ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஏன்? புதிய #AndroidPie அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?
பஸ் ஒன்றில் சுகமான பயண அனுபவம் கிடைக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். கை தேர்ந்த (கால் தேர்ந்த?) ஓட்டுநர் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்டு நல்ல கண்டிஷனில் இயங்கும் உதிரிபாகங்கள். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் முதுகெலும்பு முறிந்து விடக்கூடும். அனுபவமிக்க, திறமையான, வேகமான, பதற்றப்படாத ஓட்டுநர் ஒருவரை ஒரு டப்பா பஸ்ஸுக்கு ஓட்டுநராகப் போட்டால் என்ன ஆகும்? அதேபோல தொட்டாலே பறக்கக் கூடிய ஒரு பிராண்ட்-நியூ வோல்வோ பஸ்ஸுக்கு இப்போதுதான் Learners License எடுத்திருக்கும் ஒரு கத்துக்குட்டி ஓட்டுநரை அமர்த்தினால் எப்படி இருக்கும்?
- இதே மாதிரி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகின்றன. ஒன்று அதன் ஹார்டுவேர். இதில் அதன் பேட்டரி, மெமரி, மோடம், தொடுதிரை, சென்சார்கள், புராஸசர்கள் ஆகியவை வரும். ஆனால், இவற்றை ஒழுங்குபடுத்தி இயக்கிக் கட்டளைகள் பிறப்பித்துக் கட்டியாள ஓர் இயங்குதளம் (Operating System) இல்லாமல் போனால் இவை வெறும் எலெக்ட்ரானிக் குப்பைகள்தான். ஓட்டுநர் இல்லாத பேருந்து போலத்தான். நம் போனை ஆன் செய்ததும் ஒரு கடமை தவறாத பணியாள் போல இந்த இயங்குதளம் விழித்துக்கொண்டு இடைவிடாமல் இயங்க ஆரம்பித்து விடுகிறது.
நீங்கள் Samsung On 5 Pro வாங்கினாலும் One plus six வாங்கினாலும் அதற்குள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஏதோ ஒரு பதிப்பு ( version) பொதிக்கப்பட்டிருக்கும். ஒருவிதத்தில் இது ஒரே ஓட்டுநரைப் பலமுறை படியெடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து ஷேர் ஆட்டோ முதல் வோல்வோ பஸ் வரை ஓட்டவிடுவது போலத்தான். ஒரு வருடத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை ஆகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன . (விற்பனையாகும் ஒவ்வொரு 100 ஸ்மார்ட் போன்களிலும் 88 போன்கள் ஆண்ட்ராய்டு போன்கள்). இதில் ஒவ்வொன்றிலும் ஆண்ட்ராய்டு எனப்படும் ஓட்டுநர் கடமை தவறாமல் தன் பணியைச் செய்து கொண்டுள்ளார். ஆண்ட்ராய்டு இன்று சந்தேகமே இல்லாமல் நிறைய பேர் விரும்பும் மொபைல் OS ஆக மாறி விட்டது.
சரி. இந்த மாடலில் பஸ்ஸில் ஏதேனும் ரிப்பேர் இருந்தாலோ, பஸ் கொஞ்சம் மக்கர் செய்தாலோ அதை ஒர்க்-ஷாப்புக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். ஆனால், ஓட்டுநரிடம் ஏதேனும் குறை இருந்தால் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்து ஆப்பிளையும் சாத்துக்குடியையும் வாங்கிச் செல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஓர் Wi-Fi இணைப்பு போதுமானது. ஏனெனில் இது ஒரு Software update அல்லது Upgrade . Update கட்டளையைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிதானமாக டிபன் சாப்பிடப் போகலாம். சமர்த்தாக டிரைவர் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வார்.
சிறுவயதில் நாமெல்லாம் ரேடியோ ரிப்பேர் செய்வதைப் பார்த்திருப்போம். உண்மையில், ரேடியோ ரிப்பேர் ஆகிவிட்டால் குஷி தான். அப்பா ரேடியோவை ரிப்பேர் கடைக்கு எடுத்து செல்வார் அல்லது டெக்னீஷியனை வீட்டுக்கு வரவழைப்பார். அப்போதெல்லாம் தெருமுக்கு தோறும் ஒரு ரேடியோ கடை காணக் கிடைக்கும். வீட்டுக்கு வந்த டெக்னீஷியன் ஏதோ ஒரு சீரியஸான சர்ஜரிக்கு தயாராகும் டாக்டர் போல ஆயத்தங்களைச் செய்வார். ரேடியோவைப் பக்குவமாகப் பிரித்து தூசி தும்பை அகற்றி விட்டு ஆராய்ச்சி செய்வார். சால்டரிங் கருவி தயாராக இருக்கும். அதைப் பசை போன்ற ஒன்றில் அப்பி சால்டரிங் செய்வார். ஏதேதோ பாக்ஸுகளை ரேடியோவில் இணைத்து அதன் முள் ஆடுகிறதா என்று சரி பார்ப்பார். ரேடியோவின் உள்ளே கலர் கலராக பல்வேறு சைஸுகளில் பாகங்கள் இருக்கும். நகரம் ஒன்றை பிளைட்டில் இருந்து ஏரியல் வியூ-வில் பார்ப்பதுபோல இருக்கும். கடைசியில் ஏதேதோ செய்து ரேடியோவில் மறுபடியும் கர கரவென்று சத்தம் வரவழைத்து விடுவார். ஸ்டேஷன் குமிழைத் திருப்பினால் ``நேயர் விருப்பம் தேவிபுரம் விமலா, அற்புதராஜ், பாண்டியன், ஜீவநாதன்.."
ரேடியோவுக்கு இயங்குதளம் எதுவும் இருந்ததில்லை. மின்சாரம் அதற்கென்று முன்பே போடப்பட்ட எலெக்ட்ரானிக் பாதையில் பயணித்து ஒலியாக மாறும். ரிப்பேர் என்றால் செட்டைப் பிரித்துப்போட்டே ஆக வேண்டும். இந்த மாதிரி பிரித்து மேயும் சமாசாரங்கள் எதுவும் இன்றி அப்படியே ஸ்மூத் ஆக update ஆகிக்கொள்ளும் ஆண்ட்ராய்டு இயங்குதளம். அதிகபட்சம் அப்டேட்டுக்குப் பிறகு restart ஆகலாம்.
ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு 2009-ம் ஆண்டு ஏப்ரலில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது. இது 'கப்-கேக் 1.5' என்று அழைக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு வெர்சன்-களை இனிப்பு பலகாரங்களின் பெயர்களால் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அடுத்து வந்தது onut OS. ஆண்ட்ராய்டின் ஏதோ ஒரு வெர்ஷனுக்கு இந்திய இனிப்பின் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உதாரணமாக N வரிசையில் 'நெய்யப்பம்' வரும்; P வரிசையில் 'பேடா' வரும் என்றெல்லாம் எதிர்பார்ப்பட்டது. ஆனால், N வரிசை ஆண்ட்ராய்டு 'நூகட்' எனப்படும் மேல்நாட்டு இனிப்பின் பெயரிலேயே அழைக்கப்பட்டது.