கும். அனுமதியற்ற உங்களின் புகைப்படம் அவர்களுடைய பக்கத்தில் இருப்பதை ஸ்கிரீன் ஷாட் போன்ற ஆதாரங்களுடன் அவர்களுக்கு சமர்ப்பியுங்கள்.

💻 விதிமீறல் நடந்திருக்கிறது என்பதை 'அப்யூஸ்" பகுதியில் விளக்குங்கள். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் படத்தை முற்றிலுமாக அழிக்க கேட்டுக் கொள்ளுங்கள்.

💻 வீடியோ தளங்களிலும் உங்களுடைய வீடியோக்களை பதிவுசெய்திருந்தால், அது அனுமதியற்ற, சட்ட விரோதமானது என்பதை விளக்கி கடிதம் எழுதுங்கள். அது நிச்சயம் நீக்கப்படும்.

💻 இப்போது தொழில் நுட்பத்தின் மூலமாக போட்டோ செர்ச் (தேடுதல்), வீடியோ செர்ச் செய்து உங்களுடைய படங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விடவும் முடியும். 'கேம்பைண்ட்" போன்ற பல ஆப்களும் இந்த பணியைச் செய்கின்றன. தவறான இடங்களில் இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுங்கள்.

💻 இத்தகைய படங்கள், வீடியோக்களை இணையத்திலிருந்து அழிக்கவும், அவை 'தேடுதல்"களில் வராமலும் இருக்கவும் கூகுள் உதவும் என அந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

💻 கூகுளின் ரிவர்ஸ் கூகுள் இமேஜஸ் ஆப்ஷன் இதற்கு உதவும். ஒரு வேளை பேஸ்புக்கில் இருந்தால் பேஸ்புக்குக்கு தகவல் கொடுங்கள், 'போட்டோ மேட்டிங் டெக்னாலஜி" மூலம் அது அகற்றப்படும் என்கிறது பேஸ்புக் நிறுவனம்.

💻 ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய புகைப்படமாக இருந்தாலும் கூட உங்கள் அனுமதியில்லாமல் ஒருவர் அதை பிற இடங்களில் பகிர்வது சட்டத்தை மீறும் செயல்.

💻 எனவே இத்தகைய சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட சிறந்தது வருமுன் காப்பது என்பதையும் மறக்க வேண்டாம்.
ஏழு கல் விளையாட்டு!!

⚾தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்முடைய மனதிற்கும், நம்முடைய உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்துள்ளன.

⚾கிராமங்களில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டுதான் இந்த ஏழு கல் விளையாட்டு. இதனை seven stones என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉பத்திற்கும் மேற்பட்டோர். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடலாம்.

தேவையான பொருட்கள் என்ன?

👉7 தட்டையான கற்கள் (அளவில் வேறுபட்டவை)

👉ஒரு பந்து

எப்படி விளையாடுவது?

⚾முதலில் இரு அணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த அணி கற்களை அடுக்க வேண்டும் (முதலாவது அணி), எந்த அணி கற்களை களைக்க வேண்டும் (இரண்டாவது அணி) எனவும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்.

⚾முதலாவது அணி ஏழு கற்களையும் பெரிய கல் முதல் சிறிய கல் வரை ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைப்பர்.

⚾'ரெடி" சொன்னவுடன் இரண்டாவது அணி கற்களின் மீது பந்தை எறிந்து அடுக்கிய கற்களை களைத்ததும் ஆட்டம் தொடங்கும்.

⚾முதலாவது அணி கற்களை அடுக்க முற்பட வேண்டும். ஆனால் இரண்டாவது அணி கற்களை அடுக்க விடாமல் அதை களைத்துக்கொண்டே இருப்பார்கள். கற்களை அடுக்க விடாமல் முதல் அணியில் உள்ள நபர்களை பந்தால் அடிப்பார்கள். அப்படி அடித்தால் இரண்டாம் அணிக்கு 1 பாயிண்ட்.

⚾முதலாம் அணி பந்தால் அடி வாங்காமல் ஏழு கற்களையும் அடுக்கிவிட்டு அதை சுற்றி வட்டம் வரைந்து விட்டால் முதல் அணி வெற்றி பெற்றதாகும்.

⚾கற்களை அடுக்கிவிட்டு வட்டம் வரைவதற்குள் இரண்டாம் அணி பந்தை எறிந்து கற்களை களைத்துவிட்டால் மீண்டும் ஆட்டம் தொடரும்.

⚾வெற்றிபெற்ற அணி மீண்டும் கற்களை அடுக்குவதா அல்லது களைப்பதா என்று தீர்மானித்து அடுத்த ஆட்டத்தை தொடங்குவர்.

பயன்கள் :

👉பொறுமை, விடாமுயற்சி கூடும்.

👉குழு ஒற்றுமை வளரும்.

👉இலக்கை அடையும் திறன் மேம்படும்.
நம்முடைய ஆறு அடிப்படை உரிமைகள் !!



சுதந்திர உரிமை :

💪 பேச்சு, கருத்து ஆகியவைகள் சுதந்திர உரிமை. அமைதியான, சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை. சங்கம் மற்றும் அமைப்புகள் தொடங்கும் உரிமை. தேசத்தின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்வதற்கான, எங்கு வேண்டுமானாலும் குடியேறுவதற்கான உரிமை.

💪 6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் உரிமை 2002-ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 2009-ல் தான் இந்த உரிமை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

சம உரிமை :

💪 சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துதல் குற்றம் ஆகும். அரசுப் பணிகளைப் பெற அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை இருக்கின்றன. தீண்டாமை ஒரு குற்றம் ஆகும். நெடுங்காலம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவது சலுகை அல்ல அவர்களுடைய உரிமை.

கலாச்சார மற்றும் கல்வி கற்கும் உரிமை :

💪 சிறுபான்மையினர் தங்களுடைய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை.

மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை :

💪 தன் விருப்பம்போல எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை.

சுரண்டலை எதிர்க்கும் உரிமை :

💪 வலுக்கட்டாயமாகப் பணியில் அமர்த்தி வேலை வாங்குதல் சட்டப்படி குற்றம் ஆகும். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலை, சுரங்கம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றமானச் செயல் ஆகும்.

அரசியல் அமைப்பைச் சீர்படுத்தும் உரிமை :

💪 அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து அரசே பறிக்கக்கூடும் என்று இந்திய அரசியலமைப்பு கருதுகின்றது. அப்படி நிகழும்பட்சத்தில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக்கொள்ளக் குடிமக்கள் கூறு 32-ன் படி நீதிமன்றத்தை அணுகும் உரிமைகள் உள்ளன.

💪 இக்காலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியம் நம்முடைய உரிமைகளை அறிந்துகொள்ளுதலும் ஆகும்.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..!

ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்துவிட்டால் வாழ்வை வென்று விடலாம்...!
முத்தான சிந்தனை துளிகள் !

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தை பெறுவது என்று பொருள் அல்ல... இன்று வெற்றி பெற்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக உள்ளது என்று மட்டுமே பொருள்.
எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது?



💧 நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ முடியாது. இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் உண்மை கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீரின்றி அமையாது உலகு என திருக்குறள் நீரின் மேன்மை தன்மையையும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.

உடலில் ஏற்படும் பாதிப்புகள் :

💧 தண்ணீர் தாகத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்வையும் வளமாக வைத்துக் கொள்கிறது. பலர் காரமான பொருள் சாப்பிட்டால் தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். மிளாகாய் சாப்பிட்ட நிலையில் நீர் அருந்தக்கூடாது. இவை குடல் பகுதிக்கு சென்று பல விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்தும்.

💧 பலர் தூங்குவதற்கு முன்னால் தண்ணீர் குடிப்பார்கள். இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இதனால், உங்களின் முகம் காலையில் எழுந்தபிறகு வீங்கி இருக்கும். இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் கெடுக்கப்பட கூடும்.

💧 சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இதனால், செரிமான கோளாறு ஏற்படும். மது அல்லது வேறு குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றின் நிலையானது மிக மோசமாக மாறி விடும்.

💧 உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு கிட்னி தான். அதிகமான தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

💧 உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் பலர் மிகவும் வேகமாக உடற்பயிற்சிகளை செய்வர். பிறகு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை வரக்கூடும்.

பாட்டிலில் நீர் அருந்தினால் ஏற்படும் விளைவுகள் :

💧 பாட்டிலில் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உருவாகும். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டாம்.

💧 தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. இது மிகப்பெரிய ஆபத்தை தரும். உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைத்து விடும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

இதன் அவசியம் :

💧 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சிவிடும்.

💧 நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

💧 நம் உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய சிந்தனை துளிகள்...

