ThinakaranLK
398 subscribers
6.89K photos
7 videos
31 files
21.2K links
Download Telegram
இலங்கையின் பல பாகங்களில்
காற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்;
பதுளை, மன்னாரில் அதிக பாதிப்பு!


- தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன நேரடி உணரிகளில் பதிவு
- கண்டி, வவுனியா, இரத்தினபுரியில் காற்றின் தரம் பாதிப்பு

இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலக் காற்றின் தரம் (Air Quality Index - AQI) வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நேரடித் தரவு உணரிகளின் தற்போதைய நிலவரப்படி பதுளை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் சேவைப் பிரிவு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப்பரிசோதனை அறக்கட்டளை நிதியம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான ஆரோக்கிமற்ற மட்டத்திலும், சில நகரங்களில் ஆரோக்கியமற்ற மட்டத்திலும் காணப்படுகிறது.

தற்போதைய தரவுகள்:
பதுளை: 163 - 'ஆரோக்கியமற்ற' சிவப்பு வலயத்தில்
மன்னார்: 154 - 'ஆரோக்கியமற்ற' நிலையில்
கேகாலை 128, தம்புள்ளை 126, இரத்தினபுரி 119

ஆகிய நகரங்களில் 'பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற' நிலை தொடர்பான எச்சரிக்கை காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் 116 என பதிவான குறித்த அளவீடு, தற்போது 74 என பதிவாகி 'மிதமான' (Moderate) மட்டத்தில் உள்ளது.

NBRI அறிக்கையின் படி பாதிக்கப்படும் பகுதிகள்:
யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் எதிர்வரம் 24 மணிநேரத்தில் காற்றின் தரம் 88 முதல் 120 வரையிலான சுட்டெண்ணுடன் 'சற்றே ஆரோக்கியமற்ற' நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தினமும் மு.ப. 8.00 - 9.00 மணிக்கும் மற்றும் பி.ப. 4.00 - 5.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காற்றின் மாசடைவு உச்சகட்டத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 07 பகுதியில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் காற்றின் தரம் 92 - 100 வரையிலும், காலி (கராப்பிட்டிய) பகுதியில் 72 - 80 வரையிலும் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#AirQualitySriLanka #AQIDrop #NBRO #Badulla #Mannar #Jaffna #Kandy #Colombo #SriLankaNews #LKA #Thinakaran #BreakingNews #SriLanka #SL #EnvironmentNews

தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,

உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk