Tamil short message
126 subscribers
3 photos
9 videos
126 links
தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் அறிய @tamilshortmessage இல் இணைந்திடுங்கள்.
Download Telegram
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்தியும் நிற்க முடியாது. எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்
செல்போனால் ஆபத்தா?


இன்றைய அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்ட செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் அதன் பயன்பாட்டைக் கருதி தவிர்க்கமுடியாமல் போவதுதான் உண்மை.

📵 அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினம்தான். ஆனால், மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

📵 தொடர்ந்து 30 நிமிடங்கள் மொபைலில் பேசிக்கொண்டிருந்தால் ஒலியை உள்வாங்கக்கூடிய நரம்புகள் பெரிதும் பாதிப்படைந்து அதன்மூலம் மூளை செயலிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

📵 சார்ஜரில் இருக்கும் போது செல்போன் அழைப்புகளை ஏற்கக்கூடாது. சார்ஜரில் இருக்கும் போது ஹெட்செட் போட்டு பாட்டு கேட்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

📵 தூங்கும் போது செல்போனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கக்கூடாது.

📵 குறைந்த அளவு சிக்னல் இருக்கும் போது மொபைல் போனினை பயன்படுத்த கூடாது.

📵 தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்தி வந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காதுகள் செவிடுகூட ஆகக்கூடும்.

📵 இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் செல்போன் பயன்படுத்துவது கண்களை அதிகம் சோர்வடையச் செய்து கண்ணின் நுண்ணிய நரம்புகள் பாதிக்கப்படும்.

📵 வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது முடிந்தவரை குறைக்கலாம். உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் மண்டையோடு மெல்லியதாக இருப்பதால் செல்போன் கதிர்வீச்சுக்கள் அதிக அளவில் தாக்கும்.

📵 இந்தியாவில் மட்டுமல்ல, பெரும்பாலான இதர நாடுகளிலும் மாணவர்கள் தங்களின் நேரத்தையும், கவனத்தையும் செல்போன் மூலம் இழந்து, மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டு நினைவாற்றலை இழக்கின்றனர்.

📵 பேருந்து நிலையம், மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் போன்ற பொது இடங்களில்கூட அருகே இருக்கும் சக மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மொபைலில் வெட்டிப்பேச்சுப் பேசும் நாகரீகமின்மை எங்கும் பரவி வருகிறது என்பது வேதனைக்குரிய உண்மை.

📵 உங்கள் மொபைலில் ஏ.டி.எம் சீக்ரெட் நம்பர், அக்கவுண்ட் கணக்கு எண்களை சேமித்துவைப்பது பாதுகாப்பானது அல்ல. மொபைல் தொலைந்து போனால், மற்றவர்கள் நம் அக்கவுண்ட் கணக்கை எளிதாக பயன்படுத்த முடியும். எனவே, இதனை தவிர்த்திடுங்கள்.

📵 மொபைலில் பேட்டர்ன்லாக் முறையும், பாஸ்வேர்டு முறையும் பின்பற்றுவது நலம். எமர்ஜென்ஜி கால் பகுதியில் நம் குடும்பத்தினர் நம்பரை பதிவு செய்து வைத்துக்கொண்டால் விபத்து போன்ற இடர்பாடு ஏற்படும் நேரத்தில் மிக உதவியாக இருக்கும்.

📵 செல்பி எடுத்து இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. செல்பி மோகத்திற்கு அடிமையாகாமல் இருங்கள் !

செல்போன் என்பது அவசர தேவைக்கு தகவல்களை பரிமாறிக்கும் கொள்ளும் சாதனமாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமேத் தவிர, முழு நேரத்தையும் நாம் அதற்காக வீணடிக்கக்கூடாது.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
கார் பிரேக்கின் ஆயுளுக்கு என்ன தேவை?!

கார், பைக் என எந்த வாகனமாக இருந்தாலும், இந்தியாவில் ஹார்னுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படுவது பிரேக்தான். டிராஃபிக் சிக்னல், மேடு பள்ளம், திடீர் ஸ்பீடு பிரேக்கர், ஓவர்டேக் பேர்வழிகள் என, காலை ஆபீஸுக்குக் கிளம்பும்போதும் வீட்டுக்கு திரும்பும்போதும் நம்மைக் கடுப்பேற்ற, சாலையில் பல விஷயங்கள் காத்திருக்கும். எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க, நமக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் பிரேக்.

வீலோடு சேர்ந்து வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பிரேக் டிஸ்க்கை, பிரேக் பேடுகள் அசால்ட்டாகப் பிடித்து காரை நிறுத்துகிறது. இந்த நேரத்தில் பேடுகளில் ஏற்படும் உராய்வுகளால் அவை வெப்பமடைந்து தேய்ந்துவிடும். பெட்ரோல், இன்ஜின் ஆயில், கூலன்ட்போல பிரேக் பேடுக்கும் ஆயுள் குறைவு. நம் டிரைவிங்கைப் பொறுத்து பிரேக் பேடுகளின் ஆயுள் 5,000 கிலோமீட்டர் முதல் 20,000 கிலோமீட்டர் வரை வரும். பிரேக்கை சரியாகப் பயன்படுத்தினால் அதிக ஆயுள் கிடைக்கும். 

டிரைவிங் ஸ்கில்

ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச், கியர் என டிரைவிங்கைப் பற்றித்  தெரிந்திருந்தாலும், கார் ஒரு சாலையில் எப்படி ரியாக்ட் செய்யும், சில தருணங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற டிரைவிங் ஸ்கில் தெரிந்திருக்காவிடில் உதாரணத்துக்கு, டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்கு இருக்கும்போது கடந்துவிடலாம் என வேகமாகச் சென்று சிவப்பு விளக்கு வந்தவுடன் பிரேக்கை அடித்து நிற்பார்கள். ஒரு திருப்பத்தை வேகமாகக் கடந்துவிடலாம் என நினைத்து, அருகில் வந்தவுடன் மடமடவென பிரேக் அடித்து வேகத்தைக் குறைத்து அந்த வளைவு எடுப்பார்கள்... நன்றாக கார் ஓட்டிப் பழகியவர்கள், தூரத்தில் இருந்தே சிவப்பு விளக்கு வருவதற்குள் கடக்க முடியாமா என்பதைக் கணித்திடுவார்கள்; எந்த வளைவுகளில் எவ்வளவு வேகம் வேண்டும் என்று பார்த்த உடனேயே தெரிந்துகொள்வார்கள்; எந்த ஸ்பீடு பிரேக்கருக்கு எவ்வளவு வேகம் என சாலையில் பிரேக் தேவைப்படும் எல்லா இடங்களிலும் சரியாக வேகத்தை மெயின்டெயின் செய்வார்கள். இதனால், பிரேக் பேடுகளின் தேய்மானம் குறையும்.

பிரேக் போடும்போது நமக்கு முற்போக்குச் சிந்தனை வேண்டும். எப்போதுமே லேசான அழுத்தத்தை பிரேக்கில் பயன்படுத்தவேண்டும். தேவையென்றால், அழுத்தத்தைப் பொறுமையாக அதிகரிக்கலாம். திடுக்கென பிரேக்கைப் பிடித்து வீலை லாக் செய்தால், பிரேக் பேடுகளில் அதிக தேய்மானம் ஏற்படும். இப்படிச் செய்வது பேடுகளுக்கு மட்டுமல்ல, சஸ்பென்ஷன், டயர் என தொடர்சங்கிலியாக இருக்கும் எல்லா பாகங்களையும் பாதிக்கும். காரில் பயணிப்பவர்களுக்கும் தேவையில்லாத அதிர்வுகள் இருக்காது. ஏபிஎஸ் இல்லாத காரில் இதுபோல நிதானமாக பிரேக் பிடிப்பது அவசியம்.

வேகம்

அதிக வேகத்திலிருந்து உடனே வேகத்தைக் குறைக்க பிரேக்கைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், பிரேக் பேடுகளுக்கு என மாதச் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமித்துவையுங்கள். பட்ஜெட் போட்டு கார் சர்வீஸ் செய்பவர்களே, அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடிப்பதால் தேய்மானமும் அதிகமாகவே இருக்கும். இன்ஜின் பிரேக்கிங் மூலம் வேகத்தை முடிந்த அளவுக்குக் குறைத்துவிட்டு, பிறகு பிரேக்கைப் பயன்படுத்தினால் பிரேக் பேடுகள் அதிக நாள் வரும்.

வெப்பம்

மலையிலிருந்து இறங்கும்போது பிரேக்கை அதிக நேரம் பயன்படுத்த நேரிடும். அப்போது பேடுகளில் அதிக வெப்பம் உருவாகும். வெப்பம் அதிகமாக இருந்தால் பேடுகள் சீக்கிரம் தேய்ந்துவிடும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பிரேக் பிடித்தால் கார் நிற்காது. அதனால், பிரேக்கின் ஆற்றல் குறைவதுபோலத் தெரிந்தால் கியரைப் பயன்படுத்தி பொறுமையாக காரின் வேகத்தைக் குறைத்து காரை நிறுத்திவிட்டு பிரேக்கைக் குளிரவிட வேண்டும். காரை நிறுத்தும்போது பேட் டிஸ்க்குடன் லாக் ஆகாமல் இருக்க வேண்டும். பிரேக் பேடுகளில் வெப்பம் டிஸ்க்கைச் சூடாக்கும். அதனால், வீல் டிஸ்க்கின் திறன் குறையும்.

பராமரிப்பு

எதில் குறை இருந்தாலும் காரை ஓட்டிச் செல்லலாம். ஆனால், பிரேக்கில் குறை இருந்தால் ஆபத்தோ ஆபத்து! பிரேக்கைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பிரேக் பராமரிப்பு என்றால், அதில் முதலில் இருப்பது பிரேக் பேடுகளின் தேய்மானம். பேடுகள் இன்னும் 500 கி.மீ ஓடும்'' என்று மெக்கானிக் சொன்னால், உடனே பேடை மாற்றிவிடுங்கள். முழுவதும் தேய்ந்த பிறகு மாற்றுவது கூடாது.

பிரேக் பேடுகள் நன்றாக இருந்தும் காரை நிறுத்துவதில் சிக்கல் இருந்தால் பிரேக் டிஸ்க்/டிரம்மை ரீ-சர்ஃபேஸ் செய்யவேண்டும். 

பிரேக் ஆயிலை, தொடர்ந்து சரியான இடைவெளியில் மாற்ற வேண்டும். பிரேக் மெத்து மெத்தென இருந்தால் பிரேக் சிலிண்டரில் ப்ளீடிங்  செய்யவேண்டும்.

மாஸ்டர் சிலிண்டரிலிருந்து செர்வோ மோட்டாருக்குச் செல்லும் வேக்கம் ஹோஸை அவ்வப்போது செக் செய்யவேண்டும். ஏதாவது விரிசல் தென்பட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.
இன்றைய பொன்மொழி

தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்பவன்தான் உலகிலேயே மிகச்சிறந்த சீர்திருத்தவாதி

- பெர்னாட்சா.
செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டங்கள்!!..



🐾 வங்கிகள் விதிக்கும் விதிமுறைகளைப் பார்க்கும்போது அஞ்சல்; அலுவலகத்தில் கணக்கு துவங்கிப் பராமரிக்கலாம். நல்ல திட்டங்களில் சேர்த்து முதலீடு மேற்கொள்ளலாம் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது.

அஞ்சல்; அலுவலகம் :

🐾 குழந்தைகளின் மேம்பாட்டிற்காக அஞ்சல் துறையில் அதிக வருமானம் மற்றும் வட்டி கிடைக்கும் திட்டமான செல்வ மகள் மற்றும் பொன் மகன் சேமிப்பு திட்டங்கள் பெற்றோர்கள் மத்தியில் மிகப் பிரபலம். எனினும் ஒரு சிலருக்கு இந்தத் திட்டங்கள் பற்றித் தெரிவதில்லை.

செல்வ மகள், பொன் மகன் திட்டத்தின் வசதிகள் :

🐾 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

🐾 இந்தத் திட்டத்தை இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் தொடங்கலாம். கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். திருமணத்துக்கு ஒரு மாதம் முன்னரே கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்பும் இன்றி முடித்துக் கொள்ளலாம்.

🐾 ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 250 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 250 ரூபாய் இந்தக் கணக்கில் செலுத்தப்படவேண்டும்.

🐾 கணக்கு துவங்கியவுடன், மூன்றாவது நிதியாண்டில் இருந்து கடன் வசதி உண்டு. கணக்கு துவங்கியதும் ஏழாவது நிதியாண்டிலிருந்து 50 சதவிகித தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. முதிர்வு காலத்துக்குப் பின்பும் கணக்கு முடிக்கும் வரை பிபிஎஃப் வட்டியே வழங்கப்படும்.

🐾 இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாக, பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கு உரிய காரணத்தையும் கூற வேண்டும்.

எங்கு துவங்கலாம் :

🐾 இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல்; அலுவலகங்களையும் அணுகலாம்.

🐾 உங்கள் செல்ல மகள் செல்வ மகளாக மாறவும், உங்கள் அன்பு மகனின் வருங்காலம் ஆனந்தமாக அமைய ஆசிர்வதியுங்கள்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
வாழ்க்கைத் தத்துவங்கள் !!

உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு.
மக்களையும் கவர்ந்து இழுக்கும் சாதனமான தொலைக்காட்சியின் வரலாறு..!!

அரிய பல தகவல்களை ஒளி மற்றும் ஒலியுடன் அளிக்கும் சாதனம் தொலைக்காட்சி ஆகும். அத்தகைய தொலைக்காட்சியினைப் பற்றி நாம் இன்று காண்போம்.

"தொலைவில் தெரியும் காட்சி" என்று தொலைக்காட்சி பொருள்பட்டாலும் கூட, பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு :

1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் லூகி ஃபெர்டு என்ற விஞ்ஞானி முதன் முதலில் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். ஆனால், தொலைக்காட்சித் தொழில் நுட்பங்கள் பலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "பில்லோ பான்ஸ்வர்த்" என்பவர் தொலைக்காட்சியின் டியூபைக் கண்டுபிடித்தார். கதிர் டியூபைக் "விளாடிமிர் கோஸ்மா ஸ்வாரிகின்" என்பவர் கண்டுபிடித்தார்.

இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டி என்ற வகையில் தொலைக்காட்சியை அறிமுகம் செய்தவர் என்பதினால் "ஜோன் லூகி ஃபெர்டு" "தொலைக்காட்சிக் கண்டுபிடித்தவர்" என்று அடையாளம் காட்டப்படுகிறார்.

இந்தியாவில் தொலைக்காட்சி :

தொலைக்காட்சி 1926-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு முதல் பி.பி.சி. நிறுவனம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. யுனெஸ்கோ உதவியால் 1959-ஆம் ஆண்டு இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. விவசாய மேம்பாட்டுக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் இது இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் டில்லியிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் ஒளிபரப்பு நிகழ்ந்தது. அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவாக இருந்த இது பின்னர்ப் பிரிக்கப்பட்டு "தூர்தர்ஷன்" என்ற தனி அமைப்பாக ஆக்கப்பட்டது.

தமிழகத்தில் தொலைக்காட்சி :

தமிழ்நாட்டில் சென்னையில் 1975-ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 20 கிலோ மீட்டர் வரை ஒளிபரப்பு நிகழ்ந்தது. அடுத்த ஆண்டிலிருந்து 80 கிலோ மீட்டர் ஒளிபரப்பானது. 1987-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒளிபரப்பானது. 1992-ஆம் ஆண்டு முதல் செயற்கைக் கோள் ஒளிபரப்புகள் தொடங்கின. அது முதல் எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்கிறது. தொடக்கத்தில் வுநடநஎளைழைn என்பதற்கு "படரேடியோ", "காட்சி வானொலி", "வானொளி" என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது. பின்னர், தொலைபேசி என்பது போலத் "தொலைக்காட்சி" என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

உலகத் தொலைக்காட்சி தினம் :

உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் நாள் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்படுகின்றது.

விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் நாளுக்கு நாள் புதிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையை இன்பமயமாக்குவதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியன விஞ்ஞானத்தின் விந்தைமிகு வெளிப்பாடுகளில் சிலவாகும்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
முத்தான சிந்தனை துளிகள்!!

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
பணம் - தொட்டால் நோய் வருமா?



அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும் புழங்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்" என்று உங்களுக்குத் தெரியுமா?

இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்? அத்தகைய நாணயங்கள் மூலம் பரவும் நோய்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

மருத்துவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆனது 'காய்ச்சல், சளியில் தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1, TB, இதர பால்வினை நோய்கள்" ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

இறைச்சி கடையில் பரிமாற்றம் செய்யப்படும் பணம் இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்தப்படுகின்றன.

பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் நாணயங்கள் பெரும்பாலும் பேருந்து நடத்துநரிடம் (bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன. அவர் தரும் நாணயங்கள், நம் வீட்டுக் குழந்தைகள் கையிலும், நம் கைக்குட்டைகளிலும் தவழ்கின்றது.

திடீரென்று ஏற்படும் காய்ச்சல், வாந்தி, அலர்ஜி, சோர்வு, வயிற்றுக்கோளாறு போன்ற நோய்களுக்கு ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஒரு காரணமாக இருக்கலாம்.

பாக்டீரியாக்களை பையில் வைத்துக் கொண்டு நாமே நோய்களை பரப்பும் காரணியாக இருக்கிறோம். மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அத்தகைய வசதி இன்னும் செயல்பாட்டில் இல்லை. இதிலிருந்து நாம் தப்பிக்க ஒரே வழி நம்முடைய விழிப்புணர்வு மட்டுமே.

நாம் தவிர்க்க வேண்டியவை :

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

பணத்தை கையில் தொட்டால், சுத்தமாக கை கழுவிய பிறகே உணவுப்பொருட்களை தொட வேண்டும்.

பணத்தை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

திருமணம் உள்ளிட்ட வீட்டு விஷேசங்களில், பணத்தை கையாளும் போதும், பத்திரப்படுத்தும் போதும் கவனம் அவசியம்.

சளி, தும்மல், இருமல் போன்ற எளிதில் பரவும் நோய் கொண்டவர்கள், பணத்தை கையாளும் போது மிக கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், இந்நோய்கள் ரூபாய் நோட்டின் மூலம் எளிதில் பரவும்.

பணம் மூலம் பரவும் பாக்டீரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம் !
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !

சந்தித்த அவமானங்கள், கை நழுவி போன வாய்ப்புகள், கடந்து வந்த பாதைகள் இவையெல்லாம் நமக்கு கற்றுதந்தது அனுபவ பாடமே.
ஆண்ட்ராய்டு அப்டேட்கள் ஏன்? புதிய #AndroidPie அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?


பஸ் ஒன்றில் சுகமான பயண அனுபவம் கிடைக்க இரண்டு விஷயங்கள் முக்கியம். கை தேர்ந்த (கால் தேர்ந்த?) ஓட்டுநர் மற்றும் நன்கு பராமரிக்கப்பட்டு நல்ல கண்டிஷனில் இயங்கும் உதிரிபாகங்கள். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் முதுகெலும்பு முறிந்து விடக்கூடும். அனுபவமிக்க, திறமையான, வேகமான, பதற்றப்படாத ஓட்டுநர் ஒருவரை ஒரு டப்பா பஸ்ஸுக்கு ஓட்டுநராகப் போட்டால் என்ன ஆகும்? அதேபோல தொட்டாலே பறக்கக் கூடிய ஒரு பிராண்ட்-நியூ வோல்வோ பஸ்ஸுக்கு இப்போதுதான் Learners License எடுத்திருக்கும் ஒரு கத்துக்குட்டி ஓட்டுநரை அமர்த்தினால் எப்படி இருக்கும்?

- இதே மாதிரி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகின்றன. ஒன்று அதன் ஹார்டுவேர். இதில் அதன் பேட்டரி, மெமரி, மோடம், தொடுதிரை, சென்சார்கள், புராஸசர்கள் ஆகியவை வரும். ஆனால், இவற்றை ஒழுங்குபடுத்தி இயக்கிக் கட்டளைகள் பிறப்பித்துக் கட்டியாள ஓர் இயங்குதளம் (Operating System) இல்லாமல் போனால் இவை வெறும் எலெக்ட்ரானிக் குப்பைகள்தான். ஓட்டுநர் இல்லாத பேருந்து போலத்தான். நம் போனை ஆன் செய்ததும் ஒரு கடமை தவறாத பணியாள் போல இந்த இயங்குதளம் விழித்துக்கொண்டு இடைவிடாமல் இயங்க ஆரம்பித்து விடுகிறது.

நீங்கள் Samsung On 5 Pro வாங்கினாலும் One plus six வாங்கினாலும் அதற்குள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் ஏதோ ஒரு பதிப்பு ( version) பொதிக்கப்பட்டிருக்கும். ஒருவிதத்தில் இது ஒரே ஓட்டுநரைப் பலமுறை படியெடுத்து கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து ஷேர் ஆட்டோ முதல் வோல்வோ பஸ் வரை ஓட்டவிடுவது போலத்தான். ஒரு வருடத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை ஆகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன . (விற்பனையாகும் ஒவ்வொரு 100 ஸ்மார்ட் போன்களிலும் 88 போன்கள் ஆண்ட்ராய்டு போன்கள்). இதில் ஒவ்வொன்றிலும் ஆண்ட்ராய்டு எனப்படும் ஓட்டுநர் கடமை தவறாமல் தன் பணியைச் செய்து கொண்டுள்ளார். ஆண்ட்ராய்டு இன்று சந்தேகமே இல்லாமல் நிறைய பேர் விரும்பும் மொபைல் OS ஆக மாறி விட்டது.  

சரி. இந்த மாடலில் பஸ்ஸில் ஏதேனும் ரிப்பேர் இருந்தாலோ, பஸ் கொஞ்சம் மக்கர் செய்தாலோ அதை ஒர்க்-ஷாப்புக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். ஆனால், ஓட்டுநரிடம் ஏதேனும் குறை இருந்தால் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்து ஆப்பிளையும் சாத்துக்குடியையும் வாங்கிச் செல்ல வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஓர்  Wi-Fi இணைப்பு போதுமானது. ஏனெனில் இது ஒரு Software update அல்லது Upgrade . Update கட்டளையைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிதானமாக டிபன் சாப்பிடப் போகலாம். சமர்த்தாக டிரைவர் தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வார்.

சிறுவயதில் நாமெல்லாம் ரேடியோ ரிப்பேர் செய்வதைப் பார்த்திருப்போம். உண்மையில், ரேடியோ ரிப்பேர் ஆகிவிட்டால் குஷி தான். அப்பா ரேடியோவை ரிப்பேர் கடைக்கு எடுத்து செல்வார் அல்லது டெக்னீஷியனை வீட்டுக்கு வரவழைப்பார். அப்போதெல்லாம் தெருமுக்கு தோறும் ஒரு ரேடியோ கடை காணக் கிடைக்கும். வீட்டுக்கு வந்த டெக்னீஷியன் ஏதோ ஒரு சீரியஸான சர்ஜரிக்கு தயாராகும் டாக்டர் போல ஆயத்தங்களைச் செய்வார். ரேடியோவைப் பக்குவமாகப் பிரித்து தூசி தும்பை அகற்றி விட்டு ஆராய்ச்சி செய்வார். சால்டரிங் கருவி தயாராக இருக்கும். அதைப் பசை போன்ற ஒன்றில் அப்பி சால்டரிங் செய்வார். ஏதேதோ பாக்ஸுகளை ரேடியோவில் இணைத்து அதன் முள் ஆடுகிறதா என்று சரி பார்ப்பார். ரேடியோவின் உள்ளே கலர் கலராக பல்வேறு சைஸுகளில் பாகங்கள் இருக்கும். நகரம் ஒன்றை பிளைட்டில் இருந்து ஏரியல் வியூ-வில் பார்ப்பதுபோல இருக்கும். கடைசியில் ஏதேதோ செய்து ரேடியோவில் மறுபடியும் கர கரவென்று சத்தம் வரவழைத்து விடுவார். ஸ்டேஷன் குமிழைத் திருப்பினால் ``நேயர் விருப்பம் தேவிபுரம் விமலா, அற்புதராஜ், பாண்டியன், ஜீவநாதன்.."

ரேடியோவுக்கு இயங்குதளம் எதுவும் இருந்ததில்லை. மின்சாரம் அதற்கென்று முன்பே போடப்பட்ட எலெக்ட்ரானிக் பாதையில் பயணித்து ஒலியாக மாறும். ரிப்பேர் என்றால் செட்டைப் பிரித்துப்போட்டே ஆக வேண்டும்.  இந்த மாதிரி பிரித்து மேயும் சமாசாரங்கள் எதுவும் இன்றி அப்படியே ஸ்மூத் ஆக update ஆகிக்கொள்ளும் ஆண்ட்ராய்டு இயங்குதளம். அதிகபட்சம் அப்டேட்டுக்குப் பிறகு restart ஆகலாம்.

ஆண்ட்ராய்டின் முதல் பதிப்பு 2009-ம் ஆண்டு ஏப்ரலில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது. இது 'கப்-கேக் 1.5' என்று அழைக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு வெர்சன்-களை இனிப்பு பலகாரங்களின் பெயர்களால் அழைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அடுத்து வந்தது onut OS.  ஆண்ட்ராய்டின் ஏதோ ஒரு வெர்ஷனுக்கு இந்திய இனிப்பின் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உதாரணமாக  N வரிசையில் 'நெய்யப்பம்' வரும்;  P வரிசையில் 'பேடா' வரும் என்றெல்லாம் எதிர்பார்ப்பட்டது. ஆனால், N வரிசை ஆண்ட்ராய்டு 'நூகட்' எனப்படும் மேல்நாட்டு இனிப்பின் பெயரிலேயே அழைக்கப்பட்டது. 
இந்த வரிசையில் 8.0 ஓரியோவை அடுத்து தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளம் 9.0 பை. ( Pie) (ஆண்ட்ராய்டு பீ என்றும் அழைக்கிறார்கள்) வட்டவடிவத்தில் இருக்கும் இனிப்பான பையை ஓரளவு இனிப்பு பீட்ஸா எனலாம். நம்மூர் பேக்கரிகளில் 'தில்-பசந்த்' என்று ஓர் இனிப்பு கிடைக்கும். பையை ஓரளவு அதனுடன் ஒப்பிடலாம். 

'ஓரியோ' இயங்குதளத்தில் சிலபல கோளாறுகள் பயனர்களால் அறிவிக்கப்பட்டன. உதாரணமாக ப்ளூடூத் இணைப்பில் பல்வேறு கோளாறுகள் இருப்பதாகப் பலர் தெரிவித்தார்கள். மேலும், ஓரியோ இயங்குதளம் சார்ஜிங்-கின்போது அளவுக்கு அதிகமான 'பவரை' இழுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல போனில் எவ்வளவுதான் மெமரி இருந்தாலும் சில App-கள் தரவிறங்காது. 'போதுமான இடம் இல்லை' என்று போன் திரும்பத் திரும்ப கதறிக் கொண்டிருக்கும். இதுபோன்ற கோளாறுகள் அடுத்தடுத்த version-களில் சரிசெய்யப்படும்.

சிலர் இந்த அப்டேட்- களை விரும்புவதில்லை. 'பரிச்சயம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகின பிசாசே தேவலாம்' என்ற மனப்பாங்குதான் காரணம். வீட்டை நன்கு renovate செய்து பெயின்டை மாற்றி பர்னிச்சர்களை மாற்றிப்போட்டு அதன்பிறகு பார்த்தால் 'முதலில் இருந்த அமைப்பே நன்றாக இருந்தது' என்று தோன்றுவதுபோல. இங்கே ஒரு நிதர்சனமாக உண்மையையும் குறிப்பிட்டாக வேண்டும். லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு அப்டேட் என்னப்பா? பை தானே? போனை Wifi யில் இணைத்து அதைத் தரவிறக்கிக் கொள்ளலாம், நம் போனுக்கு புத்தம் புதிய பொலிவான ஓட்டுநர் கிடைத்து விடுவார் என்று நாம் நினைத்தால் தப்பு. பல போன்களில் இந்த அப்டேட் ஆப்ஷனே இருப்பதில்லை. என்னுடைய போன் தற்போது Marshmallow இயங்குதளத்தில் உள்ளது. இதை என்னால் பைக்கு மாற்ற முடியாது. இப்போது நீங்கள் கடைக்குச் சென்று ஒரு லேட்டஸ்ட் ஹை-எண்டு போனை யானை விலை கொடுத்து வாங்கினால் அதில் ஒருவேளை ஓரியோ என்ற பாகன் அமர்ந்திருக்கலாம். இன்னும் சில மாதங்களில் பை -அப்டேட் செய்துகொள்ளலாம் சார் என்ற கியாரண்டியையும் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கலாம். நீங்கள் என்றோ ஒரு குறைந்தவிலை ஆண்ட்ராய்டு போனை வாங்கியிருந்தால் அதில் இன்னும் லாலிபாப் அல்லது கிட்காட் வெர்சன் இயங்கிக் கொண்டிருக்கலாம். நீங்கள் Pie சாப்பிட ஆசைப்படக் கூடாது. இந்த version இல் பல செயலிகளை (Apps) இறக்க முடியாது. சில டேட்டிங் ஆப்-கள் லாலிபாப்பில் கிடைக்காமல் போகலாம்.

'மெட்டுக்குப் பாட்டா' 'பாட்டுக்கு மெட்டா' என்பதுபோல போனுக்காக இயங்குதளமா இயங்குதளத்துக்காகப் போனா என்பது ஒரு தலைசிறந்த கேள்வி. பாட்டுக்குத் தான் மெட்டு. போனுக்கு தான் இயங்குதளம். அனால் சில சமயங்களில் அப்போது இருக்கும் ஆண்ட்ராய்டு version க்கு ஏற்ப போன் தயாரிப்பாளர்கள் தங்கள் வன்பொருள்களை tweak செய்து தயாரிக்கிறார்கள். அதாவது டிரைவரின் திறமைக்கு ஏற்ப பஸ்ஸை தயாரிக்கிறார்கள். அதன் பிறகு பயனாளிகள் எங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் வேண்டும் (ஹார்டுவேரை மாற்றாமல்) என்று கேட்டால் அது பெரிய தலைவலி. ஹார்டுவேரில் இந்தப் புதிய செயல்திறனைத் தாங்குவதற்கு மாற்றங்கள் செய்யவேண்டி இருக்கும். பல நிரல்களில் கைவைக்க வேண்டி இருக்கும். மேலும், இப்படியே update களை கொடுத்துக்கொண்டிருந்தால் பயனர் புது போனை வாங்குவது பற்றி யோசிக்கவே மாட்டார். பஸ் தேய்ந்து கொண்டே வந்தாலும் அதுதான் டிரைவரை மாற்றிக் கொள்கிறோமே, அவர் எப்படியோ கஷ்டப்பட்டு திறம்பட ஓட்டி விடுவார் என்று பஸ்ஸை மாற்றாமல் இருந்து விட்டால்..? எனவேதான் பெரும்பாலான கேஸ்களில் ஒரு டிரைவர் -ஒரு பஸ் என்ற விதி இயங்குகிறது. அதாவது ஒரு போனுக்கு (அது வாங்கும்போது ஏற்றப்பட்ட) ஒரு இயங்குதளம்தான். இதில் விதிவிலக்குகளும் உண்டு. கூகுளே தயாரிக்கும் பிக்ஸல் போன்ற சில போன்களில் நாம் விரும்பும் இயங்குதளத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்ளலாம். நிறைய விலை கொடுத்து வாங்கும் போன்களில் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டிராய்டு வெர்சன்களுக்கு இலவசமாக upgrade செய்துகொள்ளலாம். உங்கள் போனில் இருக்கும் யானைப்பாகனைப் பற்றித் தெரிந்துகொள்ள Settings -> About Phone -> Android Version என்று சென்று பாருங்கள். அதையே நிறைய நேரம் அழுத்தினால் அந்த version னுக்கு உரிய இனிப்பு பண்டத்தின் லோகோ கூட வரும். 

புதுப்புது ஆண்டிராய்டு பதிப்புகள் வந்துகொண்டே இருப்பதற்கு  Security update களும் ஒரு காரணம். ஒவ்வொரு முறையும் நம் போனின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறார்கள். அல்லது வலுப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் வழியே சிலர் லாகவமாக நுழைந்து வெளிவந்துவிடுவதுபோல போனின் இந்தப் பாதுகாப்பு ஓட்டைகளின் வழியே ஹேக்கர்-கள் உள்ளே நுழைந்துவிட முடியும். இதை Security vulnerabilities என்கிறார்கள். இவை சாப்ட்வேர்  டெவலப்பர்களுக்கு பெரும் சவாலாகவும் தலைவலியாகவும் இருப்பவை. போன் கொஞ்சம் ஸ்லோவாக இயங்கினால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். போனில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ இறங்கி, இயங்கி நம் தகவல்களைத் திருடினால்..? ஆம். இந்த Vul
nerabilities ஐ உபயோகித்து  நம்முடைய அனுமதி இன்றியே நம் தகவல்களைத் திருடிவிட முடியும். நம் போனில் உள்ள கான்டாக்ட்கள் , யார் யாருக்கு போன் செய்கிறோம், எந்தெந்த வெப்சைட்டுகளுக்கு போகிறோம், யாருடன் தலையில் போர்வையை மூடிக்கொண்டு பேசுகிறோம், நம்முடைய பணப் பரிவர்த்தனைகள் எல்லாவற்றையும் நோட்டம் விட முடியும். ஆண்ட்ராய்டின் ஒவ்வொரு அப்டேட்டும் இந்த மாதிரி பாதுகாப்பு ஓட்டைகளை அடைக்க முயலும் என்று நம்புவோம்.

சில சமயம் இயங்குதளத்தில் patch எனப்படும் ஒட்டுதல்கள் வருவதுண்டு. ஓரியோவில் 8.1  patch வந்தது போல. வீட்டை முழுவதும் ஒரேயடியாக பெயின்ட் அடிக்காமல் எங்கெல்லாம் சுவரில் விரிசல் இருக்கிறதோ அழுக்கு சேர்ந்திருக்கிறதோ அங்கே பட்டும் டச்-அப் செய்வதுபோல. சில முக்கியமான கோளாறுகளை மட்டும் fix செய்து உடனடியாக கஸ்டமருக்குக் கொடுக்கப்படும்.

சரி. இந்தப் புதிய ஆண்டிராய்டு இயங்குதளமான 9.0  Pie பற்றி கொஞ்சம்: இதில் சற்று ஆப்பிள்  IOS டச் இருப்பதாக சில பயனர்கள் சொல்கிறார்கள். சிலர் ஆப்பிள்  IOS ஐ ஆண்ட்ராய்டு கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். Pie இல் இருப்பதாகப் சொல்லப்படும் சில அம்சங்கள்:

> நேரம் வலது பக்கத்தில் இருந்து இடது புறம் மாற்றப்பட்டுள்ளது.

> போன் டிஸ்ப்ளே அணைந்திருந்தாலும் இன்னும் எத்தனை சார்ஜ் மிச்சம் இருக்கிறது என்று பார்க்க முடியும்.

> நிறைய ப்ளூ-டூத் சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும். காரில் சென்று கொண்டிருக்கும்போது கால்-கள் ஆட்டோமேட்டிக்-காக ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு அனுப்பப்படும்.

> ஸ்க்ரீன் ஷாட் எடுக்க ஒரு 'சாப்ட்' பட்டன் உண்டு. அதன்மூலம் ஸ்க்ரீன்ஷாட்-களை உடனுக்குடன் திருத்த (edit) இயலும் 

>  Swipe up on home screen என்ற வசதி ஒரு 'சாஃப்ட் ஹோம்' பட்டனைத் தருகிறது. இதை அழுத்தி  App களுக்கு இடையே தடையின்றி சுலபமாக  navigate செய்யலாம்.

> போனின் notification களில்  எழுத்து மட்டும் வராமல் முழு இமேஜும் வரும். 

> திரைகளின் முனைகள் சற்றே வளைந்திருக்கும் (Rounded corners)

> Text ஐ காப்பி செய்ய  select செய்கையில் அது ஜூம் செய்து காட்டப்படும்.

> போனில் நீங்கள் பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும் போது வால்யூம்-ஐ குறைக்க விரும்பினால் போனின் பக்கவாட்டில் இருக்கும் hard button களை இயக்குவீர்கள். இது போனின் ஒட்டுமொத்த சிஸ்டம் வால்யூமை குறைத்து விடும். ஆண்டிராய்டு பையில் திரையில் உள்ள வால்யூம் பட்டன் மூலம் மீடியா வால்யூமை மட்டும் அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.

>  App களுக்கு ஏற்ப பேட்டரி உபயோகத்தை நெறிப்படுத்தும் அம்சம் 

>  Pie இன் இன்னொரு சிறப்பம்சம் இதில் செயற்கை நுண்ணறிவு Machine learning போன்றவை உண்டு. நம்முடைய volume தேர்வுகள், திரையின் brightness தேர்வுகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அதன்படி நடக்கும். ஆண்ட்ராய்டு போன் ஒன்று GPS சில் முன்னே வரும் ரோடு அதிக டிராஃபிக்காக இருக்கிறது என்று சிவப்பு வண்ணத்தில் காட்டுவது இப்படிப்பட்ட machine learning தான். காலையில் நீங்கள் எழுந்து ஒருநாளும் இல்லாத திருநாளாக அம்மாவுக்கு மனைவிக்குச் சமையலில் உதவி செய்யக் கிளம்பினால் ஆண்ட்ராய்டு 'என்னப்பா? ஃபேஸ்புக் பார்க்கல?' என்று கத்தினாலும் கத்தும்.

>  Display யை தேவைப்பட்டால் வெட்டும்  Notch வசதி 

ஓரியோவில் இருந்து பைக்கு நடக்கும் இந்த அப்டேட்டை ஆண்ட்ராய்டின்  முக்கிய அப்டேட் என்கிறார்கள். ஆண்ட்ராய்டு பை தனது பீட்டா டெஸ்டிங்கை (கஸ்டமரே நடத்தும் டெஸ்டிங்) வெற்றிகரமாக முடித்துவிட்டது. Sony Mobile, Xiaomi, HMD Global, Oppo, Vivo , OnePlus போன்ற மொபைல்களின் ஹை எண்டு மாடல்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பை அப்டேட் கிடைத்து விடும் என்று நம்பலாம்.  இனிய ஆண்ட்ராய்டு 9.0  Pie மொபைல் பயன்பாட்டு அனுபவம் பெற வாழ்த்துகள்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அறிவியல் ஆயிரம் - துக்க கால உணவுகள்!!

தமிழர் உணவு மரபில் சில உணவுகளை, துக்க கால உணவுகள் என வைத்திருந்தனர். துக்க வீட்டில் பொரி, வாழைப்பழம் கொடுக்கும் மரபு இருந்தது. இறுதிச்சடங்குகள் முடிந்து அடக்கம் ஆன பின்பு 'புளியாத மாவுத் தோசையும் புளித்துவையலும்" உணவாக தரப்படுவது நெல்லை மாவட்ட வழக்கம். புளிக்குழம்பும், கூட்டுமே துக்க கால உணவுகளாக இருந்தன. உணவுப் பொருளாக ரசம் வைக்கப்பட்ட போது, துக்க வீடுகளில் வைக்கும் பொருளாக தான் இருந்தது. பட்டினியால் ஏற்பட்ட வயிற்றுப் புண்ணை ஆற்றும் என்பதால் 'அகத்திக்கீரை" சேர்க்கப்பட்டது.
குழந்தைகளைத் தூங்கவைக்க..!




குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குப் போராட்டம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும் வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தைகளைத் தூங்க வைக்க தாய்மார்களுக்கு சில யோசனைகள் :

குழந்தை பிறந்தது முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது. எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.

குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும், இரவில் அதைத் தவிர்க்கவும். உங்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.

சாப்பாடு ஊட்டிய பிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்தும்.

குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.

தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே அவர்களை உறங்க வைக்கப் பழக்கப்படுத்தலாம். அதனால், அந்த நேரம் வரும்போது, தானாக அவர்களுக்குத் தூக்கம் வரத் துவங்கும்.

2 வயதிலிருந்தே, தூங்குவதற்கு முன், ஒரு முறை, பற்களை நன்றாக பிரஷ் செய்துவிட்டுப் படுக்கும் பழக்கத்தினைக் கற்றுத் தரவும். நீங்களும் அவர்களுடன் பிரஷ் செய்தால், தானாக, இந்தப் பழக்கம் வந்துவிடும்.

தூங்கும் அறையை, தூங்குவதற்கு ஏற்ப தயார் படுத்தவும். வெளிச்சம் இல்லாமல், சத்தம் வராமல், படுக்கை, நல்ல மெத்தென்று இருப்பது இவற்றை எல்லாம், கவனிக்கவும்.

நாம் பழக்கும் முறையில் தான் எல்லாம்!