தினம் ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது நம் வாழ்க்கை என்னும் பாடசாலை. அதை புரிந்தவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்... புரியாதவர்கள் புதைந்தே விடுகிறார்கள்.
கோழிக்குஞ்சை தூக்கி வா!


🐥குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் ஒவ்வொன்றும் பலவிதங்களில் இருக்கும். அந்த விளையாட்டுகளை விளையாடும்போது குழந்தைகளின் ஆரவாரம் அந்த இடமானது களைகட்டிவிடும் என்றே சொல்லலாம்.

🐥குழந்தைகள் எல்லோருடன் சேர்ந்து விளையாடும் போது எவ்வித மன அழுத்தமும் இன்றி உற்சாகமாக விளையாடுவார்கள்.

🐥அவ்வாறு குழந்தைகள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் கோழிக்குஞ்சை தூக்கி வா!

எத்தனை பேர் விளையாடலாம்?

8 முதல் 10 குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

🐥இந்த விளையாட்டை தொடங்குவதற்கு முன்பாக முதல் போட்டியாளரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

🐥பிறகு விளையாட்டில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் காவல்காரர், உதவியாளர், அப்பா கோழி, அம்மா கோழி என்று ஒருவரை பிரித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் கோழிகுஞ்சுகளாக இருக்க வேண்டும்.

🐥தேர்வு செய்த முதல் போட்டியாளர் தான் இந்த விளையாட்டின் கழுகு ஆவார். தேர்வு செய்த பிறகு விளையாட்டைத் தொடங்கலாம்.

🐥'கழுகுராஜா... கழுகுராஜா... காவலுக்கு யாருமில்லை. கோழிக்குஞ்சை தூக்கிப் போ..!" என்று விளையாட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து சொல்லிவிட்டு ஆங்காங்கே கலைந்து நின்றுக் கொள்ள வேண்டும்.

🐥பின்பு முதல் போட்டியாளராக தேர்வு செய்த கழுகு, சுற்றி நிற்கும் மீதமுள்ள போட்டியாளர்களில் உதவியாளர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

🐥அவ்வாறு கழுகு, உதவியாளரை கண்டறியும் பொழுது 'அக்கா, அக்கா பசியெடுக்குது. என்னோட உதவிக்கு வா..!" என்று கேட்க வேண்டும். தவறானவரிடம் கேட்டுவிட்டால், 'நான் வர மாட்டேன்... நீ போ..!" என்று விளையாட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கழுகுவிடம் கூறுவார்கள்.

🐥இவ்வாறு கழுகுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். மூன்றாவது முறை தவறான உதவியாளரை கழுகு சொன்னால் அவர்களிடம் மாட்டி கொள்ளும். பின்பு அவர்களிடமிருந்து கழுகு தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.

🐥உதவியாளரை கழுகு சரியாக அடையாளம் சொல்லி விட்டால் 'எனக்கும்தான் பசிக்குது. வா... சேர்ந்து இரை தேடலாம்..." என்று உதவியாளர் கூற வேண்டும். கழுகுடன் உதவியாளர் வந்துவிட வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்து கோழிக்குஞ்சுகளை தூக்கிவர வேண்டும்.

🐥பிறகு போட்டியாளர்கள் அனைவரும் 'முடிஞ்சா எங்களைப் பிடி மூச்சு முட்ட ஓடிப் பிடி" என்று பாடிக்கொண்டே அனைவரும் ஓடிச் செல்வார்கள்.

🐥உதவியாளரும், கழுகும் கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்லும்போது அவர்களை தடுக்க காவல்காரர், அப்பா கோழி, அம்மா கோழி முயற்சி செய்ய வேண்டும்.

🐥அவர்கள் கோழிக்குஞ்சுகளை தூக்கவிடாமல் அப்படியும் இப்படியுமாகப் போக்கு காட்டி தடுக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால், கோழிக்குஞ்சை கழுகும், உதவியாளரும் தூக்கி வெற்றிபெற வேண்டும்.

🐥அவ்வாறு வென்றுவிட்டால் வேறொருவர் கழுகாக மாறி, விளையாட்டை மறுபடியும் இதே மாதிரி மீண்டும் விளையாட வேண்டும்.
முத்தான சிந்தனை துளிகள்..!

தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்...
நொண்டி விளையாட்டு !!


👭கிராமப்புறத்தில் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உள்ளன. கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் விளையாடும்போது அதை காண கண்கோடி வேண்டும்.

