Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

கோவில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது. சாலையில் விழும் மழை அசுத்தமாகிறது. அதேபோல்தான் நாம், சேரும் இடம் பொறுத்தே நமது தரமும் உள்ளது.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

நம்பிக்கை என்னும் படியில் நீ இருக்கும் வரை... வெற்றி எனும் ஓடை உனக்காக திறந்தே இருக்கும்...!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பெத்த வயிற்றுல பிரண்டையை வைத்து தான் கட்டவேண்டும்..!!

👉தாய்மார்கள் சில நேரங்களில் தங்கள் குழந்தைகள் குறும்பு செய்துவிட்டால் கோபத்தில் 'உன்னை பெத்த வயிற்றுல பிரண்டையை வைத்து தான் கட்டவேண்டும்" என்று சொல்லுவார்கள். வழக்கம் போல் பிள்ளைகள் அதற்கு அர்த்தம் கேட்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இப்படி பல வட்டார பழமொழிகளுக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது.

👉பிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகையாகும். பெண்களுக்கு பிரசவ காலங்களில் பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பு விரிவடைவதாலும், பிரசவம் பார்ப்பதால் கர்ப்பப்பையும், பிரசவ உறுப்புகளும், வயிற்று புண்ணால் ஏற்படும் வலியும் வெகுவாக குறைக்கும் சக்தி இந்த பிரண்டைக்கு உண்டு.

👉பிரண்டையை இப்போது உள்ள காலக்கட்டத்தில் பார்ப்பதே அரிது. இது ஒரு சில இடங்களில் தானாகவே வளரக்கூடும். அறியாமையால் இதை களை எடுப்பவர்களும் உண்டு. இதன் மகத்துவம் பற்றி அறிந்தவர்கள் இதை செய்யமாட்டார்கள்.

👉இப்போது உள்ள கோடிக்கணக்கான மருந்தும், மாத்திரைகளும் அந்த காலக்கட்டத்தில் இல்லை. அதற்கு ஏற்றார்போல் நோய்களும் இல்லை. நோய்கள் உணவாலும், மூலிகைகளாலும் குணப்படுத்தப்பட்டது. அதுவும் பக்க விளைவுகள் இல்லாமல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

👉இயற்கையின் படைப்பு அதிசயமும், ஆச்சரியமும் நிறைந்துள்ளது. இந்த இயற்கையை பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே.

👉பிரண்டையில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளதால் உடைந்த எலும்பையும் ஒன்று சேர்க்கும் சக்தி பிரண்டைக்கு மட்டும்தான் உள்ளது. இதை தினசரி சேர்த்துக்கொண்டால் எலும்பும், உடலும் வலிமையோடு இருக்கும். அதுமட்டுமா?

👉மேலும் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். உடல் வலியை நீக்கும். மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும். வாய் புண்களையும், வயிற்று புண்களையும் சரிசெய்யும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

👉பிரண்டையின் சிறப்புகளை சொன்னால் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். நமக்கு இயற்கை தந்த கொடை இந்த பிரண்டை. இது ருசியுடன் ஆரோக்கியத்தையும் தருகிறது. இதை இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

👉நம் பாரம்பரிய பண்டங்களை அழியாது காப்போம்... ஆரோக்கியமாக வாழ்வோம்..!!
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால், நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
இன்றைய பொன்மொழி !

மற்றவர்களின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்... நீங்களே எல்லா தவறுகளையும் செய்து, அதிலிருந்துதான் கற்றுக் கொள்வீர்கள் என்றால், அதற்கு இந்த ஒரு ஆயுள் போதாது...
சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் !

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்...!!

ஆண்களுக்கு பூ வைத்து அழகு
பார்ப்பவர்கள் இரண்டே பேர்தான்...
.
.
.
.
.
.
.
சிறிய வயதில் 'அம்மா"
தந்தையான பிறகு 'மகள்"

பெண் குழந்தையை பெற்றவர்கள் கடவுளிடம் வரம் பெற்றவர்கள் மட்டுமல்ல பாக்கியசாலிகளும் கூட. அன்று பெண் குழந்தைகளை சாபமாக பார்த்தவர்கள், இன்று பெண் குழந்தைகளை வரமாக பார்க்கிறார்கள்.

வரமாக பெற்ற பெண் குழந்தைகளை நாம் கௌரவிக்க வேண்டாமா? ஆண்டுதோறும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினம்தான் தேசிய பெண் குழந்தைகள் தினம்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் தேசிய அளவில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினம், தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு பெண்களுக்கு அதிகாரம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

பெண் குழந்தை பெற்றவர்களுக்கு :

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது பெற்றோர்களின் கடமையே ஆகும்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுங்கள் :

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முதலில் பெற்றோர்கள் கண்டிப்பாக தங்களின் பெண் குழந்தைகளுக்கு எது குட் டச்? எது பேட் டச்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காமுகர்களாக முதலில் குழந்தைகளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களை தன் வசப்படுத்துவார்கள். எனவே, குழந்தைகளுக்கு பரிசு வாங்கி கொடுப்பவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் சொல்லிக் கொடுக்கக்கூடாது. அது தவறான புரிதலாக மாறும்.

பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டிப்பிடிக்க சொல்லியோ வற்புறுத்தக்கூடாது. ஏனெனில், இறுதியில் இந்த பழக்கமே அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.

பேருந்தில் செல்லும் போதும்கூட சிலர் காமுகர்களாக இருக்கலாம். அது நமக்கு தெரியாது. எனவே அத்தகையவர்களிடம் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள அவர்கள் எந்த நோக்கத்தில் உங்கள் குழந்தைகளை தொடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு முன்னரே (குட் டச், பேட் டச்) சொல்லிக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதே சமயம் மிக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் மறந்து விடுவார்கள்.

பாதுகாப்பு :

குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கராத்தே, சிலம்பாட்டம் போன்ற இன்னும் சில தற்காப்பு கலைகளை கூட கற்றுக்கொடுக்கலாம்.

பெண் குழந்தைகள் தனியாக வெளியில் செல்லும்போது விலையுயர்ந்த நகைகளை அணிந்து செல்லக்கூடாது.

முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

அந்நியர்களிடம் இருந்து எந்தவிதமான பொருளையும் வாங்கக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்துவிட வேண்டும்.

பெற்றோர்கள் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய தாரக மந்திரம் :

யாரையும் எளிதில் நம்பக்கூடாது. அனைவரிடமும் பழகும்போது எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

பெண் குழந்தைகளை பாதுகாப்பது நம் தலையாய கடமை..!!

என்றும் சமூக அக்கறையுடன் https://www.facebook.com/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*"போனஸ்" என்றால் என்ன..?*

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!(12×4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
.
இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.

அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!
.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

*_ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத- நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்_*

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

#தெரிஞ்சிக்கோங்க_மக்களே.
வசம்பின் இன்றியமையாத பயன்கள்


வசம்பு என்பது ஒரு மூலிகை ஆகும். அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்டது. பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்பது வசம்பின் வேறுபெயர்கள் ஆகும்.

வசம்புவுக்கு பிள்ளை வளர்த்தி என்ற பெயர் உண்டு, இது பசியின்மையை போக்க கூடியது.

வாழிடம் :

வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் வளர்வதற்கு ஏற்றதாகும்.

அதிகமாக வளரும் இடங்கள்:

இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேராளாவிலும் அதிகமாக வளர்கிறது. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.

வசம்பின் அமைப்பு :

இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை.

இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது.

வசம்பில் உள்ள வேதிப் பொருள்கள் :

இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறுது.

ஞாபக சக்தி பெருக :

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம். இது ஞாபக சக்தி பெருக உதவும்.

வசம்பின் மருத்துவப் பயன்கள் :

✔சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

✔வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

✔பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சோம்பலை நீக்க வசம்பு பயன்படுகிறது.

✔வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றில் இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது.

✔வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, குணமாகும்.

✔வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

✔விஷக் கடிக்கு வசம்பு முக்கியமான மருந்தாக பயன்படுகிறது.

✔வசம்புடன் கொஞ்சம் கருப்பட்டி வைத்து பொடித்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி மறைந்து நலம் கிடைக்கும்.

