கலப்படத் தேனைக் கண்டுபிடிப்பது எப்படி...
சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விட்டால், தண்ணீரில் கரையாமல் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.
சுத்தமான காட்டன் துணியைத் தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாகச் சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமான தேன்.
சுத்தமான தேனை வாணலியில் சூடு செய்தாலும் அதன் அடர்த்தி குறையாது.
சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் வைத்திருக்கும்போது அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும்.
சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும்.
சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போலப் பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போலப் பாத்திரத்தில் சமநிலையில் இருக்கும். இது போன்று பல்வேறு வழிமுறைகளில் கலப்படத்தை கண்டறியலாம்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களாலும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கின்றன. நம் வாழ்வின் உணவு உற்பத்திக்குப் பெரும்பங்கு வகிப்பதும், நம் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்களைப் பாதுகாக்க நாம் தேனீக்களை வளர்க்க வேண்டும் என்பதில்லை. இருக்கும் சிறிதளவு தேனீக்களையும் அழிக்காமல் இருக்க, அவற்றின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றவற்றின் பயன்பாடுகளை முடிந்தளவு குறைக்கலாம். இயற்கையைப் பாதுகாக்கலாம். இயற்கைக்குத் துரோகம் இழைக்காமல் இருந்தாலே போதும்.

செங்கோட்டை
கோட்டையின் அமைவிடம் :
இந்தியாவின் நீண்டகால வரலாற்றையும் அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் இதுவும் ஒன்றாகும். செங்கோட்டை இந்தியாவில் உள்ள டெல்லியில் அமைந்துள்ளது. டெல்லி கோட்டையானது, லால் குயிலாஹ் அல்லது லால் குயிலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயருக்கு மேன்மை மிக்க கோட்டை என்பது பொருளாகும். சிவப்புக்கற்களால் கட்டப்பட்டு அப்பழுக்கற்ற தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த பிரம்மாண்ட கோட்டை உலகின் முக்கியமான ராஜகோட்டைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டது.
செங்கோட்டை உருவான விதம் :
முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், மேலும் 1648-ஆம் ஆண்டு இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டை உண்மையில், குயிலா-ஐ-முபாரக் (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது. ஏனெனில், இது அரசக்குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது.
உஸ்தாத் அஹமத் எனும் கட்டிடக்கலைஞரால் இக்கோட்டை வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. 2.41 கி.மீ நீளத்துக்கு இந்த கோட்டை நீண்டுள்ளது. லாகூர் கேட் மற்றும் இந்தியா கேட் என்ற இரண்டு பிரதான வாயில்கள் இந்த கோட்டைக்கான வாசல்களாக அமைந்துள்ளன.
செங்கோட்டையில் உள்ள காட்சிப்பொருட்கள், மிகவும் உயர்தரமான கலை ஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும்.
இந்த கோட்டைக்குள்ளே பல அற்புதமான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் திவான் இ ஆம் என்பது வெகு சிறப்பான மாளிகையாக கருதப்படுகிறது. இந்த மாளிகைக்கூடம் மன்னர் பொதுமக்களை சந்தித்து குறைகளை விசாரிக்கும் ராஜாங்க மண்டபமாக இருந்துள்ளது. திவான் இ காஸ் எனும் அரண்மனை மாளிகை மன்னர் முக்கியமான ஆலோசனைகள் மற்றும் அவைக்கூட்டங்களை நடத்தும் கூடமாக இருந்துள்ளது. இதுதவிர மோதி மஸ்ஜித் எனும் மசூதி ஒன்றும் பின்னாளில் இந்த கோட்டைக்குள் கட்டப்பட்டுள்ளது. ஒளரங்கசீப் மன்னரால் தனது சொந்த உபயோகத்துக்காக இந்த மசூதி கட்டப்பட்டிருக்கிறது.
செங்கோட்டையின் சிறப்பு :
இது 2007-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.
பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது.
பழைய டெல்லியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாக செங்கோட்டை உள்ளது, இது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றது. இந்தக் கோட்டையானது, ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15 ஆகஸ்ட் அன்று முதல், இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுமிடமாகவும் இருந்து வருகிறது. இது பழைய டெல்லியின் மிகப்பெரிய நினைவுச்சின்னமாகவும் விளங்குகிறது. மன்னராட்சி முடிந்து ஒன்றுபட்ட பரந்த இந்தியாவின் தலைநகராக விளங்கும் டெல்லி நகரில் வரலாற்று காலத்தின் சாட்சியமாகவும், புராதன கலைச் சின்னமாகவும் வீற்றிருக்கும் இந்த செங்கோட்டையில் தான் இந்தியப் பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
இந்தக் கோட்டையை ரசித்து செல்வது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த தலைமுறைக்கு பேணி பாதுகாத்து விட்டுச் செல்வோம்.

உலக மனிதநேய தினம்
உலக மனிதநேய தினம் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுக்கூர்வதற்காக உருவாக்கப்பட்டதே உலக மனிதநேய தினமாகும்.
https://t.me/tamilshortmessage

உலக புகைப்பட தினம்
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் (Daguerreotype) எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி 'ப்ரீ டூ தி வேர்ல்ட்" என உலகம் முழுவதும் அறிவித்தது. எனவே, புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்..!
'உங்கள் எதிரிகளை கவனியுங்கள், அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்."
- பெனிலின்.
https://t.me/tamilshortmessage
'உங்கள் எதிரிகளை கவனியுங்கள், அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்."
- பெனிலின்.
https://t.me/tamilshortmessage
கொசுக்களை விரட்ட வழிமுறைகள்!
தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் இருக்கு, ஆனால் இந்த கொசுக்களுக்கு மட்டும் சீசனே கிடையாது. அதுவும் மழைக்காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா வந்துவிடுமோ, டெங்கு வந்துவிடுமோ என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டுத் தூங்குபவர்களுக்கு இன்னும் இதுக்கூட தெரியவில்லை அது கொசுவை கொல்லும் கொல்லைக்காரன் அல்ல. நம்மை கொல்லும் கொல்லைக்காரன் என்று. இதோ இதிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை வந்துவிட்டது.
இயற்கை முறையில் கொசுவை விரட்ட வழிகள்..!
🚫 கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம்.
🚫 புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.
🚫 தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய் விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும், கொசுவும் நெருங்காது.
🚫 வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.
🚫 யூக்லிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
🚫 பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.
🚫 வேப்பெண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பெண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
🚫 எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வையுங்கள். இதன் வாசனை கொசுவை விரட்டும். ஆஸ்துமா நோயாளிகள் கொசுவை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
🚫 ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அதன் மேல் மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறையும் சரி செய்யும். சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.
🚫 மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
🚫 கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
🚫 விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

விமானங்களை பற்றிய சில தகவல்கள் !!
🚀 ரைட் சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டில் முதல் விமானத்தை கண்டுபிடித்து, பறந்தனர்.
🚀 உலகின் மிகப்பெரிய விமான ஓடுபாதை சீனாவில் கம்டோ பம்டா விமான நிலையத்தில் உள்ளது.
🚀 உலகின் பரபரப்பான விமான நிலையம் ஹார்ட்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் ஆகும்.
🚀 உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ 380 ஆகும்.
🚀 முதன் முதலில் அலாஸ்கா ஏர்லைன்ஸில் 1999 இல் இணையமும் மற்றும் இணையதள சோதனையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
🚀 அனைத்து சர்வதேச விமான விமானிகளும் ஆங்கிலம் பேச வேண்டும்.
🚀 லியோனார்டோ டா வின்சி அமெரிக்காவின் முதல் பறக்கும் உரிமம் பெற்ற நபர் ஆவார்.
🚀 போயிங் 747 இன் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 955 கிமீ ஆகும்.
🚀 ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் (ஜே.ஆர்.டி) டாட்டா இந்திய விமானப்படையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
🚀 1932 இல் ஜே.ஆர்.டி. டாட்டாவால், உருவாக்கப்பட்ட டாட்டா ஏர்லைன்ஸ் இந்தியாவின் முதல் வணிக விமானமாக இருந்தது.
🚀 1946 இல், டாடா ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா என மாற்றப்பட்டது.

ஆண்ட்ராய்டுக்கு வரும் ஜிமெயிலின் 'confidential mode'... பாதுகாப்பானதுதானா?
ஜிமெயில் கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவைகளில் பல மாற்றங்களையும் புதிய வசதிகளையும் கொண்டு வந்திருந்தது. அதில் ' Confidential mode' என்கிற வசதி முக்கியமானது. இதன் மூலம் முக்கியமான மெயில்களைப் பாதுகாப்பான முறையில் அனுப்ப இயலும். அதாவது, உங்களது மெயில்களுக்கு காலாவதி தேதியை உங்களால் நிர்ணயிக்க முடியும். இல்லையெனில், பாஸ்கோட் மூலம் மெயில்களைப் பாதுகாக்க முடியும்.
இந்த வசதி இரண்டு மாதமாக வெப் வெர்சனில் இருந்து வந்தாலும் இப்போது தான் ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு வந்தடைந்துள்ளது. செயலியில் இருக்கும் இந்த ' Confidential mode' வசதிக்கும் வெப் வெர்சனில் இருக்கும் வசதிக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, அதிலிருக்கும் அனைத்து அம்சங்களும் செயலியிலும் உண்டு.
எப்படி இந்த வசதியை ஆண்ட்ராய்டு செயலியில் பயன்படுத்துவது?
இதற்கு உங்கள் ஜிமெயில் செயலியை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது தங்களிடம் இருக்கும் ஜிமெயில் செயலியை ஓபன் செய்து பின்வரும்வற்றை பின்பற்றவும்.
செயலியின் கீழே வலதுபுறத்தில் இருக்கும் பட்டனை கிளிக் செய்யவும். இது மெயில் அனுப்பும் பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
அதில் மேலே மூன்று புள்ளி வைக்கப்பட்டிருக்கும் செட்டிங்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். அதில் ' Confidential Mode' என்ற ஆப்சன் இருக்கும். அதை செலக்ட் செய்யவும்.
பின்வரும் பக்கத்தில் ' Confidential Mode' என்றிருக்கும் பட்டனை ஆன் செய்து கொள்ளவும். பின் set expiration என்ற பிரிவின் கீழ் காலாவதியாகும் காலத்தைக் குறிப்பிடலாம். இந்தக் காலத்தை 1 நாளிலிருந்து 5 வருடம் வரை செட் செய்துகொள்ள முடியும். மாற்றங்கள் செய்த பின் மேலிருக்கும் save பட்டனை கிளிக் செய்யவும்.
அது வேண்டாமென்றால் ' Require Passcode' என்ற பிரிவின் கீழ் ' SMS Passcode' என்ற ஆப்சனை செலக்ட் செய்து கொள்ளலாம். இப்போது மெயில் அனுப்பும் நேரத்தில் மெயிலை பெறுபவரின் மொபைல் எண் ஏற்கெனவே சிங்க் செய்யப்படவில்லை என்றால் அவர்களது மொபைல் எண் கேட்கப்படும். அதைக் கொடுத்துவிட்டால் மெயில் ஓபன் செய்யும். ஒவ்வொரு முறையும் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பாஸ்கோட் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். அதைக் கொண்டு தான் மெயிலை பார்க்கமுடியும். இவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப செலக்ட் செய்த பிறகு உங்களது மெயிலை நீங்கள் அனுப்பலாம்.
ஜிமெயிலின் இந்த முயற்சி வரவேற்கக்கூடியது தான் என்றாலும் இதிலும் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. பாதுகாப்பான மெயில் வசதி என்று ஜிமெயில் சொல்லிக்கொண்டாலும் இது வாட்சப்பை போல ' end-to-end encrypted' கிடையாது. மேலும் காலாவதி தேதி கொடுத்திருப்பினும் 'sent mails' என்ற அனுப்பிய மெயில் பிரிவில் அனுப்பப்பட்ட மெயிலைக் காணமுடியும். அடுத்து ஒருவரின் மெயிலை அவரது மொபைல் எண்ணுடன் அவரின் ஒப்புதல் இல்லாமல் இணைக்க முடியும். மேலும் ஆபத்தான ஸ்பாம் மற்றும் தீங்கிழைக்கும் மெயில்களும் இந்த ' confidential mode' என்ற தோலை போர்த்திக்கொண்டு வர இயலும். கூகுள் நிறுவனமும் இதற்கு விளக்கம் எதுவும் தந்தாக தெரியவில்லை. எனவே கண்மூடி தனமாக இதை நம்பாமல் எச்சரிக்கையுடன் சரியாக பயன்படுத்துவது சிறப்பு.