👭குழுவாக விளையாடினாலும் சில விளையாட்டுகளில் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியாக திறமையை காட்ட முடியும். அப்படி ஒரு விளையாட்டுதான் நொண்டி.


எத்தனை பேர் விளையாடலாம்?

👭இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். இரு அணிகளாக பிரிந்து விளையாட வேண்டும்.

எப்படி விளையாடுவது?

👭முதலில் வட்டம் வரைந்து கொள்ள வேண்டும். இதுதான் இவ்விளையாட்டின் எல்லைக்கோடு.

👭முதல் அணியினர் வட்டத்தினுள் ஓடுவார்கள். இரண்டாம் அணியினர் ஒவ்வொருவராக வட்டத்தினுள் நொண்டியத்து சென்று முதல் அணியினரை தொட வேண்டும்.

👭அப்படித் துரத்திச் செல்லும்போது, நொண்டியடிப்பவர் தடுமாறி, காலை தரையில் ஊன்றிவிட்டால் அவர் 'அவுட்". உடனே அவர் வெளியே செல்ல வேண்டியதுதான். பின்னர், அந்த குழுவிலிருந்து வேறொருவர் உள்ளே வந்து நொண்டியடித்தபடி, உள்ளே இருப்பவர்களை தொட முயற்சிக்கலாம்.

👭நொண்டியடிப்பவர் தொட்டுவிட்டாலோ, தொட வருபவரிடமிருந்து தப்பி ஓடுபவர் எல்லைக்கோட்டை தெரியாமல் காலால் மிதித்துவிட்டாலோ அவரும் 'அவுட்".

👭இப்படியாக, வெளிவட்டத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக எல்லைக்கோட்டுக்குள் சென்று, அவர்களை தொடவேண்டும். எல்லோரையும் 'அவுட்" செய்துவிட்டால், வெளியே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.

👭வெளியே இருக்கும் குழுவினர் அனைவரும் நொண்டி வந்தும், உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அவுட்டாகாமல் இருந்தால், உள்ளே இருக்கும் குழுவே வெற்றி பெற்ற குழு.

பலன்கள் :

👉குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும்.

👉புத்துணர்ச்சியை அளிக்கும்.

👉சோம்பேறித்தனத்தை குறைக்கும்.

👉கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

👉தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
முத்தான சிந்தனை துளிகள்..!

புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் புன்னகையோடு கடந்து செல்பவரே சரித்திரம் படைக்கிறார்.
முத்தான சிந்தனை துளிகள்!

நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது...!
கள்ளன் வாரான்... களவாணி வாரான் !!


🌟என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பழங்காலத்தில் விளையாடிய விளையாட்டுகளுக்கு தனி மவுசுதான்.

🌟ஓடி ஆடி விளையாடிய காலம் போய் இன்று விளையாட்டுகள் கைக்குள் அடங்கும் மொபைல்போன்களில் வந்துவிட்டதால் குழந்தைகள் வெளியில் விளையாட வருவதில்லை.

🌟நாகரீகம் வளர்ந்து வருவதால் பல விளையாட்டுகள் நமக்கு மறந்து போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு மறந்து போன விளையாட்டுகளில் ஒன்றான கள்ளன் வரான்... களவாணி வரான்... விளையாட்டை பற்றிதான் இன்று தெரிந்து கொள்வோம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

பல பேர் ஒன்று சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

🌟அனைத்து குழந்தைகளும் ஒருமனதாக இருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

🌟இவர்கள் இருவரும்தான் விளையாடப்போகும் நபர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.

🌟கீழே அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். அனைவரும் சேர்ந்து தேர்வு செய்தவர்களில் முதல் நபர் முன்னால் நிற்பார். இரண்டாம் நபர் தன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

'காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி"
என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல போக்கு காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்துவிடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்கு போடுங்க என்பார்.

🌟எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை முதல் நபர் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால் கல்லை கண்டுபிடித்தவருக்கு ஒரு மதிப்பெண்.

🌟கண்டுபிடிக்காவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண். இவ்வாறே தொடர்ந்து விளையாட வேண்டும்.

🌟மேலும் இந்த விளையாட்டை இதேபோல் வேறு இரண்டு நபர்களினை தேர்வு செய்து விளையாட வேண்டும்.

பலன்கள் :

🌟புத்திக்கூர்மை மேம்படும்.

🌟கண்டறியும் திறன் மேம்படும்.