✔வசம்பு நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடியது. பதட்டத்தை தணிக்க கூடியது.

✔இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

✔வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப்பூச முகப் பருக்கள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நகங்கள் காட்டும் நோய்க்குறிகள்!

💅 'அகத்தின் அழகு நகத்தில் தெரியும்" எனும் மருத்துவ மொழி அறிவீர்களா? ஆம், நகங்கள் நம் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி.

💅 நகத்தில் நான்கு முக்கியமான பாகங்கள் உள்ளன. வெளிப்புறம் தெரியக்கூடியது நெயில் பிளேட், அதற்கு அடியில் இருக்கும் சதை நெயில் பெட், விரலுக்கு உள்ளே இருப்பது நெயில் மேட்ரிக்ஸ், இதுவே நக செல்களை உருவாக்கி, நகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. நம் தோலுக்கும் நகத்துக்கும் இடையே வெள்ளையாக, பிறை நிலா போன்று இருப்பது லூனுலா (Lunula). இவை ஒவ்வொன்றுமே நமக்கு வரக்கூடிய நோய்க்குறிகளைக் காட்டக்கூடியவை.

💅 புரதச்சத்து குறைபாட்டாலும் நகத்தில் வெள்ளைக் கோடுகள் உருவாகும். ஆனால், இது அழுத்தினால் மறைந்துவிடும். மறையாத வெள்ளைக்கோடுகள் இருந்தால், அது ஆர்சனிக் நச்சு உடலில் இருப்பதற்கான அறிகுறி.

💅 நகத்தில் சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் செங்குத்தான கோடுகள் இருந்தால், இதயத்தில் உள்ள தொற்றைக் குறிக்கும்.

💅 தோலை ஒட்டி வேகத்தடை போன்ற அமைப்பு நகத்தில் ஏற்பட்டால், உடலில் ஏதோ ஓர் உறுப்பு பாதித்துள்ளது என அர்த்தம். அந்த நோய் சரியாகும்போது, அந்த வேகத்தடை போன்ற நக அமைப்பு, மறைந்துவிடும்.

💅 தொடர்ச்சியாக மெனிக்யூர், பெடிக்யூர் செய்பவர்களுக்கும், தொடர்ந்து தண்ணீரில் வேலை பார்ப்பவர்களுக்கும் நகம் இரண்டு அடுக்காக இருக்கும்.

💅 இரும்புச்சத்துக் குறைபாடு உடையவர்களுக்கு, நகமானது கரண்டி போன்ற அமைப்பிலும், சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு நகம் ஆரம்பிக்கும் இடத்தில் ஆரோக்கியமாகவும், பாதிக்கு மேல் காவி நிறத்திலும் மாறி இருக்கும்.

💅 நுரையீரலில் தொந்தரவு இருப்பவர்களுக்கும், அதிகம் புகைபிடிப்பவர்களுக்கும் நகம் வீங்கியும், புடைத்தும் காணப்படும்.

💅 கல்லீரலில் குறைபாடு இருந்தால் நகம் ஆரம்பம் முதல் பாதி வெளுத்தும், மீதி வழக்கமான நிலையிலும், லூனுலா நீல நிறத்திலும் காணப்படும். இது கல்லீரலில் காப்பர் அதிகம் இருப்பதற்கான குறியீடு.

என்ன நண்பர்களே! தெரிந்துக் கொண்டீர்களா.. இனி நகத்தின் வடிவமைப்பை கொண்டு உஷாராகுங்கள்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#🍾குளிர் பானங்கள் #🍰🍦கேக்,ஐஸ் கிரீம்ஸ்&ஸ்வீட்ஸ் #👩🏼‍🍳 சமையல் குறிப்பு #👩‍🍳இன்றைய சமையல்
https://b.sharechat.com/1gv6IqQ6k6?referrer=whatsappShare

ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://b.sharechat.com/qb3rvzIfBT
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#⛺️ வீட்டு அலங்கார பொருட்கள் #✍️வீட்டு உதவி குறிப்புகள் #🧣 கைவினை பொருட்கள்
https://b.sharechat.com/hKdzrZ6nK6?referrer=whatsappShare

ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://b.sharechat.com/qb3rvzIfBT