Tamil short message
125 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்!

வீட்டுப்பாடம், டைம் டேபிள், எக்ஸாம் சார்ட் எல்லாமே இப்போது பள்ளியின் வாட்ஸ்அப் குரூப் வழியே வர ஆரம்பித்துவிட்டன. அதனால், 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பிலேயே பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித்தருவது தவிர்க்க முடியாததாகி ஆகிவிட்டது. அப்படிக் கொடுத்துவிட்டு, 'எப்போ பாரு போனையே பார்த்துட்டிருக்கியே' எனத் திட்டுவதில் நியாயம் இல்லை. ஏனென்றால், முதல்முறையாக தனக்கென ஒரு போன் கிடைத்ததும் பிள்ளைகள் அதன்மீது பெரும் ஈடுபாட்டுடனே இருப்பார்கள். அதற்காக, எப்போதும் மொபைலுடன் இருப்பதை வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்னை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரி, இதையெல்லாம் எப்படிச் செய்வது?

கண்காணியுங்கள்...

* பிள்ளைகளின் மொபைல்போனின் பேட்டர்ன் பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம். 

* உங்கள் பிள்ளைகள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த ஸ்டேட்டஸைப் பாருங்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன்மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச்சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

   * அடுத்தது, முகநூல். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள். 

   * கை தவறுதலாக ஏதோ ஒன்றை டச் செய்துவிட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை ஓப்பன் செய்துவிடலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை செக் செய்வது நல்லது. 

பிரச்னைகளை எப்படி எடுத்துச் சொல்வது?

* முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை, இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

* முகநூலில் இருக்கிறதுபோது, அறிமுகம் இல்லாதவர்கள், இன்பாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

* முகநூலில் வரும் ஆபாச வீடியோக்களை ஓப்பன் செய்தால், அது நீ அனுப்பியதாக உன்னுடைய மற்ற முகநூல் நண்பர்களுக்குச் சென்றுவிடும் என்ற தகவலைச் சொல்லி, பிள்ளைகளை உஷார்படுத்துங்கள்.


மாட்டிக்கொண்ட பிள்ளைகளை எப்படி மீட்டெடுப்பது?

*  'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்னை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையைப் பதியவையுங்கள்.

* உங்கள் மகளின் முகத்தை வைத்து மார்பிங் செய்வது போன்ற பிரச்னை வந்தால், தைரியமாக சைபர் கிரைம் மூலம் தீர்வு காணுங்கள்.

கடைசியாக, ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள். 
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ராஜீவ் காந்தி


🏁 இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🏁 இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாமல், விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.

🏁 இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..!

'எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை, திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்."

https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
பெண்களே உஷார் !


தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. ஆனால் தற்போது, நம் ஊரில் இந்த கொடுமைகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. இனியும் நாம், எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது முற்றிலும் தவறு.

உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

வீட்டிற்கு புதிதாக வரும் நபரின் மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து நாம் அகல கூடாது. ஏனெனில் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் முன், அவர்கள் நம்மை தாக்க நேரிடலாம். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் உங்களை யாராவது துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அல்லது, ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பதன் மூலமும், கேமராவும் இருப்பதன் மூலமும் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது தப்பித்துக்கொள்ளலாம்.

பாலியல் வன்முறையை எதிர்கொள்ள :

உடனடியாக செல்போனில் குடும்பத்தினருக்கோ அல்லது போலீசுக்கோ தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

உங்களிடம் இருக்கும் சேப்டிபின், கொண்டை ஊசி, குடை, கத்தி, பேனா போன்றவற்றை பயன்படுத்தி எதிர்தரப்பினரை காயபடுத்தி தப்பிக்கலாம்.

உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுவது யாரால்?

இந்த கேள்விக்கு அலசி ஆராய்ந்து கிடைத்த பதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே. குடும்ப நபர்களைத் தவிர மற்ற எவரும் நம்மை எந்த நோக்கத்திற்காக பழகுகிறார்கள் என்று முற்றிலும் நம்மால் உணர முடியாது. அதை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம். எனவே, அரைகுறை ஆடை, சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றில் படங்கள் பதிவிடுதல், தேவையற்ற அரட்டை, தேவையற்ற வீடியோ பதிவு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

பாரதி கண்ட புதுமை பெண்களா நீங்கள்?

இந்த சந்தேக கேள்விக்கு சரியான பதில். ஆம். ஆனால், தற்காப்பில் தலைகுனிந்து இருக்கிறது பெண்களின் நிலைமை. இதனை தவிர்க்க, சமூகத்தில் ஒரு நல்ல படிப்புடன் வேலை, ஒரு குடும்பத்தை நிர்வகித்து வழிநடத்தும் பொறுப்பு, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டி முன்னோடியாக திகழ்வது போன்ற எண்ணற்ற பொறுப்புகள் காலடியில் இருக்கிறது என்பதை மறந்து அற்ப மனிதர்களின் பொழுது போக்கிற்கு போதை பொருளாக மாறக் கூடாது என்பதை கனவிலும் மறவாமல் செயல்பட வேண்டும்.







https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டியவை !!



இன்று பெரும்பாலானோரும் தங்களது உடலை கச்சிதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதற்காக ஜிம் சென்றும் வீட்டில் 'டிரெட் மில்" லில் ஓடிக் கொண்டும் இருக்கிறார்கள். வெறும் உடற்பயிற்சி மட்டும் உடலுக்கு நன்மை வழங்காது. உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பு, உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கு சிறிது உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக சரியான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, உடற்பயிற்சியின் போது அது கரைந்துவிடும். அப்படிப்பட்ட உணவுப் பொருள்களைப் பற்றி பார்ப்போம்.

💪 வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்குத் தேவையான சக்தி கிடைப்பதோடு, தசைகள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்.

💪 வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவில் பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ரிபோபிளேவின், செலினியம் ஆகியவை உள்ளன. இவை உடற்பயிற்சியின்போது வேண்டிய ஆற்றலை வழங்கும்.

💪 இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம், எளிதாக உடற்பயிற்சி செய்ய உதவும். மேலும் இவை உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும்.

💪 முழு தானிய உணவுகள், கொழுப்பு குறைந்த யோகர்ட், பழுப்பு அரிசி உணவுகள், பழங்கள், வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம். போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.

💪 உடற்பயிற்சிக்கு முன்பு காபியை அளவாக குடித்து ஆரம்பித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் தசை பிடிப்புக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதை குறைக்கும்.

💪 உடற்பயிற்சிக்கு பின்னர் அதிகப்படியான தசை வலிகள் ஏற்பட்டால், உடற்பயிற்சிக்கு முன் இஞ்சி டீ போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை ஆரம்பித்தால், தசை வலியைத் தடுக்கலாம்.

💪 பீட்ரூட் இரத்த சோகை உள்ள பெண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். இந்த பீட்ரூட்டை உடற்பயிற்சிக்கு முன்பு ஜூஸ் போட்டு குடித்து, பின் உடற்பயிற்சியை தொடர்ந்தால், உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜனானது நல்ல அளவில் கிடைக்கும்.

💪 உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடக்கூடிய உணவுகளில் மிகவும் சிறந்தது தான் செரில். ஏனெனில் இதனை சாப்பிட்டு உடற்பயிற்சியை மேற்கொண்டால், குளுக்கோஸானது இரத்தத்தில் மெதுவாக கலக்கும். இதனால் அதிகப்படியான எனர்ஜி உடலுக்கு கிடைக்கும்.

💪 பருப்பு வகைகளில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், இதனை சாப்பிட்டால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்கும். குறிப்பாக, இந்த பருப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும்.









https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சென்னை தினம்



பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று 379வது பிறந்த நாள்.....!!!


🎪 தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற தினம் தான் சென்னை தினம் ஆகும்.

🎪 பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

🎪 முதன்முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.







https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
இன்றைய பொன்மொழி

'செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வை தான்."



https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முளை கட்டிய தானியங்கள் தரும் பயன்கள் !!




ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவது தான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 - 10 மணி நேரத்துக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இது உங்கள் குடும்ப உணவாகவே மாறிவிடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத் தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் கிடைக்கிறது.

🌿 முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

🌿 முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

🌿 முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

🌿 முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும், கண்பார்வை மேம்படும்.

🌿 முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிட்டால், தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

🌿 முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டுவலி தீரும்.

🌿 எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் ஆற்றலும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.









https://t.me/tamilshortmessage
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மூட்டு வலி விரட்டும், கல்லீரலைப் பலமாக்கும்... சொடக்குத் தக்காளியின் பயன்கள்!


``நம் வீட்டைச் சுற்றி ஏராளமான அபூர்வ மூலிகைகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் அருமை நமக்குத் தெரிவதில்லை. நாம் நடக்கும் திசையெல்லாம் முளைத்துக்கிடக்கும் 'சொடக்குத் தக்காளி' என்ற செடியின் இலைகளும் பழங்களும் நிறைய நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது''

``தக்காளியை எல்லோருக்கும் தெரியும். மணத்தக்காளி பற்றியும் தெரியும். சொடக்குத் தக்காளி என்று ஒரு தக்காளி உண்டு. நடுவில் பழமும் சுற்றிலும் பை போன்ற குமிழும் இருக்கும் இந்தத் தக்காளியைப் பறித்து நெற்றி, தலைப்பகுதியில் அடிப்பார்கள். அப்போது சொடக்கு' போடுவதுபோல் சத்தம் வரும். அதனால் இதை சொடக்குத் தக்காளி' என்கிறார்கள். 

கிராமப்புறங்களில் மிகச் சாதாரணமாக வளரும் இந்தச் செடியில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். காய்கள் முற்றிப் பழமாகும்போது அந்த உறை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். காய் பழமானதும் உறையுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.


இதில் பலவகைகள் உள்ளன. சாதாரண பச்சை நிறத்தில் காணப்படும் சொடக்குத் தக்காளியே நம் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலும் காணப்படுகிறது. பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத இந்தப் பழத்துக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு. 

கட்டிகளைக் கரைக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும். நுரையீரல் நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இதன் இலை மற்றும் காய்களை நசுக்கிப்போட்டு மஞ்சள் தூள், நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதை அவ்வப்போது குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டுவலி உள்ளவர்கள் அவ்வப்போது இந்த நீரைத் தயாரித்து காலை, மாலை என அருந்தினால் வலி நீங்கும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும்.

சர்க்கரை நோயால் வரக்கூடிய புண்கள், பிற ஆறாத புண்களுக்கு இதன் இலைகள் நல்ல மருந்தாகும். சொடக்குத் தக்காளி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி புண்களின்மீது தடவினால் விரைவில் ஆறும்.

இதன் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள், கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் குணமாகும். இரும்புச் சத்து அதிகளவு இருப்பதால் அனிமீயா, சோர்வு நீங்கும். கீல்வாதம் ஏற்படும்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதிலுள்ள வைட்டமின் பி 3 சத்து போதுமான அளவு ரத்தத்தைப் பாயச் செய்து, வலியைக் குறைத்துவிடும். 

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அல்சைமர், டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் சார்ந்த மூளை பாதிப்பு நோய்கள் ஏற்படாமலிருக்க உதவும். இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் மூளைச் செறிவுத்திறன் மேம்படும். பெக்டின் எனப்படும் கரையும் நார்ச்சத்து இருப்பதால், நாம் உண்ணும் உணவை செரிமானமடையச் செய்வதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்..." .



https://t.me/tamilshortmessage